பாகீரதியின் கனவிற்கு வெளியே ஜெமினிக்கு நிஜத்தில் வேறொரு பெயர் இருக்கிறது, உறங்காப் புலி. ஜெமினியின் தாயாருடைய ஆசையால் சங்கிலிக்கு வேறொரு பெயர் உண்டானது, ஜெமினி. சவிதாதேவியின் சித்தப்பிரமைக்கு அப்பால் விபின் பாஸ்வானுக்கு வேறொரு பெயர் இருக்கிறது, உறங்காப்புலி. சில்லரைச் சாகஸங்களுக்கு வெளியே குடுமிநாதனின் பெயர் வாசுதேவன். ப்ராம் ஸ்டோக்கரின் உள்ளூர்க் கதை வடிவத்தில் ட்ராகுலாவின் பெயர் அரங்கநாதன் நம்பி. உபேந்திரநாத் தத்தாவின் கனவிற்கு அப்பால் பினித்ரா தேவிக்கான பூர்வப் பெயர் பேராபுடீமா. பேராபுடீமா சுயசாவை நிகழ்த்திக்கொள்வதற்கு முன்னால் தெக்கூவாக அறியப்பட்டவள். உறங்காப்புலியின் காதலின் பரவச உலகிற்கு வெளியே பாகீரதிக்குமேகூட இன்னொரு பெயர் இருக்கிறது, சவிதாதேவி. அரங்கநாதன் நம்பியினுடைய பூர்வ ஜென்மத்துப் பெயரறியாக் காதலியின் இந்த ஜென்மத்துப் பெயர் பாகீரதி. பெயர் பெயர்களை உற்பத்தி செய்துகொண்டேயிருக்கிறது என்கிறார் அரங்கநாதன் நம்பி. "பெயர் ஒரு வித்தைக்காரனின் தொப்பி. அதிலிருந்து வெளிவரும் எதுவும் உண்மையில்லை. அவை ஏதேதோ எண்ணங்களின் நோக்கங்களின் ஆரூடங்களின் திட்டங்களின் சித்திரவதைகளின் உருவகங்கள். அது வெறும் ஒரு சொல். சீஸேமைத் திறக்க வைக்கும் ஒரு கடவுச் சொல்."
நூல் விமர்சனம் : பாகீரதியின் மதியம் ஆசிரியர் : பா. வெங்கடேசன் பதிப்பகம் : காலச்சுவடு
கனவுகளில் புதைந்து அதன் வழி நிஜம் தேடி அதனுள் ஒப்புவிக்கும் புனைவை நேர்த்தியாக அழகான நடையில் வரலாற்றின் நிகழ்வுகளை புனைவுகளோடு பொருத்தி மென்மயாக விரிவடையும் தளத்தினுள் சாதீயத்தின் தாக்கமும், சூழியல் சீர்கேட்டின் விளைவுகளையும், இசத்தின் கோட்பாட்டில் சிதைந்துப் போகத்துடிக்கும் ஆன்மாக்களையும், வன மக்களையும் அதனூடாய் நாகரீக மனிதனின் எதிர்கால விளைவுத்தேடல்களையும் உட்புகுத்தி நளினமாய் தடங்களை வலிய தருவிக்காமல் கதையை கதை மாந்தர்களினூடே புனைந்து அதன் நினைவுகளை வடிக்கும் மனதிற்கு நிழலாக்கி அதன் தன்மையை நிஜத்தில் ஊடுறவச் செய்யும் என்ணத்தை கொடுக்கவல்ல தமிழின் மிகச்சிறந்த புதினமாக வடிவெடுத்து தன்னை புனைவுகளின் முடிவிற்குட்படுத்தாமல் வினையைத் தேடி மனவோட்டத்தால் அலையும் வாசகர்களை உருவாக்கும் பெருமைக்குச் சொந்தமாய் ஆசிரியரை உணர, வழித்தேடல்கள் அவரவர் எண்ணத்திற்குட்பட்டு நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ இருக்கும் பட்சத்தில் அக புற மனதில் எண்ணப் போராட்டத்திற்கிடையில் இரு வேறான கருத்தியல் விளைவுகளைக் கொடுக்கும் பாணியில் முன் சமூக வழிகளை நாகரீகக் கோட்பாட்டில் உட்படுத்தாது புலரும் எண்ணத்தை ஆணியப் பார்வையில் தவிர்த்து பெண்மையின் சுயத்தேடலில் பிழையில்லாத அன்பின் வழி இன்றைய சமூகத்தின் புறம் நோக்க ஏற்றுக்கொள்ளவியலாத தூற்றும் தன்மைக் கொண்டும் அக மனதில் ஏற்கும் பாவமுடையதாயான சாத்தியமுடைய பெண்மையை நம் கண்ணிற்கு புலப்படுத்தி முற்காலத்தின் வாழ்வியல் தேடல்களில் நன்மையெனும் சுவாசக் குரல்வளையையும் அறுக்கும் நாகரீகத் தேடலில் ஒடுங்கிப் போன மக்களிலிருந்தும், ஒடுக்கத் துணிந்த மக்களிலிருந்தும், கதாப்பாத்திரங்களைப் பெயர்த்தெடுத்து இன்றைய சமூகத்தின் பிரச்சினைகளுக்கு மூலமாய் விளங்கும் காரணிகளை நம்முன் குறியீடுகளில் காட்சிப்படுத்தி காலம் அழிந்தும் அதன் காட்சிகள் அழிந்தும் மறந்தும் போன நிலையில் நம் சமூகம் இயற்கையின் நியதியனூடே பாடமாக்க மறந்து போன பாடத்தை கொடுத்து சமூகத்தின் அவல வெளிப்பாடுகளை தகர்க்க முடியுமா எனத் தோன்றும் நேரம் உருவாகிய தேடலில் கடலலைப் போல சளைக்காத மழைச்சாரலின் மென்மையுடனும் வன்முறைத் தவிர்க்க முயன்று மனிதனின் இரத்தக்கறைப்படியாது காரணிகளையும், காரணத்தையும் தக்க விதத்தில் தகுந்த இடத்தில் புகுத்தி கனவுகளின் போர்களத்தில் காதலையும் காதலினூடே பெண்மையின் தவிப்புகளை அவளின் அனுமதியில்லாமல் வாசிக்கும் நபர்களை ஸ்பர்சிக்க செய்யும் வித்தையூடாக நிச்சயம் வாசிப்பவர்களின் கடந்தகால அனுபவங்களை கிளர்ந்தியதனூடாய் பொருத்தி மகிழவோ, வருத்தப் படவோ, உணர்வுப்பூர்வமாய் சிந்திக்கவோ வைக்கிறத் தொனியைத் தாங்கி தொடர்பு விடாமல் நம்மை புதினத்தின் எழுத்துக்களைத் துரத்திப்பிடித்து எண்ணத்தை உட்கிரகித்து முடிவுகளைக் காண முனையும் பொழுது முடிவுகள் முடியாப் பயணத்தில் முடிவை வாசிப்பவரின் முடிவாக்கி முள்ளின் தன்மையைப் போல் விறைத்துக் குத்தக் காத்திருக்காது கதை முடிந்து போகும் தருணத்தில் ஒரு நிமிடக் கதையை கதையின் காரண காரணத்தில் விரித்து பாலை நிலம் போல் சமவெளியாக்கி நீர் வற்றித் தவிக்கும் சமயம் ஆங்காங்குச் சோலைகளை அமைத்திருக்கும் இயற்கையின் பாங்கின் நம்பிக்கையில் புதையலைத் தேடும் யாத்ரீகனுக்கு நிச்சயப் புதையலாய் காத்திருக்கும் இப்புதினம் என்றென்றும்....
II nd Review 17.02.24
பாகீரதி மதியம்
6 வருடங்களுக்கு முன்பாக 2 முறை வாசித்தது. மீள் வாசிப்பு என்றாலும் மீண்டும் புதிய புத்தகத்தை வாசிப்பது போன்ற உணர்வை கொடுத்திருப்பது கதையில் நிரம்பியுள்ள ஏராளமான விவரணைகளே.
சில புத்தகங்களை எத்தனை முறை வாசித்தாலும் சலிப்பதேயில்லை. போன முறை இந்நாவலுக்கான விமர்சனத்தை ஒரு மிக நீளமான வாக்கியத்தில் எழுதியது. அப்படியான விமர்சனமாக இது இருக்க போவதில்லை.
கதையின் களம் மதுரை, காருகுறிச்சி, கல்கத்தா என விரிவடைந்து கதையின் முடிவு அவ்வாறாக அமைந்திருக்குமா என்ற ஊகத்தை 2ம் பாகம் வரும் என்ற ஊகத்திலே முடிக்கப்பட்டிருக்கிறது..
ஊகங்கள் வாசகர்கள் வசம் என்பதால் கதையின் முடிவு அவரவர்களின்படி பல கோணங்களை படிப்பவர்களின் மனமூடாய் வெளி கொணரும் என்பதில் ஐயமில்லை. இன்றைய இளம் சமூகத்திற்கு மிக அசுவாரஸ்யமான மொழி நடை . தீவிர வாசகர்கள் திணறிப் படித்தாலும் தீனியே.
இது வரை சொல்லப்படாத அல்லது என்னறிவிற்கு எட்டாத நடைமுறையியல் சாத்தியமுள்ள பிறழ்வில் பிறக்கும் மென்மையான காதல் கதைகளை வெவ்வேறான கதா பாத்திரங்களின் வழி கொண்டு வெவ்வேறான காலக்கட்டத்தில் வெவ்வேறான அடையாளத்தில் மாயப்புனைவின் மையலில் அவர்கள் இவர்களாக இவர்கள் அவர்களாக எல்லாவரையும் மாற்றுவதோ மாறிக் கொண்டோ கதைக்குள் கதையாய் முழுதுமாய் பயணிக்கிறது.
பாகீரதியின் கனவின் மூலம் எழும் அருவகம் தீடிரென்று உருவகமாக மாறி நிஜமும் நினைவும் கலந்து வெஞ்சினமல்லாது, தீதற்ற பெண்ணதிகாரத்தின் மையலில் தொடர் வோட்டமாக அல்லாது இயல்பாய் ஒவ்வொரு இடமும் அறுபட்டு இறுதி புள்ளியை தொடுவதே நாவலின் கனம்.
பாகீரதி தனக்கு கிடைக்கும் ஓவியத்தின் மூலம் குழந்தமையிலிருந்து இயல்பாய் தன்னுள் உருவகப்படுத்தும் கதாநாயகனே ஜெமினி. பாகீரதிக்காய் ஜெமினியாக மாறும் உறங்காபுலி , உறங்கா புலிக்காய் குடுமி நாதனாகும் வாசுதேவன், சவிதாவிற்காக விபின் பாஸ்வானாக மாறும் உறங்காபுலி, பாகீரதி வேண்டி ப்ராம் ஸ்டோக்கராக மாறும் அரங்கநாதன் நம்பி இவர்கள் கதைக்களத்தில் நிஜம் மறைத்து நிழலை நிஜமாக்க முனைந்திருக்கிறார்கள்.
பாகீரதியும், சவிதாவும், அரங்கநாதன் நம்பியும் தங்களில் தங்களையறியாது உண்டாகிய காதலை நிஜத்திலே தொலைத்து தொலைத்த புள்ளியிலிருந்து தேடலும் அவர்களை அறியாது இயல்பாகவே நடந்தேறுகிறது. மற்ற எல்லா கதாபாத்திரங்களும் இவர்களின் நோக்கத்தை அடைய படைக்கப் பட்டிருக்கும் கிரியா ஊக்கிகளே.
கதையின் பாத்திரங்கள் பிடிவாதமாக விட்டுக் கொடுக்காத இசங்களை பேசுவதையும் , தலைவர்களையும், அரசியலையும், கொள்கைப் பிடிப்பிலான சில கதை மாந்தர்களையும் அதன் மூலம் அக்கால அரசியல் நிகழ்வுகளையும் நிலைப்பாடுகளையும் விளைவுகளையும் ஏமாற்றங்களையும், சலிப்பையும், வெளியேறுதலையும் முன்னிருத்த ஆகும் விவரணைகள் சிறிது அசுவாரஸ்யமாக தோன்றும் நேரம் கதை சட்டென இயல்பினுள் புகுந்து எதிர்பார்ப்பை வலுப்படுத்துகிறது.
பேராபூடிமா எனும் வன தெய்வம் மனிதனின் பேராசைகளின் (உபேந்திரா நாத் தத்தா ) பேரில் பினித்ரா தேவியாய் இடம் பெயர்வும் வனமக்களில் ஒருவராய் வரும் இங்களய்யா இசத்தின் பிடியில் சிக்கி தனக்குதவாத இசம் என்ற சலிப்பால் வெளியறிய பிறகு பேரா பூடிமாவின் காவலனாய் இருந்தும் அதிகார வர்க்கம் அதன் வழியே அவர்கள் குலத்தை ஆசுவாச படுத்த நினைத்து உண்டாக்கும் மேம்பாடுகள் இயற்கைக்கு உண்டாகப் போகும் பேராபத்தை மிதக்கும் வண்ணங்களின் வழி காட்சி படுத்தியும் ஒன்றும் இயலாத கையறு நிலையில் இருக்கும் அந்த சமூகத்தின் மீதான கரிசனம் யாருக்கு தேவைப் படுகிறது.
மனிதனுக்கு புரியாத நிஜம் நிஜத்தை வெளிப்படுத்�� காத்து கொண்டேயிருக்கிறது. காலம் அதற்கான எப்போதுமான திறப்பாய் வழியை விட்டுக் கொண்டேயிருக்கிறது. எல்லா நிஜங்களும் மாறுதல்களும் மனிதனுக்கானதாக இருப்பதில்லை. அவனையும் ஒரு நாள் இந்த நிலம் வெளித்தள்ளும்.
Completed Reading the Tamil Novel Bhagirathiyin Madhiyam by writer Ba.Venkatesan. The novel set as narrated by one of its characters to the writer itself uses various forms of fiction to narrate. It is characterized by a complete lack of chapters the novel itself is not split into any chapters or sections. The paragraphs are characterized by lengthy statements with multiple sections inside single statements grouped through brackets. It took me some time to get used to the language in this format. Once you get used to the language reading it becomes easy. The novel starts with a pivotal incident in which a roadside altercation between Vasudevan (charted accountant belonging to the Bhramin community) has with Urangapuli (rationalist atheist lifelong supporter of EVR Periyar) in a function to mark the birth anniversary of EVR. The argument between EVR and Vasudevan which when discussing the marriage between EVR and Maniammai, Vasudevan says that this incident clearly shows that not all incidents in the world need a rational basis gets Urangapuli agitated and in a fit of anger he cuts Vasudevan's kudumi(tuft of hair traditional Bhramin have). These two characters Vasudevan Bhraminical middle class and Urangapuli get tied into an interesting duel all through the novel. Urangapuli while escaping after the incident accidentally hides in Vasudevan's house whose wife Bhagirathi he sees in an afternoon time and falls instantly in love with her. Bhagirathi who is the wife of Vasudevan is such a mysterious beauty. She is used to having her afternoon nap and falls into dreams which sometimes make her even walk about in her sleep. In one of those afternoon sleeps only Urangapuli meets her and listen to her speak about a painter Gemini whose paintings as a child Bhagirathi's father had introduced. This Gemini and the painting for Bhagirathi represents the nascent love which is deep inside her subconscious. Having that dream at that point is an expression of the yearning for that pristine love she had felt during that time. Bhagirathi being born as the last daughter was considered special by her father and showered with unconditional love. Then things get a turn to worst when her father dies and life becomes difficult. Although she is having a happy loving family with Vasudevan her dreams show a complex psyche. Bhagirathi in the fateful day starts thinking Urangapuli to be Gemini the painter from her childhood. Urangapuli starts his journey of finding Gemini for Bhagirathi.
We see the life of Gemini introduced through the travels of Urangapuli, a painter who is from Tamilnadu who ran away from home and spent his lives in Bihar and Bengal. Eventually, he finds his life in the painting of Dussad tribes and marries the tribal girl Savita Devi. Gemini and Savita Devi lived their lives in Calcutta during the time of independence. Gemini became a famous Dussad painter. Savita Devi was loved by one of his relatives Bimal das who continues to visit them over their life in Calcutta.
When Urangapuli wants to meet Gemini family who is living in Hosur, he finds that Gemini had died and it's only his son Mahavathan who is living with her ailing mother Savita Devi. In the subsequent portion, we have one of the finest conversations on love where Savita thinks Urangapuli to be Bimal das the one who loved her, and Urangapuli addresses Savita as Bhagirathi. They ask questions on Love and the social constraints on love, and why love itself cannot be shared between many. They reflect on the fact that how love resides in a realm of idealism and it's in contradiction to the societal norms of the family.
This idea of the unrequited love, social constraints on love which sometimes is fundamental to the running of society but which in itself is contradictory to the realm in which love operates is fundamental to the novel. When Bhagirathi also falls in love with Gemini we see Vasudevan grappling with the same question, he feels cheated and hateful and involves in a brutal relationship in the same night as a sort of vengeance. But Bhagirathi does not even seem to be showing an iota of guilt or repentance to her husband which infuriates Vasudevan. Bhagirathi says it is the same love I felt for you that I feel for Gemini also and it's not in contradiction if I had to reject him it is as same as rejecting you. This completely shatters the family and society norms on which Vasudevan's life has been running smoothly. It kind of shows how much of our social norms and structures which are related to the mundane can easily be shattered as our subconscious is so difficult to grasp in this case due to the love.
This story is overlapping with the chaotic phase the country is going through with the Naxalite movement, the declaration of emergency etc. You seem to wonder whether the nation itself is going through an afternoon dream phase where in all the previous social structures are falling apart. Gemini's story takes us to the Naxal heartland of rural Bengal where we see the feudal forces fighting with the Naxal and introduced to Ingalaiah a tribal who feels that the farmers who are protesting against landowners on exploitation are in itself uncaring to the everyday exploitation Adivasi faces from the farmers. This chaotic phase in a sense parallel to the forces which are affecting the personal lives of this people. It seems like these things are mysteriously interlinked in ways which are hard to see. To top it all the story itself is narrated by a Gandhian psychologist Aranganathan, who missed seeing the girl who had fallen in love with her in his young age thirty years ago and starts thinking that Bhagirathi is that girl.
The characters seem to nicely represent the forces affecting India, Aranganathan the Gandhian who had lost the country 30 years back, Vasudevan who represents the mainstream pwoer structure that is ruling the country, Gemini who through his unrequited love wants to dedicate his life to the country. Bhagirathi metaphorically becomes the country itself which Aranganathan continues to search.
The only problem with the novel is the intenseness with which the personal relations are written , the overlapping narration does not match in its intensity.
இந்த நாவலை வாசிக்க ஆரம்பித்தவுடன் ஒருவகை மயக்கத்தில் ஆழ்ந்து போகிறோம். பல்வேறு காலகட்டங்களையும், பல்வேறு மனிதர்களின் வாழ்க்கையையும், அவர்களின் கனவுகளையும் ஒரே நூலில் கோர்த்து கதை சொல்லும் திறமை வியப்பூட்டுகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த விரிந்த கேன்வாஸ் சில இடங்களில் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது. எந்தக் கதை எங்கே போகிறது என்று தொலைந்து போகும் உணர்வு வாசிப்பின் நடுவில் வந்து செல்கிறது. நீண்ட வாக்கியங்களில் பயணிக்கும் நடை ஆரம்பத்தில் தடுமாற்றத்தை ஏற்படுத்தினாலும், பழகிய பின்னர் ஒருவகை ஓட்டத்தைத் தருகிறது. இசையின் ஏற்ற இறக்கங்களைப் போல் வாக்கியங்கள் நீண்டு, சுருங்கி, மீண்டும் நீண்டு செல்லும் விதம் சுவாரஸ்யமாக இருக்கிறது.
நாவலில் வரும் விவாதங்கள் மிகவும் அறிவுசார்ந்தவை, ஆழமானவை. பெரியார் குறித்த பார்வைகள், பெண் விடுதலை குறித்த கேள்விகள், கலை மற்றும் கலைஞன் குறித்த சிந்தனைகள் என்று எண்ணங்களைக் கிளறும் உரையாடல்கள் நாவல் முழுவதும் சிதறிக் கிடக்கின்றன. குறிப்பாக கலை என்பது அழகை மட்டும் தேடுவதா அல்லது யதார்த்தத்தின் அவலத்தையும் பதிவு செய்வதா என்ற விவாதம் மிக ஆழமாக எடுத்துச் செல்லப்படுகிறது. களப்பணியாளன் மற்றும் கலைஞன் இருவரும் சமூகத்துக்கு எப்படி பங்களிக்கிறார்கள், அவர்களின் உத்திகள் எவ்வாறு வேறுபடுகின்றன என்பது நுண்ணிய முறையில் ஆராயப்படுகிறது. ஆனால் இந்த அறிவுசார் விவாதங்கள் சில இடங்களில் அதிகமாகி, கதையின் ஓட்டத்தை முடக்கி வைப்பதாகவும் உணர்கிறோம்.
கதாபாத்திரங்கள் மிகவும் சிக்கலானவர்கள், பன்முகத்தன்மை கொண்டவர்கள். வாசுதேவன், உறங்காப்புலி, பாகீரதி, ஜெமினி என ஒவ்வொரு பாத்திரமும் தனக்கென ஒரு உலகத்தை உருவாக்கிக் கொள்கிறது. பாகீரதி என்ற பெண் பாத்திரம் மிகவும் வலுவாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அவளது சுதந்திர உணர்வு, அவளது காதல் மற்றும் அவளது போராட்டங்கள் நம்மை ஆழமாகப் பாதிக்கின்றன. உறங்காப்புலி என்ற பாத்திரம் மிகவும் சிக்கலானது - அவனது அரசியல் செயல்பாடுகள், அவனது காதல், அவனது மனச்சிதைவு எல்லாம் நம்மை அச்சுறுத்துகின்றன. ஆனால் சில பாத்திரங்கள் தெளிவாக நம் மனதில் பதியாமல் போய்விடுகின்றன. பல பாத்திரங்கள் வருவதாலும், அவர்களின் காலகட்டங்கள் மாறி மாறி வருவதாலும் சில நேரங்களில் யார் யார் என்று குழப்பம் ஏற்படுகிறது.
கிளைக் கதைகளின் வீச்சு அசாதாரணமானது. ஒவ்வொரு கிளைக் கதையும் சுதந்திரமாக நின்று கொள்ளும் அளவுக்கு வலிமையானவை. ஜெமினியின் ஓவியப் பயணம், இருப்புப்பாதை போராட்டம், சுருளிநாதனின் காதல் என ஒவ்வொன்றும் நமக்கு புதிய உலகங்களைத் திறந்து காட்டுகின்றன. ஆனால் இவையெல்லாம் மையக் கதையுடன் எப்படி இணைகின்றன என்பது சில இடங்களில் தெளிவாகத் தெரியவில்லை. ஒரு வேளை இந்தக் கட்டற்ற தன்மைதான் நாவலின் வலிமையாகவும் இருக்கலாம், ஆனால் வாசகனாக நாம் எப்போதும் ஒரு திசையை தேடிக்கொண்டே இருக்கிறோம்.
இருமை என்ற கருத்து நாவல் முழுவதும் ஊடுருவி நிற்கிறது. கிழக்கு-மேற்கு, பிராமணன்-பகுத்தறிவாளன், ஆண்-பெண், ஆதிவாசி-நாகரிக மனிதன் என்று எதிர்நிலைகள் மூலமாக விஷயங்களை ஆராயும் முறை சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆனால் சில இடங்களில் இந்த இருமை மிகவும் எளிமைப்படுத்தப்பட்டதாகவும் தோன்றுகிறது. வாழ்க்கை எப்போதும் இரண்டு எதிர் முனைகளில் மட்டும் இயங்குவதில்லை, இடையில் ஏராளமான சாம்பல் நி��ங்கள் இருக்கின்றன என்பதை நாவல் சில இடங்களில் மறந்து விடுவதாகத் தோன்றுகிறது. குறிப்பாக காந்தி-பெரியார் இருமை மிகவும் கடுமையாக வரையறுக்கப்படுகிறது, அதனால் நுணுக்கம் சற்றே தொலைந்து போகிறது.
வரலாற்று நிகழ்வுகளின் பின்னணியில் கதை நகர்வது நாவலுக்கு பருமனைக் கொடுக்கிறது. பீகார் பூகம்பம், வங்காள நக்சல்பாரி இயக்கம், எமர்ஜென்சி காலம், மொழிப் போராட்டம் என வரலாறு திரைகளாக மாறி மாறி வருகிறது. இது நாவலை வெறும் தனிமனித கதையாக இல்லாமல் ஒரு சமூக வரலாற்று ஆவணமாக மாற்றுகிறது. ஆனால் இந்த வரலாற்று நிகழ்வுகள் சில நேரங்களில் கதையை விட பெரிதாகி, கதையே பின்னுக்குத் தள்ளப்படுவதாகவும் உணர்கிறோம். வாசகனுக்கு இந்த வரலாற்று சூழல்கள் குறித்து முன்னறிவு இல்லாவிட்டால் பல இடங்களில் தொலைந்து போகும் ஆபத்து இருக்கிறது.
காதல் என்ற உணர்வை பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதாக நாவல் சித்தரிப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. பகுத்தறிவு இயக்கத்தின் பின்னணியில் வரும் ஒரு கதையில் காதல் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டது என்று சொல்வது ஒருவகை முரண்பாடாகவும், அதே நேரத்தில் நேர்மையான ஒப்புதலாகவும் இருக்கிறது. மனித உணர்வுகளை வார்த்தைகளில் அடைத்து விட முடியாது என்ற கருத்து மிகவும் அழகாக வெளிப்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த உணர்ச்சி நிறைந்த தருணங்கள் சில இடங்களில் மிகையாகிப் போவதாகவும் தோன்றுகிறது. "அற்புதம்" "பயங்கரம்" என்று மட்டுமே சொல்லி விட்டு போவது சில சமயங்களில் ஏமாற்றத்தைத் தருகிறது.
நாவலின் முடிவு திருப்தியளிப்பதாக இல்லை. இத்தனை விரிவான கதையாடலுக்குப் பின் ஒரு தெளிவான முடிவை எதிர்பார்க்கிறோம், ஆனால் கதை திடீரென முடிந்து விடுவதாக உணர்கிறோம். ஒருவேளை ஆசிரியர் வேண்டுமென்றே திறந்த முடிவை விரும்பியிருக்கலாம், வாசகன் தானாக முடிவை கற்பனை செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்திருக்கலாம். ஆனால் வாசகனாக நாம் கொஞ்சம் அதிகமான தெளிவை எதிர்பார்க்கிறோம். எல்லாக் கதைகளும் எங்கே போய் முடிகின்றன என்பது குறித்த ஒரு திருப்தி நமக்குக் கிடைக்கவில்லை.
மொத்தத்தில் "பாகீரதியின் மதியம்" மிகவும் லட்சியம் மிக்க, சவாலான, அறிவுசார் நாவல். இதை எழுதியிருக்கும் தைரியமும், இத்தனை பரந்த கேன்வாஸில் ஓவியம் வரைந்த திறமையும் பாராட்டுக்குரியவை. ஆனால் அதே நேரத்தில் இது எளிதில் வாசிக்கக் கூடிய நாவல் அல்ல. பொறுமையும், கவனமும், முன்னறிவும் தேவைப்படும் படைப்பு. சில இடங்களில் மிகவும் அற்புதமாக இருக்கும் இந்த நாவல் வேறு சில இடங்களில் குழப்பத்தையும், சோர்வையும் ஏற்படுத்துகிறது. இருந்தாலும் இதை முடித்த பின்னர் மனதில் நிறைய எண்ணங்களை விட்டுச் செல்லும் நாவல் இது. அதுவே ஒரு பெரிய வெற்றி.
3-க்கு கீழ் போகாததற்கு காரணம்: அறிவுசார் ஆழம் மிக அதிகம். மொழி நடையின் கவித்துவம் அசாதாரணமானது. பாகீரதி போன்ற சில கதாபாத்திரங்கள் மறக்க முடியாதவை வரலாற்று பின்னணி மிக நேர்த்தியாக பயன்படுத்தப்பட்டுள்ளது. முயற்சியின் லட்சியம் பாராட்டுக்குரியது. நல்ல படைப்பு, ஆனால் சில முக்கியமான குறைகள் முழு மதிப்பெண் பெறுவதை தடுக்கின்றன. சராசரிக்கு மேல் நிச்சயம், ஆனால் சிறந்ததாக சொல்ல தயக்கம்.
நாவலின் கதைக்களம் 1970-களில் சுதந்திர இந்திய வரலாற்றின் கொந்தளிப்பான காலகட்ட நிகழ்வுகளோடு சொல்லப்படுகிறது. வாசுதேவன், உறங்காப்புலி, பாகீரதி, அரங்கநாதன் நம்பி, ஜெமினி, விபின், இங்க்ளய்யா, சவிதாதேவி, மகாவதன்,பிரமிளா, புகழேந்தி, மலர்விழி இன்னும் பல கதாபாத்திரங்களின் எண்ணங்களும் அலைக்கழிப்பும் தான் கதை. அறிமுகமற்ற இருவரின் விவாதமும் அதன் விளைவும் தான் கதையின் தொடக்கம் என்றாலும் அங்கிருந்து தொடங்கும் தேடலில் அலசப்படும் அரசியல், சமூகம், மனித செயல்கள் எண்ணங்கள் யாவையும் யதார்த்தம் vs கனவு ,திராவிட vs பிராமணியம், யதார்த்தம் vs கனவு , உணர்வு கிளர்தல் vs பகுத்தறிவு காதல் , விவசாயி vs முதலாளி, சமவெளி vs பழங்குடி, சிறு தெய்வம் vs பெருந்தெய்வம் , சுற்றுச்சூழல், போன்றவற்றைப் பற்றிய ஆழமான உரையாடல்கள், விவாதங்கள் தான் வாசிப்பை பிடித்து வைத்து சிந்திக்க தூண்டுபவையாக அமைந்தது. ஒருவரில் இன்னொருவர், ஒரு கதையில் இன்னொரு கதை என்று நேரலை அற்ற கதையின் போக்குடன் நீண்ட நெடிய வாக்கிய அமைப்பும், அடைப்புக்குறிக்குள் தொகுக்கப்பட்ட கதாபாத்திரத்தின் செயல்களின் சாத்தியங்கள்; அடைப்புக்குறியுனுள் ஒரு அடைப்புகுறியில் மற்றொரு சாத்தியங்கள்; எனப் பல பிரிவுகளைக் கொண்ட நீண்ட அறிக்கைகளால் வகைப்படுத்தப்படுகின்றன. கதாபாத்திரங்களின் உணர்வுகளை நேரடியாக அல்லாமல் பல சாத்தியக்கூறுகளை அடுக்கிக்கொண்டே அந்நிகழ்வின் அலைச்சலோடு வாசிப்பும் பெரும் அயற்சியோடும் நகர்த்தி செல்லக்கூடிய எழுத்து நடை.