போலியானதொரு சித்தரிப்போ,மிகையுணர்ச்சியினூடான எழுத்தோ அல்லாமல் கொங்கு கிராமிய வாழ்வின் யதார்த்தத்தை எளிமையான நடையில் சொல்லிச் செல்பவை வா.மு.கோமுவின் படைப்புகள். பாலியல் அல்லாதொரு கொங்குக் கிராமிய வாழ்க்கை இவரது எழுத்துகளில் சாத்தியப்படாதா ? என்கிற நீண்ட கால விமர்சனத்துக்கு இவர் கொடுத்திருக்கும் பதிலடிதான் தானாவதி. திருமணம் என்பது உடலியல் சார்ந்த பகிர்தலுக்கான, வடிகால் மட்டுமல்ல. தனது இருப்புக்கான அர்த்தத்தை உலகுக்குப் பறைசாற்றுவதன் நிகழ்வே திருமணம் என்பதையும், மனமுடிக்காத முதிர்கண்ணன்களின் சோகம் படிந்த வாழ்க்கையையும் சொன்ன விதத்தில் தானாவதி கவனிப்புக்குரியதாகிறது. சமகாலக் கொங்கு இளைஞர்களின் திருமணச் சிக்கலைப் பேசிய விதத்தில் க&
வா. மு. கோமு ஈரோடு மாவட்டம் வாய்ப்பாடியைச் சேர்ந்த சிறுகதை, புதின எழுத்தாளர். கொங்கு மண்டல வட்டார வழக்கில் கிராமம் சார்ந்த பாலியல் கதைகளையும் எதார்த்த இலக்கியத்தையும் படைப்பவர். தமிழின் அனைத்து முன்னணி பத்திரிக்கைகளிலும் இலக்கிய பத்திரிக்கைகளிலும் இவரது கதைகள் வெளியாகியிருக்கின்றன. இவரது தவளைகள் குதிக்கும் வயிறு என்ற சிறுகதைத் தொகுப்பு 2008ம் ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விகடன் விருதை பெற்றது.