சூர்ப்பனகையில் நம் சமூகத்தின் பல்வகையான பெண்கள் வந்து வந்து போகிறார்கள். அவர்களின் சந்தோசக் கதவுகள் அடைக்கப்படுவதால் மனச்சோர்வில் மூழ்கிப் போகிறார்கள். அன்பின் ஈரம் கசியும் ஒரு வார்த்தைக்காக ஏங்குபவர்களாகவும் செல்லும் இடங்களிலெல்லாம் புறக்கணிக்கபடுவேராகவும் இருக்கிறார்கள்.
K.R. Meera is an Indian author, who writes in Malayalam. She won Kerala Sahitya Akademi Award in 2009 for her short-story, Ave Maria.She has also been noted as a screenplay writer of 4 serials. Meera was born in Sasthamkotta, Kollam district in Kerala.She worked as a journalist in Malayala Manorama, later resigned to concentrate more on writing. She is also a well-known column-writer in Malayalam
கடந்து போக முடியாமல் செய்தவர்களில் முக்கியமான ஒருவர் என மீராவை குறிப்பிட்டு ஷைலஜா அம்மா மொழிபெயர்த்திருக்கும் சூர்ப்பனகை நம்மை எளிதில் கடந்து போகமுடியாமல் நிறுத்தி வைக்கிறது!
சூர்ப்பனகை, மோகமஞ்சள், அர்த்தராத்திரிகளின் ஆத்மா, இதயம் நம்மை ஆக்ரமிக்கிறது இவை திரும்ப திரும்ப நினைவில் வந்து அதிர்வை தரும் படைப்புகள்.
Book - சூர்ப்பனகை Author - கெ.ஆர்.மீரா Translator - கே.வி.ஷைலஜா
இலக்கிய உலகம் கெ.ஆர்.மீராவையும் கே.வி.ஷைலஜாவையும் போற்றி பாராட்டும் காரணத்தை இந்த புத்தகம்,”ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்!”என்பதுபோல காட்டியது.அப்பப்பா!!!என்ன ஒரு ஆழமான,குத்தலான,வேதனை தரக்கூடிய,துயரம் தோய்ந்த,சன்னமான ஆனால் திடமான,அமுக்கப்பட்டவர்களின் மறைக்கப்பட்ட வார்த்தைகளான வரிகள்!!!😱🤯🙏🏻🙇🏻♀️தொடக்கத்தில் இந்த நடை புதிதானதாலும் முதல் வாசிப்பானதாலும் சற்று பிடிபட பிரயத்தனப் பட வேண்டியிருந்தது.(அதற்கென்று “பகீரத பிரயத்தனம்” என்று சொல்ல மாட்டேன்.சற்று ஆழ்ந்து வாசிக்க வேண்டியிருந்தது.அவ்வளவே!)ஆனால்,எழுத்தின் ஆழமும் சொல்ல வரும் பொருளும் விளங்க தொடங்கியதும்,”எண்ட அம்மே பகவதி!”என்று ஓடிச் சென்று கெ.ஆர்.மீராவின் காலிலும் அதை தாக்கம் உண்டாக்குமளவு மொழி பெயர்த்த கே.வி.ஷைலஜாவின் பாதங்களிலும் விழுந்து பணிய வேண்டும் என்று தோன்றியது.
சூர்ப்பனகை - சிறு கதைகளின் தொகுப்பு - பெண்ணியத்தின் இருண்ட பக்கத்தைப் பற்றி பேசுகிறது. முதலில் மலையாளத்தில் (கே.ஆர். மீரா) எழுதப்பட்டு, பின்பு தமிழில் (கே.வி. ஷைல்ஜா)
ஒவ்வொரு கதையின் நிகழ்வுகள், கதாபாத்திரங்கள் மற்றும் அவற்றின் உருவகங்களின் தொகுப்பாக பின்னப்பட்ட ஒரு பிரதி. கதை பாணி நம்மை மீண்டும் படிக்க, மறுபரிசீலனை செய்ய மற்றும் நம்மை மீண்டும் கண்டுபிடிப்பதற்கான வரம்பைத் தள்ளுகிறது.
அண்ணாக்க வின் சூர்ப்பனகை அண்ணா வின் வாசம் சாவித்திரி அம்மவின் வல்லாபன் சரளாவின் ஆத்மா அவளின் கீதம்