தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் கி.பி. 205-215 நெடுஞ்செழியன் கி.பி. 205 முதல் 215 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். பாண்டியன் நன்மாறனின் மகனான இவன் தன் பாட்டனான நெடுஞ்செழியனின் பெயரைக் கொண்டிருந்தான். தனது தந்தையின் இறப்பிற்குப் பின்னர் 6-7 வயதிலேயே முடிசூட்டப்பட்ட இவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றிருந்தான். நெடுஞ்செழியன் ஆற்றிய போர்கள் நெடுஞ்செழியன் இளையவன், வயது முதிராதவன் ஆற்றல் இல்லாதவன் என இகழ்ந்து சோழநாட்டை ஆண்ட இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேர நாட்டை ஆண்ட மாந்தரஞ்சேர விரும்பொறை, கொங்கு நாட்டினை ஆண்ட திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள், பொருĪ
கி. வா. ஜ என்றழைக்கப்பட்ட கி. வா. ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர். இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. கம்பன் கழகம் இவரது நினைவாக கி. வா. ஜ பரிசை நிறுவி வழங்கி வருகிறது.
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்சிழியன் என்ற கழகக் காலப் பாண்டிய மன்னனைப் பற்றிக் கழக இலக்கியச் செய்யுள்களில் இருப்பவற்றை முற்றும் கற்று வாழ்க்கை வரலாறு வடிவில் அமைத்து ஆசிரியர் நமக்குத் தந்ததிந்நூல்
கழகச் செய்யுளில் ஆங்காங்கே கிடக்கும் ஒரு மன்னனைப் பற்றிய செய்திகளைத் தொகுப்பது பெருஞ்செயல். அச்செய்திகளுக்கு அடைவு தேர்வது அதாவது கால வரிசை உணர்ந்து அடுக்குவது அதனினும் அருஞ்செயல். இவ்வரும்பெருஞ்செயல் செய்ய இவ்வாசிரியர் எவ்வளவு காலம் கழக இலக்கியத்தில் ஆழ்ந்திருக்க வேண்டும்
ஒரு நூல் படித்தபின் எழுதும் பதிவில் அந்நூலின் சொல்லாக்கத்தினாலும் பொருட்செறிவினாலும் தாக்கமிருக்கும். அவ்வாறே இவருக்குச் சிலேடை இயல்பாக வாய்த்தது போலும். கரிகால்வளவன் பாண்டியன் நெடுஞ்செழியன் போன்றோர் வாழ்வைப் படம்பிடித்தாற்போல் காட்டத் தமிழுள் எவ்வளவாழ்ந்தாரோ அவ்வளவுயர்ந்தார்
பாண்டியன் வரலாறு கூறும் இந்நூல் நீரைக் கரை கட்டித் தேக்குகிறவன் இவ்வுலகில் தன் புகழைத் தேக்குகிறான் என்று ஆசிரியர் கூறும் இடத்தில் கரிகாலனை நினைவுபடுத்தியது. இருவருமே இளமை முதல் பகை சூழ்ந்து களம் கண்டு புகழ் வென்று நிலை நின்றவர்கள் என்ற ஒற்றுமை கண்டநொடி உள்ளம் களிக்கும்
அரிய பொருளை எளிதில் கைக்கொண்டு பிறருக்களிப்பவன் பாண்டியன் மட்டுமல்லன் கி.வா.Jaவும் அப்படியே. தாம் கற்றுவந்த தமிழை நமக்கும் கற்பித்து உவப்பளிக்கிறார்
தமிழில் ஓசையைக் குறிக்கச் சொல் குறைவு என்பார் சிலர். இவரோ கழகக் கடலைக் கடைந்தெடுத்து ஓசைக்கு ஒலி தந்த சொல் சில காட்டுகிறார்
தவ்வென்று மழைத்துளி வீசியதாம். மதுரை மாநகரத் தெருக்களில் கல்லென்ற ஓசை எப்பொழுதும் இருந்ததாம்
வாடைக்காற்று வீசும் பருவம் மிக நீண்டிருந்தாலும் அரசன் வெற்றி பெறும் வாடையாதலால் நெடுநல்வாடை எனப் பெயர் பெற்றதாம் அந்நூல். கழக இலக்கியத்திற்கு இப்படி ஓர் அறிமுகம் எக்காலத்தும் தேவை
அணி ஏதும் அணியா ஒப்பனையற்ற அரசி வண்ணம் தீட்டப்பெறாத கோட்டோவியமாம். எண்ணிப்பார்த்தால் ஆம் எனத் தோன்றும் இது போன்ற உவமைகள் பல உள இந்நூலில். இன்று நாம் Laabam என்ற சொல் புழங்கும் இடத்தில் ஊதியம் என்ற தமிழ்ச்சொல் புழங்குகிறார். எழினி எவ்வி போன்ற தனித்தமிழ்ப் பெயர் பல காட்டுகிறார்
புறப்பகை அகப்பகை என அரசியலும் உளவியலும் கலந்து பேசுகிறார் ஆசிரியர். பாண்டியன் நெடுஞ்செழியன் பற்றி இப்பதிவில் பேசப் புகும்பொழுதெல்லாம் ஆசிரியர் பற்றியே பேசு என என் அகம் பகைத்தது. பாடப்பட்ட மன்னனினும் பாடிய புலவர் புகழ் கல்வியால் ஓங்குதல் இயல்பன்றோ. வாழ்க கி.வா.Ja புகழ்!