சென்ற ஆண்டு சென்னை புத்தக திருவிழாவில் @G.v sir யின் பரிந்துரையில் வாங்கிய ஒரு சிறுகதைத் தொகுப்பு. 10 கதைகள் தான் 92பக்கங்கள் தான், ஒரு நாளை செலவளித்து இருந்தால் முடித்து இருக்கலாம்,ஆனால் ஏனோ சில கதைகளில் மூழ்கித் தத்தளிக்க நேர்ந்துவிட்டது.
முதல் கதை அம்மாவும் ஆண்டன் சேக்கவும். சடலமாக அம்மா, இணையின் பிரிவை தாங்காது.கவலையின் உருவமாய் ஓரத்தில் அப்பா.அக்கா,மாமாவின் வருகைக்காக மயானத்தில் காத்திருக்கும் உறவுகள். அப்பாவை ஒரு நாளும் அதிர்ந்து பேசாத அம்மாவின் முகம் பார்த்து இருந்த மகனின் சிந்தனையில் “இறந்து கிடந்தது அம்மாவே இல்லை, அச்சு முறிந்த அப்பாவின் அதிகாரம்”. இந்த வரிகளை வாசிக்கும் போது, என் தாத்தாவும் அம்மாச்சியும் நினைவுகளை ஆக்கிரமித்தார்கள்.எங்கள் அம்மாச்சி இறந்த பிறகு,தாத்தா யாரையும் கடிந்து பேசி நான் பார்த்ததே இல்லை. “கோடி” கதை G.v sir சொல்லும் போது ஏற்படுத்திய கண்ணீர் இப்போது வாசிக்கும் போதும் ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு கதையும் வாழ்க்கையின் ஏதோ ஒரு நிகழ்வை நினைக்க செய்யும்,குடும்பத்தில் “அப்பத்தா” எப்படி உறவுகளை இணைக்கிறார்களோ/நினைவுகளை பகிர்கிறார்களோ அப்படிதான் இந்த அப்பத்தா சிறுகதை தொகுப்பும். சங்கர் அண்ணா சொல்லிதான் தெரிந்தது, பாரதி கிருஷ்ணகுமாரின் எழுதிய ஒரே சிறுகதை தொகுப்பு இது மட்டுமென்று… இன்னும் எழுதி இருக்கலாம் வாசித்து பாருங்கள்,10யில் ஒரு கதையாவது உங்கள் நினைவுகளை மீட்க செய்யும்