Jump to ratings and reviews
Rate this book

எஸ்தர்

Rate this book
1975 ஏப்ரல் வாக்கில் திடீரென்று நண்பர் விக்ரமாதித்யன் சென்னைக்கு என்னைத் தேடி வந்தார். "பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் படித்த நண்பர்கள் சிலர் சேர்ந்து எனது சிறுகதைகளைத் தொகுப்பாகக் கொண்டுவர விரும்புவதாகவும், கதைகளைக் கொடுங்கள்" என்று கேட்டார். கைவசமிருந்த கதைகளை நம்பிராஜன் வாங்கிக் கொண்டு திருநெல்வேலிக்குப் போனார்.

அப்போது சிறுகதைத் தொகுப்பு வரவேண்டுமென்ற ஆசையைவிட வேலை கிடைக்கவேண்டும் என்ற ஆசை தான் அதிகமாக இருந்தது. வேலை தேடி அல்லாடிக் கொண்டிருந்தேன். சிறுகதைகளை விக்ரமாதித்யன் வாங்கிச் சென்றதெல்லாம் மறந்தே போய்விட்டது.

இரண்டு மாதம் கழித்து எனது சென்னை முகவரிக்கு எஸ்தர் பிரதிகள் தபாலில் வந்துசேர்ந்தன. ஆச்சரியமாக இருந்தது எஸ்தர் தொகுப்பு தமிழிலக்கிய உலகத்தில் நான் எதிர் பார்த்திராத அளவுக்கு முக்கியத்துவமும் பெற்றுவிட்டது.

-வண்ணநிலவன்

104 pages, Paperback

Published January 1, 2014

7 people are currently reading
173 people want to read

About the author

Vannanilavan

31 books49 followers
Vannanilavan was born in Tirunelveli. His real name is U Ramachandran. He studied in Palayankottai, Tirunelveli and Sri Vaikundam and came to Chennai in 1973 in search of work. He worked for a short time in magazines like Kannadasan, Kanayazhi and Puduvaikural, and in Thuglak magazine in 1976 and later in 'Subhamangala' magazine. He has also worked as a dialogue writer for the Tamil film 'Aval Appadithaan' directed by Rudraiya. He married Subbulakshmi on April 07, 1977. They have a son named Anand Shankar and two daughters named Sasi and Uma. He currently lives in Kodambakkam, Chennai.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
20 (31%)
4 stars
31 (48%)
3 stars
10 (15%)
2 stars
0 (0%)
1 star
3 (4%)
Displaying 1 - 7 of 7 reviews
Profile Image for Muthu Vijayan.
37 reviews14 followers
December 17, 2020
Unpopular opinion : Every story is based on neo-noir type..... Not even a single story don't disappoint you 💯. One of the best short story collection 👌...... Can't choose which is your favorite story ..
Profile Image for Siva Prasath T R.
80 reviews4 followers
April 29, 2021
இது வண்ணநிலவன் அவர்களின் நான் வாசிக்கும்
முதலாவது புத்தகம். 1976ல் வெளிவந்த 17 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு தான் இந்த எஸ்தர். இந்த சிறுகதைகள், ஆங்கிலத்தில் Neo- noir என்ற சொல்லாடலை திரைப்படத்திற்கு பயன்படுத்துவார்கள், அந்த வகையைச் சேர்ந்ததாக உணர்கிறேன். மக்களின் வாழ்க்கையின் கருப்புப்பங்களை எடுத்துக்காட்டுவதே Neo- noir என்பார்கள். அனைத்துக் கதைகளும் மிக உயிரோட்டமாக, ஒன்றுக் கொன்று தொடர்புடையதாக தோன்றியது. ஒரு கதையின் முடிவு அடுத்தக்கதையின் தொடக்கமாக உள்ளதோ என்ற ஐயம் எழுகிறது.வெவ்வேறு குடும்பங்களின் மிகக்கொடிய வறுமையால் பின்னிப்பிணைந்த துன்பங்களையும் இன்னல்களையும் நேர்த்தியாக, கதைமாந்தர்கள் ஏதோ நம்மிடம் உரையாடுவதைப் போல படைத்துள்ளார் குறிப்பாக எஸ்தர் சித்தியும் ஈசாக்கும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் திரு. கமல் அவர்கள் பரிந்துரை செய்த புத்தகங்களுள் ஒன்று. படைப்பாளியின் படைப்புத்திறனை என்னவென்று பாராட்ட.. ஒரு வித கனமான இதயத்துடன் !! அவரின் மற்ற படைப்புகளையும் வாசிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
Profile Image for Bhuvan.
257 reviews43 followers
May 31, 2021
இவை எதுவுமே சிறுகதைகள் அல்ல.

பெரும் கதைகள்.

வாழ்க்கையின் வறுமையை, வருமை தரும் சோகங்களை, வாழ்க்கையின் யதார்த்தத்தை அதை மீறிய வாழ்க்கையின் முடிவில்லா எதிர்பார்ப்புகளை, அந்த எதிர்பார்ப்புகளின் சந்தோஷங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகிறது.

ஒவ்வொரு கதையிலும் எத்தனை கதைமாந்தர்கள் எத்தனை குடும்பங்கள் எத்தனை வாழ்க்கை முறைகள் படிக்கப் படிக்க பெருகிக் கொண்டே வருகிறது, தோண்ட தோண்ட கிடைக்கின்ற தங்கம்போல்.

இந்தத் தங்கப் புதையலிலும் சில வைரங்கள் இருக்கத்தான் செய்கின்றன. எஸ்தர், யுக தர்மம், அயோத்தி, அவனூர், கரையும் உருவங்கள் இவையெல்லாம் நான் கண்ட வைரங்களே.
உங்களுக்கு இது முழுவதும் வைரமாக கூட இருக்கலாம்.
Profile Image for Yadhu Nandhan.
261 reviews
June 9, 2022
இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு கதையும் மிகச் சிறப்பானவை ஆகும். எல்லாம் சிறிய கதைகளாகவே இருக்கின்றன ஆனால் அவை ஏற்படுத்தும் தாக்கம் மனதைவிட்டு நெடுநேரத்திற்கு போக மறுக்கிறது.

எஸ்தர் கதையில் வரும் எஸ்தர் எல்லா வீடுகளிலும் இருப்பதாக எனக்குப் படுகிறது. பள்ளி நாட்களில் துணைப் பாடப் பகுதியில் படித்த கரையும் உருவங்களை மறுபடியும் படிக்கையிலும் கண்கள் கண்ணீர் விட மறுக்கவில்லை.
ஆகமம் என்னும் கதையை மிகவும் நுட்பமான பார்க்கிறேன். வெளிச்சம் யுகதர்மம் விமோசனம் மனைவி போன்ற அனைத்து கதைகளும் ஏதோ ஒரு வகையில் மனதை விட்டு நீங்க மறுக்கிறது.
2 reviews
March 4, 2021
நடக்காத ஒன்றை எதிர்பார்த்து வருத்தப்பட்டு கொண்டு இருப்பதும் கூட மனதிற்கு மகிழ்ச்சியாக தான் இருக்கிறது
Displaying 1 - 7 of 7 reviews