உரைநடையின்றி சங்கக் கவிதைகள் புரிவதில்லை. ஆனால் கவிஞர் ராணி திலக்கின் 2-வது கவிதை நூலான காகத்தின் சொற்கள் உரைநடையில் அமைந்த சங்கக் கவிதைகளைப் போல் உள்ளன. ஒரு பாட்டி கதை சொல்வது போலவும் இருப்பதால் மிகுந்த சுவாரஸ்யம் அளிக்கிறது. இதன் வடிவமோ சிறுகதையின் கால் பக்கத்தை வெட்டி வைத்ததுபோல் உள்ளது. மொழியோ கடைந்தெடுத்த தயிர்போல் உள்ளது.
ராணி திலக் (ஆர்.தாமோதரன்; பிறப்பு : ஜனவரி 15,1972) தமிழ்க்கவிஞர், கவிதை விமரிசகர், சிறுகதை எழுத்தாளர். 1997 முதல் தமிழ் சிறுபத்திரிகை சூழலில் இயங்கி வருபவர்.