எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல்.
· பூ + சரம் = ஏன் பூச்சரம்? பொன் + கலசம் = ஏன் பொற்கலசம்?· சின்ன குதிரை, சின்னக் குதிரை: இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? · ‘செமயா இருக்கு மச்சி’ என்கிறோமே, அதென்ன ‘செம’?· அதிக சலுகை, அதிகச் சலுகை: எது சரி?· ‘வேகமாகத் தட்டச்சினேன்’ என்று எழுதலாமா?· திருவையாறில் தியாகராஜ ஆராதனை. சரி, ஆறிலா? ஆற்றிலா?· வேட்பாளர் என்ற சொல் எப்படி வந்திருக்கும்?· ஒருவன் சரி; இருவன் என்று சொல்லலாமா?· ‘இல்லை’யும் ‘அல்ல’வும் ஒன்றுதானா?வழக்கமான இலக்கண நூல் அல்ல இது. விதி மேல் விதி சொல்லி இம்சிக்காமல், பல்வேறு சூத்திரங்களைச் சொல்லி குழப்பாமல் மிக இயல்பான முறையில் மிக இனிமையான ஒரு புதிய வடிவில் அடிப்பட
என். சொக்கன் என்ற பெயரில் எழுதும் நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் தெளிவான எழுத்தும் ஆழமான ஆய்வும் நிறைந்த தன்னுடைய நூல்களுக்காகத் தமிழகமெங்கும் நன்கு அறியப்பட்டுள்ளவர். புனைவு, வாழ்க்கை வரலாறு, நிறுவன வரலாறு, தன்னம்பிக்கை, சிறுவர் இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் இதுவரை எழுபதுக்கும் மேற்பட்ட நூல்கள், நூற்றுக்கணக்கான கதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார்.
Good one. 50% on Grammer 50% on Words I liked this book for three things 1) It explained many grammar concepts very briefly and concisely 2) It explained many words usages 3) There are many references to words from Kambaramayanam and other Tamil books such as Thiruvasagam etc. Hence, this book kindled my interest on reading those books.
At the same time, I really wished the book focused much more on the Vali Migum and Vali Migaa places because that is where most of spelling mistakes happen (for me and many others). Approximately in Chapter 17 they discuss about it and in beginning chapters of part 2. I expected part 2 would discuss about it in detail. But part discussed mostly on words. Casual writers won't need it necessarily. Serious writers (born in Tamil Nadu) would be mostly familiar with how to write the subject, verbs adjectives etc. But the main issues comes in the Vali Migum and Vali Migga places. I hoped that all rules related to this have been drilled down and simplified into one chapter rather than at multiple places sporadically.
This book is good. But it could have been great had it include some practice exercises. For. e.g, in Vali Migum and Vali Migga cases, there could have been some 10 paragraphs (with 200 words) given for which one has to correct (Moippu velai) all the sandhi's etc. This would have been in multiple phases a) fill in the blanks 2)strike the characters 3) then combine both. Make the readers do the job of a proof-reader. And then explain the answers. This would have been an ideal exercise. Integrated learning.
I found another book Nalla Thamizh Ezhudha Vendumaa நல்ல_தமிழ்_எழுத_வேண்டுமா by அ .கி பரந்தாமனார் from web archive org
நல்ல தமிழில் எழுதுவோம் - என்.சொக்கன். நல்லதொரு நூல் வாசித்த மகிழிச்சியில் இதை எழுதுகின்றேன். வாசிக்கையில், பள்ளியில் கற்ற பல பாடங்களை நினைவூட்டுகிறார் சொக்கன்.
"இயல்பு, ஐ, ஆல், கு, இன், அது , கண், விளி" என்று வேற்றுமை உருபை என்னவென்று தெரியாமல் மனப்பாடம் செய்து வைத்தது புத்தகம் வாசிக்கையில் வெளி வந்து நின்றது. "கிறு", "கின்று", "ஆநின்று", இவை என்னவென்று நினைவுள்ளதா? மறந்திருக்குமாயின், இவை நிகழ்கால இடைநிலை சொற்கள்.
"என்குது", "காந்தன்", "கண்ணாட்டி", "சந்நதம்" என பல பழைய, புதிய சொற்களுக்கு அவருடைய நடையில் விளக்கங்கள் தருகிறார். "ஆறத் தழுவுதல்", "ஆரத் தழுவுதல்". இரண்டில் எது சரி? ஆறத் தழுவுதல்- தலைவியைப் பிரிந்ததால் மனதில் உண்டான காயங்கள் ஆறத் தழுவினனான். ஆரத் தழுவுதல் - மனமுவந்து அல்லது மனதாரத் தழுவுதல்.
ஐந்து எவ்வாறு அஞ்சு ஆனதென்று தெரியுமா? தெளிவாக விளக்குகிறார் ஆசிரியர். "மெல்லினங்கள் பாடு கண்ணே, வல்லினங்கள் வாய் வலிக்கும்" என்ற சினிமா பாடலின் அர்த்தம் புரிகின்றது இப்பொழுது.
பிழையின்றி தமிழ் எழுத, பேச விழைவோருக்கு இந்நூல் ஒரு நல்ல துணைவன். நன்றி சொக்கன் அவர்களே.
மிகமிக முக்கியமான இலக்கண விதிகளைத் தமாஷாக, ஒரு விளையாட்டுப் போல, சொல்லித்தரும் நல்ல நூல். குறுஞ்செய்திகளையும், இதுபோன்ற ஃபீட்பேக் கருத்துக்களையும் பிழையின்றி எழுத நிச்சயம் உதவும். சுவாரசியமான செய்தி: பத்திரிக்கைகளில், புத்தகங்களில், இந்நூலிலும் உள்ள (சில பல) பிழைகளைக் கண்டுபிடிப்பது பொழுதுபோக்காகவும் இருக்கும்! உங்கள் குறிப்புகளைச் சேர்க்க அச்சுப் புத்தகம் வாங்கிவிடவும்! (கிடைக்கும் இடம் தெரிந்தால்).