ஸ்ரீரமணர் பால பருவத்திலேயே ஆன்மிகப் பக்குவம் நிறைந்தவர். ஆனால், அவருடைய குடும்பம், அவரைப் புரியாத புதிர் என்று நினைத்தது. திருவண்ணாமலையில் தவம் செய்து உலகுக்கு அவர் தெரிந்தவுடன், பலர் அவரைத் தங்கள் கோணத்தில் பார்த்தனர். இறைவனை அடைய வேண்டும் என்று பக்குவப்பட்டவர்கள்கூட இறைவனை சீக்கிரமே அடைந்திட அவரை நாடினர். ஆனால், அத்தகைய அவசரக்காரர்களுக்கு ரமணர் இசைந்து கொடுக்கவில்லை. உள்ளத்தில் உண்மையாக இருந்தவர்களும், அப்படி உண்மையாக இருந்து யோகத்துக்குப் பக்குவப்படாதவர்களும் அவரிடம் பயப்பட்டதே இல்லை! ஞான மார்க்கமும், வைராக்கியமும் சிறந்தவைதான். அதன் வழியாக சீக்கிரத்தில் இறைவனை அடையலாம் என்றாலும் அது ஆயிரத்தில் ஒருவருக்கே வாய்க்கும். அதற்கு பக்குவப் படாதவர்களுக்கு பக்தி மார்க்கத்தையும், குரு சேவை மார்க்கத்தையும் வலியுறுத்தியவர் ரமணர். ஆகவேதான் கொஞ்சம் அகங்காரம் உள்ளவர்களுக்கும், மனத் தெளிவு இல்லாதவர்களுக்கும் அவருடைய செயல் புரிந்துகொள்ள முடியாமல் இருந்தது. எது எப்படியிருந்தாலும் அவருடைய சந்நிதியில் உட்கார்ந்தவர்கள் மன நிம்மதியை அடையாமல் போனது இல்லை என்பதே அந்த மகானின் கருணை வெள்ளம். இவை அனைத்தையும் தனக்கே உரிய எழுத்து வன்மையுடன் சக்தி விகடனில் தொடராகப் படைத்தார் பாலகுமாரன். அதன் தொகுப்பாகிய இந்த நூலின் மூலம் ரமணர் என்ற இறைவனுடன் வாசகர்கள் கலந்து பேரின்பம் அடையலாம் என்பது நிச்சயம்.
Balakumaran was born in Pazhamarneri village near Thirukattupalli in Thanjavur district in 1946. As a child, he was highly inspired by his mother, who was a Tamil scholar and a Siromani in Sanskrit, used verses of Sangam and other ancient literature to motivate him when ever he was emotionally down. This created a deep interest in Tamil literature which made literature his passion. His first stories were published in a literary magazine called ‘Ka-Sa-Da-Tha-Pa-Ra’ and for which he was also a founding member, a self-anointed militant literary journal that had been launched with a mission to blaze new trails in modernist literature.
He has also contributed to Tamil periodicals such as Kalki, Ananda Vikatan, Saavi and Kumudam. Later he became a famous Tamil writer, author of over 200 novels, 100 short stories, and dialogue/screenplay writer for over 14 films. His writings are noted for a distinct philosophical and religious tone. He is fondly called 'Ezhuthu Sithar' by his fans. He is a disciple of "Sri Yogi Ram Surath Kumar".
In his many novels he shows immense interest in enlightenment. He is considered as "Maanasiga Guru" for many individuals, who are in search of the formless almighty. His lucid but powerful expressions of man-woman relationship and human-God union is a tribute to mankind.
விகடனால் வெளியிடப்பட்ட 344 பக்கங்களை கொண்ட இப்புத்தகம், பகவான் ஶ்ரீரமண மகரிஷியின் வாழ்க்கை வரலாறை, எழுத்து சித்தர் பாலகுமாரனின் பார்வையிலிருந்து சொல்லப்பட்டிருக்கிறது.
"நான் யார்?" எனும் தேடலை மனித குலத்திற்கு அறிமுகப்படுத்தி, மன அமைதியும் சாந்தியும் வெளியில் இல்லை...அது நம்முள் உள்ளது என்பதை, வாழ்ந்து காட்டி சென்ற பகவான் ரமணரை பற்றிய சிறுசரிதம்.
*அவர் ராமநாதபுரம் திருச்சுழியில் வேங்கடராமனாக 1879ல் பிறந்து வளர்ந்தது முதல், *நாயன்மார்களின் சரிதம், *பெரியபுராணப் பாடல்கள் மூலமும் 63நாயன்மார்களுக்கும் ஈசன்,எனக்கு காட்சியளிமாட்டாரா? என்றும், ஞானத்தூண்டல் ஏற்பட்டு, தனது தாய், சகோதரர், குடும்பத்தை விடுத்து, கையில் உள்ள சிறிய அளவு பணத்தை கொண்டு ரயில் மூலமாகவும் நடைப்பயணமாகவும் திருவண்ணாமலை வந்தடைந்தது, *அவர் அடியார்களை வழிநடத்தியது, *அவருள் சிலரையும் தன்னை போலவே ஞான மார்க்கத்தை தேடச்செய்தது, அஃறிணைகளிடம் அன்பு செய்து உரையாடியது, *பால் பிராண்டன் எனும் ஆங்கிலேயரின் கட்டுரைகள் மூலம் ரமணரை பற்றி உலகம் அறிந்தது, *கடைசியில் 1950ல் முக்திபெற்றது வரை என அவரின் சரிதமாக இந்நூல் விளங்குகிறது.
புத்தகத்தின் பாதிப்பகுதிக்கு மேல் அவர் நிகழ்த்திய அற்புதங்களாலான நிகழ்வுகள்தாம் நிறைந்திருக்கிறது ...ஏன் ‘அற்புதகங்கள்’ என கூறுகிறோமென்றால், அவர் அதிகம் பேசுவாரில்லை...மாறாக அவரின் செயலே ஆயிரம் அறிவுரைகளை வழங்குவதால்தான்.
ஒரு சில அத்தியாயங்களில் இடையிடையே பெரியபுராணக் கதைகள், பதிகங்களும் விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன.
மேலும் சேஷாத்ரி சுவாமிகள், யோகி ராம்சுரத்குமார் போன்ற ஞானிகள் குறித்தும், தாய் அழகம்மை, உத்தண்டி நாயனார், அண்ணாமலை தம்பிரான், சிவப்பிரகாசம் பிள்ளை, கம்பீரம் சேஷய்ய்ர், லட்சுமி கீரைப் பாட்டி, அலங்காரத்தம்மாள், கணபதி சாஸ்திரி, ராமநாத பிரம்மச்சாரி, மஸ்தான் சுவாமிகள், அகிலாண்டம் அம்மையார், கந்தசாமி(கந்தாஸ்ரமம் எழுப்பியவர்), நிரஞ்சனானந்தர் போன்ற சிவனடியார்கள் ரமணருக்கு துணைநின்ற வரலாறையும் சொல்கிறது.
ஞானத்தேடல் உள்ளவர்க்கு ரமணர் வாழ்க்கைப்பயணம் ஓரு வாழ்வியல் பாடம். திருவண்ணாமலையில் அண்ணாமலையாருக்கு கூடும் கூட்டத்தில் சித்த புருஷர்களை தேடும் ஒரு சிறு பகுதியினர் இன்றும் உண்டு.
தற்போதைய ஆர்ப்பாட்டமான 'கிரிவலம்' வைபவத்திற்கு செல்லும் பக்தர்கள் மனஅமைதியும் பெறவேண்டுமாயின் ரமணாஸ்ரமம், கந்தாஸ்ரமம் சென்று தியானிப்பது சாலச்சிறந்தது.
சித்தர், ஞானி, குரு, ஆசான் என எல்லா வகையிலும் பொருந்தும் வகையில் பகவான் ரமணர் வாழ்ந்துள்ளார், இன்னும் பக்தர்களின் மனங்களில் வாழ்ந்து கொண்டுள்ளார்.
விகடன் தனக்கே உரிய பாணியில் அத்தியாயங்கள் தோறும் ஸ்ரீ ரமணரின் வரைபடங்களையும் நிழற்படங்களையும் பதிந்தது, வாசிப்பின்போது நம்மனத்திலிருந்து அகலாது பார்த்து கொண்டது.🙏🏼
புத்தகத்திலிருந்து…. \ வேங்கடராமன் என்கிற அந்தப் பதினாறு வயது இளைஞன் பிறகு ஸ்ரீரமண மகரிஷி என்று அழைக்கப்பட்டார். பகவான் என்று கோடிக்கணக்கானோர் அவரை வணங்கினார்கள்.
வேங்கடராமன் பிறந்த ஊர் திருச்சுழி. ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு அடங்கிய சிறிய ஊர். சுற்றிலும் பொட்டல் காடு. வானம் பார்த்த பூமி. ஆனால், அங்கே அழகான சிவன் கோயில் ஒன்று இருந்தது.
உலகில் பிரளயம் ஏற்பட்டபோது, சிவன் சூலத்தால் ஒரு பள்ளம் ஏற்படுத்த, பிரளயம் சுழித்துக்கொண்டு அந்தப் பள்ளத்தில் மறைந்தது. பிரளயம் சுழித்து மறைந்ததால், அது திருச்சுழி.
வெகு காலத்துக்குப் பிறகு, அதே சுழியில் இருந்து பிரளயம் ஒன்று வெளிப்பட்டது. அது அன்புப் பிரளயம், ரமணானுபவம் அது பொங்கி எழுந்து உலகையெல்லாம் நனைத்தது /
\ மார்கழி, தேவர்களின் விடியல். மார்கழியில் திருவாதிரை நட்சத்திரம் சேர்ந்த தினம், சைவர்களுக்குப் புனித நாள். எல்லா சிவாலயங்களிலும் நடராஜர் ஊர்வலம் வருகிற தினம். திருச்சுழியில் உள்ள சகாயவல்லி சமேத பூமிநாதர் ஆலயத்திலும் திருவாதிரைத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
சுந்தரமய்யர் வீட்டின்முன் அறையில், பல பெண்கள் போவதும் வருவதுமாக அலைந்துகொண்டிருந்தனர். இரவு ஒரு மணிக்கு மேல் பரபரப்பானார்கள். அழகம்மையின் வேதனைக் குரல், சுந்தரம் ஐயரை மெல்ல வாட்டியது. இடையறாது நமசிவாய ஜபம் செய்தார். 1:17-க்குக் குழந்தை பிறந்தது. ஆண் மகவு.
ஆண் மகவு என்று சுந்தரமய்யருக்கு அறிவிக்கப்பட்டது. அவர் கோயில் கோபுரம் நோக்கிக் கைகூப்பினார். அது, 1879-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 30-ம் தேதி. /
\ இதை வேங்கடராமனுக்கு(ஶ்ரீ ரமணர்) யார் சொல்லிக் கொடுத்தார்கள்? வேங்கடராமனுக்குக் 'குரு' என்று யாருமில்லை. தெய்வத்தையும் கை கூப்பி, 'இது வேண்டும்' என்று அவன் கேட்கவில்லை.
வெறுமே, 'தான் யார்?' என்று விசாரித்தான். உண்மையாக விசாரித்தான். சத்தியமான கேள்வியைக் கேட்டான். மிக சத்தியமாகத் தனக்குள் என்ன நடக்கிறது என்பதை முழு முனைப்புடன் சிந்தாமல், சிதறாமல் பார்த்தான். இது மிகப் பெரிய கொடுப்பினை; பூர்வ ஜென்ம வாசனை; பேரறிவாளனின் பேரருள்.
திருஞானசம்பந்தருக்கு அம்பாளிடமிருந்து கிடைத்த முலைப் பால் பிரசாதம் இப்படித்தான் இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது. /
\ இறந்த பிறகு, உயிர், வைதரணி நதி என்கிற ஒரு வெந்நீர் ஆற்றைக் கடக்கவேண்டியிருக்குமாம். கடக்கும் நேரத்தில் உயிர் பேரவஸ்தைப்படுமாம். உலகத்தில் வாழ்ந்தபோதுதான் ஒரு கொதிப்பில் கிடந்தேன் என்றால், உலகத்தை விட்டு வெளியே வந்த பிறகும் இந்தக் கொதிப்பிருக்கிறதே என்று தளருமாம்; தள்ளாடுமாம்.
'தான்' என்ற நினைப்பை விட்ட ஞானியின் நிலையும் இப்படித் தான் அவஸ்தையானது. வேங்கடராமன் இந்தப் பேரவஸ்தையை அனுபவித்தான்.
தன்னை உணர்ந்த ஓர் ஆத்மா எவ்வளவு காலம் இந்த ஆரவாரத்துக்குள் ஜீவித்திருக்க முடியும்? உலகாயதமான இந்த வாழ்க்கையை உதறுவதற்கு உண்டான நேரத்தை அது எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்; தனக்குள் தயாராகிக்கொண்டிருக்கும்.
அந்த வேளை வேங்கடராமனுக்கும் வந்தது.
/
\ இந்த உலகில் எழுதப்பட்ட பல கடிதங்களில் மிகச் சுருக்கமானதும், மிகச் சுவையானதுமான கடிதம் அது. சத்தியத்தில் நனைந்த வார்த்தைகள் அவை. மூன்று ரூபாய் மட்டும் எடுத்துக்கொண்டு, மீதி இரண்டு ரூபாயுடன் தமையன் நாகசுவாமிக்கு தம்பி வேங்கடராமன் கடிதம் எழுதினான்.
“என் தகப்பனாரைத் தேடிக்கொண்டு, அவருடைய உத்தரவின்படி இவ்விடத்தை விட்டுக் கிளம்பிவிட்டேன். இது நல்ல காரியத்தில் பிரவேசித்திருக்கிறது. ஆகையால், இந்தக் காரியத்துக்கு ஒருவரும் விசனப்படவேண்டாம். இதைப் பார்ப்பதற்காகப் பணமும் செலவு செய்யவேண்டாம். உன் சம்பளத்தை இன்னும் செலுத்தவில்லை.
ரூபாய் 2 இதோடு இருக்கிறது. இப்படிக்கு -“
என்று எழுதி, வெறும் கோடு மட்டும் கிழித்தான். பெயர் எழுதவில்லை. துண்டுக் காகிதத்தில், பென்சிலால் எழுதப்பட்ட கடிதம் அது. இந்தக் கடிதம் எவ்வாறோ மிகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, இப்போதும் ரமணாஸ்ரமத்தில் கவனமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இது இறைவன் செயல். இந்தக்கடிதம் சத்தியம் என்பதை, இந்த சத்தியம் எப்போதும் அழியாது என்பதை இதன் இருப்பு காட்டுகிறது /
\
‘மானாபிமானம் விட்டுத் தானாக நின்றவருக்கு சேனாதிபதி போல ஞானிபதியுண்டு’ என்று ஒரு பாட்டு வரும். அப்படி நின்றவருக்குப் பெயரில்லை; விலாசமில்லை; நண்பர் இல்லை. 'நான்' என்று ஆரம்பித்த அந்தக் கடிதம், 'இது' என்று தன்னைச் சுட்டிக்காட்டி, பிறகு, எதுவுமில்லாத தன்மையாகப் படிப்படியாக வளர்ந்து, ஓர் உச்சியில் மலர்ந்து வெடித்துச் சிதறியிருக்கிறது. /
\ மனதில் திட்டமிடல் இருக்கிறபோது, வளர்ச்சி தாழ்ச்சி என்கிற விஷயங்களும் வரும். பள்ளம் பாயும் நீருக்கு, வகுக்கப்பட்ட பாதை என்று ஏதும் உண்டா?
துறவு எந்தத் திட்டமிடலிலும் அடங்காதது. அது இயல்பானது; இலக்கற்றது. மிகப் பெரிய சரணாகதி அது. வேங்கடராமனின் பூர்வ ஜென்ம வாசனை, அவனை இலக்கில்லா நிலைக்குத் தள்ளியது /
\ வேங்கடராமனுக்கு இடுப்புத் துண்டும், மேல் சட்டையும், அந்த நாலு ரூபாய் பணமும்தான் சொத்து. ஆனால், நெஞ்சு முழுக்க சந்தோஷம் பொங்கி வழிந்தது. கீழூரிலிருந்து திருக்கோவிலூருக்கு நடந்து வந்து, அந்த ரயில் நிலையத்திலேயே உறங்கி, மறு நாள் அதிகாலை செப்டம்பர் முதல் தேதி, அங்கு வந்த ரயிலில் ஏறி, திருவண்ணாமலை நோக்கிப் போனான். மெல்ல மெல்ல வெளிச்சம் பரவி, பனி அடர்ந்த அதிகாலைப் பொழுதில் திருவண்ணாமலையில் வேங்கடராமன் இறங்கினான்.
1896-ம் ஆண்டு, செப்டம்பர் முதல் தேதி, திருவண்ணாமலை என்கிற அந்தத் தொன்மையான நகரம், மகானாக மலரப் போகிற ஓர் இளைஞனை 'வருக, வருக'வென்று வரவேற்றது.
திருவண்ணாமலை இப்போது இருப்பது போலல்லாது ஒரு சிறிய ஊராகவே இருந்தது. ரயில் நிலையத்திலிருந்து நேராக நடந்து, தலை நிமிர்ந்து நிற்கிற மலையையும், உயர்ந்த கோபுரத்தையும் வேங்கடராமன் கைகூப்பி தரிசித்தான் /
\\ தன்னை உருவமாகக் கொண்டுள்ள வரையில் உருவம் அற்றதை வழிபட முடியாது. தான் உருவமல்ல என்று உதறியபோது, உருவம் தாண்டி உள்ளதை உணர முடியும். உருவ வழிபாடு என்பது உருவத்தைப் பார்ப்பதற்கு அல்ல; அந்த உருவத்தைப் பார்ப்பதன் மூலம் உள்ளே பார்ப்பதற்கு! எதிரே நெருப்பு கனன்று எரிந்து கொண்டிருக்கிறது. அந்த எரியும் நெருப்பை உற்றுப் பார்த்துக் கை கூப்பிக் கண் மூடினால், நெருப்பு உள்ளுக்குள் எரியும்; எரிய வேண்டும்.
சிவலிங்கம் என்பது அருவ உருவம். அது உருவமுமில்லை. உருவமில்லாத அருவமுமில்லை. அது வெறும் குறியீடு. கடவுள் என்பதன் தாக்கத்தைக் கல்லால் செய்த தத்துவம். தன்னை உற்றுப் பார்க்கும்போது, தத்துவம் உள்ளுக்குள் புகுந்து பெரிதாக மலரும். எல்லா இடத்திலும் சிவலிங்கம் இருப்பதைக் கண்டுகொள்ள முடியும் பிரபஞ்சம் முழுவதும் சிவலிங்கத் தத்துவம்தான் என்பதை அறிந்துகொள்ள முடியும். //
\ மகான்கள் வெயிலில் நடக்கும்போது, ஒரு மேகம் நகர்ந்து வந்து நிழல் கொடுக்குமாம்; பகல் முழுவதும் பாதுகாக்குமாம். பொங்கி வரும் ஆற்று வெள்ளம், அந்த மகானின் வீட்டுக்கருகே வந்ததும் விலகி வளைந்து, வேறு திசையில் ஓடுமாம். காடுகளில் நடக்கும்போது கொடிய சிறுத்தையும், சிங்கமும், களிறும் உற்றுப் பார்த்துவிட்டு, மெல்லப் பின்வாங்குமாம். /
\ ஒரு கோடி பேருக்கு ஒரு சித்த புருஷர்; பத்து கோடி பேருக்கு ஒரு யோகி; நூறு கோடி பேருக்கு ஒரு மகான் என்ற கணக்கு உண்டு. மனிதர்களில் வெகு சிலருக்கே இந்த பிரபஞ்ச மௌனத்தோடு தொடர்புகொள்ளும் பாக்கியம் கிடைக்கும். இது பல ஜென்மங்களாக வளர்ந்து வந்து, ஒரு ஜென்மத்தில் கனிந்து நிற்கும். /
\ “நான்” இல்லையெனில் மனம் இல்லை. தன்மை தோன்றிய பிறகே முன்னிலை, படர்க்கை. தன்மை இல்லாமல் முன்னிலை, படர்க்கை இல்லை.
“நான் யார்” என்ற விசாரணையில் மனம் அழியும். மனமே இந்த மனதை நீ யார், என்ன செய்கிறாய் என்று உற்றுக் கவனித்து விசாரித்து, அப்படி விசாரிக்கிற நானும் அழிந்துபோகும். /
\\ எல்லாம் வல்ல ஞானி எளிமையாக இருக்கிறார். எப்படி? 'எல்லாம் வல்லவரானதால்' என்று எண்ணத் தோன்றுகிறது. எதுவும் தெரியாதபோதுதான் ஆடம்பரம் அவசியமாகிறது. எந்த விளம்பரமும் இல்லாத அந்த எளிமை, நினைக்க நினைக்கப் பரவசம் தருகிறது. //
\ சகலரும் சாகப் பயந்துதான் சாகிறார்கள். தன்னை அறிந்தவர் மட்டுமே மரணத்தைக் கண்டு அஞ்சாமல் வரவேற்கிறார். அவரால் மரணத்தைத் தள்ளி வைக்கவும் கூடும். /
\\ வெற்றி பெற்றவர் யாரும் அமைதியாக வாழ்வதே இல்லை. வெற்றிக்கு அடுத்ததாக என்ன செய்வது, இன்னொரு வெற்றி என்றுதான் போகவேண்டியிருக்கிறது. பாராட்டு வாங்கிய பிறகு என்ன செய்வது, மேலும் பாராட்டுகள் வாங்கவேண்டும் என்று ஆவல்தான் எழுகிறது. உலகாயத வெற்றிகளாலோ, சொத்து பத்து சுகங்களாலோ, பாராட்டுகளாலோ, அதிகார மேன்மையாலோ ஒருபோதும் அமைதி கிடைப்பது இல்லை. அமைதி கிடைக்காதவரை, திருப்தி ஏற்படுவதில்லை //
\ உள்ளுக்குள்ளே அமைதி ஒரு சத்குருவால் ஏற்பட வேண்டும் என்று அவர் காலடியைப் பற்றிக் கதறியபோது, உள்ளே அமைதி தோன்றியது. இது யார், எதிரே அமர்ந்திருப்பது யார் என்று பெரிய வியப்போடு அவர் பார்க்கத் துவங்கினார். இதுவரை இல்லாத பார்வையாக அது இருந்தது. இது ரமணம். இது ரமித்திருப்பதால், ரமணம். இவர் சாதாரணர் அல்ல. இவர் ரமணர். ஸ்ரீரமணர். சாதாரண ஸ்ரீரமணர் அல்ல; இவர் பகவான்; கடவுளின் உருவம்; கடவுளின் அவதாரம்; தன்னுள்ளே கடவுளைக் கண்டு தானே கடவுளாக இருப்பவர். இவர் பகவான். இவர் மிகப் பெரிய தபஸ்வி.
பல ஜென்மங்களில் செய்த தவத்தின் பயனாக, இப்போது எளிதில் தனக்குள் இறைவனைத் தேக்கி வைத்திருப்பவர். இவர் ரிஷி. மகரிஷி. பகவான் ஸ்ரீரமணர் என்று அவரை காவிய கண்ட கணபதி சாஸ்திரி கொண்டாடினார். அவர் அன்று சொன்ன ஸ்ரீரமணர் என்ற வார்த்தை வேங்கடராமன் என்ற, திருச்சூழியில் இருந்து வந்த அந்த இளைஞனுக்கு மிகச் சரியான பட்டமாக அமைந்தது. அதன்பின் அவரை வெறுமே சாமி, ஐயா என அழைக்காமல், பகவான் ஸ்ரீரமண மகரிஷி என்று எல்லோரும் அழைக்கத் தொடங்கினார்கள். /
\ சலிப்பு ஏற்படாத வரையில், முதல்ல இது, அப்புறம் அது, அதுக்கு அப்புறம் அது என்று திட்டங்கள் இருக்கும்போது, நான் யார் என்ற கேள்வி எழாது. திட்டங்களை நோக்கியே மனம் போகும். போகட்டும். அதில் தவறில்லை. ஏதேனும் ஒரு கணத்தில் திட்டங்கள் தவிடுபொடியாகி முகத்தில் அறையும்போது, அவருக்கும் அந்தக் கேள்வி வரும். எல்லா நேரமும் வெற்றி என்பது, எந்த மனிதரின் வாழ்க்கையிலும் இல்லை. வாழ்வில் குறிக்கோள் என்பது உண்டெனில், குறி பிசகுவதும் உண்டு. பிசகுகிற நேரம் மனம் சலிக்கத் துவங்கும். அந்தச் சலிப்பு உள்ளுக்குள்ளே, நான் யார் என்று பார்க்கத் துவங்கும். கேட்கத் துவங்கும். கேட்கும்போது, பிடித்துக்கொண்டால் போயிற்று. இல்லையெனில், மறுபடியும் மனம் மற்ற திட்டங்களுக்கு தாவத் தொடங்கிவிடும் /
\ அகிலாண்டம்மாளும் மஸ்தான் சுவாமியும் தேசூரில் ரமண மடாலயத்தை ஏற்படுத்தினார்கள். இதுதான் பகவான் பெயரில், உலகில் தோன்றிய முதல் மையம். "ஆஹா.. ரமண மடாலயம் வந்துவிட்டது. இனி என் பேரும் புகழும் பிரபலமாகப் போகிறது” என்று பகவான் வேடிக்கையாக்க் கூறினார். /
\ பகவானுடைய தலை எப்போதும் ஆடிக்கொண்டேயிருக்கும். இது மூப்பினால் வந்ததல்ல. திருவண்ணாமலைக்கு வந்த நாட்களிலேயே இது இருந்தது. இதுபற்றிக் கேட்க, "ஒரு சிறு குடிசையில் யானையைக் கட்டுவித்தால் என்ன நடக்கும்? குடிசை ஆட்டமெடுக்காதா? அதுபோலத்தான் இங்கேயும்" என்றார். கைத்தடி இல்லாமல், பகவானால் நேராக, நிற்கவோ நடக்கவோ முடியாது /
\ உன்னை நீ அறிவதே கடவுளை அறியும் வழி. இதற்காகவே பக்தி, இதற்காகவே மதம், இதற்காகவே வழிபாடு, இதற்காகவே எல்லா விதமான வேலைகளும் இங்கு நடைபெறுகின்றன. உன்னை நீ அறிவதற்காகவே நீ குடும்பஸ்தனாக, துறவியாக, பிரம்மசாரியாக இருக்கிறாய். நீ யார் என்பதை அறிவதற்காகவே உன்னுடைய எல்லா முயற்சிகளும் இங்கு இருக்கிறது /
ஒரு ஆன்மீகப் பயணம் என்றாலும், "நான் யார்" எனும் கேள்வி தத்துவத்தின் உச்சியில் நம்மை கொண்டு போய் நிற்கச் செய்கிறது இந்த புத்தகம். எனக்கு பிடித்த சில வரிகள்: 1. ஏற்றுக்கொண்ட பொறுப்பைச் செவ்வனேயே செய். குடும்ப பாரம் சுமப்பவருக்கும் ஆன்மீக வளர்ச்சி உண்டு. 2. ஒருவன் எந்தக் காரியம் செய்வதற்காக இங்கு வந்தானோ, அது வரை இங்கு இருப்பான். அதற்குப் பின் இங்கு இருக்க மாட்டான்.
This experience is a milestone and am one step ahead in the direction towards God. The author took me into spiritual journey through life of Sri Ramana Maharishi. For me it marks the beginning of understanding the purpose. I am happy that it begins and am proud to begin with Maharishi.
The life and teachings of Sri Ramana Maharishi told interestingly and giving information about the spiritual path and about the people associated with him in Tiruvannamalai.