Jump to ratings and reviews
Rate this book

மானுட வாசிப்பு

Rate this book
இரவுச் சாப்பாடு சாப்பிடுகிறபோது எங்கம்மா ஏண்ட்ட நிறைய பேசிட்டே இருப்பாங்க.ஒவ்வொரு கதையா சொல்லுவாங்க.அவ இந்த ஊர்லயே பிறந்து வளர்ந்தவ.அவ இந்த ஊர்லயே இருந்ததுனால இந்த ஊருடைய வளர்ச்சி,பிற சாதிகளோட தொடர்பு,பழமொழிகள்,சொலவடைகள்,proverbs,phrases இதுலயெல்லாம் எங்கம்மா கெட்டிகாரங்க.எல்லோரும் சொல்வாங்க நிறைய பழமொழி சொல்லிட்டே இருப்பாங்க.பார்ப்பானுக்கு மூப்பு பறையன் அதே எங்கம்மா சொன்னதுதான்.அப்புறம் யாரும் சொல்ல நான் பார்க்கல.கடைசியா முப்பது ,முப்பத்தைந்து ஆண்டுகள் கழித்து எங்க மாமனார் சொல்லி நான் கேட்டேன்...........

இத்தனைக்கும் எங்கம்மா பள்ளிக்கூடத்திற்கு போகாத ஆளு.மூணு நாள் தான் பள்ளிக்கூடத்திற்குப் போனேன்னு சொல்லி,கடைசி வரைக்கும் வருத்தப்பட்டுக்கிட்டிருந்தா.....

மனித உறவுகள பத்தி நிறைய பேசுவாங்க.இந்த ஊர்ல வெள்ளைக்காரன் கண்ணுவச்சா ஒரு பொருள் விளங்காது அப்படிண்ணுவா.எங்க வீட்டுல இருந்த ஆட ஒரு வெள்ளைகாரன் விலைக்கு கேட்டானாம்.எங்கப்பா கொடுக்க மாட்டேண்டாராம்.அந்த ஆடு செத்துப் போச்சாம்.அதான் சொல்லுவா.

..........எங்கம்மாவோட பேச்சு காரணமாக every old man is good read with என்ற எண்ணம் வந்துச்சு.ஒவ்வொரு மனிதனும் படிக்க வேண்டிய புத்தகம்.அதனாலதான் யார் எங்க பெசுனாலும் கேட்டுட்டே இருக்க வேண்டியது.அல்லது அவங்கள பேச வச்சு கேட்டுகிட்டு இருக்கிறது.

116 pages, Paperback

Published May 1, 2016

3 people are currently reading
41 people want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
22 (62%)
4 stars
10 (28%)
3 stars
3 (8%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 8 of 8 reviews
4 reviews1 follower
January 26, 2021
தொ.ப.வின் இந்த நேர்காணலில் அவர் நமக்கு இன்னும் பல புத்தகங்களையும் மனிதர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார். மிகவும் பயனுள்ள தகவல்கள் கொண்ட புத்தகம்
15 reviews3 followers
May 14, 2020
இந்தப் புத்தகம் கேள்வி பதில் சார்ந்த வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.
அதனால் புரிந்துகொள்வதற்கும் மிக சுலபமாக இருக்கிறது.தமிழ் மரபியல் சார்ந்த கேள்விகளை மிக எளிமையாக விளக்கி இருக்கிறார் . பல சுவாரசியமான விஷயங்கள் நாம் இந்நாள்வரை எண்ணிக்கொண்டிருக்கும் பல மரபுகளை எப்படி தோன்றியது என்று அழகாக விளக்கி இருக்கிறார்.

தொ .ப உடைய கட்டுரைகள் எல்லாம் ரொம்ப சின்னதாக இருக்கும் ஆனால் வாசித்து முடித்த பிறகு நீங்கள் தேட வேண்டியது ஏராளமாக இருக்கும்.
அரசியல் சாதி மதம், பண்பாடு, உணவு, ஆளுமைகள், சித்தர் இலக்கியம்
கல்வி, சுற்றுச்சூழல்,தலித்தியம், பெரியாரியம்,தமிழ் தேசியம்
நாட்டார் வழக்காற்றியல், கோவில், அழகர் கோவில்,பாரதியார்
சமூகம் இப்படி அனைத்து விதமான மரபியல் சார்ந்த கேள்விகளுக்கு மிக சுவாரஸ்யமாக பதில் கூறியிருக்கிறார்

தொ .ப வின்உடைய மற்ற புத்தகங்கள் ஆகிய மரபும் புதுமையும், பண்பாட்டு அசைவுகள்,மற்றும் இந்த புத்தகம் மானுட வாசிப்பு படித்தபிறகு. இவரை மிக தொடக்கத்திலேயே படித்திருந்தால் என்னுடைய தமிழ் புதின வாசிப்பு அனுபவங்கள் இன்னும் ஆழமாக இருந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.
Profile Image for Nagarajan.
76 reviews23 followers
January 21, 2021
தெறிப்புகள் meaning explosion. After reading complete works of Tho.Pa, you should read this to find answers to your unanswered questions or for seeking finer insights. Tho.Pa never fails to impress us with his sharp, simple and intelligent answers. He is a treasure for one to learn on Tamil culture, identity, Anthropology and customs. In this book he answers on wide area of topics. Read to find for yourself.
Profile Image for Udhayakumar Tamileelam .
87 reviews26 followers
December 20, 2020
எனக்கு தோன்றிய பற்பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது.
Profile Image for Anitha Ponraj.
274 reviews42 followers
January 26, 2025
புத்தகம் : மானுட வாசிப்பு - தொ.ப.வின் தெறிப்புகள்
ஆசிரியர்கள் - தயாளன்,ஏ.சண்முகானந்தம்

தொ.ப.வின் சில புத்தகங்கள் வாசித்திருந்தாலும் அவர் நேர்காணல் வாசிப்பது இதுவே முதல் முறை. தலைப்பில் இருக்கும் தெறிப்புகளின் அர்த்தம் சில பக்கங்களில் புரிந்து விடுகிறது.

பொட்டில் தெறித்தாற் போல் நேரடியான பதில்கள் !

அவரின் ஒளிவுமறைவில்லாத பேச்சை, தெளிவான சிந்தனையை இதைவிட எளிதாக பறைசாற்றுவது வேறொன்றும் இல்லை. தெரிந்த விஷயங்களை அழகாக விளக்குகிறார், தெரியாத விஷயங்களை தெரியாது என்று சொல்லும் இவர் போல் வெகு சிலரையே நான் இதுவரை கண்டிருக்கிறேன்.

வழக்கமாக நாம் கண்டு கேட்ட கடைபிடிக்கும் பழக்க வழக்கங்களுக்கான காரணங்களை அறிந்து கொள்ளும் ஆவல் எனக்கு நிறைய உண்டு. அதற்கு சரியான ஆசிரியர் தொ.ப தான் என்று கண்டு கொண்டேன்.

அவரின் எல்லா புத்தகங்களையும் வாசித்துவிட வேண்டும் என்று இந்த புத்தகம் வாசிக்க வாசிக்க தோன்றியது. அத்தனை விரிவான விளக்கங்கள் அதுவும் எளிதான நடையில்.

குறைந்தது ஒரு ஐம்பது புத்தகங்களேனும் இதில் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் மூலம் அவரின் பரந்து விரிந்த வாசிப்பு அனுபவத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது.

அழகர்கோவில் புத்தகம் , சிறு தெய்வ வழிபாடுகள் குறித்து பல கட்டுரைகள் எழுதியிருக்கும் அவர், கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவர் என்று தெரிந்து கொண்டது ஆச்சரியமாக இருந்தது.

தசாவதாரம் திரைப்படத்தில் என் மனதில் ஆழப் பதிந்த வசனமான,

“கடவுள் இல்லன்னு சொல்லல, இருந்தா நல்லா இருக்கும்னு தான் சொல்றேன்”

என்ற வார்த்தைகளின் தாக்கம் இவருடையது !

பண்பாட்டு ஆய்வு சமையலறையிலிருந்து தொடங்கப்பட வேண்டும் என்று சொல்லும் முதல் பண்பாட்டாய்வாளர் தொ.ப. வா கவே இருக்கக் கூடும் !

பதினெட்டு தலைப்புகளாக பிரிக்கப்பட்டிருக்கும் இந்த புத்தகத்தில் அவர் விவரித்திருக்கும் விஷயங்கள் எண்ணிலடங்காதவை.

சமகால அரசியல் தொடங்கி சங்க இலக்கியங்கள் வரை அவர் தொடாத தலைப்புகள் இல்லை. தீபாவளி தமிழ் புத்தாண்டு வினாயகர் சதுர்த்தி என்று நாம் கொண்டாடும் பண்டிகைகள் குறித்த அவர் கருத்துகள் சிந்திக்க வைக்கின்றன.

சிலப்பதிகாரம் மீது அவருக்கு இருக்கும் ஈர்ப்பும் அது குறித்து அவர் எழுதியுள்ள தகவல்களும் தற்சமயம் நான் வாசித்துக் கொண்டிருக்கும் சிலப்பதிகாரம் குழு வாசிப்புக்கு பல அறிய தகவல்களை கொடுக்கிறது.

மனிதர்களை வாசித்தால் பண்பாட்டை கற்றுக்கொள்ள முடியும் என்று உறுதியாக நம்புகிறார். அதை அவர் கண்ணோட்டத்தில் வாசிக்கும் போது நம்மால் ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

என்னுடைய பல கருத்துக்கள் கண்ணோட்டங்கள் இந்த ஒரு புத்தகத்திலே மாறியிருக்கிறது.

“நாமும் அன்றாடம் எத்தனையோ விடயங்களைப் பார்க்கிறோம். ஆனால் தொ.ப மட்டுமே கவனிக்கிறார்”

என்று முன்னுரையில் ஆசிரியர் தயாளன் குறிப்பிட்டதை புத்தகம் முழுவதும் நம்மால் உணர முடிகிறது.

அவர் கண்ணோட்டத்தில் காணும் உலகம், நம் சுற்றுக் சூழலையையும் நம் பண்பாட்டையும் குறித்து இன்னும் ஆழமான புரிதலை தரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.



Profile Image for Ashok Chemarx.
52 reviews1 follower
October 2, 2018
Every man is a good read...தொ.பரமசிவன் என்னும் ஒரு நேர்மையான ஆய்வாளரின் நேர்காணலை...எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் படித்தோ கேட்டுக்கொண்டோ இருக்கலாம் .. இவர் சொல்லும் சிறு குறிப்புகள் கூட நமக்குள் பெரும் வியப்பையும் மேலும் தெரிந்து கொள்ளும் ஆவலும் நமக்குள் மூண்டு விடுகிறது... மயிலை வேங்கடசாமி ஐயாவின் உடனான சந்திப்பும் உரையாடலும் நமக்குள் ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
Profile Image for Rajanna.
15 reviews4 followers
March 31, 2020
Fantastic Q and A session with the professor who does not hold back from revealing various hiddens anthropological elements in the Tamil society. The best thing about the book is that the professor gives you the names of 10 more books to read.

The Q and A does not stick to one topic but stretches across various domains of the anthropological expanse.
59 reviews1 follower
June 7, 2023
நிறைகுடம் நீர் தழும்பல் இல். ஏனெனில் குடமறியும் கடல் உண்டென. கடலினை முன்னிருத்திய இந்தப் புத்தகத்துக்கு என் நன்றிகள்.
Displaying 1 - 8 of 8 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.