எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல்.
எகிப்தின் மாபெரும் பேரரசியாக, மயக்கும் பேரழகியாக, ஆகச் சிறந்த காதலியாக கிளியோபாட்ராவைக் கொண்டாடும் அதே வரலாறு, அவளை ஆதிக்க வெறி கொண்டவளாக, அகந்தை நிறைந்தவளாக, ஒழுக்கமற்றவளாகவும்கூடச் சித்திரிக்கிறது. அவள் ஆச்சரியங்கள் தீராத நிரந்தரப் புதிர்.பண்டைய எகிப்திய வரலாற்றிலும், ரோம் வரலாற்றிலும் கிளியோபாட்ரா, தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக இருந்திருக்கிறாள். வலிமையான ரோம் பேரரசின் தலைவர்களான ஜூலியஸ் சீஸரையும், மார்க் ஆண்டனியையும் தன் கண்ணசைவில் காலில் விழ வைத்திருக்கிறாள். அவள் அரவணைப்பில் ஆட்சி மாறியிருக்கிறது. அழுத கண்ணீரில் அரசியல் மூழ்கியிருக்கிறது.கிளியோபாட்ராவின் அழகு முதல், அவள
Mugil, a renowned, best-selling Tamizh writer contributing to various platforms like Weekly Magazines, Books, Television and Cinema. Mugil's works focus on introducing History & Research based Historical content to the current generation of young readers. Born 1980, Native Tuticorin, Tamilnadu and Mugil lives in Chennai.
முகில், முழுநேர தமிழ் எழுத்தாளர். புத்தகங்கள், தொலைக்காட்சி, சினிமா என்று மூன்று தளங்களில் இயங்கி வருகிறார். 35-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியிருக்கிறார். சரித்திரத்தை எளிய மொழிநடையில் வலிமையாகச் சொல்லும் இவரது பாணி தனித்துவம் வாய்ந்தது. 1980-ல் பிறந்த இவரது சொந்த ஊர் தூத்துக்குடி. வசிப்பது சென்னையில்.
"Had Cleopatra's nose been shorter, the face of the world would have changed." - Blaise Pascal. மார்க் ஆண்டோனியோ ஜூலியஸ் சீசரோ சப்பை மூக்குள்ள- ஆளுமை திறனில்லா எகிப்திய பேரரசியாக இவளை கண்டிருந்தால் இவளுக்கு அடிபணிந்திருக்க மாட்டார்கள். ரோமின் சரித்திரம் வேறு விதமாக இருந்திருக்க கூடும். சீசர் அரியணை ஏறியிருக்க கூடும்.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்த நிலையிலும், அவளை அழகியாகவோ, ராட்சசியாகவோ வர்ணிக்கும் நூல்களுக்கு இருக்கும் மதிப்பே தனி. இரண்டு மாபெரும் தளபதிகள் நாட்டை மறந்து, கடமைகளை மறந்து, வீரம்-விவேகம் துறந்து, மனைவி மக்களை துறந்து.. காதலியே கதியென்று கிளியோபாட்ராவிடம் சரணடைந்து கிடந்திருந்தால் அவள் எப்படிப்பட்ட பெண்ணாய் இருந்திருப்பாள் ? கிளியா கழுகா என்று கண்டறிய முடியாத ஒரு வினோத பெண்ணின் வாழ்வாகவே இவள் வாழ்கை இருந்திருகிறது. ரோம் சாம்ராஜியத்தின் மாவீரர்கள் ஜூலியஸ் சீசரும், மார்க் ஆண்டனியும் கண்ணசைவில் கட்டுபடுத்துகிறாள். இவள் கண்ணீருக்கு ரோம் அரசியலே அடிபணிகிறது. ரோம் பேரரசின் பிடியிலிருந்து எகிப்து தப்பியதற்கு காரணம் கிளியோபாட்ரா ! எகிப்தின் வீழ்ச்சியும் அவளால் நேர்ந்ததே. புத்தி கூர்மையும், தொலைநோக்கு பார்வையும், விரல் நுனியில் கல்வியறிவும், போர் திறமைகளும், நகைச்சுவை உணர்வும் கொண்ட நாகரிக நங்கை. அதிகார தோரணையும், அகந்தையும் கொண்டே சீசரையும் ஆண்டனியையும் கட்டில் வைத்திருந்ததாக "ப்ளூடோர்ச்" எழுதியிருக்கிறார். இரு தேசங்களின் வரலாற்றை கண்ணீரையும் காதலையும் கொண்டு எழுதியிருக்கிறாள். எகிப்து சாம்ராஜியத்தின் பேரரசியான கிளியோபாட்ரா, கழுகை போன்ற வளைந்த மூக்கு, பெரிய காதுகள், அகண்ட நாசி, நீளமான கழுத்து என சிலைகளிலும் வர்ணிப்புகளிலும் அழகுக்குரிய அம்சங்கள் இல்லா பெண்ணாக தான் தோன்றுகிறாள். ஆனால் அழகுக்குரிய உவமைகள் இவளின்றி கசக்கின்றன !
கிளியோபாட்ரா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னால்ஆண்டனியை தேடி எகிப்தின் மீது படையெடுத்த அக்டோவியஸ் அவளை சந்தித்திருந்தால், மீண்டும் சரித்திரம் மாற்றப்பட்டிருக்கும். அக்டோவியஸ் அவளது காதலன் ஆகியிருக்க கூடும். எகிப்து ரோமின் பிடியில் செல்லாதிருந்திருக்க கூடும்.
பேரழகி - இந்த வார்த்தையை கேட்டவுடன் நம் நினைவிற்கு முதலில் வருவது எகிப்திய பேரரசி ... இல்லை இல்லை ., பேரழகி கிளியோபாட்ரா தான் . ரோமாபுரியின் மாபெரும் சக்திகளான ஜூலியஸ் சீசரையும் , மார்க் ஆண்டனிஐயும் , தன கண் அசைவில் மயக்ககூடிய பேரழகியாக இருந்தாள் . அழகு , ஆபரணங்களில் அதிக பிரியம் கொண்டவள் . இவள் குளிப்பதற்கு கழுதை பால் . அதற்காக 700 கழுதைகள் கொண்ட தொழுவம் வேறு . பல மொழிகள் கற்று கொண்டவள் , அரசுரிமைக்காக தம்பியை மணந்து கொண்டாள் . தம்பியுடனான கருத்து வேறுபாட்டில் நாட்டை விட்டு ஓடி , சீசரின் உதவியுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தாள் . சீசருக்கும் இவளுக்கும் பிறந்த சீசரியன் , சீசரின் வாரிசாக ரோமாபுரியை ஆட்சி செய்வான் என்ற எண்ணம் சீசரின் மரணத்தில் கலைந்து போனது . ஆண்டனி மீது இவள் இளம் வயதில் கொண்ட ஈர்ப்பு , சீசரின் இறப்பிற்கு பின் காதலாக மாறியது . ரோமாபுரியை மறந்து சீசரை போலவே எகிப்திலேயே தங்கி விட்டார் ஆண்டனி . இவர்களுக்கு ரெட்டையர்கள் பிறந்தனர் . கிளியோபாட்ரா மரணித்து விட்டாள் என்ற செய்தி கேட்டு மாவீரனான ஆண்டனி தற்கொலை செய்து கொண்டான் . கொடூர முறையில் இறக்க விரும்பாத இவள் , னிலே நதியில் இருக்கும் ஒரு வகை பாம்பின் விஷத்தை குடித்து மரணித்தாள் என செய்திகள் கூறுகின்றன .
" What a complicated character she is? " இப்புத்தகத்தை படித்தவுடன் என் மனதில் தோன்றிய வார்த்தைகள் . இவள் கிளியா ? இல்லை கிளியின் பெயரை கொண்ட கழுகா ? தெரியவில்லை . சீசரையும் , ஆண்டனியையும் உண்மையாக காதலித்தாளா ? இல்லை அதற்க்கு பின் அரசியல் நோக்கம் இருந்ததா ? தெரியவில்லை . அளவில்லாத பாசம் , காமம் , கோபம் , என ஒரு புரியாத புதிராகவே வாழ்ந்து வந்தாள் . இவள் வாழ்கையை போலவே , மரணமும் புதிர் தான் .
Oh Cleo! Whole history of Egypt & Rome told in 150 pages in a cripsy way is interesting to read.. Her relationship with Rome Emperors Juluis ceaser & Antony is mind blowing! She was whole responsible for the the rise and fall of Egypt! Must read!
பேரழகி என்றாலே சட்டென்று நினைவுக்கு வரும் ஒரு பெயர் கிளியோபாட்ரா. ஒருவர் அல்ல இரு மாபெரும் வீரர்கள் (மார்க் ஆண்டனி மற்றும் சீசர்) தங்களை மறந்து, தங்கள் நாட்டை மறந்து, தங்கள் மக்களை மறந்து, தங்கள் கடமைகளை மறந்து கிளியோபாட்ரா உடன் இருந்துள்ளனர் என்பதே ஆச்சர்யமாக உள்ளது.
மார்க் ஆண்டனி என்றாலே பாட்ஷா ரகுவரன் தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால் உண்மையான மார்க் ஆண்டனி யார் என்பதை இந்த புத்தகத்தில் படித்து தெரிந்து கொண்டேன்.
இரு பெரும் வீரர்களும் கிளியோபாட்ரா வசம் என்றால் அவள் பேரழகி மட்டுமல்லாது போர் நுணுக்கங்கள், ராஜதந்திரங்கள், பொருளாதாரம் என்று பல்வேறு துறை சார்ந்த விஷயங்களிலும் பேரறிவு பெற்றவளாக இருந்திருக்க வேண்டும்.
வரலாற்று புதினமாக இருக்கட்டும் அல்லது முழு நேர வரலாறு போதிக்கும் புத்தகமாக இருக்கட்டும், வாசிப்பதற்கு போரடிக்காமல் இருப்பது போல் எழுதுவது சில பேருக்கே கைகூடும். முகில் அவர்களும் அதில் ஒருவர். சற்றும் போரடிக்காமல் எழுதுவதில் கில்லாடி.
The Story about the most beautiful and captivating Queen in the history. This book gives you an clean view of the life and death of Cleopatra and also her impact on the Roman empire. This book gives you simple picture of how the two most powerful warriors of the world, Caeser and Antony get to smitten by Cleopatras beauty and never able to recover from it.
Though there were many books on Cleopatra and the Roman Empire, this book by author Mugil is a simple version which is easy to read. The author tried to give neutral picture in most of the situations. Since it is history and there may not be any evidence, the author tried to give both the view point in controversy conditions, Like, Who is Augustus, Who is Falpiva, Whether Cleopatra was a real beauty, what is the nature of Cleopatra etc.
This book also gives details about Cleopatra's lavish lifestyle. Though Cleopatra was ruthless in killing her siblings, and played a vital role in Roman politics, basically she was little insecure through out her life which this book would clearly portrait.
This book is written in a simple manner which facilitate easy reading. The author maintained the flow of the story by giving picture of happening in and around Cleopatra and simultaneously in Roman empire. Since it is Cleopartra’s story more focus were given in and around her.
A Short history of life of Cleopatra VII, controversial queen of Egypt who is well known for her beauty and relationships with Julius Caesar & Mark Antony. It was an alright kind of book. 3 hours are enough to read in one sitting.
கிளியோபாட்ரா என்னும் பேரெழில் கொண்ட எகிப்திய பேரரசி குறித்து முகில் அவர்களின் எழுத்தில் வந்திருக்கும் உலகம் வியக்கும் சர்ச்சைக்குரிய சரித்திரம். சர்ச்சை இல்லாமல் கிளியோபாட்ரா இல்லை என்பதையே மீண்டும் நிரூபித்திருக்கிறார் முகில் அவர்கள். அவர் மேற்கொண்ட உழைப்பு புத்தகத்தின் பக்கங்கள் முழுக்க தெரிகிறது.
மாவீரன் அலெக்சாண்டரின் மரணம் விதைத்த பாதையில் தால்மியின் வழிகாட்டுதலில் கட்டமைக்கப்பட்ட மிகப்பெரிய சாம்ராஜ்யம் எகிப்திலும், ரோமிலும் நிறுவப்பட்ட கதை. 12ஆம் தால்மியின் குழந்தைகளான 7ஆம் கிளியோபாட்ராவும், 13ஆம் தால்மிக்கும் திருமணம் முடித்து அவர்களை அலெக்ஸாண்ட்ரியாவை ஆள வைத்தார்கள்.
இப்படியான வரலாற்றின் கூற்றில், பொதினியஸ் மற்றும் அக்கிலீஸ் தான் இவர்களுக்கான அடுத்த கட்ட பிரச்னைகளைக் கொடுக்கத் தொடங்கினர். இதற்கு பிறகே ரோமின் மிகப்பெரும் அரசனான ஜூலியஸ் சீசரையும், மிகப்பெரும் போர் தளபதியான மார்க் ஆண்டனியையும் தன் காலடியில், கண்ணசைவில் வைத்திருக்க ஆரம்பித்திருந்தார் கிளியோபாட்ரா.
தங்கள் சகோதரர்களையும், மகன்களையுமே மணம் செய்து கொள்ளும் வழக்கத்தில் இருந்த எகிப்தின் அரசிக்கு எண்ணற்ற காதலர்கள். சீசரின் வழி சீசரியன் என்ற மகன் இருந்ததாகவும் முகில் வரலாற்றுக்குறிப்புகளை எடுத்து வைக்கிறார்.
சீசரின் மகளைத் திருமணம் செய்து கொண்ட பாம்பே என்பவரும் சீஸரும் தான் ரோமின் இரு பெரும் ஆதிக்கமாக திகழ்ந்து வந்தனர். தனது மாமனார் கிளியோபாட்ராவின் ஆதிக்கத்தில் உருகுவதும், 52 வயதில் காதலில் தத்தளிப்பதும் பாம்பேவிற்கு உறுத்தியபடியே இருந்தது. ரோமின் செனட்டில் அனைவரின் எதிர்ப்பையும் பெற்றபடி நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது. ஆனாலும் பாம்பேயை கொன்றதில் சீசருக்கு விருப்பம் இல்லை என்பதும் அதற்கு அவர் மிகுந்த கவலை கொண்டார் என்பதுமே முக்கியமான செய்தி.
இந்த புத்தகம் முழுவதும் கிளியோபாட்ரா என்ற எகிப்திய அரசியின் வாழ்க்கை எப்படி பட்டது அல்லது அவளால் எப்படி வடிவமைக்கப்பட்டது என்பதை முகில் பல ஆதாரங்களை மையப்படுத்தி நகர்த்தியிருக்கிறார். இது போன்ற உலகின் பேராளுமைகளின் வாழ்க்கையை ஆராய்ச்சி செய்து எழுதுதல் முகிலுக்கு கை வந்த கலை. இதற்கு முன்னர் அவரின் ஜெங்கிஸ் கான் பற்றிய புத்தகத்தை படித்திருக்கிறேன். கிளியோபாட்ரா என்னதான் மிகவும் கொடூரமான அரசியாக சித்தரிக்கப்பட்டாலும், எகிப்திய மக்களின் மேல் பெரும் மதிப்பும், பெரும் அக்கறை கொண்ட அரசி என்பதும் இந்த புத்தகத்தின் பக்கங்களின் வழியே வெளிப்படும் இன்னுமொரு உண்மையாக இருக்கிறது.
கழுதைப்பாலில் குளிப்பது என்பதை மட்டுமே தன் அழகின் அம்சமாக திரித்து கூறப்பட்டு, கிளியோபாட்ரா என்ற அரசியின் மாறுப்பட்ட வாழ்வும், எப்படி அவள் ரோமப்பேரரசின் இரு பெரும் தளபதிகளை தன் காதல் வசத்தில் வைத்திருந்தால் என்பதும் விளங்குகிறது. இறுதியில் சீசரின் இறப்புக்கு பின்னர் அவரின் மனைவிகளுக்கும் இடையே நடந்த போராட்டங்களில் எப்படி வெற்றி கண்டார் என்பதும், அதற்கு பிறகு மார்க் ஆண்டனியுடனான காதலும் அவரின் மனைவி ஆக்டேவியாவின் குழப்பங்களும், அவரின் பலம் பொருந்திய அண்ணன் ஆக்டேவியஸ் என்னும் ஆகஸ்டஸ் ரோமின் அடுத்த மிகப் பெரிய ஆட்சியாளராக தன்னை நிறுவிக்கொள்ளப் பார்க்கிறார்.
இந்த நிலையில் தான் கிளியோபாட்ரா மற்றும் மார்க் ஆண்டனியின் இறுதிப் படிநிலைகள் எழுதப்பட்டதாக முகில் குறிப்பிடுகிறார். ஆக்டியம் கடலில் நடைபெற்ற போரில் ஆண்டனி வென்றிட முடியும் என்ற மாயபிம்பத்தை ஏற்படுத்தி கிளியோபாட்ரா ஆண்டனியை வர செய்திருக்கிறாள். அதன் பிறகு நடந்த அனைத்துமே இவர்களை இறப்பின் வாசலுக்கு இட்டு செல்லும் ஒத்திகை போலவே இருந்திருக்கிறது. தனக்கென கல்லறை செய்து கொண்டு அதில் தங்கமிட்டு நிரப்பி, ஐசிஸ் போன்று கடவுளாய் தன்னை அலங்கரித்துக் கொண்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. மரணத்தில் இன்னும் குழப்பங்கள் இருப்பதே தெரிகிறது.
இப்படி எல்லோரையும், தன் கண்ணசைவிலும், காதல் பார்வையிலும், ஆட்டி வைத்திருந்த 7ஆம் கிளியோபாட்ரா எப்படி இறந்தாள் என்பதும், அவளின் செல்வங்கள் என்னவாகின என்பதும் இன்னும் மிகப்பெரிய கேள்விக் குறியாகவே இருக்கின்றன. இருப்பினும் அந்த கேள்விகளுக்கும் முகில் பதில் சொல்ல முற்பட்டிருக்கிறார். படித்துப் பாருங்கள்...
கிளியோபட்ராவுக்குச் சப்பை மூக்காக இருந்திருந்தால், சீசரோ, அந்தோனியோ அவளிடம் மயங்கி காதல் வசப்பட்டிருக்க மாட்டார்கள். ரோமின் சரித்திரம் வேறு மாதிரி இருந்திருக்கும்.
கிளியோபட்ரா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு ஆக்டோவிஸ் அவளைச் சந்தித்திருந்தாலும் வரலாறு மாறியிருக்ககூடும். ஆக்டோவியஸும் அவளின் காதலன் ஆகியிருக்கக்கூடும்.