இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மிகவும் பேசக் கூச்சப்படுகிற விடயம் பாலியல் (அ) கலவியியல் ஆகும்.ஏனோ சொல்ல கூச்சப்படுகின்ற பொருள் என்பதால் காலம் காலமாக அவற்றைப் பற்றி விரியும் தவறான புரிதல்கள் மற்றும் வதந்திகள் ஏராளம்.
மருத்துவர்.ஷாலினியின் "அர்த்தமுள்ள அந்தரங்கம்" நமக்கு அரைகுறையாக(அ) தவறாக ப் புரிந்து கொண்ட பாலியல் குறித்தான நம் பார்வையின் விசாலமாக மாற்றும் என்பதில் ஐயமில்லை.
மனிதகுலத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி,DNA,MHC ஜீன்கள்,Polyantry,Polygyny மற்றும் Monogamy போன்றவை பற்றிய தகவல்கள் எளிய மனிதர்களுக்கும் புரியும் வகையில் இந்நூல் அமைந்தது இந்நூலின் சிறப்பு.
பதின் பருவத்தில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள், காதலர்கள்,இளைஞர்கள்,கல்யாணத்திற்கு தயாராக இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள்,தற்பொழுது உள்ள கணவன்மார்கள் மற்றும் மனைவிமார்கள் போன்றோர் கட்டாயம் வாசிக்க வேண்டிய அறிவு சார்ந்த பல தகவல்கள் கொண்ட நூலாகும்.