Sujatha was the allonym of the Tamil author S. Rangarajan, Author of over 100 novels, 250 short stories, ten books on science, ten stage plays, and a slim volume of poems. He was one of the most popular authors in Tamil literature, and a regular contributor to topical columns in Tamil periodicals such as Ananda Vikatan, Kumudam and Kalki. He had a wide readership, and served for a brief period as the editor of Kumudam, and has also written screenplays and dialogues for several Tamil movies.
As an engineer, he supervised the design and production of the electronic voting machine (EVM) during his tenure at Bharat Electronics Limited (BEL), a machine which is currently used in elections throughout India. As an author he inspired many authors, including Balakumaran, Madhan.
தமிழில் அறிவியல் அறிவு புகட்ட சுஜாதாவின் எளிய முயற்சி. ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாத பல பெயர்கள், பல மூளைச்செயல்பாடுகள் வருவது படிக்க சிறிது கடினமாக இருந்தது. கேள்வி பதில் பாகம் அருமையாக இருந்தது.
One can't read a Sujatha nonfiction without a smile plastered on their face. I read this book mainly to pick his brain for effective ways to communicate complex medical concepts to lay people (since most of this book's pulp is neurology that a doctor would've studied in med school). The man didn't shy away from exploring a wide range of topics in neuroscience, in fact, he has researched and presented everything a final year med student would need to know to ace a neurology viva and more.
Along with Yen-Edharku-Eppadi, and Vandhaargal Vendraargal, this book has left me wishing I read this weekly as a series on Ju Vi just for the spaced dose of such beautiful prose from these authors. Certain sections of the book can be overwhelming for a non-biology student with its barrage of medical terms without breathing gap - but mind you, this series was a spectacular success back in the day nevertheless (I would attribute it to his humourous style and the pertinent puzzles that would shake the reading brain out of the biology induced weariness).
90களின் ஆரம்பத்தில் விகடனில் தொடர் கட்டுரைகளாக, மனித மூளையை பற்றி சுஜாதா எழுதியது. அதை கட்டுரைத்தொகுப்பாக புத்தக வடிவில் வெளியிட்டுள்ளனர்.
கிட்டத்தட்ட மனித முளைக்குள்ளேயே நம்மை அழைத்துச் சென்று அணு அணுவாக சுற்றிக்காட்டியுள்ளார், திரு சுஜாதா. மேலும், தண்டுவடம்-மூளைக்குண்டான தொடர்பு, இடது மூளை வலது உடல் உறுப்புகளை நிர்வகிப்பது(போலவே வலது முல்லை, இடது பக்க உடல் உறுப்புகளை நிர்வகிப்பது),மனோதத்துவ வகையிலும் மூளை, மனிதனை எந்த அளவிற்கு விநோதமானவனாக மாற்றுகிறது, போன்ற பல்வேறு தகவல்கள் மூளையை பற்றி நமக்களிக்கிறது.
இந்த புத்தகத்தை படித்து முடித்த பின், கிட்டத்தட்ட, மூளையை கூராய்வு செய்யும் அளவிற்கு(உவமைக்காக), அவ்வளவு தகவல்களை திரட்டி கட்டுரைகளாக தரப்பட்டிருக்கிறது. கட்டுரையில் பல இடங்களில் மூளையின் பாகங்களை குறிப்பிடப்பட்டிருக்கின்றன, அவைகளை உயிரியல் படித்தவர்கள் ஓரளவுக்கு தொடர்பு படுத்திக்கொள்ளலாம்.
ஆங்காங்கே தன்னுடைய 'ட்ரேட்மார்க்' எள்ளல், குறும்புத்தனங்களுடன் எழுதினாலும், நமக்கு ஆச்சரியம் என்னவென்றால், இவ்வளவு கடினமான சொற்களை கொண்டு முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே, சுஜாதா அவர்கள், வாசகர்களை முன்னோக்கி சிந்திக்க வைத்திருக்கிறார். புத்தகத்தின் கடைசியில் வாசகர்களின் கேள்விகளும் , அதற்கு அவர் அளித்த பதில்களும் பதிக்கப்பட்டுள்ளன. மேலும் புத்தகம் முழுக்க மூளையின் பாகங்கள், தண்டு வடம், அது உடலோடு தொடர்பு கொண்ட முறை என பல்வேறு வரைபடங்களும், சித்திரங்களும் அச்சிடப்பட்டுள்ளது.
புத்தகத்திலிருந்து...
\ 'செரிபெல்லம்' சரியாக வேலை செய்யவில்லை என்றால், நம்மால் கார் ஓட்ட முடியாது, பல் தேய்க்க முடியாது. 'செரிபெல்லம்' மூளைத்தண்டின் முடிவில் கொஞ்சம் போல் பின்குடிமி மாதிரி கொத்தாக இருக்கிறது. /
\ ஓட்டுரிமை உள்ளவர்களுக்கு 22 எலும்புகளால் இணைக்கப்பட்டு, ஒட்டப்பட்ட தேங்காய் போல இது(மண்டையோடு). /
\ மூளைக்கு, ஒரு நிமிடத்துக்கு எண்ணூறு மில்லி ரத்தம் தேவைப்படுகிறது. உடம்பின் வெய்ட்டில் ஐம்பதில் ஒரு பங்கே இருந்தாலும் ரத்தம், ஆக்சிஜன் ஆகியவற்றின் மொத்த தேவையில், ஐந்தில் ஒரு பாகத்தை மூளையே அபகரித்து கொள்கிறது. தூங்கினாலும் விழித்தாலும் எப்போதும் 'க்ளுகோஸ்...க்ளுகோஸ்...' என்று அலறும் ராட்சத குழந்தை அது! /
\ மூளையைப் போல ஒரு சுகவாசி கிடையாது. சதா அது ஒரு மகாராஜா போல தண்ணீர் படுக்கையில் உல்லாசமாக மிதக்கிறது. இந்த மிதப்பே, அதன் எடையை 20 தடவை குறைகிறது. /
\ பேச்சு, பார்வை எல்லாமே மூளையின் வளர்ச்சியால் ஏற்படுவது. வளர்ச்சி என்பது கற்றுக்கொள்வது. நரம்பு செல்களுக்குள் இணைப்புகள் அமைப்பது. இந்த வளர்ச்சியின் மைல்கற்கள் இதோ:
ஆறுமாதம் : முகங்களை அடையாளம் கண்டு கொள்ளுதல்.
ஒரு வயசு: முதல் வார்த்தைகள், பொருட்களை கையாளும் திறமை.
இரண்டரை வயதில்: பேசுவதை விட அதிகமான வார்த்தைகளை புரிந்து கொள்ளும். தான் என்பது வந்து, தான் ஆணா ... பெண்ணா என்பது தெரியும்.
மூன்று வயசு: தனக்கு எத்தனை வயசு என்பது தெரியும். 'பெரிய - சிறிய' புரியும்.
நான்கு வயசு: பல வார்த்தை வாக்கியங்கள், நேற்று-இன்று-நாளை, புரியும்.
நாளிலிருந்து ஏழு: புத்திசாலித்தனத்தின் ஆரம்ப அறிகுறிகள்.
ஆறு வயசு: முதல் எழுத்துக்கள் முப்பது வரை எண்ணிக்கை நெட்டுருப் போடும் திறமை. "மாமாவுக்கு திருக்குறள் சொல்லி காட்டு... " "மாத்தேன் போ... "
பத்து வயசு : மனக்கணக்கு திறமை.
பதினொரு வயதில் : பகுத்தறியும் திறமை.
பன்னிரண்டில் : 'பிளாட்டோவா!' படிச்சிருக்கேனே. அதுல என்னன்னா சில இடங்களில் லாஜிக்கலாவே இல்லை!" /
\ உலகை நாம் உணரும் விதம், சற்று பாரபட்சமானது. ரோஜாவுக்கு வாசனையையும், குயிலுக்கு குரல் இனிமையையும் கொடுப்பது நாம் - நம் மூளை! We are the music while the music lasts - இன்று டி.எஸ்.எலியட் சொன்னதை யோசித்துப் பாருங்கள். 'சங்கீதம் நிலவும் வரை நாம்தான் சங்கீதம்'. அந்த கரகரப்பிரியா, கனடாவெல்லாம் நம் மூளையின் திறமையால் அறிந்து கொள்ளப்படும் வித்தியாசங்கள் /
\ தினத்தில் சில சமயம் நாம் 'மூட் அவுட்' ஆவது, சிலசமயம் உற்சாகமாக உற்சாகமாக இருப்பது இதனால்தான். இதை, 'சர்கேடியன் ரிதம்' (தினப்படி துடிப்பு) என்று சொல்கிறார்கள்.
எல்லாம் நன்மைக்குத்தான். ராத்திரி மூத்திர சப்ளை குறைவது நிம்மதியான தூக்கத்திற்கு. இதுபோல 'ஹைப்போதலாமஸ்' எனும் பகுதி, பெண்களின் மாதாந்திர மாறுதல்களை கட்டுப்படுத்துகிறது. ரத்தத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவை நிர்ணயித்து, 'எப்போ உட்கார வைக்கலாம்' என்று தீர்மானிக்கிறதாம்.
இந்த மாறுதல்கள் சுற்றுப்புறத்திலிருந்து இரவு-பகல் எப்போது என்கிற செய்தி தேவைப்படுகிறது என்று நினைக்கிறார்கள். ஆர்க்டிக் பிரதேசத்தில் கோடைகாலத்தில் மாதக்கணக்கில் சூரியன் மறையாமல் இருக்கும் போது இந்த 'ரிதம்'கள் பாதிக்கப்படுகின்றன. அமெரிக்கா போனவர்கள், நிச்சயம் 'ஜெட்லாக்' உணர்ந்திருப்பார்கள். அகாலமாக தூங்கிக்கொண்டு... நடுராத்திரியில் ரெப்ரிஜிரேட்டரை திறந்து சாப்பிட்டுக்கொண்டு... சுமார் ஒரு வாரம் ஆகும் பழைய நிலை வர! /
\ தண்டுவடம் மூளையின் அதிகப்படியான பகுதியா ? இல்லை! பரிணாம வளர்ச்சியில் ஸ்பைனல் கார்ட்-தண்டுவடம்தான் முதலில் வந்து அதன் முனையில் சிக்கலான வெளிவளர்ச்சி மூளை என்று சொல்கிறார்கள். /
\ விஞ்ஞான முன்னேற்றம் மூளையை உபயோகிக்கும் திறனை காலப்போக்கில் குறைத்துவிடுமா? உதாரணம்: தற்போது கால்குலேட்டர் வந்ததால், பெருக்கல் வாய்ப்பாட்டை மறந்து விட்டார்கள் அல்லவா?
உபயோகிக்கும் திறமை குறையாது. திறமை திசை மாறிவிடும். வாய்ப்பாட்டை மனப்பாடம் செய்யத் தேவையில்லை தான். ஆனால், எத்தனை வேறு விஷயங்களை மனப்பாடம் செய்கிறோம். காதலியின் பிறந்தநாள், கமலஹாசன் நடித்த படங்கள், வெற்று அரசியல்வாதிகளின் பெயர்கள். எத்தனை! மேலும், பரிணாம மாறுதலில் நாம் நம் சூழ்நிலையுடன் இணங்கி போவதற்காக தேவையான திறமைகளை மூளை மெல்ல மெல்ல அடைந்துவிடும். இன்னும் சில நூற்றாண்டுகளில் நம் மூக்கில் நுழையும் கார்பன் மோனாக��சைடைக்கூட வடிகட்டும் திறமை வரலாம். எதிராளி பொய் சொல்வதை கண்டுபிடிக்க சில நியூரான்கள் கற்றுக்கொள்ளலாம். இதற்கெல்லாம் ரிசர்வ் செய்வதற்குக் கைவசம் நிறைய நியூரான்கள் வைத்திருக்கிறது தலைமைச் செயலகம்(மூளை) /
Not many can convey complicated working of brain in simple terms that is easily understandable. Where sujatha stands out is with the examples that he gives. The book starts with explanation on different parts of brain and how they try to work with. The second part gives emphasis on important things like feelings, thoughts, behavior, memory, vague working of brain certain cases, psychic behavior, problems that might happen generally, hypnotism, yoga and meditation. Sujatha brings in things that he has read like dhivya prabandham, electronic knowledge, knowledge on other biological wishes in the correct sense and correct amount to explain things (to make us understand). The final phase where he talks on neural network, machine learning (which are very much hot topics today) having explained so much ahead made me feel astonished of how advanced this man was.
One cannot call this book as a complete guide on brain, since there are some things which the book does not touch upon. The last section in the form of question and answer was typical sujatha with comical touch. Quiz on brain was a good thinker.
The book made me think, on the one who makes me think. Initial phases were surprising and the second part was more interesting to know the facts. But the book actually needed a brush up at last from the first to last to understand it completely, since what you read first sticks more only on reading it the second time.
What my biology book could not achieve could be achieved by sujatha sir. Go for it, if you are inquisitive about your brain and its working. Atlast the books helps in getting optimism that brain changes with advancement, hence human need not have to worry too much on rapid advancement that happens at present.
மனிதர்களாகிய நம்மை ஆட்சி செய்யும் நம்மிடம் இருக்கும் முக்கியமான உறுப்பு மூளை. நம்முடைய ஒவ்வொரு அசைவுகளையும் எண்ணங்களையும் அதனுடைய கட்டுக்குள் இருக்கும் காரணத்தினாலே சுஜாதா இந்த மூளை நரம்பியல் அறிவியல் கட்டுரைத் தொகுப்பிற்கு 'தலைமைச் செயலகம்' என்ற பொருத்தமான பெயரைச் சூட்டியுள்ளார்.
இன்று நமக்கு மூளையைப் பற்றி அதிகச் செய்திகள் தெரிந்திருக்கிறது. நரம்பியல் ஆய்வுகளும் அதன் அபார வளர்ச்சியை எட்டிக்கொண்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக ஒரு தலைவலி என்றால் நரம்பியல் மருத்துவரைச் சென்று அணுக வேண்டும் என்ற அளவிற்கு ஒரு புரிதல் வந்திருக்கிறது ஆனால் 1980 90களில் மூளையும் அதன் பல செயலாக்கங்கள் புதிராகவும், எளிதில் குறிவிலக்கம் செய்துகொள்ள முடியாதவாறு தான் இருந்திருக்கிறது. அக்கால கட்டத்திலே சுஜாதா அது அவர் துறையில்லை என்றாலும் மூளை அறிவியலில் ஆர்வம் கொண்டு அதன் வடிவம் தொடங்கி அந்தத் துறை அப்போது வரை அடைந்திருந்த வளர்ச்சி குறித்தும் அறிந்து வைத்திருப்பது வியப்புக்குரிய ஒன்றாகும். தனக்கு அவ்வளவு தெரிந்திருந்தாலும் அந்தக் கர்வத்தை அவருடைய தலைமைச் செயலகத்தில் ஏற்றிக்கொள்ளாமல் சாதாரண வாசகர்களுக்கும் இந்த அறிவு சென்றடைய வேண்டும் என்ற அவருக்கிருந்த முனைப்பு ஒவ்வொரு கட்டுரையிலும் மிளிர்கிறது. தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் சுவாரஸ்யம் ததும்ப இத்தொகுப்பைப் படைத்திருக்கிறார்.
மனமும் மூளையும் ஒன்றா? மனிதனின் மனம் மனித மூளையில் தான் இருக்கிறதா? போன்ற கேள்விகளை சுஜாதா அணுகியிருக்கும் விதம், மனித மூளையின் நரம்பியல் கட்டமைப்புகளையும், கணினி அறிவியலில் இருக்கும் செயற்கை நரம்பணுப் பிணையங்களையும் அவர் ஒப்பிட்டிருப்பது நான் இத்தொகுப்பில் மிகவும் ரசித்த தலைப்புகள்.
Sujatha's writing always impresses me. He is one of the great writers, who was multifaceted. Be it literature, science, technology, short-stories, fiction etc, he has the knack to deliver it to the audience at large. This book is thoroughly researched, well written and could be read by people not so inclined towards science. The book was an interesting read from start till end. Though not so in-depth as the other books on brain-science, this is written in a way that even a layman would be interested to go further studying about the brain.