Jump to ratings and reviews
Rate this book

எனது நாடக வாழ்க்கை

Rate this book
சண்முகத்தின் வாழ்க்கை எப்படிப்பட்டது? நான்குவயதில் அவர் நாடகநடிகராக ஊர்கள் தோறும் அலைய ஆரம்பித்துவிட்டார். தமிழ்நாட்டில் அவரது கால்கள் படாத பெரிய ஊர்களே இருக்க இயலாது. அபப்டியே அரை நூற்றாண்டுக்காலம்! கடைசியில் அவர் தன் வரலாற்றை எழுத ஆரம்பிக்கும்போது அவ்வரலாறு மனித முகங்களின் கொந்தளிப்பாக இருக்கிறது. சண்முகத்தின் வழியாக காலத்தில் மறைந்த மனிதர்களின் குரல்களும் முகங்களும் ஓடி மறைகின்றன. நூலைப்படித்து முடிக்கும்போது ஒரு காலகட்ட வரலாற்றைக் காட்டிவிட்டு ஒளி சுருங்கி அணைந்த தொலைக்காட்சிப்பெட்டியைப் பார்த்த உணர்ச்சியே ஏற்படுகிறது

விதவிதமான மனிதர்கள். கலைகளுக்கே உரிய வசீகரத்துடன் நாடகம் மனிதர்களை பித்துப்பிடிக்கச் செய்கிறது. கலைஞர்களை வேறு ஏதோ உலகைச் சேர்ந்தவர்களாக எண்ணி வழிபடும் மனிதர்கள்.

சண்முகத்தின் இந்தச் சுயசரிதையை வாசிக்கும்போது பாலநாடகசபாக்களின் கடைசிக்காலத்தை காண முடிகிறது. ஒவ்வொரு திரையாக மடேர் மடேர்ன்று சரிந்து விழுந்து அரங்கு நம் பார்வை முன் இல்லாமலாகும் அனுபவம். சண்முகம் அதில் மயிரிழையில் தப்பித்த சிலரில் ஒருவர்.

- ஜெயமோகன்

Unknown Binding

First published January 1, 1972

Loading...
Loading...

About the author

திருவனந்தபுரம் கண்ணுசாமி சண்முகம் என்னும் ஔவை தி. க. சண்முகம் (26.4.1912 - 15.2.1973) 1918 ஆம் ஆண்டு முதல் 1972 ஆம் ஆண்டு வரை தமிழ் நாடகக்கலைக்கு நற்பணி ஆற்றியவர். நாடகத்துறையில் தொல்காப்பியர் என மு. கருணாநிதியால் புகழப்பட்டவர். ம. பொ. சிவஞானம் தலைமையில் இயங்கிய தமிழரசுக் கழகத்தின் பொதுச் செயலாளராகப் பணியாற்றியவர். இவரது தம்பி தி. க. பகவதி புகழ்பெற்ற நாடக நடிகரும், திரைப்பட நடிகரும் ஆவார்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
7 (70%)
4 stars
1 (10%)
3 stars
2 (20%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
180 reviews3 followers
October 1, 2018
The difficulties of running A Naadaga sabha in the earlier years and when cinema is just coming up and aspirations of ambitions of people to act in cinemas and the glorious period of dramas encountered by TKS brothers brought out in this volume and also politics during those periods. Enjoyed reading . Looking to read the second volume !
16 reviews1 follower
September 13, 2018
.

Through this book we have a nice peep to the past. We are for ever indebted to great Avvai Shanmugam.
Displaying 1 - 2 of 2 reviews