நா. முத்துக்குமார் கவிதைகள்
*பட்டாம்பூச்சி விற்பவன்
*நியூட்டனின் மூன்றாம் விதி
*குழந்தைகள் நிறைந்த வீடு
*ஆனா ஆவன்னா
*என்னை சந்திக்க கனவில் வராதே
மேற்சொல்லப்பட்ட கவிதைப் புத்கங்களின் தொகுப்பாகத்தான் இந்த புத்தகம் அமைந்திருக்கிறது. இதில்,
' பட்டாம்பூச்சி விற்பவன்' 1997ல் வெளிவந்துள்ளது...
நா. முத்துகுமாரின் கவிதைகள்...வேறென்ன பாராட்டுதல் இருந்துவிட முடியும்....ஒவ்வொன்றும் முத்து.
இக்கவிதைகளுக்கு பாலுமகேந்திரா, மணிரத்னம், கந்தர்வன் முதல் பலர் நல்லதொரு முகவுரை கொடுத்தள்ளனர்...அதில் பிறழ்வுமில்லை!
'என்னை சந்திக்க கனவில் வராதே' என்னும் தொகுப்பு ஜப்பானிய காதல் கவிதைகளின் தழுவல் எனக் கூறியிருக்கிறார்.
நாம் நமது தினப்படி வாழ்வில் நடந்த, சந்தித்த, ரசித்த சம்பவங்கள், அப்படியொன்றும் ஒருவருக்கு ஒருவர் அவ்வளவு வேறுபாடு கொண்டதாக இல்லை என்பது இவரது கவிதைகள் மூலம் தெரிகிறது.
அப்படிபட்ட சம்பவங்களை இவர் அவ்வளவு அருமையாக ரசித்து வர்ணித்திருக்கிறார்...நாம் ரசித்தோ/கடந்தோ சென்றதோடு நிறுத்திகொண்டோம்....
கிட்டத்தட்ட அனைத்து கவிதைகளையும் இருமுறை வாசிக்கும் விதமான படைப்பு.
அதாவது ஒரு விஷயத்தை பற்றிய முடிச்சுகளை போட்டுகொண்டே சென்று, கடைசி வரியில் விடையளிக்கிறார்...அந்த முடிச்சுகளை படிக்கும்போது ஒருவித ஆர்வமிகுதி உயர்ந்துகொண்டே செல்லும்.
விடை தெரிந்த பின், 'அட' என சொல்லி, மறுபடியும் அதே கவிதையை தெரிந்த விடையுடன் பொருத்தி பார்த்து படித்து செல்ல தூண்டுகிறது.
மொத்தத்தில், தரமான கவிதைகள்!!!
இன்னமும் இவரது பல நல்ல படைப்புகளை பெற தகுதியற்றவர்களாகி விட்டோம்,
தேசிய விருது பெற்ற இக்கவிஞனின் இழப்பின் மூலம்.