Jump to ratings and reviews
Rate this book

Amma Vanthal

Rate this book
‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நியதி களுக்குக் கட்டுப்பட்டவை அல்ல. அவை உணர்ச்சிகளுக்கு வசப்படுபவை. இந்த இரண்டு கருத்தோட்டங்களின் ஈவாகவே மனித வாழ்க்கை இருக்கிறது; இருக்கும் என்பதை வலியுறுத்துகிறது கதை. இவ்விரு நிலைகளில் ஊசலாடுபவர் களாகவே முதன்மைப் பாத்திரங்கள் அமைகின்றன. இந்த ஊசலாட்டத்தை கலையாக்குகிறார் தி. ஜானகிராமன். ஆசாரங்களையும் விதிகளையும் மீறி மனிதர்களை நிர்ணயிப்பது அவர்களது உணர்வுகள்தாம் என்பதை இயல்பாகச் சொல்வதுதான் அவருடைய கலைநோக்கு. அந்த நோக்கம் உச்சமாக மிளிரும் படைப்புகளில் முதலிடம் வகிப்பது ‘அம்மா வந்தாள்’.

160 pages, Kindle Edition

First published January 1, 1966

126 people are currently reading
1976 people want to read

About the author

Thi. Janakiraman

40 books172 followers
Thi . Janakiraman (also known as Thi Jaa, or T. Janakiraman ) is one of the major figures of 20th century Tamil fiction. He worked as a civil servant. His writing included accounts of his travels in Japan and the Crimea.

His best-known novel is Mogamul (Thorn of Desire), in which feminine emotions are explored with a story spun around delicate feelings. His short stories such as "Langdadevi" (a lame horse) and "Mulmudi" (Crown of Thorns) follow the same style. Thi Jaa wrote about one hundred short stories and a dozen novels. Two of his novels, Amma Vandhaal and Marappasu, were translated into English as "Sins of Appu's Mother" and "Wooden Cow" respectively. In 1979, he was awarded the Sahitya Akademi Award for Tamil for his short story collection Sakthi Vaidhiyam. Some of his other notable works are Malar Manjam, Uyirthen and Sembaruthi.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
395 (38%)
4 stars
424 (41%)
3 stars
151 (14%)
2 stars
43 (4%)
1 star
21 (2%)
Displaying 1 - 30 of 101 reviews
Profile Image for Girish.
1,155 reviews260 followers
October 23, 2020
Every book that seems way ahead of time probably explains the ignorance of the people of this generation who think they are more forward. Case in point is this book by Thi. Ja which takes on extremely bold characters set in the most conservative of settings - a veda patshala.

Appu spends 16 years in a veda patshala in the quite little village by the river Cauvery away from his parents Alangaram (the titular Amma) and Dhandapani. Bhavaniammal is the matron(?) of the patshala and Indu is her niece/brother's wife who is a young widow. Appu is about to go back to his family after his education when the young Indu expresses her feelings for him. When he turns her down saying he can't bring shame to his mother - she throws words at him which changes his entire life.

Back in Chennai we meet the parents and the family. We have the astrologer dad who doesn't believe in astrology and we meet Alangaram in all her glory - the dominant mother and wife whose decision is final. The twists and the shocks are laid on with a subtelety that belies the gravity of the facts. A son's 'unconditional love' is tested and the ending seems to justify. Set in a Brahmin family, the language sticks to agraharam. I am sure the book would have experienced quite a bit of wrath in the 1960s.

The 'Moral' vs heart conflict at it's scandalous best.
Profile Image for Sharavanan Kb.
35 reviews26 followers
December 9, 2021
கணவனுக்கு தெரிந்தே தவறு செய்யும் மனைவி அலங்காரம் அந்த தவறுக்கு பிராயச்சித்தமாக தனது மகன் அப்புவை வேதம் படிக்க வைத்து புனிதமானவனாக உருவாக்கி அவன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க எண்ணுகிறார் அது நடக்காமல் போக தன் பாவத்தை தொலைக்க காசிக்கு சென்றுவிடுகிறார்.

தன் மனைவி தவறு செய்தும் ஏதும் செய்ய முடியாமல் அதை பொறுத்து பின் அப்படியே வாழ பழகிய தண்டபாணி அந்த குறைப்பாட்டை சமன்படுத்த தனது அறிவின் மூலம் தன் பணியிடம்,முதலாளி மற்றும் அதற்கு நிகரான பெரியவர்கள், தன்னிடம் ஜோதிடம் பார்க்க வருபவர்கள் என அனைவரிடமும் அதிகாரமாக நடந்துகொள்கிறார்.

அலங்காரத்துடன் தவறான தொடர்பு வைத்திருக்கும் சிவசு அனைவருக்கும் முன் அவளை மன்னி என்று அழைகிறார் அடிக்கடி அவள் வீட்டுக்கு வருகிறார். அவர் வருவது அலங்காரத்தின் கணவன்,குழந்தைகள் மற்றும் பலருக்கும் தெரிந்திருக்கிறது. அவர்கள் இருவரால் பார்க்காமல் இருக்க முடியாது என்றும் அலங்காரத்தின் ஐந்து குழந்தைகளில் அப்புவிற்கு பின் பிறந்த கடைசி மூன்று குழந்தைகள் சிவசுவிற்கு பிறந்தது, அவைதான் அலங்காரம் மகிழ்ச்சியாக பெற்ற பிள்ளைகள் என அப்புவின் அக்கா அவனிடம் கூறுகிறாள்.

வேதம் படிக்க சென்ற அப்பு வேதபாடசாலை நடத்தும் பவானியம்மாளை மிகவும் மதிக்கிறான் அவரின் உறவுக்கார பெண்ணான இந்துவை அவன் விரும்புகிறான் அவளுக்கு வேறு ஒருவரோடு திருமணம் நடந்து சில வருடங்களில் விதவையாக மீண்டும் அத்தை வீட்டிற்கே வந்து விடுகிறாள் அவளும் அப்புவை விரும்புகிறாள் , அவள் மூலம் தனது தாயின் தவறை தெரிந்துகொள்கிறான் ஆனால் நம்ப மறுக்கிறான்.

படிப்பு முடிந்து வீடு செல்லும் அப்பு தனது அம்மாவை பற்றி தெரிந்து மீண்டும் வேத பாடசாலைக்கே திரும்புகிறான் , இந்துவை ஏற்று கொள்கிறான்.

இந்த நாவலை எழுதியதற்காக தன் ஊரில் எதிர்பினை சந்தித்திருக்கிறார் தி.ஜா அவர்கள். இந்த காலகட்டத்திற்கு அந்நியமான கதை களன் ஆனால் சுவாரஸ்யமாக அதேசமயம் எதையும் நேரடியாக எழுதாமல் மறைமுகமாகவே புரிய வைக்கும் எழுத்துநடையில் படிக்க நன்றாகவே இருந்தது.
Profile Image for Balaji Sriraman.
Author 1 book17 followers
October 3, 2017
This book will forever be etched in my heart for two reasons.

1 - The sheer impact this book made.
2 - This is the first book I read from the Kindle Paperwhite that I purchased recently.

This is probably my second "Literature" book and I'm slowly liking the genre. First was "Thanneer" by Asogamithran.

I'll tell you upfront that this book is not for everyone. It's like a slow moving movie.

The book made a big impact with me. Written in the '60s, I read that the author (Thi. Ja) was banished from his hometown for writing this novel. Though you *may* not find much controversial content in this book when you read this now, this definitely is a bold attempt during the '60s.

The characters - Appu, Indhu, Bhavaniammal, Alangaram, Dhandapani, Sivasu... Almost all of the characters are so very well crafted. And my god, whattey display of character by Indhu and Alangaram. Almost the same and yet the differences! One of the best women centric novels that I have ever read!

Talk about subtle - the area that I'm very weak at - this novel slips in a lot of subtle philosophy and meanings. Though I was able to get only a few, a re-read will definitely get me more things. One of the very few books that I'm planning to re-read.

I can't stop talking about this anymore without leaving spoilers, so I'll stop at this.

Recommended to everyone who can read a patient literature.
Profile Image for L XAVIER.
11 reviews4 followers
July 3, 2018
மிக அதிகமாய் விமர்சிக்கப்பட்ட நாவல். ''அழகா இருந்தா ரொம்ப கஷ்டம் இந்து'' என்று அப்பு சொல்வதே இந்நாவலுக்கான விளக்கம். அழகாய் இருப்பதால் பிறரால் வரும் சோதனைகள், தன்னுள் முளைக்கும் தற்பெருமை, இதனால் விளையும் துணிவு - ஆகியவற்றால் தன்னை இழக்கிறாள் அலங்காரத்தம்மாள். தன்னிலை உணரும்போது செய்வதறியாமல் தன் அன்பு மகனை வேதம் கற்க அனுப்புகிறாள். வேதம் குறைவின்றி கற்று, காம இச்சையற்று வரும் மகனிடம் சரணடைந்து பாவம் தீர்க்கலாமென்று நினைக்கிறாள் அம்மா. தாயின் ஒழுக்கமின்மையை அறியும் அப்பு அதுவரை தான் பின்பற்றிய நெறிவாழ்வை கைவிட எண்ணுகிறான். அதற்கு தன் தாயையே காரணம் சொல்லி உள்ளுக்குள் அமைதி தேடுகிறான். நம்பிய மகனும் தன்னைப்போலவே இருப்பதை எண்ணி காசிக்கு செல்கிறாள் அம்மா. சிவசுவை விட அப்பு உயரமும் அழகும் மிக்கவனாய் இருப்பதாக தி. ஜா விவரிக்கிறார். ஒருவனில் இழந்ததை அவனை விட சிறந்தவன் மூலம் மீண்டுவிட துடிக்கிறாள் அலங்காரத்தம்மாள். சிவசுவுக்கு பெற்ற பிள்ளைகளே அவள் மனசுக்கு பிடித்தவர்கள் என்று அப்புவின் அக்கா சொல்வது ஆழ்ந்த அர்த்தமுள்ளது. ஆனால் அலங்காரத்தம்மாளோ அப்புதான் தன் கடைசி பிள்ளையென்று சொல்கிறாள். தண்டபாணி வேதத்தில் தன்னை மறைத்தும் மறக்கவும் முயல்கிறார். ஆனால் முடியவில்லை. பவானியம்மாள் அப்புவை நன்றாகவே அறிந்திருக்கிறாள். எனவே அப்பு திரும்பி வருவானென்றும் தெரிந்துதான் இருப்பாள். அப்புவின் அம்மா பற்றி அவளுக்கும் இந்துவுக்கு தெரிந்தே உள்ளது. எனவே இருவரும் அவனை எதிர்பார்த்தே இருப்பார்கள். மிக நுண்மையான நாவல்.
Profile Image for Udhayakumar Tamileelam .
87 reviews27 followers
May 2, 2021
தி.ஜா அவர்களின் எழுத்தில் நான் வாசிக்கும் முதல் நூல்.இப்புதினத்தை நான் வாசிக்க இரண்டு காரணங்கள் உண்டு.
1.என்னை புத்தக வாசிப்புப்பழக்கத்திற்கு திருப்பிய என் நண்பர் தி.ஜா அவர்களின் தீவிர விசிறி. ஒவ்வொரு முறையும் எங்கள் கலந்துரையாடலில் தி.ஜா வின் நூல்களை பற்றிய அவரின் சுவாரஸ்யமான தகவல்களே இந்நூல் வாசிப்பின் சாரமாகும்.
2.தி.ஜா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எஸ்.ரா அவர்கள் காணொளியில் இந்நூலின் சிறு அறிமுகமும் இந்நூல் வாசிப்பதில் உந்திய தருணங்கள்.
நூல் எழுதப்பட்ட காலத்தின் அடிப்படையிலும்,தேர்ந்தெடுத்த கருப்பொருளின் அடிப்படையிலும் எழுதப்பட்ட நேர்த்தியில் செவ்வியல் இலக்கியத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.
எம்.வி வெங்கட்ராமன் இவருடைய நண்பர் என்பதாலோ இருவரின் எழுத்தும் ஒரே வீச்சுக் கொண்டவை ஆக உள்��ன.
அசோகமித்திரன், ஜெயகாந்தன் மற்றும் எம்.வி.வெங்கட்ராம் ஆகியோர் எழுத்துக்களுக்குப் பிறகு என்னை மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்கிய படைப்பு.
Profile Image for Vadivel C.
24 reviews2 followers
September 20, 2022
அம்மா வந்தாள்....

நாவலின் முதல் பத்தி சொல்லிவிடும் மொத்தக் கதையை....செய்யக் கூடாது என்று இருந்தால் அதை செய்தே தீரவேண்டும் எனும் மனிதனின் இயல்பான குணம்.

அலங்காரம் மற்றும் இந்து என்ற இரு பெண்கள் தத்தமது மரபு மீறலை கையாளும் விதம் தான் கதையின் கரு.

அலங்காரம் தான் செய்கிற ' உடல்தேவை' சார்ந்த பாவத்தை(?!), தன் மகன் அப்புவை வேதம் படிக்க வைத்து தீர்க்கப் பார்க்கிறாள். அங்கோ, வேதம் படித்த இடத்தில் இருக்கும் கைம்பெண் இந்து அப்பு வை நேசிக்கிறாள்.

அப்புவால் அம்மாவை அப்படியாக ஏற்கவும் முடியவில்லை வெறுக்கவும் முடியவில்லை. இந்துவையும் அப்படியே.

அலங்காரம் - அப்பு - இந்து என்ற மூவரின் உணர்வுகளை வலம் வருகிறது இந்தக் கதை.

எது எப்படியோ அவரவர் உணர்வு அவரவர்க்கு பெரிதுதானே. உணர்வுகளுக்குத் தடையாக மனிதன் உருவாக்கிய மரபுகள் இருக்கிறதெனில் அதை உடைக்க யாரும் தயங்குவதும் இல்லை... யாருமே....
78 reviews3 followers
February 25, 2024
வாசிப்பு அனுபவங்கள் பேரேதும் இல்லாமல் இந்நாவலை வாசித்த போது இருபத்தைந்து பக்கங்களைக் கடந்தும் ஏதும் பிடிப்படாததால் இடையிலேயே கைவிட நேர்ந்தது. பத்து மாதம் கழிந்து வாசிக்க துவங்கும் போது இந்நூலின் உலகத்திற்குள் எளிதாக என்னால் நுழைய முடிந்ததற்கு காரணம் வாசிப்பு அனுபவம் தேவையாக உள்ளது என்பதை என்னால் உணர முடிந்தது.

ஜானகிராமனின் எழுத்தும் அதனின் அழகும் வாசிக்க வாசிக்க பேர் இன்பம் அடைகிறது மனம். இந்நாவலில் அவர் எடுத்துள்ள கரு மனித மனங்களில் இருக்கும் அழுக்குகள் - மீறல்கள். இக்கருவோடு பின்னிப் பிணைக்கப்பட்ட பெரும்பான்மையான கதாபாத்திரங்களோடு தொடர்ந்து இந்நாவலின் பயணம் தொடர்கிறது. அந்த வாழ்விலிருந்து ஒரு தருணத்தில் தான் செய்யும் செயல்களை உணர்த்து அதிலிருந்து மீளுதல் தான் வாழ்க்கை என உணர்ந்து அதற்கான பிராயச்சித்தமாக அவர்கள் அவருடைய வாழ்க்கையில் எடுக்கும் முன்னெடுப்புகள் பல இடங்களில் மனதை உலுக்கியது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் இருக்கும் வேறோரு பக்கத்தை காண்பித்து விதமும் அருமை. இந்நூல் வடிவமைக்கப்பட்ட விதமும் மிக இறுக்கமாக இருந்தது. ஆரம்பத்தில் வசிக்கும் போது சற்று கடுமையாகவே இருந்தது போன்று இருந்தது போகப் போக அதுவே மேலும் வாசிக்க தூண்டியது. மரப்போடு இக்கதையை ஒன்றிய விதமும் கதையின் போக்கிலேயே இருந்தது இன்றி கதைக்கிடஞ்சலாக இல்லை. இவரின் மற்ற பல நாவல்களை வாசிக்க வேண்டும் என்று உணர்வு பிறந்தது.
Profile Image for Shyam Sundar.
112 reviews40 followers
May 3, 2015
மனிதர்களுக்கு அவரவர்க்கென்று ஆசா பாசங்கள் உள்ளன. உறவு என்று வந்துவிட்டதாலேயே அவற்றுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதை அழுத்தமாகச் சொல்லும் நாவல்.

மையப் பாத்திரங்கள் அம்மா அலங்காரமும் மகன் அப்புவும். இவர்கள் இருவருமே ஒருவர் மற்றவரிடம் நிறைய எதிர்பார்ப்புகளைக் கொண்டவர்கள். இதிலே பெரிய கீறல் விழுகிறது. இவ்விருவரது எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றங்களையும்தான் இந்த நாவல் கருப்பொருளாக வைத்துக் கொண்டு சுழல்கிறது, எதிர்பார்ப்புக்கும் ஏமாற்றத்திற்கும் காரணமாக இருக்கக்கூடிய சூழ்நிலைகள் மிகவும் இயல்பாகவும் நேர்த்தியாகவும் உருவாக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன.
Profile Image for Umesh Kesavan.
451 reviews177 followers
March 1, 2018
Appu shuns a widowed Indhu citing how he cannot be unfaithful to the values espoused by his mother only to go home and find his mother tearing those very "values" to bits and pieces in this 1960s classic. Janakiraman's immersive prose which values emotions over "ethics" is sure to ruffle many a conservative feather (as it did when the novel was published). Readers of Modern Tamil literature should make this novel a mandatory read.
Profile Image for GaneshPandian RK.
12 reviews3 followers
April 24, 2022
திஜா தனது நுட்பமான பாத்திரங்களுக்கிடையே நடக்கும் உரையாடல்கள் வழியாக மனித உறவுகள் மரபுகளுக்குக் கட்டுப்படாமல் உணர்ச்சிகளுக்கு எளிதில் வசப்படும் என்பதை மரபு என்னும் புனிதத்தை உடைத்த (அம்மா வந்தாள்)மரபு மீறல் (அம்மா சென்றால்)
Profile Image for Dinesh.
128 reviews9 followers
August 27, 2021
விதி மீறல்!! காலம் காலமாக வரையறுக்கப்பட்ட ஒழுக்க மரபு, ஆசாரங்களை மீறுதல் - உணர்வுகள் தான் மனிதர்களை நிர்ணயிக்கிறது - என்பதே இந்நூலின் கரு.
251 reviews38 followers
November 7, 2022
புத்தகம் : அம்மா வந்தாள்
எழுத்தாளர் : தி.ஜானகிராமன்
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்
பக்கங்கள் : 183

🔆எந்தவொரு தாய் தகப்பனும் , தன்னுடைய பிள்ளை நன்றாக படித்து, நல்ல வேலைக்குப் போக வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள் . ஆனால் அலங்காரம் அம்மாளுக்கோ தன் மகனை (அப்பு) வேதம் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசை .

🔆அவளின் மற்ற பிள்ளைகள் எல்லாம் பள்ளி , கல்லூரி மற்றும் வேலை என்றிருக்க , அப்புவை மட்டும் வேதம் படிக்க வைக்க அனுப்புகிறாள் . அவள் கணவன் தண்டபாணி, மனைவி சொல்லைத் தட்டாதவர் . இருவரும் பவானியம்மாள் நடத்தும் பாடசாலையில் அப்புவை சேர்க்கிறார்கள். 16 வருடம் வேதம் படிக்கிறான் அப்பு .

🔆பவானியம்மாளின் மருமகள் இந்து , திருமணமாகி 4 வருடங்களிலே கணவனை இழந்தவள், சமையல் செய்து கொண்டும் , வீட்டு வேளைகளை கவணித்துக் கொண்டும் இருக்கிறாள் . அவளுக்கு அப்புவின் மீது ஒரு ஈர்ப்பு.

🔆இதனிடையே படிப்பை முடித்துவிட்டு தன் பெற்றோரிடம் செல்லும் அப்புவிற்கு பட்டணம் பிடிக்கவில்லை . அப்பு தன் பெற்றோருடன் தங்கினான் ? தாயின் ஆசையை நிறைவேற்றினானா? இந்துவைப் புரிந்து கொண்டானா என்பது தான் அம்மா வந்தாள் …..





புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம்,
புத்தகங்களால் இணைவோம் ,
பல வேடிக்கை மனிதரைப் போலே ,
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி

சுபஸ்ரீநீ முத்துப்பாண்டி
வாசிப்பை நேசிப்போம்

Happy reading
Profile Image for Ashwin Krishnamurthy.
7 reviews1 follower
January 25, 2018
அம்மா வந்தாள் - பாராட்டப்பட வேண்டிய முயற்சி. கண்டிப்பாக கிளாசிக் தான்.
Profile Image for Balaji Srinivasan.
147 reviews10 followers
January 21, 2023
அம்மா வந்தாள் - 2023 இன் க்ளாசிக் வாசிப்பு.

பெரிய எழுத்தாளர்களின் படைப்புகள் என்றாலே ஒரு வித தயக்கம் என் மனதில் ஒட்டிக்கொ���்ளும். புரியுமா புரியாதா என்ற ஒரு ஆராய்ச்சியிலேயே, தயக்கத்திலேயே இருக்கும். இந்த புத்தகம் அந்த தயக்கங்களை தகர்த்துவிட்டது என்றே சொல்லலாம்.

நாயகன் அப்புவின் பார்வையில்தான் பெரும்பாலான பக்கங்கள் இருக்கின்றன. அப்பு-இந்து-தண்டபாணி-அலங்காரம். கதையின் பிரதான கதாபாத்திரங்கள். எனக்கு அப்பு-தண்டபாணி இடையே நடக்கும் உரையாடல்கள் நன்றாக இருந்தது.

காவிரிக்கரையோ திருவல்லிக்கேணியோ இரண்டையுமே நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது ஆசிரியரின் வர்ணனை.

புத்தகம் படிக்கும் தற்போதைய தலைமுறைக்கு கதை பழையதாக தோன்றலாம். ஏனெனில், இன்றைய காலக்கட்டத்தில் திருமணம் தாண்டிய உறவோ, விவாகரத்து அல்லது விதவை மறுமணமோ மிகவும் சகஜமாக போய்விட்டது. ஆனால், புத்தகம் வெளிவந்த 1960களில் அப்படி இருந்திருக்காது. மேலும் இன்றைய சூழ்நிலையில் கூட புத்தகத்தின் கருத்துகள் ஒற்றுப்போகின்றன. இது உண்மையாகவே க்ளாசிக்தான்.
Profile Image for Ananthaprakash.
83 reviews2 followers
April 5, 2025
மனித மனத்தின் நுட்பங்களை அது நிகழ்த்திப் பார்க்கிற மீறல்களைப் புரிந்திடத் தான் முடியுதா,

எல்லாத்தையும் காவேரியில் கரைத்திடத் தான் முடியுதா,

இல்ல வேதத்தால தான் எல்லாத்தையும் பொசிக்கிட முடியுதா.

மனித மனம் தான் மீறல், மனித மனம் தான் பிராயச்சித்தம்.

அம்மா வந்தாள் - மீறலின் பிரதி..❤️
Profile Image for Joel.
4 reviews1 follower
August 17, 2024
இது நான் படிச்ச தி. ஜா வோட ரெண்டாவது நாவல்.
முதல்ல "அடி" நாவல் படிச்சுருக்கேன்.
அத படிக்கிறப்போ சின்ன ஒரு உறுத்தல் இருந்தது, பிராமண மொழியும், அவங்கள கதை மாந்தர்களா பாக்க்கறதும்.
ரெண்டு நாவலையும் முடிச்ச உடனே ஒரு குட்டைல விழுந்த கல் மாதிரி, எண்ணங்களையும் சிந்தனைகளையும் ஒரு மாதிரி கலங்கடிச்சுருச்சு, ஜானகிரமனோட எழுத்தும் சிந்தனையும்.
"அடி" படிச்சு முடிக்கிறப்போ, "In the Mood for Love" பார்த்த ஒரு feel. Wow how beautiful காதல் is, காதலுக்கு எல்லை இல்லை, காதலுக்கு வரையறை இல்லை, முடிவதும் இல்லை nu.

எப்போதும் புத்தகத்தோட முன்னுரைய, கடைசியா தான் படிப்பேன். அதே போல "அம்மா வந்தாள்" படிச்சு முடிச்சு முன்னுரை படிக்கிறேன், ஒரு மாதிரி மூச்சடைக்க வச்சுருச்சு. இன்னும் ரெண்டு மூணு பேரோட views பாக்கிறேன், படபட நு ஆகிருச்சு.
"அம்மா வந்தாள்" கதைய நிஜ வாழ்க்கைல அனுபவப்பட்டிருக்கேன். என்னோட childhood eh collapsed ah, oru confusion laye என்ன பண்றது, யார்ட்ட சொல்றதுன்னு தெரியாம, அப்படியே உள்ள பூட்டி வச்சு ஓடிருச்சு. எடுத்து சொல்ல ஆளில்ல, எதை எப்படி புரிஞ்சுக்குறதுனு. எத்தனை எத்தனை இரவுகள் கடந்தன என நினைவில்லை, இருவருக்கும் நடக்கும் சண்டைகளை புரிந்தும் புரியாமலும், என்ன நடக்கிறது என்றே அறியாமல், கண்ணீரோடு காதை பொத்திக்கொண்டு, ஒவ்வொரு நாளும் மனதில் போட்டு புழுகிகொண்டே கடந்திருப்போம் நானும் அண்ணனும், தம்பியும், இன்றாவது சண்டை இல்லாமல் இருக்குமா என்று.
எதற்காக இந்த சண்டைகள் என புரியாமல்.

இப்போ அம்மா வந்தாள் முதல் முறை படிக்கிறப்போ
அவுங்க குடும்பத்து ஆளாவே தான் நான் இருந்தேன் போல. முன்னுரை படிச்ச அப்ரம் தான் கண்ணுக்கு தெரியுது.
பல சமூக விஷயங்கள்ல பழைய மரபுகள், மூட நம்பிக்கைகள், புனித கட்டமைப்புகள் எல்லாத்தையும் உடைக்க மனம் பழக்கப்பட்டு இருந்தாலும்
அம்மா அப்படிங்கற ஒரு உறவ புனிதமாகவே மட்டும் தான் இந்த சமூக கட்டமைப்புக்குள்ள அடைச்சு வச்சிருக்கோம்,
அவளை ஒரு பெண், Human being என்பதை மறந்து,
அவளுக்கும் மனம் மற்றும் உடல் தேவைகள் இருப்பதை உணர மறந்து. பெண்ணின் மீது வரையப்பட்டுள்ள பல கட்டுகளை அவிழ்த்து கேள்விகளை வீசுது அம்மா வந்தாள். பவானியும், இந்துவும், அலங்காரமும் அதை அவரவர் மொழியில் செய்தனர்.
அனைத்து ஆண்களின் மன வெளிப்பாடுகளாக தண்டபாணியும், அப்புவும், சிவசுவும் வருகிறார்கள்.
"அம்மா" அவளுக்காக இருந்தாள்.
மனித மற்றும் குடும்ப உறவுகளையும், உளவியலயும் அதிலிருக்கும் சிக்கலான பின்னல்களையும் ஒரு பையனோட coming to age story ல ஒரு layer ah வச்சு ஒரு Masterpiece ah 1960s லயே கொடுத்துருக்கார் தி. ஜா.
ஆம் "மீறலின் புனிதப்பிரதி" தான் இது.
Books review laam poda venam nu nenachutu irundhen, but this one made me to spill my thoughts here.
Profile Image for Balaji M.
220 reviews14 followers
May 22, 2021
“அம்மா வந்தாள்" - தி.ஜானகிராமன்
=======================================
1966ல் முதற்பதிப்பு கண்ட நாவல். திரு தி.ஜானகிராமன் அவர்கள் 'சக்தி வைத்தியம்' என்ற சிறுகதை தொகுப்பிற்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர். இந்நாவல் மட்டுமல்லாது 'மரப்பசு', 'நாலு வேலி நிலம்', 'மோகமுள்', முதலான 9 நாவல்களை இயற்றியுள்ளார்.

இவரின் படைப்புகள் உன்னதமானவை, அற்புத கதை இலக்கியங்கள் என்றாலும், பிறழ்வுகளையும் மீறல்களையும், போன நூற்றாண்டின் மத்தியிலேயே கையாண்டிருக்கிறார்.

அப்படியான பிறழ்வை அந்தக் காலத்திலேயே நடப்பதாக அதுவும் ஒரு பிராமணத் தாய் அப்படியான மீறல்களை செய்வதாக புனைந்திருக்கிறார் 'அம்மா வந்தாள்' எனும் இந்நாவலில் இதற்காக, இவரை, 'பிரஷ்டம்'(ஒதுக்கிவைத்தல்) செய்ததாக தி.ஜா அவர்களே கூறியிருக்கிறார்.

கதையின் முக்கிய கதைமாந்தர்கள்:
தந்தை தண்டபாணி
தாய் அலங்காரம்
மூத்த மகன் கிருஷ்ணன்
மூத்த மகள் விசாலம்
இரண்டாவது மகன் அப்பு
மூன்றாவது மகன் கோபு
நான்காவது மகன் வேம்பு
கடைசி மகள் காவேரி
வேத பாடசாலை நடத்தி வரும் அத்தை பவானியம்மாள்
அவளது சகோதரனின், விதவை மகள் இந்து
தண்டபாணி வீட்டிற்கு வரும் நண்பர் சிவசுந்தரம்

வேதம் படிக்க 'அப்பு'வை சித்திரகுளமென்னும் காவிரிக்கரையிலுள்ள கிராமத்திற்கு சிறுவயதிலேயே, தாய் அலங்காரத்தின் வலியுறுத்தலின் பேரில், தந்தை தண்டபாணி சென்னையிலிருந்து அனுப்பிவைக்கிறார்.
அப்பு சித்திரகுளத்தில் வேதபாடம் கற்பது, பவானியம்மாள் அத்தை மற்றும் இந்து உடனான அனுபவங்கள், பாடம் முடித்து சென்னைக்கு திரும்பியதில் தண்டபாணி, சிவசுந்தரம் மற்றும் அலங்காரத்துடன் ஏற்படும் கசப்பான தர்க்கங்கள், மீண்டும் சித்திரகுளத்துக்கே பயணப்பட்டு இந்து மற்றும் வேதபாடசாலையை கவனித்தல் என முடிகிறது.

ஒரு சில படைப்புகளே, அவற்றை கடந்த பின்னும், மீண்டும் மீண்டும் ஆசை போட வைக்கும். அதாவது அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதால் மட்டுமே அப்படி ஒரு அசைபோடுதல் நிகழும். அப்படியான ஒரு படைப்புதான், 'அம்மா வந்தாள்'.

தி.ஜா ஏன் இப்போதும் கொண்டாடப் படுகிறார் என்பதற்கு இந்த ஒரு நாவல் கூட போதும். இந்நாவலின் முன்னுரையை 'மீறலின் புனிதப் பிரதி' என ஆரம்பிக்கிறார் சுகுமாரன். கிட்டத்தட்ட கதையை முழுதாக சொல்லிவிடுகிறார். ஆனால் நாவலை வாசிக்க ஆரம்பித்தவுடன், அனைத்தையும் மறந்து 1960 களின் காவிரி கரையும், திருவல்லிக்கேணி வீதிகளும், கடற்கரையுமாக, 16 வருடங்கள் வேதம் படித்து, வேத வித்தாக பயணப்படும் 'அப்பு'வின் எண்ணவோட்டத்தை, வாசிப்பவனுக்குள் கடத்தும் விதமாக கதை செல்கிறது. அதாவது, கதை மாந்தர்கள் அனைவருக்கும், மீறல் நடந்திருப்பது தெரிந்திருக்கும், அப்புவுக்கும் வாசிப்பவருக்கும் மட்டும் அது தெரியாது. அப்படியான ஒரு கதை சொல்லல்.

அப்பு வழி மட்டுமல்லாது, இளம் விதவையான இந்து மற்றும், பேரழகையும் கம்பீரத்தையும் ஒருங்கே கொண்ட அலங்காரம் தாங்கள் எல்லை கடந்திருந்தாலும், இவர்களின் பார்வையில், அதற்கு காரணங்களும் பிராயச்சித்தங்களும் சொல்லும் விதமாக கதை உள்ளது.

அப்பு-இந்து, அப்பு-தண்டபாணி, அப்பு-அலங்காரம், இவர்களுடைய உரையாடல்கள் அவ்வளவு யதார்த்தமாகவும், ஆழ்���்த தத்துவார்த்தங்கள் பொதிந்த தர்கங்களாகவும் எழுதப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட அப்படியான உரையாடல்களை வாசிக்கையில், நாம் ஏதோ தியானம் செய்வதைப் போல உணரவைக்கும்.

நிச்சயம் நமக்கு இது ஒரு புது அனுபவம்! உணர்வுக்குவியலும் உயிரோட்டமும் நிறைந்த கதை!

தி.ஜா அவர்களின் 'மோகமுள்', 'நாலு வேலி நிலம்'., திரை படைப்புகளாக வெளிவந்ததில் ஆச்சரியமில்லை !!!
Profile Image for இரா  ஏழுமலை .
136 reviews8 followers
July 20, 2025
அம்மாவந்தாள் தமிழில் பெருவாரியாக வாசிக்கபட்ட நாவல் , புனிதபாடுதலின் மீறல் , நாவலின் மொழி , கதாபதிரங்களின் கச்சிதமான வார்ப்பு என்று பல காரணதால் இது இன்றும் புகழ் பெற்ற நாவலாக இருக்கிறது . ஆனால் நாவல் வெளிவந்த காலதில் பெரும் ஏதிர்பையே சம்பாதிது இருக்கிறது . தொடர் வாசிப்பும் விமர்சனமும் நாவலின் பலவித கலை வெளிப்படுகளை எடுத்து கூறியதால் இது இன்றும் நல்ல படைப்பாக இருக்கிறது . உண்மையில் நானும் இது தமிழில் இருக்கும் சிறந்த நாவல் என்று தான் சொலுவேன்.
அலங்காரம் தான் மகனை வேதம் படிக்க அனுப்புகிறாள் , ஏன் ? அப்புவை தான் உண்மையில் தனது மகனாக நினைக்கிறாள் , அப்போ மற்ற குழந்தைகள் ? ஏன் அவள் மற்ற குழந்தைகளை தனது குழந்தை நினைக்கவில்லை ? அவர் தனது செயல் தவறு என்று தான் உணர்கிறாள் ஆனால் அதை அவள் தவிர்க்க வில்லை! அப்போ தி.ஜா வின் விருப்புக்காக இந்த நாவல் எழுதபட்டதா? .
தனது தவறுக்கான பரிகாரமாக அப்புவை வேதம் படிக்கவைத்து வேத தழலில் தானை பொசுக்கி கொள்ளவேண்டும் என்று நினைக்கிறாள். அலங்காரம் ஏன் சிவசு உடன் உறவு வைதுகொண்டால் ? தண்டபாணி அலங்காரதை அடக்கி ஆளவேண்டும் என்று நினைத்ததா ? அல்லது தண்டபாணி சொல்வது போல இருப்பதில் அலங்காரம் நிறைவுகொளவில்லையா ?

"இல்லடா அப்பு, லோகம் ஆரம்பிச்ச நாளிலிருந்து சம்பாதிக்கிறவனுக்கு தான் மதிப்பு. அதுவும் பொம்மனாட்டிகளுக்கு எல்லாம் இருந்தா தான் மதிப்பு வரும், நிறைய சம்பாதிக்கணும், அழகா இருக்கணும் , முரடாவும் இருக்கணும், புத்திசாலியாவும் இருக்கணும், ஒண்ணு இருந்தால் மட்டும் போராது."

இது தண்டபாணி சொல்வது. இதைவைத்து பார்க்கும் போது அலங்காரம் எதிலும் திருப்தியடையவில்லை என்று தான் தோன்றுகிறது.
மனைவியின் தகாத உறவை ஏன் கட்டுபடுத்த முடியாமல் போய்விட்டது? . நாவலில் பல இடங்களில் இராணி போல இருக்கிறார்கள் என்று வருகிறது எனவே அவளை கட்டுபடுத்த அவரால் இயலவில்லை அல்லது அவள் இவரை விட்டு சிவசுவுடன் போய்விடுவாள் என்ற பயம் அலங்காரம் இல்லாமல் தண்டபாணியால் இருக்கமுடியாது.

" நாம எதையும் புரிஞ்சுக்க மட்டைய ஒடச்சிக்க கூடாது, சும்மா வேடிக்கை பாத்துட்டே இருக்கனும், அதுக்கு தான் கடவுள் நம்ம படச்சி இருக்கார் "

என்று மௌனமாக நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கிறார்.

பவானி அம்மாள் கணவனை இழந்த தன் பெண் இந்துவிற்கு அப்புவை திருமணம் செய்து வைக்க நினைக்கிறாள். ஆனால் நாவலில் எங்கும் வெளிப்படையாக இதை அவள் சொல்லவில்லை ஆனால் அவளுடைய அனைத்து செயல்களும் அப்படித்தான் இருக்கிறது. அப்புவிற்கு கூட இந்து வின்மேல் ஒரு கண் இருக்கத்தான் செய்கிறது. அப்பு தனது அம்மாவின் இந்த செயலை ஏற்றுக் கொண்டு அவன் வீட்டிலும் இருக்க முடியவில்லை. இந்துவை ஏற்றுக் கொண்டு வேதம் கற்கும் இடமான பவானி அம்மாள் வீட்டிலும் இருக்க முடியவில்லை இரு பக்கமும் சிக்கிக் கொண்டு தத்தளிக்கும் ஒரு மன நிலையில் அப்பு இருக்கிறான். பதினாறு வருடங்கள் வராத அலங்காரம் வேத பாடசாலைக்கு அப்புவை தேடி வருகிறாள் ஆனால் அப்பு இந்துவை ஏற்றுக் கொண்டு இங்கேயே தங்கிவிட முடிவு செய்து விடுகிறான் .

" நீயும் எல்லாரும் போல அம்மா பிள்ளைதான்ட அப்பு"

என்று சொல்லிவிட்டு அலங்காரம் தன் பாவத்தை போக்க காசிக்கு செல்லப் போவதாக நாவல் முடிகிறது.

மிகச் சிறிய நாவல் மிக நல்ல படைப்பு.
Profile Image for Soundar Phil.
129 reviews12 followers
May 7, 2025
ஒரு எழுத்தாளராக தி.ஜா தான் வாழ்ந்த காலத்தை பதிவு செய்யும் கடமையை அழகாய் செய்ததோடு தேவையற்ற சடங்கு, சம்பிரதாயங்களால் விளையும் நன்மை ஏதும் இல்லை என்பதையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணத்தையும் பதிவு செய்யும் விதமாக சீர்திருத்த எண்ணத்தோடு எழுதப்பட்ட நாவல் என்று கூறலாம்.

அதைத் தாண்டி..,

இக்கதையில் தியாகராஜ சாஸ்திரிகளின் குடும்பத்திற்குள் முரணுடன் வாழும் உறவுகளையும், அவருக்கு அலங்காரத்தின் மீதான பார்வையின் மூலம் ஒவ்வொரு தனி மனிதனின் கோபங்களுக்கும், மன்னிப்புகளுக்கும், வாழ்வு முறைக்கும், தனி காரணங்கள் உள்ளன, சில நேரங்களில் அப்படி ஏதும் இல்லாமலும் இருக்கலாம் என்பதையும், இப்படி எதுவுமே இல்லாமல் தனக்கென்று அப்புவை போல் ஒரு பொருளை குறி என கொண்டு அதையே மையமாக கொண்டு வாழ்வின் கரும்புள்ளிகளையே கண்டு கொள்ளாமல் வாழ்ந்து ஒரு நாள் யாரோ தனக்கு முக்கியமாய் தெரிய வேண்டிய ஆனால் தெரியாத உண்மையை நெற்றிப் பொட்டில் அடித்தார் போல் உரைக்கும் போது மற்ற அனைத்தும் மறைந்து சுய பரிதாபத்திற்குள்ளாகி போனவனை மீட்கும் இந்துவை போலும், மனதின் உள்ளாழத்தில் அலங்காரத்தின் எண்ணத்துடன் தியாகராஜ சாஸ்திரிகளின் தினசரிகளும், தவறு என்று தெரிந்தும், கையும் களவுமாக அத்துனைப் பேரிடம் சிக்கியும் என்ன ஆகிவிடப் போகிறது என மழுப்பலுடனே நாவல் முழுதும் திரியும் சிவசுவும், தான் வாழும் வாழ்க்கையையும், செய்கிற, செய்யப் போகிற பிராயச்சித்தங்கள் என தான் வாழும் இந்த வாழ்க்கை செய்த தவற்றின் தண்டணையென இருக்கும் அலங்காரம் என இப்படியாக வாழ்வின் நிதர்சனத்தை உறவுகளின் மூலமும், அதில் உள்ள சிக்கல்களின் மூலமும் வாழ்வை நடத்தும், கடத்தும் அத்தனை கதாபாத்திரங்களும் சொல்லும் இந்தக் கதை "வாழ்வின் அனுசரிப்புகள்" என என்னுள் பதிந்தது.
Profile Image for  Muthusiva.
4 reviews1 follower
December 17, 2013
மனிதனின் பலவீனத்தை தோலுருத்து காட்டுவதில் தி.ஜாவுக்கு நிகர் கிடையாது. இந்த புதினத்தை எழுதியதற்காக அவரை அவர் கிராமத்தை விட்டே ஒதுக்கி வைத்தார்கள் என்று கேள்வி பட்டேன். எனக்கு தெரிந்து அவர் ஒன்றும் இல்லாததை எழுதி விடவில்லை. அழகான நடை,அற்புதமான பாத்திர படைப்பு,கொஞ்சம் பிசகினாலும் வேறு விதமாய் போய்ருக்கக்கூடிய கதை,இவை அனைத்தையும் விட அற்புதமான உளவியல் படைப்பாகவும் இது திகழ்கிறது. கட்டாயம் வாசிக்க வேண்டிய ஒன்று.
Profile Image for Vishy.
806 reviews285 followers
September 16, 2025
After reading 'Moga Mull', I decided to read another book by T.Janakiraman and so I picked this one, 'Amma Vandhaal' ('Mother has arrived').

Appu was just eight years old when his parents decide to put him in Vedic school, where he learns the Vedas, philosophy and rituals. He has been there for sixteen years now, and his education is over. He can go home now or he can continue to stay there and teach other kids. The founder of the institute wants him to stay. A young woman Indu, who lives there and who is in love with him, confesses her love for him and asks him to stay. But Appu decides to go home. He hopes that his parents and siblings will receive him well. But things don't go according to plan and he discovers a dark truth about his family and it has devastating consequences.

'Amma Vandhaal' is a short book at around 160 pages. The pages fly and before I knew, I'd reached the end. The main story is about the rebellion of two women against the constraints imposed by society, and it is fascinating to read. The book was controversial during its time and Janakiraman was banned from his hometown because of that. I loved many of the characters in the story, especially Appu and Indu, and Bhavani, the founder of the institute, and Appu's dad. Appu's mom was a fascinating, complex character. It is interesting that Janakiraman's stories feature love or a romantic relationship between two people which breaks social rules. That is how it was in 'Moga Mull'. That is how it is here. In this story, there are two such relationships. This seems to be his thing, breaking the rules and crossing the lines and outraging the moral police of his time 😄

I enjoyed reading 'Amma Vandhaal'. I didn't love it as much as 'Moga Mull', but I still liked it.

Have you read 'Amma Vandhaal'? What do you think about it?
Profile Image for Shruthi Jothsana.
143 reviews16 followers
January 21, 2025
Reading a tamil classic novel after ages. Felt overwhelmed by the descriptive style within the first 5 pages but the conversation flow picked up the story's pace.
This novel is rich with subtleties. There is no direct confrontation. No confessions. Only interpretations and assumptions.
However, the three women - Indhu, Alankaram, Bhavaniammal are the winners of the story. Not sure who in Appu's eye though. That is for us, readers, to decide which is why I shed the last star.
I racked my brain after reading a few pages, clueless, yet determined not to google the analysis until I finished the book.
Lo and behold, I was right. Got everything right.
The classic juxtaposition between the old and the modern thoughts is a huge theme to play with, especially in the 60s. BRAVE move.

Would I read it again? NO.
Would I recommend it? YES!
Profile Image for Thenappan Thenappan.
101 reviews6 followers
July 27, 2025
தி ஜானகிராமன் அவர்களுடைய எழுத்துக்களில் நான் படித்த முதல் புதினம் இது! எழுத்து நடையில் என்ன ஒரு ஆளுமை! ஒவ்வொரு படியும் அழகாகவும் ஆழமாகவும் செதுக்கப்பட்டிருப்பதை உணர முடிகிறது :) 
எதையுமே மிக வெளிப்படையாகவும் சொல்லாமல் பூசி மெழுகாமலும் மிக இலகுவாய் இலைமறை காயாக உரைத்திருப்பது கதையை மிக ஆழமாக, அசை போட வைத்திருக்கிறது..
Profile Image for MP.
126 reviews1 follower
August 14, 2020
Was this book really written in 1966? or it came from the future? !!!!!!!!!!!

The majority of authors in this time are focusing on past issues mostly related to caste whereas the old-timers were focused on people's relationships. Some of their thoughts are still advanced. After Jeyakandhan, Janakiraman is one such author.

We don't want a few books to end at all. We just want to travel with those characters. Amma Vanthaal is one such book.
Profile Image for மகிழ்நன்.
45 reviews4 followers
June 22, 2016
தி ஜானகிராமன் அவர்களால் எழுதப்பெற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் 1966ல் வெளிவந்த ஒர் நாவல். அப்பு வேதம் படிப்பதற்காக திருச்சிக்கு அனுப்பபடுகிறான். அங்கே பதினாறு வருடங்கள் வேதம் படித்தபின்னர் தன்னுடைய சொந்த ஊருக்குப் புறப்படத்தயாராகிறான். இன்னும் சில நாட்களில் கிளம்ப வேண்டும் என்ற நிலையில், அம்மடத்தினை நிர்வகிக்கும் பவானியம்மாளின் தம்பி மகள் இந்து தான் அப்புவை விரும்புவதாகக் கூறுகிறாள். இந்து ஏற்கனவே திருமணமாகி கணவனை இழந்தவள். தன் அத்தை பவானியம்மாளோடு வசிக்கிறாள். அவள் சிறுவயதிலிருந்தே அப்புவுடன் வளர்ந்தவள். அதனால் அவளுக்கு அப்புவின் மீது தீராக்காதல்.தான் மணமாகி இருந்தாலும் அனைத்து நாட்களிலும் அப்புவையே நினைத்துக்கொண்டிருந்ததாக கூறுகிறாள். அப்பு அது பவானியம்மாவுக்கும், தன்னை நம்பி அனுப்பிய தன்னுடைய அம்மா அலங்காரத்திற்கும் செய்யும் துரோகம் எனக் கூறி மறுத்துவிடுகிறான். அதனால் கோபமடையும் இந்து, அப்புவிடம் அவனுடைய அம்மாவின் நடத்தை சரியில்லை எனவும், அவள் வேறொருவரோடு உறவு வைத்துள்ளதாகவும் கூறுகிறாள். அதனால் கோபமடையும் அப்பு பின்னர் சென்னைக்கு சென்றுவிடுகிறான். அங்கு அவனுடன் பிறந்தவர்கள் ஏழு பேர். பதினாறு வருடம் கழித்து வரும் அப்பு சில நாட்களிலேயே உண்மை அறிந்து கொள்கிறான். ஆம் இந்து கூறியது உண்மைதான். வீட்டிற்கு வரும் சிவசு பற்றி அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்திருக்கிறது. ஆனாலும் எல்லோரும் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். அப்பா, அக்கா, அண்ணன், என எல்லோருக்கும் தெரிந்த உண்மை தனக்குத் தெரியாமல் போனதை உணர்கிறான். அதனால் மனமுடையும் அவன் மீண்டும் வேத சாலைக்கே திரும்புகிறான். இந்துவோடு சேர்கிறான். இதற்கிடையில் அப்புவின் மீது அளவிலா பாசம் வைத்திருக்கும் அவன் அம்மா அலங்காரம் அப்புவினைப் பிரியமுடியாமல் வேத சாலைக்கு வந்து அப்புவைப் பார்த்துவிட்டு காசிக்கு செல்கிறாள்.

மிகவும் தத்ரூபமான நாவல். நீதான் நான் பெற்ற கடைசியாய்ப் பெற்றபிள்ளை என அப்புவிடம் அவன் அம்மா கூறும் இடம் உச்சம். அந்த ஒற்றை வரியே நாவலின் மொத்த சித்திரத்துக்கும் போதுமானது.

அதோடு தன்னுடைய வேதசாலை பவானியம்மாளைப் பார்க்கச்செல்லும் போது, பதினாறு வருடம் கழித்து வந்த பிள்ளை தன்னை விட்டு நிரந்தரமாகப் போய்விடுவானோ என்ற எண்ணத்தில் ‘அம்மா மேல உள்ள கோவத்தில வராம இருந்துரமாட்டியே’ எனும் போது மனிதர்கள் உணர்வுகளாலேயே ஆட்டுவிக்கப்படுகிறார்களே ஒழிய வேறொன்றால் அல்ல என்ற எங்கோ வாசித்த வரிதான் நினைவுக்கு வந்தது.

தமிழின் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நாவல்களில் ஒன்று.
Profile Image for Kru.
281 reviews74 followers
October 23, 2021
The first thing I loved about this novel is the language that flows effortlessly, steadily meandering, taking in all the tiny details, like the mesmerizing beauty of the river Cauvery, the very first character we are introduced to.

The second is the style. The story in itself is more of hearsay and interpretations. Like Appu, who arrives at the truth through the words of others, we the readers too arrive at only parts of the truth. But the onus is not on the truth but how it is treated.

There are several questions left unanswered that I feel wouldn't add any more value to the plot, since the reading remains satiated at the end. While the why's and how's go untouched, the story goes breaking the rigidity of virtues, and questions the atonement Amma sought in her son, which she failed to get.

Of the three main female characters, Indu's strength comes from her intense love for Appu. She doesn't think it immoral and has her own reasons. Her outbreak when she is compared to Alangaram, is due to her perceiving it as an insult to her values. Alangaram derives her strength from the husband who doesn't openly accuse or question her. Bhavaniamma shows a stronger character above all else, with a commitment to her dream, respecting human emotions, and keeping an open mind.

Little things like - the brief moment when the father opines about the significance of the name Alangaram, the pride with which Amma stubbornly rejects Sivasu's gift, the shallow replies of Vembu and Kaveri to Sivasu. the elder sister stating that Amma loved the younger children more, and many such subtleties, help complete the picture.
197 reviews7 followers
June 28, 2021
This book is way ahead of it's time in terms in terms of writing and thought process.. Appu alangaram thandapani bhavani mammal indu sivasu vembu kauvery will all stay in your mind for a long time..

The writing goes deeper into tearing your thoughts sharp, it weighs each characters and strongly portrays their flaws( considered as crimes those days)..

Even though I loved hearing this through audio book, I missed the taste of turning the hard book..

I was literally transformed to that age of where conversations were short but deeper and even the silence..

This left me lasting impact in the lifestyle of those days, it may be slow but we gave so much importance to people, how much people understand each other even without talking.. How alangaram never really felt sorry for the way she was, how thandapani never couldn't leave his life, how appu was in dilemma whether to accept or reject his mother, so on and so forth..

Wonderful listening after a long time...
Displaying 1 - 30 of 101 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.