Jump to ratings and reviews

மிஷன் தெரு

110 pages, Paperback

Published December 1, 2016

Loading...
Loading...

About the author

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (15%)
4 stars
10 (52%)
3 stars
5 (26%)
2 stars
1 (5%)
1 star
0 (0%)
Displaying 1 - 6 of 6 reviews
June 2, 2021
ஆண்களால்
தண்டிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டு
ஆண்களை விரும்பத் தொடங்கும் பெண்கள்
ஆண்களாவே ஆகி பெண்களை தண்டிக்கிறார்கள்.
Profile Image for Anitha.
Author 15 books41 followers
September 6, 2017
எஸ்த்தர் எனும் பெண்ணை பற்றியும், அவளை சுற்றி நடக்கும் நிகழ்வுகளும். அவளின் பார்வையில் தான் கதை செல்கிறது...அதனால் விமர்சனமும் அவள் பார்வையிலேயே….

சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் மாற்றத்துக்கு ஏற்ப அந்த பெண்ணின் அல்லது ஒரு பெண்ணின் வாழ்க்கையை பற்றியது. சுலபமாக சொல்வது என்றால் women under men. ஒரு ஆணால் பெண்ணை தவிர்க்கவும் முடியாது தனக்கு சமமான இனமாக சேர்க்கவும் முடியாது.

ஒரு ஆண் சட்டத்தை மீறினால் அதிகபட்சம் அபராத தொகை, மந்திர ஜபம் தான் தண்டனை ஆனால் ஒரு பெண் எந்த தவறும் செய்யாத போதும், மீறிவிட்டால், மீறிவிடுவாள் என்று அவளை தவறு சொல்லி, திருந்த சொல்லி அவளை இச்சையாய் தீண்டும் நல்லவர்கள்.

சிறுவயது திருமணம் என்பது பெண்களுக்கு பாதுகாப்பு என்கிற முகமூடியோடு ஆண்களின் கவுரவம் என்று அவர்கள் நினைப்பதை காப்பதற்கும் அகங்காரத்தை திருப்தி படுத்தவுமே.

பெண்களை தூக்கி செல்பவனும், பாதுகாப்பவனும், ரட்சிப்பவனும் அனைத்து வகை ஆண்களும் ஒன்றையே செய்கிறார்கள், இது அவர்களுக்கான ஆட்டம், சட்டம்.....

எஸ்தரின் மூலமாகவே நாம் எல்லா நிகழ்வுகளையும் பார்க்கிறோம், உணர்கிறோம். ஒவ்வொரு பகுதியையும் அழகாக இணைத்து அதிலிருந்து கதையை கொண்டு செல்லும் விதமும், எஸ்தர் பருவமடைதலை சொன்ன விதமும், அந்த இரண்டு வரியில் மொத்த கதைக்கான கருவை சொன்ன விதமும் அருமை.

ரவிக்கையில், பெண்ணின் உரிமையையும், அடக்குமுறையையும், அரசியலையும் சொன்னவை உண்மைதானே, பெண்ணின் பொட்டிற்கு பின்னாலும், ஜாக்கெட்டுக்கு பின்னாலும் உள்ள ஆயிரம் அடக்குமுறைகளும், அரசியலும்.

ஒரு பெண் தூணில் வடித்த ஆண் சிலையின் தோளின் மீது கால் வைத்து ஏறி சென்றால், வெகு நாள் சாத்தபட்டிருந்த கதவு கூட திடீரென்று திறந்து அவளை காட்டி கொடுத்துவிடும். இதில் உள்ள உண்மையும், உவமையும்..................”உண்மை”.

நாம் என்னதான் மதம் மாறினாலும் தொன்றுதொட்டு நம்மிடையே உலவி வரும் நம் பழக்கவழக்கங்கள் மாறுவதில்லை அதிலுள்ள பெரும் அரசியலையும் நாம் புரிந்துகொள்வதில்லை.

இறுதியாக இந்த புக்கை முடிக்கும்போது எனக்கு தோன்றியது இதுவே...

அடக்குமுறையும், கொடுமைகளுமே வாழ்க்கை என்று ஜீரணித்து, தன் பிள்ளைகளும் இப்படியே வளர்க்கப்படுகிறார்கள் என்று தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலையில் அந்த சூழலில் வாழ்ந்துவிட்டு வீழ்ந்துபோகும் பெரும்பாலான பெண்களை போல் இருக்க முடியாமல், அழகோடும், அறிவோடும், எல்லா நியாயங்களும், விஷயங்களும் தெரிந்துகொள்ளும் எஸ்தருக்கு அதை உணர்ந்துகொள்ளாமல் இருப்பதால் அந்த வாழ்கையை ஜீரணித்து கொள்வதற்கு பதினைந்து வருடம் தேவை படுகிறது, வாழ்ந்து வீழ்ந்துவிட்டு போவதற்கு.
Profile Image for Dhanaraj Rajan.
547 reviews373 followers
August 28, 2026
An interesting premise and a backdrop for the story - the Kingdom of Tanjore before the independence of India. The fight for succession to the throne of this small Maratha Kingdom (among the Marathas); and the overall political situation of the then Indian subcontinent which was slowly coming under the rule of the British and the role of British in this political quagmire; and the arrival of Protestantism to the Tanjore region brought by the Danish mission movement which was centered in Tranquebar; and the locals who became Christians and their initial advantages and difficulties.

On the one hand Thanjai Prakash is quick to point out the differences that the Missionaries brought to the Tanjore region especially focusing on women education and on the other hand he is also realistic in saying that the situation of the women never improved under anyone's rule. Women remained women - that they were considered the property of men and so they could be treated in any way possible by men. Even the Christian converts (women) who availed the British education and who spoke of equal rights could not escape this fate.

This is a story about such a convert (Esther). She is bold and very vocal about her views on gender equality. She succumbs to the same fate and the interesting irony is that she treats her own daughter as the same society which she felt wronged her in clipping her wings and forcefully marrying her off to a person of her dislike. Either her conviction was never deep enough or she could not easily shake off the shackles of the 'societal norms' (regarding caste and gender).

You may be convinced and your mind would understand. But when it comes to reality the psyche does not allow the same easily. Instead it would stick to the society's 'set standards.'

Practical Question to think about: One may be convinced of the equality of all. But when it comes to the marriage of one's sister or daughter to a person of a different community how does he or she react in the inside? I think this is what this novel is about.
August 17, 2026
புத்தகம்: மிஷன் தெரு
ஆசிரியர்: தஞ்சை பிரகாஷ்
வகை : நாவல்
பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம்
பக்கங்கள் : 118

ஆசிரியர் தஞ்சை பிரகாஷ் அவர்களின் படைப்பான "மிஷன் தெரு"வை வாசித்து முடித்திருக்கிறேன். தஞ்சை பிரகாஷ் ஆக்கங்களில் நான் முதலில் வாசித்த படைப்பு இது. எழுத்து நடையைப் பொருத்த வரையில், வாசிப்பதற்கு நன்றாகத் தான் இருக்கிறது. அனைத்து வகையான வாசகர்களும் வாசிக்கக் கூடிய நாவலாக இருக்கிறது.

சமீபத்தில் வாசித்த மூன்று நாவல்கள் - தி.ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்', பாமாவின் 'கருக்கு', தஞ்சை பிரகாஷின் 'மிஷன் தெரு'. எந்தவித தேர்ந்தெடுப்பும் இல்லாமல் ஏதேச்சியாகத்தான் இவற்றை வாசித்தேன். ஆனால் இந்த மூன்று நாவல்களுமே பெண்களை மையப்படுத்தி இருந்தது என்பது, எனக்கு ஆச்சரியத்தைத்தான் தந்தது. பெண்களின் துயரங்களையும், ஆற்றாமைகளையும், இன்ப துன்பங்களையும், அவர்தம் உணர்வுகளையும், சமூகம் அவர்கள் மீது திணித்திருந்த அடக்குமுறை ஒடுக்குமுறைகளையும் இந்த மூன்று நாவல்களுமே படம்படித்துக் காட்டுகின்றன..

இந்த நாவலின் முக்கியக் கதாப்பாத்திரங்களில் ஒன்று எஸ்தர் என்ற பெண்மணி, மதம் மாறிய கிறித்தவர்களில் ஒருவர். தன் ஆசைப்படி வில்லி (எ) ல
வில்லியம்ஸுடன் ஓடிப்போக முடிவெடுத்து, ஆனால் வீட்டில் மாட்டிக்கொண்டு, லாசரஸ் என்னும் கொடிய மிருகத்திடம் அகப்பட்டுக் கொண்டு நரகத்தை அனுபவித்த கதையே இக்கதை.

"ஒவ்வொரு மனிதனும் தனக்குள் ஒரு உலகத்தை வைத்திருக்கிறான். ஒவ்வொரு பெண்ணும் தனக்குள் ஒரு இருட்டை ஒளித்து வைத்திருக்கிறாள். அது தன்னது, தனக்கு மட்டும் என்று பைத்தியம் போல் நம்பவும் செய்கிறாள். இருட்டு வெளிச்சம் ஆகும்போது, பெண்ணின் இருட்டு முன்னம் அப்படி ஒன்று இல்லை என்று தெரியவருகிறது. வெளியே பல உலகங்கள் இருந்தாலும் தனது என்று ஓர் உலகம், நொறுங்கி விழத்தான் தன் வசம் இருக்கிறது என்று எந்த ஆணுக்கும் புரியவரும்போது, அவன் பெண்ணை இழக்கிறான். ஒவ்வொருவரும், ஒவ்வொருவரையும் இழக்கிறார்கள் என்று எஸ்தருக்குத் தெரியாததால், அவள் எல்லாவற்றையும் இழந்தே போய்விட்டாள் என்று புரியவே இல்லை." (புத்தகத்திலிருந்து...)

- இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கதை இருக்கிறது. அது அவரது மனம் மற்றும் உணர்வு சார்ந்தது.

"ஆம்பிளை தானே! இதோ இந்த லாசரஸ் தடியன் செய்த காரியத்தை நீ செய்திருக்க முடியாதா? யாருமில்லாத உன் பங்களாவுக்கு, ராஜா தோப்பு வழியே தினமும் வந்திருக்கிறேன். இதோ இந்த லாசரஸ் பயல் ஒரே நாளில், ஏன்? ஒரே நிமிடத்தில் என்னை உருவி எடுத்துக்கொண்டு விடவில்லையா? எல்லோருக்கும் மத்தியில் நான் 'வேண்டாம் வேண்டாம்' என்று கதறக் கதற எல்லார் சம்மதத்துடனும் இதோ என்னைத் தூக்கிக்கொண்டு ஓடப் போகிறானே. இதை நீ செய்திருக்க முடியாதா? நான் பெண்; பேதை; என் அப்பாவும் அம்மாவும் நீ என்னை எடுத்துக்கொண்டு ஓடினால் மாட்டேன் என்றா சொல்லியிருப்பார்கள். நான் வரமாட்டேன் என்று உன்னிடம் முரண்டு செய்ததே நீ என்னை வலுவில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றுதானே! இதைக் கூடவா உன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை?

எல்லா சம்மதத்தையும் பெற்றுக்கொண்டா ஒரு பெண், ஒரு ஆணைக் கூட முடியும். முடியாது. முடியாது என்றுதான் சொல்வோம். முடியும், முடியும்' என்று சாதிக்க வேண்டாமா நீ? நீ என்ன என்னை விரும்பவில்லையா? என் முரட்டுத்தனத்தை துடுக்கடக்கி என்னை இணைத்துக்கொள்ள உன்னால் முடியவில்லையா? எனக்கு அப்போது தெரியாமல் போயிற்று. உன் துடுக்கை அடக்கி, என்னை எனக்குள் அழுத்திக் கொண்டிருக்க வேண்டும். எல்லாம் அழிந்தது. என்னைப் பிடித்த போதே நான் செத்திருக்கவேண்டும். இப்போது மட்டும் என்ன, உயிருடனா இருக்கிறேன். செத்தாலும் விடமாட்டார் கள். பிணம் என்றாலும் விடமாட்டார்கள். பிணந்தின்னி என்றாலும் விடமாட்டார்கள்."

- சிறுவயதாக எஸ்தர் இருந்தபோது, என்னதான் ஸ்டோன் துரையால் பாதிக்கப்பட்டிருந்தாலும், எஸ்தர் அதை/அவனை விரும்பினாள் என்பது இவ்வரிகளின் வாயிலாகப் புலப்படுகிறது. எல்லாவற்றையும் சொல்லித்தான் செய்ய வேண்டுமா, சொல்லமால் ஒன்றையும் புரிந்துகொள்ளத் தெரியாதா என்று ஸ்டோன் துரையைச் சாடுவது போல் எஸ்தர் எண்ணிமிட்டுக் கொள்கிறாள். இதற்கு முக்கியக் காரணம், ஸ்டோன் துரை எஸ்தரை பூப்போல் தாங்கினான் என்பதே. அவனின் அந்த அன்பு தான் எஸ்தரை கவர்ந்தது‌.

"அதுதான் எஸ்தருக்கு புரியவே இல்லை. ஒரு பெண்ணின் அடிப்படை இதுதான். அவள் மண் போன்றவள். அதற்கு விருப்பு, வெறுப்பு இல்லை. எதை நட்டாலும் காலமானால் விளைய வேண்டியதுதான். விதையின் ஜாதி, இனம் இவைகளைப் பற்றிக் கவலையில்லை. மண்ணில் விளைவது ஒன்றே விதி. முழு வெறுப்பையும் கூட அவன் பயன்படுத்திக் கொள்கிறான்."
(புத்தகத்திலிருந்து...)

- பெண் எனப்பட்டவள், வெறும் குழந்தை பெறும் கருவியாக மட்டுமே சமூகம் பார்க்கிறது என்று மேலே எடுத்துக்காட்டியுள்ள புத்தகத்தின் வரிகள் பறைசாற்றுகின்றன...

பெண்ணின் பார்வையில் இருந்து அவர்களுக்கு தரப்படுகிற மரியாதைகளையும், சமூகம் அவர்கள் நடத்தும் விதங்களும், குறிக்கப்பட்டுள்ளன.
பெண் சுதந்திரம் என்றால் தனக்குப் பிடித்ததைச் செய்வது மட்டுமல்ல...தனக்குப் பிடிக்காதவற்றையும் செய்யாமல் இருப்பதே தான் பெண் சுதந்திரம்...
Profile Image for Bharath Jambulingam.
Author 1 book16 followers
June 5, 2017
My school teachers all belongs to this. Mission Street which is very near to our home. By reading this one can knew how Mission Street formed there in Thanjavur. How Christians converted a particular Hindu caste people to Christianity.
Profile Image for Shanmugam Udhayan.
50 reviews10 followers
January 29, 2017
வாசகசாலையின் முதல் வெளியீடு... நாவலை எழுதியவர் தஞ்சை பிரகாஷ்.... தஞ்சை பிரகாஷ்க்கே உரிய நடயில் கதை விரிகிறது... அவர் விவரனையின் சிறப்பு, வார்த்தைகளை அடிக்கி கொண்டே செல்வார், முடியும் பொழுது நாம் படித்த வார்த்தைகள் மறந்து பொருள் மட்டும் நினைவில் நிற்கும்... ஒரு தாளில் விழுந்த நீர் துளி போல் கதை, முன்னும் பின்னுமாய் அனைத்து திசையிலும் பரவுகிறது... ஒரு நிகழ்வின் முடிவிலிருந்து ஆரம்பித்து பல்வேறு களங்களுக்கு சென்று மீண்டும் அதே புள்ளியியல் வந்து நிற்பது அவர் கதை சொல்லலின் சிறப்பு.. ஆங்காங்கே சில வரலாற்று தரவுகளையும் விட்டு செல்கிறார்... எஸ்தர் என்ற கதாபாத்திரத்தை சுற்றி மொத்த கதையும் நகர்கிறது... கதை நடத்த காலம் ஆங்கிலேயர்கள் அதிகாரத்தை கைப்பற்றும் போது... அந்த காலத்து பெண்கள் மீதான அடக்குமுறைகளை பற்றி முழுமையாக எஸ்தரின் மூலமாக சொல்கிறார்... எஸ்தர் மற்ற பெண்களை போல் அல்லாமல் அளவற்ற சுதந்திரத்துடன் வளர்கிறார் ஆனால் அவள் கடந்து செல்கிற ஆண்களால் எவ்வாறு அடக்குமுறைகளுக்கு ஆளாகிறார் என்பது கதை... தஞ்சை பிரகாஷின் எழுத்தை அறிந்தவர்கள் அவசியம் படிக்கலாம்
பி. கு: தஞ்சை பிரகாஷின் எழுத்து ஆரம்ப நிலை வாசகர்களுக்கானது அல்ல... வயதும் வாசிப்பும் முதிர்ந்தவர்களுக்கு
Displaying 1 - 6 of 6 reviews