Jump to ratings and reviews
Rate this book

Abitha

Rate this book
புது இடத்தைக் காணும் வியப்பைக் காட்டிலும் பழைய இடம், பழகின இடம் திரும்பும் உள்ளக் கிளர்ச்சி தாங்க முடியவில்லை. தேங்கிவிட்ட நினைவுகள் கொந்தளிப்பு கண்டு உணர்ச்சிகள் ஒருங்கே அழுத்தும் நிலை முற்றிலும் இன்பம் என்று சொல்வத்ற்கில்லை. திரும்பியே வந்திருக்க வேண்டாமோ? என்று கூட சித்தம் சலிக்கிறது. ஆயினும் ஒரு எண்ணம். ஒரே எண்ணம் – நீர்த்துப் போன சாம்பலுள் இத்தனை நாள் புதைந்து ஒளிந்திருந்தது ஒரு பொறி, நினைவின் காற்றுவாக்கில் பற்றீக் கொண்டு மறதியின் சருகுகளை எரித்து ஜ்வாலஒயாக்கி என்னைத் தன்முன் உந்தித் தள்ளிச் செல்கிறது. நானும் பற்றி எரிகிறேன். ஒன்று கண்டேன். எதுவுமே மறப்பதற்கில்லை. எல்லாமே ஒளிமறைவில் பாயச் சமயம் பார்த்திருப்பவையே.

- நாவலிலிருந்து...

104 pages, Paperback

First published September 1, 1970

53 people are currently reading
475 people want to read

About the author

La Sa Ramamrutham

37 books64 followers
Lalgudi Saptarishi Ramamrutham was a veteran Tamil novelist, having authored 300 short stories, 6 novels and 10 collections of essays.

Born in 1916, he was a native of Lalgudi and one of the writers of the Manikodi era. He started writing when he was 20 originally in English and then changed over to Tamil. He worked in Punjab National Bank for 30 years and settled down in Chennai after his retirement.
La.Sa.Ra. worked for three years as a typist in Vauhini Pictures, which then produced a series of landmark Telugu films like "Vande Mataram", "Sumangali", and "Devata". It was then K. Ramnoth, another South Indian movie director, told La.Sa.Ra. not to waste his gift indicating that his hoping for a career in films would not be salutary. He ultimately became a banker but he continued with his writing.

He won the Sahitya Akademi Award in 1989 for Chintha nathi, a collection of autobiographical essays.

Source: http://en.wikipedia.org/wiki/La_Sa_Ra

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
96 (29%)
4 stars
132 (40%)
3 stars
76 (23%)
2 stars
12 (3%)
1 star
14 (4%)
Displaying 1 - 30 of 51 reviews
Profile Image for Satheeshwaran.
73 reviews222 followers
December 7, 2020
இப்பதிவில் லா.ச.ராமாமிர்தம் அவர்களின் Classic நாவலான 'அபிதா' பற்றியும், நான் அபிதாவை வாசிக்கத் தூண்டுதலாக இருந்த அவரின் இன்னொரு புத்தகமான 'சௌந்தர்ய' பற்றியும்.

நாம் விரும்பும் ஒரு நபரை எவ்வளவு தூரம் நம்மால் கொண்டாடித் தீர்த்திடமுடியும்? கொண்டாடித்தான் தீர்த்துவிடமுடியுமா என்ன?

அப்படியான ஒரு கொண்டாட்டம் (a celebration), ஒரு tribute தான் அபிதா.

மேலும் நாவல் பற்றி: https://youtu.be/OhoguAaNeXo

#booktagforum
Profile Image for Dinesh.
128 reviews9 followers
August 20, 2021
என்ன ஒரு மொழி நடை - வர்ணனை! மூன்று அல்லது நான்கு முறை படித்தால் மட்டுமே லா.ச.ரா.வின் எழுத்து ஜாலம் கொஞ்சமேனும் புரியும்.
Profile Image for Unmaththan உன்மத்தன்.
Author 3 books18 followers
January 29, 2022
வாங்கி நெடுநாள் ஆனது, படித்தபாடில்லை. முதல் இரண்டு பக்கங்களை தாண்டவே சிரமமாக இருந்தது. இந்த வாரம் வாசித்தே ஆக வேண்டுமென்ற அசரீரி ஆட்டிப்படைக்க, வேறுவழியின்றி சிரமங்களினூடே வாசிக்க ஆரம்பித்தேன். அதீத சுவை கொண்ட கொய்யாக்காயை மாங்காயை கடிக்க, பல்லின் இடுக்கில் கசிந்து நா மேல் நகர்ந்து குடலூர் போகும் துளிச்சாறின் அற்புதம், இந்த புத்தகத்தை வாசிக்கையிலும் நிகழத்தொடங்கியது; ஒவ்வொரு சொல்லிலும். ஒவ்வொரு வரியிலும் வாக்கியத்திலும் மதுரம்.


முதல் மூன்று அத்தியாயம் மென் காற்று வீச, சாரல் தான்; நான்காம் அத்தியாயம் தொட்டு அடித்து பெய்ததெல்லாம் உன்மத்தத்தின் பெருமழை. பாசித் தரையில் கால் வைக்க வழுக்குமே, அப்படி இக்கதையின் வரிக்கு வரிக்கு வீழ்ந்து, புத்தகம் முடித்த கடைசியில் தான் பார்க்கிறேன், மனசெல்லாம் அத்தனை சிராய்ப்புகள். இப்படி நான் புத்தகம் முழுக்க அடி(க்கடி)க்கோட்டிருக்க, தனியாய் எதுவொன்றை எடுத்து உதாரணம் காட்ட முடியும். ‘எல்லாம் தெரிஞ்ச வரைக்கும்’…‘எல்லாம் துணிஞ்ச வரைக்கும்’...‘எல்லாம் முடிஞ்ச வரைக்கும்’; எவ்வளவு எளிதில் வாழ்வின் சாரம் லா.ச.ரா-விற்கு சொல்ல வருகிறது.


பெரும்பாலும் இதை வாசித்தவர்கள் ப்ரியத்தை கொண்டாடும் கதை என்கிறார்கள். எனக்கு Raskolnikov [Crime and Punishment] ஞாபகம் தான் வந்தது. இருவர் மீதும் இறங்கி இம்சித்தது ஒரே சமாச்சாரம் தான்; குற்றவுணர்ச்சி. லா.ச.ராவின் வார்த்தைகளே சாட்சி: ‘வாழ்க்கையின் ஏடுகளைத் திருப்பிப் புரட்டுகையில் அத்தனையும் எப்படியோ குற்றப்பத்திரிக்கையாகவே படிக்கின்றன’


சகுந்தலை! அபிதா! தரிசினி!



பி.கு: இரவின் துணையில் வாசித்தல் உன்மத்தம் அடைய ஏதுவாக இருக்கும்.
251 reviews38 followers
August 4, 2024
புத்தகம் : அபிதா
எழுத்தாளர் : லா. ச. ராமாமிருதம்
பதிப்பகம் : அன்னம்
பக்கங்கள் : 112
நூலங்காடி: ஈரோடு புத்தகத் திருவிழா 2022
விலை : 67


🔆 அம்பி வீட்டை விட்டு ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்தான். அவனுடைய நடத்தையை கண்டு மகிழ்ந்த அந்த முதலாளி தனது மகள் சாவித்திரியை திருமணம் செய்து வைத்தார். தன் சொத்துக்களையும் அம்பியின் பெயரில் எழுதி வைத்தார். அம்பிக்கும் சாவித்ரிக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான்.

🔆 இதற்கிடையில் அம்பி மற்றும் சாவித்திரி, அம்பியின் பிறந்த ஊரான கரடி மலைக்கு சென்றனர். அம்பியின் மாமா வீட்டில் இவர்களை வரவேற்று உபசரித்தாலும், அம்பி தேடியது சக்கு(சகுந்தலா ) அவள் வீட்டிற்கு சென்ற போது தான், சக்கு உயிர் இழந்ததும், அவளுக்கு அபிதா என்ற ஒரு மகள் இருப்பதும், சக்குவின் அப்பா மறுமணம் செய்து கொண்டதும் அம்பி தெரிந்து கொண்டான்.

🔆 அந்த சித்திக்கு ஒரு தம்பி, அவன் அபிதாவை பார்ப்பதற்கு அந்த வீட்டிற்கு வருவதுமாக இருக்கிறான்.

🔆 இதுவரையிலும் சரி. சக்குவின் மகள் அவள் சாயலைக் கொண்டுள்ளார் என்பதற்காகவே அவள் மகள் மீது காதல் வருவதை, எந்தவொரு கவித்துவமான வார்த்தைகளால் கூறினாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பக்கம் பக்கமாக வர்ணனை செய்தாலும் என்னால் அதை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

🔆 லா. ச. ரா அவர்களின் எழுத்துகளில் இதை ஏன் முதலாவதாக வாசித்தேன் என்று இருக்கிறது.


புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம்,
புத்தகங்களால் இணைவோம் ,
பல வேடிக்கை மனிதரைப் போலே ,
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி

சுபஸ்ரீனீ முத்துப்பாண்டி
வாசிப்பை நேசிப்போம்
Profile Image for Krishna.
60 reviews8 followers
July 7, 2016
அபிதா!! இந்நாவலை படிக்கும் ஒவ்வொரு கணமும் ஒருவித பரவசத்தினோடேயே படித்து முடித்தேன். அதற்கு காரணம் கதை நகர்த்தப்பட்ட பாங்கும் உபயோகிக்கப்பட்ட மொழியும் அது கவர்ந்த விதமும் தான். அபிதாவில் என் முதல் வாசிப்பிலேயே என்னைக் கவர்ந்த சில வரிகள் இங்கே. இந்த வரிகள் சில சமயங்களில் உவமையாகவும் சில சமயங்களில் சொற்விளையாட்டாகவும் பயன்படுத்தப்பட்டு நாவலின் ருசியை பன்மடங்காக்குகின்றன.

“எந்த இருட்டினின்று இந்தப் பிறவியுள் வழி தப்பி மிதந்து வந்து விட்ட உயிர்க்கீறல்? “

“இனி உன்னைக் கவனிப்பதன்றி எனக்கு வேறு ஜோலியில்லை. நீ காத்த மலையாகிவிட்டாய். உன்னைக் கவனிக்கக் கவனிக்க உன் செயல்,அசைவுகளின் நுணுக்கம் ஒவ்வொன்றும் நீ அபிதாவோ சக்குவோ, நீயெனும் கவிதையின் தனித்தனி அங்கமாய், ஒவ்வொரு தனிமையும் அதனதன் முழுமை பெற்று, அதன் இரக்கமற்ற கொக்கி என்மேல் விழுந்து கவ்வி, கழுவில் நான் நெளிகிறேன். தரிசனத்தின் பயங்கரம் இதுதான். தரிசனத்திற்கு இரக்கமில்லை. எந்த தரிசனமும் அஞ்சத் தக்கதே. என்னை எனக்கில்லாமல் எல்லாம் தனக்காக்கிக் கொண்டு விட்ட தரிசனி.”

“நினைத்ததை நினைந்ததும் தொண்டை உலர்ந்தது என்று உணர்ந்ததும் தொண்டை உலர்ந்தது”

“மூச்சை மூச்சென்று உணர்ந்து மூச்சை மூச்சாக ஒரு கணம் சிந்தித்தாலே மூச்சு திணறுகிறது.”
Profile Image for Praveen (பிரவீண்) KR.
228 reviews33 followers
February 12, 2024
Blog link: https://kalaikoodam.blogspot.com/2020...

அபிதா!! சென்ற வருடம் எனக்கு அதிகமான பரிந்துரைகள் வந்த ஒரு புத்தகம். லா.ச.ரா. என்ற எழுத்தாளரை அறிமுகம் இல்லாத நான்; அந்தப் புத்தகத்தை புறக்கணித்து வந்தேன். இந்த வருடம் இதன் மின்வடிவம் அகப்பட அபிதாவை வாசிக்க நேர்ந்தேன்.

கதாநாயகனின் பார்வையில் நகர்கின்றது இந்த கதை. ஏதோ காரணத்திற்க்காக ஊரை விட்டு ஓடி வர நேர்ந்த கதாநாயகன் ஒரு செல்வந்தனிடம் வேலைக்கு சேர, நாளைடைவில் அவரது மகளான சாவித்ரியை மணக்கிறார். அவர் காலத்தின் பிறகு சொத்துக்களை பார்த்துக்கொள்கிறார். இருந்தும் மனதில் அமைதி இல்லை. நாளடைவில் அவர் மனைவியோடு சொந்த ஊரான கரடிமலைக்கு திரும்புகிறார். அவருடன் நம்மளையும் அந்த இடத்துக்கு கூட்டி செல்கிறார். தான் காதலித்த பெண்ணை தேடி செல்கிறவர் அங்கு அதே வடிவில் இருக்கும் அவளின் மகளான அபிதாவை பார்க்க நேர்கிறார். அவருடைய கடந்த காலத்தின் சில ஏடுகள் மற்றும் நிகழ்கால எண்ணங்களோடு நாமும் இணைத்து பிரயாணம் செய்வது தான் இந்த அபிதா.

லா.ச.ரா. வின் முழு பெயர் லா.ச.ராமாமிருதம். 'சிந்தா நதி ' என்ற படைப்புக்கு சாகித்ய அகாதமி விருது பெற்ற இவரின் படைப்புகளில் எனது முதல் வாசிப்பு இந்த அபிதா. இப்புத்தகம் வாசிக்கையில் நம்மை ஈர்க்கும் முதல் விஷயம் தமிழ். தமிழ் என்ற அழகிய மொழியை மேலும் அழகுபடுத்தியிருக்கிறார் இப்புத்தகத்தின் வழியாக. அதிலும் இந்த புதினம் முழுதும் ஏராளமான உவமைகளை அள்ளி தெளித்திருக்கிறார். அத்தனையும் முத்துக்கள். அபிதா என்ற இந்த சாகரத்தில் முக்குளித்து நாம் இந்த முத்துக்களை நிறைய கண்டெடுக்கலாம். அதன் அழகை மனம் நிறைய ரசிக்கலாம். ஒரு சில பாத்திரங்களே கதை முழுதும் வந்து போகின்றன - கதாநாயகன், சாவித்ரி, சகுந்தலை மற்றும் அபிதா. அபிதா மற்றும் சாவித்ரியின் கதாபாத்திரங்கள் என்னை நன்கு கவர்ந்தது. கதை Non-linear ஆக நகர்கின்றது. அவர் வாழ்ந்த காலகட்டத்தில் இப்படி ஒரு விதத்தில் கதை நகர்த்தியிருப்பது ஒரு நல்ல முயற்சி என்றே கூறலாம். ஆனால் எனக்கு இக்கதையை ரசிக்க இது ஒரு தடையாக தோன்றியது. இது அவரின் படைப்புகளில் எனது முதல் வாசிப்பு என்பதால்தான் என்று நினைக்கிறேன்! முதல் வாசிப்பு கொஞ்சம் கடினமாகவே பட்டது. திடீர் என்று அவர் நினைவலைகள் அங்கிங்கு அலைபாய கதையின் ஓட்டத்தில் எனக்கு சில குழப்பங்கள் வந்தது. ஆனால் முதலில் நான் சொன்னது போல் மொழியை அவர் கையாண்டிருக்கும் விதம் அற்புதம். தனது அம்மாவை பற்றி கதாநாயகன் நினைவு கூறும் இடம், சாவித்ரியுடன் முதலில் ஏற்படும் சம்பாஷணங்கள், மற்றும் கரடிமலைக்கு திரும்ப வந்த பிறகு அவர் மனதில் ஓடும் நினைவலைகள் ஸ்வாரஸ்யத்தை அளித்தது. அதற்க்கு முக்கிய காரணம் அவர் லா.ச.ரா எழுதிய விதம். நாயகனின் மனதில் எழும் சிந்தனைகள், கேள்விகள், மனதிற்குள் எழும் குழப்பங்கள் இதெல்லாம் காரணம் நிறைய இடங்களில் இதனை காதுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க நேர்ந்தேன். 100 - 120 பக்கங்களே இருக்கும் இப்புத்தகம் என்றாலும் பல வரிகளை மீண்டும் மீண்டும் வசித்து ரசித்தேன். தமிழ் மீதும் எழுத்தாளர் மீதும் எனது மரியாதை கூடியது.

தமிழ் என்பது உலகிலேயே மிகவும் தொன்மையான மொழிகளில் ஒன்று. இது மாதிரியான படைப்புகள் இருக்கும் வரை இனியும் பல நூறு ஆண்டுகள் இந்த மொழி இருக்கத்தான் போகிறது. தமிழ் மொழியை நேசிக்கும் யாவரும் வாசிக்க வேண்டிய ஒரு புத்தகம் இந்த அபிதா.
Profile Image for Karthick Subramanian.
17 reviews21 followers
February 5, 2013
மிகச்சாதரனமான கதையை தன் மொழி அழுமையால் ஒரு மிகு இலக்கிய படைப்பாக தந்திருக்கிறார் "ல.ச.ரா". உள்ளுணர்வுகளை இதனை லயமாக வேறெங்கும் காணாத / படித்திராத / கேட்டிராத வகையில் நாவலாக்கம் செய்திருக்கிறார். அவர் மனதிற்கும் இயல்பிற்கும் நடக்கும் நிதர்சனமான போராட்டத்தை அத்தனை லாவகமாக வடிவமைத்திருக்கிறார் .
Profile Image for Sundararajan Subramaniam.
1 review1 follower
July 26, 2016
It took more than 60 years for me to get the maturity to read, understand and to appreciate the book Abitha by La Sa Ra.

It can not be expressed in simple words . It is a rare combination of differently connected and unconnected feelings which can be understood by a heart and heart only.

The book is an unique art - a combination of - a masterpiece , a thought , a flow of feelings, an ecstasy, a pleasure, a pressure , a reverberation, a love, an infatuation, a coincidence, a contradiction an experience and a penance .

It cannot be explained; It has to be perceived.

Profile Image for Ananthaprakash.
83 reviews2 followers
August 10, 2024
அபிதா - லா. ச. ராமாமிர்தம் 

"அவள் நடக்கையில் ஜலம் தெளித்த இடம் பூமிக்குக் குளிர்ச்சி. ஆனால் அவள் நடை என் நெஞ்சுக்குத் தீ."

அப்படி தீயாய் பற்றி எரிகிற ஆத்மார்த்தமான காதலின், தன் மனதுக்கு விருப்பமான ஒருவரைப் பூஜிக்க, துதிபாட நினைக்கிற பரவசத்தின், குற்ற உணர்ச்சியின், அலைவுறும் மனதின், ஆழ்மன சலனங்களின் தொகுப்பு தான் அபிதா.

ஒரு சில நாவல்கள் தான் அதோட கதைக்கரு, அதன் ஊட பேசுகிற கற்பிதங்கள், கடத்துற உணர்வுகள் என்றளவில் மட்டுமே முற்றுப் பெறாமல் அதை எல்லாத்தையும் தாண்டி, படிச்சு முடிச்சதும் அது நமக்குள்ள நிகழ்த்திப் பார்க்கிற விசாரணையாகவும், நம்மைத் துளைத்து எடுக்கிற கேள்வியாகவும் அதன் வழி ஏதோ ஒன்றைக் கண்டடைகிற திறப்பாகவும் தொடர்ந்திட்டே இருக்கும், அப்படியான ஒரு நாவல் தான் அபிதா.

படிச்சு முடிச்சதும், இப்படியான நாவல்களின் நோக்கம் தான் என்ன,  இப்படியான நாவல்களை எப்படித்தான் அணுகுவது, இப்படியான நாவல்களில் மீறல்களைச் செய்கிற மனிதர்களையோ அவர்களின் மனங்களையோ படிச்சதும் என்னை அறியாமலே உள்ளுக்குள்ள சுறுக்குனு ஒரு உணர்வு ஏற்படுதே அது தான் என்ன, உண்மையில் அது இப்படியான மீறல்களுக்கு எதிரான என்னுடைய எதிர் மனநிலை மட்டும் தானா இல்லை அதன் வழியா நான் அப்படியானவன் இல்லை என்கிற அறிவிப்பை எப்படியாவது அழுத்தமா வச்சுரணும்னு நினைக்கிற, என்னையும் மீறிய என்னுடைய தன்முனைப்பா.

நானும் என் வாழ்வில் ஏதோ ஒரு தருணத்தில் இது மாதிரியான சலனங்களையும், சபலங்களையும் கடந்து தானே வந்து இருப்பேன், அதை எல்லாம் கடந்து வர என்னைச் சுற்றிய மனிதர்களும், காலமும், நான் நுகர்ந்த கலைகளும் எனக்கு கொடுத்த வாய்ப்பை, நான் இப்படியான மீறல்களைச் செய்ய நினைக்கிற கதாபாத்திரங்களுக்கும் கொடுக்க தயாராக இருக்கிறேனா, இல்லை அப்படியான வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி அதன் பிறகு எனக்கு நானே உருவாக்கிக் கொண்ட எல்லைகளின், மதிப்பீடுகளின் வழியாகவே இது மாதிரியான படைப்புகளையும் அணுகிப் பார்க்கிறேனா, அப்படி அணுகிப் பார்ப்பது சரியான அணுகுமுறையா அப்படின்னு அபிதா எனக்குள் நிகழ்த்தி விட்டுப் போன விசாரணைகளும், கேள்விகளும் ஏராளம்.

என்னைப் பொறுத்தமட்டில் மனிதர்கள் மனதால் குற்றமற்றவர்கள் என்பதெல்லாம் வெறும் வெற்று வாதம் தான்.  ஒவ்வொரு நாளும் மனித மனம் தனக்குள் நிகழ்த்திப் பார்க்கிற குற்றங்களும், வஞ்சங்களும், குரோதங்களும், துரோகங்களும், பழிவாங்கத் துடிக்கிற எண்ணங்களும், சபலங்களும், இச்சைகளும் ஏராளம். இப்படியாக மனம் நிகழ்த்திப் பார்க்கிற எல்லா சலனங்களையும் அறிவின் துணை கொண்டு அதன் மூலம் ஒரு வடிகட்டுதலை நிகழ்த்தியப் பிறகு நாம் பேசுவது தான் தூய்மை வாதமும், நாமெல்லாம் அப்பழுக்கற்றத் தூயப் பிம்பங்களாய் இங்கு நடமாடித் திரிவதும். சரியான வாய்ப்பும் தக்க சமயமும் கிடைத்தால் அதை எல்லாம் நிஜத்தில் நிகழ்த்திப் பார்க்கத் துணிகிற மனிதர்கள் தான் நாம் எல்லாம்.

அப்படியான அறிவின் வடிகட்டுதல் ஏதும் நிகழாத, தனக்கென எந்த  எல்லைகளையும் வகுக்காத, வகுத்துக் கொள்ள முடியாத மனதிற்கு ஒரு குரலைக் கொடுத்து அதன் எண்ண ஓட்டங்கள் அத்தனையும் எழுத்தாக்கிப் பார்த்தால் என்னவாக இருக்கும்? அப்படி ஒரு மனித மனதிற்கும், அறிவிற்கும் இடையில் நிகழ்கிற ஊடலும், சமயத்தில் நடக்கிற போரும், அலைவுறும் மனதின் அதன் ஊசலாட்டத்தின் அப்பட்டமான குரலும்  தான் அபிதா.

வாழ்வின் இறுதியில், விரக்தியில் தன் மனைவி சாவித்திரியுடன், சிறுவய��ில் தான் வாழ்ந்த கரடிமலைக்கு தன்னுடைய முதல் காதலின் நினைவுகளோடு வருகிறான் அம்பி. அங்கு தன்னுடைய முன்னாள் காதலி சக்குவைத் தேடி வந்த அம்பிக்கு அவள்  இறந்துவிட்ட செய்தியும், அந்த செய்தி கிடைத்த அதே சமயத்தில் சக்குவே வடிவாய் நிற்கிற அவள் மகள் அபிதாவையும் பார்க்கிறான். தான் பார்ப்பது உண்மையா அல்லது கனவா என அலைவுறும் அம்பியின் மனது குற்றவுணர்ச்சியின், ஏக்கத்தின் மிகுதியால் சக்கு தான், மீண்டும் அபிதாவாய் தனக்குத் தரிசனம் கொடுக்கிறாள் என அபிதாவின் மேல் காதல் கொள்கிறான். கடைசியில் என்ன தான் ஆனது?

எங்கோ எப்போதோ தொலை���்து விட்ட ஒன்றை மீண்டும் காலம் அதே உருவில், வடிவில் நிறுத்தி நிகழ்த்திப் பார்க்கும் விளையாட்டுக்குப் பலியாகிப் போகும் மனமும், அதன் விளைவாய் உள்ளே பற்றி எரியும் அணையாத நெருப்பின் தகிப்பும் தான் அபிதா.

வெறுப்பும், கசப்பும், விரக்தியுமாய்  ஒரு வாழ்வும், சக்குவின் இறப்பிற்கு நான் தான் காரணம் என்கிற குற்ற உணர்ச்சியும், சக்குவின் மறு உருவாய் வந்து தன்னை கடந்த கால நினைவுக்குள் தள்ளி விட்டு இம்சிக்கும் அபிதாவும், சக்குவின் மீதான ஆத்மார்த்தமான காதலின் வெளிப்பாடும், தானே சக்குவாகவும், அம்பியாகவும் பேசி அசை போடும் தருணமும், தன் மனைவி சாவித்திரிக்குத் தான் செய்வது எல்லாம் தெரிந்தும் பேசாமல் இருக்கிறாள் என்கிற கொந்தளிப்பும் - இப்படி எல்லாமுமாய் சேர்ந்து பகடை ஆடிப் பார்க்கிறது அம்பியின் மனம். அம்பி கரடி மலையை விட்டு சாவித்திரியுடன் வாழ்ந்த வாழ்வு வரமா? இல்லை மீண்டும் வந்ததும், அபிதாவைக் கண்டதும் சாபமா? இல்லை இரண்டிலுமே எஞ்சி இருப்பது என்னமோ வெறும் வாழ்வின் மீதான குற்றப்பத்திரிக்கை தானா?

அபிதா, சகுந்தலை இருவரும் வேறு என்கிற பகுப்பு அறிவிற்கு எட்டினாலும், கதை முழுக்க சக்குவை (அபிதாவை) பற்றி எரிகிற அம்பியின் மனவெழுச்சியில் வாசிக்கும் போது - வயதின் எல்லைகளையெல்லாம் கடந்து சக்குவை சிறுவயதில் விட்டுவிட்டுப் போன அம்பியின் மனதில் இருக்கிற தவிப்பையும், அதில் இன்னமும் வற்றாமல் உயிர் கொண்டிருக்கும் காதலையும் எனக்குள்ளும் கடத்தி விட்டு வேடிக்கைப் பார்ப்பது தான் லா.ச.ராவின் மொழியாளுமை போலும்.

அத்தனை மீறல்களையும் நிகழ்த்திப் பார்க்கிற அபிதா, அப்படி எல்லா  எல்லைகளையும் கடந்துருச்சா  அப்படின்னு பார்த்தா அது தான் இல்லை. அபிதா தனக்காக வகுத்து கிட்ட எல்லைகளையும் ஒரு போதும் கடக்கவே இல்லை - உடல் சார்ந்த எல்லைகளை.

அபிதா ஒரு போதும் தன்னால் தொட்டு ஸ்பரிசிக்கக் கூடிய இல்ல கைகளில் அள்ளி கொண்டாடக் கூடிய தன்னோடு சக்கு இல்ல என்பதும் தன்னால் கண்கண்ட தூரத்தில் மட்டுமே நின்று பூஜிக்கிற, ஆராதிக்கிற, வணங்கித் தொழுது நிற்கிற - அவளின் இருப்பை, நினைவுகளைத் தீயாய் பற்ற வைத்து அம்பியின் ஆழ்மனதில் எரிக்கிற சக்குவின் பிம்பம் மட்டும் தான் அபிதா அப்படின்னு தனக்காக வகுத்துக்கிட்ட எல்லையையும் எங்கேயுமே தாண்டல லா.ச.ரா.

சமயத்தில் அபிதாவும், கரடிமலை உச்சியில் வீற்றிருக்கும் திருவேல நாதரும் வேறல்ல ஒன்று தானோ என்றும் கூட தோன்றுகிறது. ஒரு போதும் அவ்வளவு எளிதாகத் தொட்டு ஸ்பரிசிக்க முடியாத, ஆனாலும் எப்படியாவது தன்னுடைய ஆராதனையாலும், தொழுகையாலும் எட்டிவிட நினைக்கிற ஒன்று தானோ அபிதா.

அம்பியும், அபிதாவும் இருக்கும் வரை சக்குவும் எரிந்து கொண்டும் தான் இருப்பாள், அம்பியின் தொடுகையில் இல்ல அவனின் தொழுகையில், பரிசுத்தமான நினைவுகளில், ஆத்மார்த்தமான அன்பினில் - அதன் பொருட்டு தானோ, என் மனம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாத அந்த முடிவோ என்று கூட தோன்றுகிறது.

லா. ச. ராவின் மொழியில் இசையும், கவித்துவமும் இருக்கிறது எனப் பலர் சொல்லிக் கேட்டதுண்டு, அந்த இசையில் லயித்த முழுமையும், அந்த கவித்துவ பிரவாகத்தில் திளைத்த இன்பத்தையும் கொடுத்த ஒரு அற்புதமான படைப்பு அபிதா.
Profile Image for Bharathwaj.
15 reviews8 followers
May 2, 2021
லா.ச.ரா அவர்களின் சௌந்தர்ய புத்தகத்தை நான் சமீபத்தில் படித்திருந்தேன். அந்த புத்தகம் ‘அபிதா’ நாவலின் ஒரு தொடர்ச்சி என அறிந்து இந்த நாவலையும் படித்து முடித்தேன். ‘அபிதா’, பெரும்பாலும் அக விவரணைகள் மட்டுமே கொண்ட சிறு நாவல். ‘Claustrophobia’ வரவைக்கக் கூடிய எழுத்து.
கதைசொல்லி உணரும், மூச்சடைக்க வைக்க கூடிய, மனதை நெருக்கும் காதலை நமக்கு கடத்தும் அற்புத நடை கொண்டுள்ளது. மேலும் புறக்காட்சிகள் அனைத்தும் கதைசொல்லியின் அக உணர்ச்சியின் வெளிப்பாடாக தோன்றுகிறது. நாவலின் கதை மிகவும் பழைய, பழக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும், மொழியின் உத்தி இதனை மிகவும் அழகானதாக மாற்றுகிறது. லா.ச.ராவின் மனம் விரும்பியபடி செல்கின்ற மொழி, ஒரு கனவு நிலையினை உருவாக்குகிறது. கதைசொல்லியின் ஏக்கம், தாபம், காதல், சுய இரக்கம் ஆகிய அத்தனையும் வெளிப்படும் கனவு வெளியைப் படைத்ததே இந்த நாவல் எனக்கு மிகவும் பிடிக்கக் காரணம். இந்த மொழி அனுபவத்திற்காகவே கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.
18 reviews
March 10, 2022
லா.ச.ரா - இவரை அறிந்துக் கொண்ட பேருவகை, இவரின் இந்த படைப்பின் முதல் பக்க முடிவிலேயே பிரவாகமெடுத்த உணர்வை என்னால் இப்போதும் நினைவுகொணர முடிகிறது.
இவரின் கற்பனை வளமும், சொல் வளமும் எழுத்துக்களினூடே சொரிந்து வழிவதை நம்மால் உணரமுடியும். உதாரணமாக இந்த புத்தகத்தின் பாதி பக்கங்களை கூறமுடியும். எனினும் எனக்கு பிடித்த பத்திகளை கீழே மேற்கோள்களிட்டுள்ளேன்.

கதையின் கரு என்னவோ இப்போது எனக்கு பழக்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில், இந்த புத்தகத்தை படிப்பதற்கு முன்னால், காலந்தாழ்த்தாமல், இக்கதை வெளிவந்த காலகட்டங்களில் இதனைப் படித்திருக்கக்கூடிய ஒருவர் படமெடுத்ததுதான் காரணம். அவர் படித்திருக்கலாம் என்ற அனுமானம்தான்.

இருப்பினும், கதையின் போக்கில் என் மனம் ஒப்பவில்லை. (ஆதலால்தான் 5க்கு 4 என்கிற நட்சத்திர தரம்) எண்ணங்களை வடித்த சில வரிகளில் எனக்கு தோன்றியதென்னவோ ஒரு மனித இதயத்தின் கருப்பு பகுதி. (சிலர் இதனை சாத்தான்/மிருக புத்தி என்று கூறக்கூடும், அப்படியென்றால் கடவுள் எது என்று வினா வளையும். அதைப்பற்றி எனக்கு தெரியாத காரணங்களினால் கருப்பு-வெள்ளை என்ற கணக்கில் நின்று கொள்கிறேன்.)அது சரி கருப்பும் வெள்ளையும் சேர்ந்துதானே வாழ்க்கையின் வண்ணங்கள் தோன்றுகின்றன. கருப்பு என்பதால் கெட்டது என்று சொல்லவரவில்லை. நல்லது கெட்டது எல்லாம் அவரவர் பார்வையை பொருத்தே. வேண்டுமானால் எண்ணும் சில எண்ணங்களை இந்த சமூக கட்டமைப்பினால் வெளியே சொல்லுவதற்கு தயங்கும் இதயத்தின் பக்கம் என்று வைத்து கொள்வோமே. அப்படி வைத்துக் கொள்ளும் பட்சத்தில், அட, எவ்வளவு தைரியமாய் அவர் இதயத்தின் கருப்பு பக்கத்தை காண்பித்திருக்கிறார். அந்த தைரியம் உனக்குண்டா என்ற கேள்வியை என்னுள் கேட்டால், இல்லையென்பதே பதில்.அதே சமயம் ஒரு வேளை இப்படி வித்தியாசமான கதை களம் இருந்தால்தான் வாசகர்களை சம்பாதிக்க முடியும் என்ற எண்ணமோ என்று எண்ணாமல்லில்லை. இது எனக்கு திரு.ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ வாசித்து முடித்ததும் தோன்றிய ஒன்றுதான்.(என்ன செய்வது? இம்மாதிரியான சந்தேகங்களை எழுப்பக்கூடிய, நாம் நல்லது என்று நினைத்து செய்தாலும், அதில் இவளுக்கு என்ன ஆதாயம் என்று உற்று நோக்கக் கூடிய ஒரு சமுதாய சூழலில் வாழ்க்கையின் பெரும்பகுதியை கழித்த அனுபவத்தினால் என்று கூட வைத்துக் கொள்ளலாம்).

ஆனால் என்னவோ அந்த கதைப் போக்கினை கடக்கையில், என் கண்முன் ராம் நிழலாடியதை பதிவிடமால் விடுவது தகாது.
யார் இந்த ராம் என்று ஒரு கோடிட்டாலும், கதையின் கோலம் விரிந்திடும். (இல்லாவிட்டாலும் பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளது).

கதை முழுதும் நான் ���சித்தது அவர் காட்சி வர்ணனைகளையும், கையாண்ட சொற்களையும்தான். இந்த நாவலில் அவர் குறிப்பிட்டுள்ள சொற்களை வைத்து ஒரு மாதத்திற்கு Tamil Wordle - இலக்கிய சொல்லாடல்களே நடத்தலாம்.

அவற்றுள் சில பின்வருமாறு:

அழல்
ஸ்புடம்
தபோக்னி
டங்காரம்
தொந்தம்
காயகல்பம்
குங்கிலியம்
ஸல்லா
தழைவு
தொள்

இவை அனைத்திற்கும் இங்கு பொருள் காண்க : https://dt.madurai.io/


பிடித்த பத்திகள்:

“நீர்த்துப் போன சாம்பலுள் இத்தனை நாள் புதைந்து ஒளிந்திருந்தது ஒரு பொறி, நினைவின் காற்றுவாக்கில் பற்றிக் கொண்டு மறதியின் சருகுகளை எரித்து ஜ்வாலையாக்கி என்னைத் தன்முன் உந்தித் தள்ளிச் செல்கிறது. நானும் பற்றி எரிகிறேன். ஒன்று கண்டேன். எதுவுமே மறப்பதற்கில்லை. எல்லாமே ஒளிமறைவில் பாயச் சமயம் பார்த்திருப்பவையே”.

“பழைய இடத்தில் வந்து புதிதாகப் பொருந்திக் கொண்டிருக்கிறேன்.”

“உண்மை, தெய்வம், விடுதலை என்கிற பெயரில் ஏதோ மாயா சத்யத்தைத் தேடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம்புவதும் வாழ்வதும் என்னவோ வாசனைகள், பிம்பங்கள், நினைவுகள், கனவுகள் எனும் சத்யமாயையில்தான்”.

“இவ்வளவு தூரம் வந்ததற்கு இங்கு குளித்துவிட்டுப் போகலாம். வீட்டுக்குப் போனால், அந்த வேலையும் நேரமும் மிச்சமாகும். நேரே இலையில் உட்கார்ந்து விடலாம். ஆனால் ஜலத்தின் அமைதியைக் கலைக்க மனம் வரவில்லை. காற்றில் அதன் விளிம்பில் அதிரும் லேசான விதிர்விதிர்ப்பு கூட ஏதோ தூக்கத்தில் மூச்சுப் போல்தான் தோன்றிற்று. கலைக்க மனமில்லை. தூங்குவதைத் தட்டியெழுப்பத் தைரியமில்லை, திரும்புகிறேன்”.

“சுயநலத்தைக் காட்டிலும் பெரிய உண்மை எது? எனக்குக் காட்டு, உயிர் உண்டான நாளிலிருந்து எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதில். சுயத்தைத் தாண்டி கேள்வியுமில்லை, பதிலுமில்லை, உண்மையுமில்லை. இதை நான் சொல்வதே ஒரு சமாதானம் தான்”.

“ஆண்டவன் எனும் அந்த ஆள்விழுங்கியைத் தான் கேட்கணும்”.

“அதோ தகரக் கொட்டகைகள் இரண்டு தெரிகின்றன. பிறவியின் பிரயாணம் முடியும் இடம் தகரக் கொட்டகைதான்”.

“கடைக்காரனாவது கொசிர் போடறான். கடவுள் எடைக்குமேல் இம்மி கூட மாட்டேன்கறான். தவிட்டையும் தங்கத் தராசில் தான் நிறுப்பேன்கறான். ஆனால் யோகமும் இப்போ தவிட்டுக்குத்தான் அடிக்கிறது”.

“இடுப்பில் குடத்திற்கு இடம், குடத்தின் செருக்கு. இடையில் குடம் இடுப்பின் செருக்கு”.



இதுவரை வாசித்த புத்தகங்களை மறுபடியும் வாசிக்க தோன்றியதில்லை. ஆனால் இந்நாவலை இன்னும் சில வருடங்களில் மறுபடியும் வாசிப்பேன் என்று நினைக்கிறேன். நான் தேடி செல்லும் எழுத்து முன்னோடிகளில், லா.ச.ரா சுலபமாய் முன்னிலையில் இருக்கிறார் என்றே தற்போது கூற விழைந்து விடைப்பெறுவது..

-ரம்யா மனோகரன்
Profile Image for Sangamithra.
58 reviews26 followers
April 19, 2022
லா.ச.ரா அவர்களின் வேறு புத்தகங்களைப் படிக்காமல் அபிதாவை ஏன் வாசித்தேன் என்ற உணர்வுதான் மேலோங்கி உள்ளது.
கதாநாயகன் அம்பி வயதான காலத்தில் மனைவியுடன் தன் சொந்த ஊருக்கு வருகிறான். தன் பழைய காதலி இறந்து போன விஷயம் தெரிய வருகிறது. காதலியைப் போலவே தோற்றம் உள்ள அவள் மகள் மீது காதல் கொள்கிறான். அம்பியின் மனநிலை என்ன என்று கூறிக்கொண்டே கதை நகரும்.
இதென்ன உலகத்தில் நடக்காத விஷயமா கதையில் இருக்கிறது என உங்களுக்குத் தோன்றலாம். அப்படி நடக்கும் விஷயங்களைத் தெரிந்துகொள்ள செய்தித்தாளே போதுமானதாக இருக்கும். கதை எதற்கு? அதுவும் கதையின் முக்கியமான கதாபாத்திரத்தை வைத்து இம்மாதிரி கதை சொல்லி செல்வது பொருத்தமற்றதாக உள்ளது.
ஒருவேளை சிலருக்கு இம்மாதிரியான உணர்வுகள்/எண்ணங்கள் இயற்கையாக தோன்றலாம். ஆனால் அம்மாதிரியான எண்ணங்களில் இருந்து ஒருவரை எப்படி மீட்டெடுப்பது என்று கதையை நகர்த்தாமல் போன போக்கில் கதையைச் சொன்னதில் எனக்கு உடன்பாடு இல்லை.
அபிதா என்று பெயரிட்டதற்கு காரணம் கூறியுள்ளார்.
அபித குசலாம்பாள் என்ற பெயரின் தமிழ் வடிவம் உண்ணா முலையாள்.
அபிதா = உண்ணா(ஸ்பரிசிக்க இயலாத) என்ற அர்த்தத்தைத் தானே தருவித்துக் கொண்டதாக கூறியுள்ளார்.
[Spoiler alert] இறுதியில் அபிதா விபத்தில் இறந்து போவாள். அதனை மையப்படுத்தி ஸ்பரிசிக்க இயலாத என்று பெயர் வைத்துள்ளாரா அல்லது இந்த மாதிரியான மோசமான எண்ணத்துடன் ஒரு ஆண் ஒரு இளம்பெண்ணை அணுகக்கூடாது என்ற அர்த்தத்தில் பெயர் வைத்துள்ளாரா என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது. நான் இரண்டாவது காரணத்தையே எடுத்துக் கொள்கிறேன். அது இப்புத்தகத்தை அதிகமாக வெறுக்காமல் சற்று குறைவாக வெறுப்பதற்கு உதவியாக இருக்கும்.
அபிதாவை வாசித்தவர்களில் பெரும்பாலானோர் லா.ச.ரா-வின் கவித்துவமான எழுத்து நடையை மட்டுமே கொண்டாடி புத்தகத்தின் மையக்கருத்தைப் பேச தவறி விட்டதில் எனக்கு சிறு வருத்தம். தங்கக் கிண்ணத்தில் அருந்துவதால் விஷம் என்றும் அமிர்தம் ஆகிவிடாது.
Profile Image for Sudharsan Haribaskar.
49 reviews38 followers
August 13, 2014
அபிதா...!! அந்த வர்ணனைகளுக்காகவே படிக்கலாம். ஆனா புதுசா படிக்குறவங்களுக்கு அத உள்வாங்கிக்குறது ரொம்ப சிரமம்.என்னவோ எனக்கு இது morally கரெக்டான்னு தெரியல.கொஞ்சம் நெருடலோட ஒரு மாதிரி படிச்சு முடிச்சாச்சு.
Profile Image for Vaideki Thayumanavan.
61 reviews
August 19, 2024
மனித உடலின் நரம்போட்டங்கள் எந்நேரமும் துடிப்புடன் இருக்கும் பிரமாண்டமான ஓர் அமைப்பு. அதே போல, சில நேரங்களில் அதை விட அதிகமான துடிப்போடும், சிக்கல்களுடன் இருக்கும் அமைப்பே மனிதனின் அடிமனதில் ஓயாமல் அலைமோதிக் கொண்டிருக்கும் எண்ணவோட்டங்கள். நம் அடிமனதில் தோன்றும் ஆதி எண்ணங்கள் யாவும் அழுக்கற்றதா என்று கூர்ந்து கவனித்தால் 'இல்லை' என்ற பதில் தான் சத்தியமாக இருக்கும். அவ்விதக் கலங்கலான எண்ணங்களை வடிகட்டி நல்ல எண்ணங்களை மிளிரச் செய்து அதனை நற்செயலாக மாற்றும் தருணங்களில் தான் சமூகத்தின் பார்வையில் மனிதர்கள் மகத்தானவர்களாகத் திகழ்கிறார்கள்.

பிறப்பு முதல் தொடரும் நிராகரிப்புகள், இழப்புகள், உண்மையான அன்பின் ஏக்கம், விரக்தி போன்ற உணர்வுகள் தொடர்ந்து ஒருவர் வாழ்க்கையில் நிலைத்திருக்கும்போது அவரின் இளமைக் காலத்தில் இழந்த ஒன்று மீண்டும் அதே வடிவில், ஆனால் அவர் உரிமை கொண்டாட முடியாத வகையில் அவரின் வயோதிகக் காலத்தில் காட்சி கொடுத்தால், அவரின் கலங்கலான மனவோட்டங்கள் திக்கற்று ஊற்றெடுத்துப் பொங்குவதைத் தடுப்பது அரிது. அதுவும் மனித இயல்பே.

அப்படிப்பட்ட வடிகட்டாத உணர்வுகளின் தொகுப்புதான் லா.ச.ராவின் 'அபிதா'. மனதிற்கு நெருக்கமான யாரிடமும் பகிர முடியாத அம்பி என்னும் கதாபாத்திரத்தின் உணர்வு போராட்டங்களை தன் சுவையான தமிழ்கொண்டு அடுக்கடுக்காக உரி���்து வாசகர்களிடம் படைத்திருக்கிறார் லா. ச. ராமாமிருதம்.

அம்பியின் இளமைக்கால முழுமை பெறாத காதல் சகுந்தலை(சக்கு). ஊரை விட்டு சக்குவை பிரிந்து ஓடிவந்த அம்பிக்கு நல்ல வேலையையும் அளித்து தன் பெண்ணான சாவித்திரியையும் மணமுடித்து வைக்கிறார் ஒருவர். மனதளவில் சாவித்திரியும் அம்பியும் எந்த இடத்திலும் இணைந்ததில்லை. மக்கட்பேறு இல்லாமல் வாழ்க்கையில் வெறுமையோடு இருக்கும் இந்த வயதான தம்பதிகள் ஒரு மாற்றத்திற்காக அம்பியின் சொந்த ஊரான கரடிமலைக்குச் செல்கிறார்கள். அங்கு சக்குவே வடிவாக இருக்கும் சகுவின் மகளான அபிதாவைக் காண்கிறார் அம்பி. அவளுடைய அசைவுகள் ஒவ்வொன்றையும் மனதளவில் ரசிக்கிறார்.

கரடிமலை வந்த சிறிது நேரத்தில் சக்குவும் இயற்கையாக இறக்கவில்லை என்பது அம்பிக்குத் தெரிய வருகிறது. தான்தான் சக்குவை பிரிவில் தவிக்கவிட்டுக் கொன்றுவிட்டோம் என்ற குற்றவுணர்வு ஒருபுறம் , சக்கு அபிதாவாக மறுபிறவி எடுத்து தனக்குத் தரிசனம் கொடுத்து வதைப்பதும், இந்த எண்ணங்களினால் தன் மனைவியான சாவித்திரிக்கு துரோகம் இழைக்கிறோமா என்ற இன்னொரு குற்றவுணர்வு மறுபுறமும் அம்பியின் மனதைப் பிறழ வைத்துக் கொண்டிருக்கும். இவ்வளவு பூகம்பங்களைத் தன் மனதிற்குள் வைத்துக்கொண்டு எல்லாரிடமும் இயல்பாகத்தான் பேசிக்கொண்டிருப்பார் அம்பி.

அம்பியின் உணர்வுகளை வாசிக்க வாசிக்கச் சாதாரணமாக வெளியில் தெரியும் மனிதர்களின் உள்ளத்தின் அடியில் ஊற்றெடுக்கும் எண்ணங்களை யாரால் தான் அறிய முடியும் என்ற ஆச்சரியம் தோன்றியபடியே இருந்தது . அம்பியின் கட்டுக்கடங்காத எண்ணவோட்டங்களுக்கு முடிவுதான் என்ன என்ற ஆர்வத்துடன் வாசகர்களைப் பக்கங்களின் நுனிகளில் கட்டிப்போட்டு கதையாற்றி இருக்கிறார் லா.ச.ரா. அம்பியின் எண்ணவோட்டங்களுக்கு அபிதாவைக் கொண்டே முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

இந்தக் கதையில் எனக்கு அம்பி கதாபாத்திரம் மேல் பரிதாபமும் வரவில்லை அதே சமயத்தில் கோபமும் எழவில்லை. கதையின் போக்கில் அம்பியின் உருவம் மறைந்து அவன் உணர்வுகள் மட்டும்தான் வெளிப்பட்டது. ஆம் வடிகட்டாத அசலான உணர்வுகள். புரியாத உணர்வுகள். மீண்டும் மீண்டும் வாசிக்கச்செய்த ஆழமான உணர்வுகள். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களில் ஒவ்வொரு விதமாகப் புரியும் ஆற்றல் இருக்கிறது அபிதாவிடம். அதனால் மீண்டும் வாசிப்பேன் 'அபிதாவை'. இந்த சிக்கலான கதையை என்னால் முகம் சுழிக்காமல் வாசிக்கமுடிந்ததின் காரணம் அந்த மொழிநடை. லா.ச.ராவின் மொழி வளமையை அவர் பாணியிலே சொல்லவேண்டுமென்றால் 'சௌந்தர்ய கடாக்ஷம்'.

P.S: Please check out the podcast we did by clicking the link below:

https://open.spotify.com/episode/31Wo...
Profile Image for Anand Jayakumar.
4 reviews1 follower
May 23, 2017
I was told this as a classic. I read and i took forever to complete this book. This one is definitely not for amateurs like me in reading tamil literature. But one day i hope i can understand the class in it.
Profile Image for Maragatham Munusamy.
23 reviews4 followers
March 15, 2024
உவமைகளும் உருவகங்களும் பக்கத்துக்கு பக்கம் மலைக்க வைக்கின்றன.

நமக்கு பிடித்த மனிதர்களை கொன்டாடுவது அவ்வளவு எளிதாய் எப்படி வரைய முடிந்தது இவரால்.

குற்றவுணர்ச்சி பெருக்கெடுக்க அம்பி,

சகுந்தலை
அபிதா
தர்சினி
Profile Image for Bhuvan.
253 reviews42 followers
March 7, 2020
5stars for the extraordinary writing. Ordinary story.

It's a magic. I may fall in love with this writer.
Profile Image for GaneshPandian RK.
12 reviews3 followers
March 10, 2021
கவித்துவமான சொற்களை கொண்டு சிற்பத்தை வடித்த சிற்பியைப் போல தன் சொல்லாற்றலால் செதுக்கிய எழுத்தலங்காரம் மிக்க நாவல்.
Profile Image for Srihari Iyer.
42 reviews
November 12, 2020
110 பக்கங்களை நொடிப்பொழுதில் முடித்துவிடலாம் என்ற எண்ணத்தை நொடியில் பொசுக்கி மாதம் கடந்து சென்று வருடமும் கடந்து விடுமோ என்று எண்ணிய பொழுதில் முடித்தாகி விட்டது.
இந்த style ல dhaan irukku. லா.ச. ரா. வின் அபிதா.

முற்றிலும் வேறுபட்ட வர்ணனைகளின் விளையாட்டு. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பு தட்டுகிறது.

கதை என்பது ஒரு வரியில் சொல்லி விடலாம். தன் பழைய காதலியை தேடி வந்து, அவள் இறந்த செய்தி கேட்டு பின் அவள் சாயலில் இருக்கும் அவளது மகளின் மேல் சல்லாபம் கொண்டு இறுதியில் முடிவற்ற முடிவு.

ஆனால் கதை அல்ல இந்த நாவலின் நாயகன். லா.ச.ரா. வின் எழுதுக்காக படிக்க வேண்டும்.
Profile Image for Abirami Sridhar .
64 reviews4 followers
December 23, 2023
ஒரு காதல் தோல்வி கதை எனவும் சொல்லலாம். மனித மனதின் கலங்கங்களின் பிரதி என்றும் சொல்லலாம். மனம் லயிக்காத மணவாழ்க்கை கொண்ட ஒருவன் தனது முதல் காதலின் சிதறல்களைத் தேடிச் செல்கிறான். அங்கு தன் பழைய சுவடுகளை அசைபோடும் அம்பிக்கு ஏற்படும் மன எழுச்சிகள். அவை காதல் தோல்வியால் ஏற்படும் குமுறல்களா? புதுக்காதலா? மனப்பிறழ்வா? வரமா? சாபமா? அது மீதிக்கதை.

மணிக்கொடி காலத்தில் கொடிநாட்டிய எழுத்தாளர்களில் முக்கியமானவர் லா.சா. ராமாமிர்தம். ஒரு காதல் தோல்வியையும் அதனால் ஏற்படும் மன சஞ்சலங்களையும் இவ்வளவு அழகாக எழுதி விட முடியுமா, அதில் சொல்ல இவ்வளவு விஷயங்கள் இருந்துவிட முடியுமா என்று வியப்பில் ஆழ்த்துகிறது இவருடைய எழுத்துக்கள். சிறிய புத்தகமேயாயினும் ஒரு வார்த்தையை விட்டாலும் கூட முழு கதையும் புரியாமல் போகுமோ என பயந்து கூர்ந்து படிக்க வேண்டிய நடை.

சகுந்தலை இறந்த பின்பும் அவளின் பிரதியாக நிற்கும் மகள் அபிதாவை தன் காதலைப் புதுப்பித்துக் கொள்ள சகுந்தலையே மீண்டும் பிறந்திருப்பதாக எண்ணிக் கொள்கிறார். இதனால் அபிதாவின் மேல் அவருக்கு ஏற்படும் உணர்வுகள், கண்ணோட்டத்தில் மாறுதல்கள், ஒருவித வெறியும் கூட. தள்ளாத வயதிலும் சிறு பிள்ளையை இப்படிப்பட்ட கண்ணோட்டத்தில் பார்க்கும், நம் நிகழ் வாழ்க்கையில் நாம் கடக்கும் பல "பெரியவர்களையும்" இக்கதை நினைவு படுத்தத்தான் செய்கிறது. மறு பக்கம் அம்பியின் மனைவி சாவித்திரி. நீயா நானா என்று போட்டி போட்டுக்கொண்டே கழிந்து விட்ட கசந்த மண வாழ்க்கை. பிள்ளையில்லாக் குறை வேறு. தானாய் தேடி வந்த தேவதை இன்று கசப்புத் தீனி.

இவ்விரு உறவுகளில் எது தோல்வி என்ற எண்ணம் எழுகிறது. சாவித்திரியுடனான இத்தனைக்கால மண வாழ்க்கையா இல்லை சகுந்தலையோடு தான் இருந்த சிறுகால காதல் வாழ்க்கையா? ஆனால் அம்பி மட்டும் சகுந்தலையே பற்றிக் கொண்டு தீயாய் பற்றியெரிகிறார். காலமற்ற காலத்தில் பற்றி எரியும் எதைக் கண்டாலும் தன்னை சாபமிடுவது போலவே நினைத்துக் கொள்ளும் வஞ்ச மனம் ஆடும் ஊஞ்சலாட்டம்.
வாசகர்களை ஆழமாக இழுத்து பிடித்துக் கொண்டு அடுத்து என்ன நடக்கப் போகிறது என ஆர்வம் கொள்ளும் அளவு ராமாமிருதம் அவர்களது நடை உள்ளது. இடையிடையே சிறிய சிறிய கதாபாத்திரங்கள் வந்தாலும் அம்பியின் மன ஓட்டமே கதையின் கருவாயுள்ளது. தனக்கே உரிய நடையில் நம் முன்னே பல கேள்விகளையும் கடந்த காலத்தை நோக்கிய விசாரணையும் வைக்கிறார். அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு அசாதாரண நாவல்.
11 reviews
May 24, 2021
Abitha known as one of the master piece of La.Sa.Ra deals with a man's complicated emotions haunting him from his past. He is re visiting the place he left behind many years ago and the complications grew when he met Abitha. She is the daughter of his lover from the past looks exactly same as her mother.
He uncontrollably develops feelings on her too. The struggle he is facing inside his heart and scenes around him has been well portrayed in La.Sa.Ra's words.
The way the author used the language to draw a picture of the man's emotional struggle make this work a Classic.
Profile Image for Aruna Arriane.
142 reviews17 followers
September 7, 2022
அபிதா - மேலோட்டமாக படிப்பவர்களுக்கு மனதுக்குள்ளேயே பேசிக்கொள்ளும் பித்தனின் கதையாக தெரியலாம். ஊன்றி படித்தவர்களுக்கு, அதுவும் சமூகத்தின் ஒழுக்கக் கோட்பாடுகளை கடைபிடித்து பழகியவர்களுக்கு, இது ஒரு அபத்தமான கதையாகத் தெரியும். அந்த சமூக கோட்பாடுகளைத் தாண்டி சற்றே நாம் சிந்தித்து, உரிய கேள்விகளை எழுப்பினோமென்றால் ஒரு சிறந்த கலந்துரையாடலை நிகழ்த்தலாம். மு. வரதராசனாருக்குப் பின்னர் மிகவும் தேர்ந்த தமிழ் நடையில் இப்போதுதான் வாசிக்கிறேன். லட்சியம், குறிக்கோள், என்று எதுவும் இல்லாத, எளிய மனிதர்களின் வாழ்வை பேசும் சமூக நாவல் இது. நான் படிக்கின்ற முதல் லா. ச. ரா. வின் புத்தகம் இது.
9 reviews1 follower
September 14, 2021
Is it prose or poetry is the doubt you get while reading the book. How can someone describe every moment every experience in such detailed way. La Sa Ra cannot be read as just another activity in your day he deserves and earns your full and complete attention . Difficult to comprehend in first read but beautiful once you absorb it
Profile Image for Jayakumar Baradwaj.
12 reviews7 followers
February 26, 2013
Its an amazing journey.. La Sa Ra is at his best when it comes to portraying the subtle human feelings with excellent wordings.
Profile Image for Balasubramanian Palanisamy.
13 reviews4 followers
April 3, 2013
La.Sa.Ra. played with the words... excellent expression of inner feelings..

But I struggled in some places to envisage...
Profile Image for Balaguru Kalyanasundaram.
1 review28 followers
July 30, 2014
காதலாகி கசிந்துருகி .......முடித்த விதம் அற்புதம் .
Profile Image for Saranya Dhandapani.
Author 2 books174 followers
May 19, 2021
அபிதா-கொண்டாட்டங்களின்‌ உச்சம்! உவமைகளின் பூர்விகம்!
Displaying 1 - 30 of 51 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.