பூமியில் மனித இருப்பின் ஆதரமான உடல்களில் பொங்கிடும் பாலியல் வேட்கை.எங்கும் நிழல் போல பற்றிப் படர்வதை நுட்பமான மொழியில் வா.மு.கோமு நாவலாக்கியுள்ளார்.உடலை முன்வைத்து நிகழ்த்தப்படும் கொண்டாட்டங்களும் துக்கங்களும் அளவற்றுப் பெருகும் நவீன வாழ்வில், ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் பாலியல் அனுபவங்கள் ரகசியப் பிரதியாகவே மனதுக்குள் புதைந்துள்ளன. இதுவரை தமிழ்ப் பண்பாடு, பாரம்பரியம் என மொழியின் வழியில் கட்டமைக்கப்பட்டுள்ள எல்லாவகையான புனைவுகளையும் சிதைத்து, வா.மு.கோமு புனைந்திடும் புனைவுலகு, வாசிப்பின் வழியாக அதிர்வை ஏற்படுத்துகின்றன. தமிழர் வாழ்க்கையில் ஆண்-பெண் உறவு இன்று எப்படி மாறிக் கொண்டிருக்கிறது என்று சுட்டிக்காட்டுவது இந்நாவலின் தனித்
வா. மு. கோமு ஈரோடு மாவட்டம் வாய்ப்பாடியைச் சேர்ந்த சிறுகதை, புதின எழுத்தாளர். கொங்கு மண்டல வட்டார வழக்கில் கிராமம் சார்ந்த பாலியல் கதைகளையும் எதார்த்த இலக்கியத்தையும் படைப்பவர். தமிழின் அனைத்து முன்னணி பத்திரிக்கைகளிலும் இலக்கிய பத்திரிக்கைகளிலும் இவரது கதைகள் வெளியாகியிருக்கின்றன. இவரது தவளைகள் குதிக்கும் வயிறு என்ற சிறுகதைத் தொகுப்பு 2008ம் ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விகடன் விருதை பெற்றது.