Vaasanthi (born as Pankajam on 26 July 1941) is an Indian journalist and writer.
She got her degree in English literature and history at Mysore University and a Master's degree at Oslo University in Norway. She served as the editor of India Today, Tamil edition for nine years. Many of her essays on art, culture, and politics have been seriously focused on the emergence of a number of articles and created debates.
Vaasanthi has written a number of lectures and reports on women's issues and she is also a political analyst. Penguin Books published a book in English (Cut-outs, Caste and Cines Stars) with their standings in the political history of Tamil Nadu during the time she worked as the editor of India Today.
She also wrote the biography of J. Jayalalithaa and M. Karunanidhi. She has written around 40 novels and six short story collections.
பெண்ணின் மனம் ஓர் ஆழ்கடல். அக்கடலின் பரிமாணத்தைக் கரையில் நின்றபடிக் கால் நனைப்பவர்களால் கணித்துவிட இயலாது. குறிப்பாக, தன் சொந்தக்காலில் நின்று வாழ்க்கையில் வென்று காட்ட வேண்டும் எனும் இலட்சியப்பிடிப்புள்ள பெண் எனில், அவளது சிந்தனை, பேச்சு, செயல் ஆகியவற்றின் ஆழத்தைச் சாமானியர்களால் அளவிட்டு அறிந்து கொள்ள முடியாது.
காலப் போக்கில் எண்ணங்கள் மாறலாம்.ஆனால் அடிப்படையான குணம் மாறாது. நம் எண்ணங்களை உருவாக்குவது நமது அடிப்படை குணமே என்ற உயரிய கருத்தினை , இரு பெண்களின் எண்ணங்களை கொண்டு அவர்களது ஒவ்வொரு சிந்தனையையும், செயல்களையும், முரண்பாடுகளையும் மனோதத்துவக் கண்ணோட்டத்தில் அணுகி, அவற்றின் மொத்தப் பரிமாணத்தையும் சுவைகுன்றாமல் கூறியிருக்கிறார், வாஸந்தி.
சுருதி நாதம்: எதையும் பெரிய இழப்பாக எடுத்துக் கொள்ளாமல்,யாரையும் தவறாக நினைக்காமல்,வாழ்வு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒரு நியதிகுட்பட்டது,அதை கோணலாகாமல் பார்த்துக் கொள்ளவே இந்த அறிவு இருக்கிறது என்ற மனப்பக்குவம் கைவர பெறவேண்டும்,என்று தனக்குள்ளேயே தன்னை அலசி அலசி பக்குவப் படுத்திக் கொள்ளும் ராதா ஸ்ருதியுடன் சேர்ந்த நாதமாக மிளிர்கிறாள்.
ஒரு சின்ன ரோஜா செடிக்கு தேவையான கவனிப்பு தொடங்கி,விதம் விதமான மனித மனங்களில் செயல்பாடுகள், பிறக்கும்,வளரும் சூழ்நிலைகளுக்கு தக்கபடி குழந்தைகளின் குண இயல்புகள் அமைவது , கோபம்,வெட்டிப் பேச்சு போன்ற உணர்வுகளுக்கு அவரவரின் நியாயங்கள், நம்முடைய அகந்தையை விலக்கி வைத்து இறைவனிடம் முறையிட்டால் ஆன்ம பலம் அதிகரிக்கும்,என்று ஆன்மிகம் ,சமூகத்தின் மேல் ஏற்படும் சீற்றம் தான் தற்கொலைக்கான வித்து,என்று தற்கொலை வரை,அனைத்தும் உளவியல் காரணங்களின் அலசல் அற்புதம்.
சுருதி பேதங்கள் :
கணவனிடம் விவாகரத்து கோரி அது கிடைக்கும் வரை தைரியமாக இருந்த ஜெயா,விவாகரத்து கிடைத்தவுடன் பித்து பிடித்தவள் போலாகிறாள்,தன்னுடைய எதிர்மறை எண்ணங்களால். சமையல்கார மாமி வெகு சுவாரசியமான கதைப்படைப்பு. அற்புதமாய் கோலம் போட்டு,கச்சிதமாய் வேலைகள் செய்து,வக்கணையாக பேசும் மாமியின் உள்மன அலங்கோலம்,நிச்சயம் ஸ்ருதிபேதம் தான். ராதாவின் தந்தை ஒரு எழுத்தாளர். தன் மனதின் வக்கிரங்களை சிருங்கார ரசம் சொட்ட சொட்ட வெளிப் படுத்தும் இவர், கணவனை இழந்த மகளுக்கு உணர்வென்பதே இருக்க கூடாது என்றென்னும் கபட வேடதாரி. பேதத்தின் பெரிய பேதம்.
பெண்கள் அனைவருக்குள்ளும் ராதா மற்றும் ஜெயா போன்று இரு உள்ளங்கள் உள்ளன. அவற்றில் ராதாவை தேர்தெடுத்தால் வாழ்க்கை என்னும் சுருதியின் நாதத்தோடு லயிக்கலாம். ஜெயாவை தேர்தெடுத்தால் பேதமே மிஞ்சும். நாம் எதை தேர்ந்தெடுக்கிறோமோ அதற்கான பலன் கிட்டும்.
ஒரு உளவியல் மாணவியாக , நான் இதை கதை என்று சொல்வதை விட , விதம் விதமான மனநிலைகளின் உளவியல் ரீதியான அலசல் என்றே கூற வியம்புகிறேன். பெண்கள் அனைவரும் தவறாது வாசியுங்கள்.