பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி போரிட்ட ஒரு வீரனின் வீர வரலாறுதான் இந்த ‘பட்டத்து யானை’. வெள்ளையர்களுக்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்தவன் ‘சித்திரங்குடி மயிலப்பன்’! துரதிருஷ்டவசமாக பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிரான போரில் மயிலப்பன் இறந்துவிடுகிறான். ‘வீரர்கள் புதைக்கப்படுவதில்லை; விதைக்கப்படுகிறார்கள்’ என்ற கூற்றுக்கு ஏற்ப மயிலப்பனின் ரத்தம் சிந்திய பூமியில் இருந்து முளைத்தெழுகிறான் பெருநாழி ரணசிங்கம் என்றொரு மற்றொரு மாவீரன். ரணசிங்கம் தனக்கென ஓர் இளைஞர் படையை உருவாக்குகிறான். அவர்களுக்கு போர் பயிற்சி அளிக்கிறான். வெள்ளையர்களை அழிக்க அவர்களுடன் ஆக்ரோஷமாக மோதி, அவர்களின் ஆயுதங்களையே சூறையாடுகிறான். ஒருநாள், பிரிட்டிஷ் படை அதிகாரிகளுடன் ரணசிங்கம் நேரடியாக மோதும் சூழ்நிலை வருகிறது. இருவருக்கும் இடையிலான போரில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை வீரம் செரிந்த நடையில் விறுவிறுப்பாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர் வேல ராமமூர்த்தி. ஜூனியர் விகடனில் இந்தக் கதை தொடராக வெளிவந்தபோதே பரபரப்பாகப் பேசப்பட்டது. இப்போது, அந்த வரலாற்றுப் பொக்கிஷம் உங்களுக்காக ஒரே நூலாகத் தொகுக்கப் பட்டிருக்கிறது. புனைகதை வடிவில் பக்கங்கள் நகர்ந்தாலும், நூல் முழுக்க இதுநாள் வரை நாம் அறிந்திராத, தமிழக வரலாற்றுத் தகவல்கள் நிரம்பி வழிகின்றன.
வேல ராமமூர்த்தி (Vela Ramamoorthy) ஒரு இந்திய எழுத்தாளர் மற்றும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெருநாழியில் பிறந்தவர். தற்போ இவர் பாயும் புலி (2015 திரைப்படம்) மற்றும் சேதுபதி (2016 திரைப்படம்) ஆகியவற்றில் நடித்துள்ளார். தொலைக்காட்சித் தொடர், நாடகம், தொழிற்சங்கம், அறிவியல் இயக்கம், சினிமா என்று பல்துறை வாழ்வியல் அனுபவங்கள் கொண்டவர்.
நீளும் ரெக்கை, வேட்டை போன்றவை இவரது சிறுகதை நுால்களாகும். பட்டத்து யானை, குற்றப்பரம்பரை (முன்னதாக கூட்டாஞ்சோறு என அழைக்கப்பட்டது) மற்றும் குருதி ஆட்டம் ஆகியவை இவரது நாவல்களாகும். இவரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டு வேல ராமமூர்த்தி கதைகள் என வெளியிடப்பட்டுள்ளது.
அவருடைய குற்றப்பரம்பரை நாவல் படித்து முடித்துவிட்டு, இன்னொரு நாவலான இந்த பட்டத்துயானை இப்போது தான் படித்து முடித்தேன்.
இந்த நாவல், 1920 வாக்கில் நிகழ்ந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு, கற்பனை கலந்து எழுதப்பட்ட கதை.
கதையின் நாயகன் "பெருநாழி ரணசிங்கம்". ஆங்கிலேயரின் அடிமைத் தனத்திலிருந்து மக்களை விடுவிக்க விரும்பி புரட்சியாளனாக மாறியவன். தனுஷ்கோடியில் ஆங்கிலேய கப்பலை குண்டுவைத்து தகர்த்துவிட்டு தப்பிக்கிறான் ரணசிங்கம். அவனது தங்கையின் திருமணத்தில் கலந்து கொள்ள நிச்சயம் பெருநாழிக்கு வருவான் என, அங்கு வைத்து ரணசிங்கத்தை கைது செய்ய திட்டமிட்டு 3 லாரிகள் நிறைய பொருநாழிக்கு விரைகிறார்கள் காவலர்கள்.
ரணசிங்கத்தை காப்பாற்ற தங்கள் உயிரையும் துச்சமென மதித்து ஒன்றுகூடும் சுத்துப்பட்டு கிராமத்து ஊர் இளவட்டங்கள், வழியிலேயே போலிஸ் லாரிகளை மறித்து அத்தனை பேரையும் தீர்த்துக்கட்ட திட்டமிடுகிறார்கள்.
என்ன நிகழ்ந்தது, அதன் விளைவுகள் என்னென்ன. இவையே கதை.
கதையில் ஓரிடத்தில் ஆங்கிலேயரை தாக்குவதற்கு இரவில், ஆற்றங்கரையில் பதுங்கியிருக்கும் இளைஞர் குழுக்களில் ஒருவன் தன்னருகில் ரணசிங்கம் இருப்பதை நம்பமுடியாமல் இப்படி சொல்கிறான், "எந்தக் கட்டுக்குள்ளும் சிக்காமல் சுழித்துப்போகும் சூறாவளி ரணசிங்கம்! லன்டன் மாநகரத்து நாவுகளும் உச்சரிக்கும் 'சேது நாட்டுப்பெயர்'. அடிமைத்தனமும் தெரியாமல், விடுதலையும் தெரியாமல், வெந்ததைத் தின்று விதி வழியே போன தெற்கத்தி ஜீவன்களுக்கு வெள்ளையனைக் கண்டாலே வெகுண்டெழக் கற்றுத்தந்தவன். பிரிட்டிஷ் போலிஸின் பிடரியைப்பிடித்து உலுக்குபவன்.. நம் தோளோடு தோள் உரச இதோ புதருக்குள்! எத்தனையோ களம் கண்ட ரணசிங்கமே நேரடியாக பங்கேற்கும் யுத்தகளத்தில் அவனோடு நாமும்! ஆஹா! வாய்க்குமோ இதுபோல் ஒரு தருணம்! வெற்றியோ.., வீரமரணமோ.. எதுவானாலும் விரைந்து வரட்டுமே! வைப்பாற்றில் உற்சாகம் கரை புரண்டது!"
நாவலின் இறுதி 75 பக்கங்கள் அப்படி ஒரு வேகம். இறுதி அத்தியாயத்தில் ஆங்கிலேயரின் நான்குமுனை தாக்குதலை முறியடிக்க, கருஞ்சேனைப் படையொன்றை திரட்டி, அதை நான்கு அணியாக பிரித்து திட்டம் வகுத்துக்கொடுத்து வழியனுப்பி வைத்திருப்பான் ரணசிங்கம். முதல் அணி அடைந்த வெற்றிச் செய்தியை ரணசிங்கத்தடம் கூற குதிரை ஏறிப்பறக்கும் செல்லமுத்துவிற்கு முன்பாக நாவலை வாசிக்கும் வாசகன் முந்திச்சென்று ரணசிங்கத்திடம் செய்தி சொல்ல விரும்புவான். அப்படி ஒரு பாய்ச்சல் இறுதியில்.
வெறும் வீர வரலாற்று சரித்திரமாக மட்டும் இதை எழுதிவிடவில்லை நாலாசிரியர். அவர் வாழ்ந்த மண்சார்ந்த மக்களின் கலாச்சாரத்தை, உறவுமுறைகளை, மனுசப்பாடுகளை அவ்வளவு அழகாக, எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார். ரணசிங்கம் தங்கை திருமணத்திற்கு சுத்துப்பட்டு கிராம மக்களும், உறவினர்களும் மாட்டுவண்டி கட்டிக் கிளம்புவதை விவரிப்பதாகட்டும், கல்யான சடங்குகள் சம்பிரதாயங்களை காட்சிப்படுத்துவதாகட்டும் வேறொரு படிப்பினையை தருகிறது வாசகனுக்கு.
மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம் மக்களின் கலாச்சாரம் சார்ந்த வாழ்க்கை முறையை, பற்றி பொறாமை கொள்ள வெச்சுட்டார் மனுசர். என்னென்ன சந்தோசங்களை, பழக்கவழக்கங்களை, உறவுமுறைகளை, மனிதர்களையெல்லாம் இழந்துவிட்டு, நாமெல்லாம் வெறும் பொருளாதாரம் சார்ந்த இயந்திரத்தனமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என வாசிப்பாளர்களை, யோசிக்க வைப்பதில் இருக்கிறது வேல.ராமமூர்த்தி யின் வெற்றி.
இரத்த ஆற்றை கடக்காமல் சுதந்திர காற்றைச் சுவாசிக்க முடியாது என்பதால் எதிர்காலத்தைக் கருதி புரட்சி வேட்கையில் தன்னுயிர் ஈர்த்த பலர்களின் ஒருவனான ரணசிங்கம் என்றவனின் உருவாக்கமும் வீழ்ச்சியையும் விவரிக்கிறது.
அடிமைப்படுவதை வெறுத்துப் பள்ளியில் நடந்த பிரச்சனைக்குப் பிறகு இராணுவத்தில் சேர சென்றவன் அங்கே நடக்கும் அநீதி அவனை முழுப் புரட்சியாளனாக்கிவிடுகிறது. திரும்பி வந்தவன் ஆயுதம் தாங்கிய சுதந்திர போராட்டத்தில் தன்னை முழுவதும் ஈடுபடுத்திக் கொள்கிறான்.
வெள்ளையனின் கப்பலை அழித்தது போலீஸ் பலரின் உயிர் இழப்புக்கு காரணமானவன் என்பதால் அவனைப் பிடிக்க முழு வேட்டையுடன் போலீஸ் அதிகாரிகள் செயல்படுகின்றனர். அவர்களின் திட்டங்களை முறியடிக்கும் முறைகளை விரிவாக அலசி செல்கிறது பலரின் இரத்தத்தின் வழியே.
ஏறிய தாலி சில நிமிடங்களில் இறங்கினாலும் வீரனுக்குத் தான் வாழ்க்கைப்பட்டேன் என்று பெருமிதம் கொள்ளும் ரணசிங்கத்தின் தங்கை, போராட்ட நேரத்தில் இருந்த பெண்களின் மனநிலையைக் குறிக்கிறது.
வீரத்தில் முடியாததைச் சூழ்ச்சியால் முடிக்கிறது அரசு. ரணசிங்கத்தின் இழப்பு அவனுடன் சேர்ந்தவர்களின் உயிர்பறிப்பு,ரணசிங்கத்தின் மகனுடன் அவனின் தங்கை நாடுகடத்தப்படுவது. ஆனால் திரும்பி வருவோம் என்று சூளுரையுடன் முடிகிறது.
ஒரு ஜீவா நதி போல , உணர்வுகளின் காட்டாறாக , எந்த தேக்கம் இல்லாமல். சாமானிய , கிராமத்து மக்களின் வீரத்தை, காதலை , தேசபக்தியை , கொண்டாட்டத்தை, துரோகத்தை, தாய்மையை , துணிவை , சோகத்தை , மகிழ்வை மிக நேர்த்தியாக படைத்தது உள்ளார் திரு வேல ராமமூர்த்தி.
திரு வேல ராமமூர்த்தி அவர்களின் வர்ணனையில் சோகத்தில் தொண்டை அடைத்து, வீரத்தில் உடல் சிலிர்த்து , துரோகத்தில் மனம் வேம்பி ,காதலில் நாணம்கொண்டு ஒரு சிறந்த திரைப்படத்தை பார்த்த உணர்வு.
Excellent, fabulous, thrilling, heart wrenching, prefect blend of emotions.Exceptional narration, uninterrupted flow, while reading I felt like I was watching all incidents live . Each character is well established and justified and given equal importance.This book would motivated so many people (even now it is inspiring ) if this book was written before Independence of our country. Has all the aspect of a feel good movie.
கடைசி பக்கத்தை படித்து முடித்தவுடன் சற்று நேரம் ஏதும் பேசாமல் எதற்கும் சிந்தனையை அலைய விடாமல் எனது அறையிலேயே அமர்ந்து விட்டேன். கையில் படிந்த இரத்தக்கறையை கழுவி விடும் முன் எல்.எம்.ஜி கண்களின் தோட்டா சத்தம் அடங்கும் முன் இதை எழுதி கொண்டிருக்கிறேன். வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிராக ஒரு மாவீரன் தன் சேனைகளுடன் ஆடிய ருத்ர தாண்டவமே 'பட்டத்து யானை'.
தென்னகத்தின் வீர வரலாறு. வானம் எதிரியாக பார்த்த பூமியில் அன்று பெய்த மழை வீதி எல்லாம் கரைத்து சென்ற சாம்பல்களின் கறை. புழுதி மணலில் உருண்ட திரேகங்கள் பரங்கியனின் இரத்தக்களரியில் குளித்த கதை. கையில் ஏடு ஏந்தாத ஆப்பநாட்டு கைகைள் ஆயுதம் தாங்கி கட்டவிழ்த்த புரவிகளாய் களிறின் தலைமையில் போரிட்ட சரித்திரம்.
அய்யா வேலராமமூர்த்தியின் எழுத்தை "குற்றப்பரம்பரை" மூலம் நன்கறிவேன். இரண்டு கதைகளிலும் களமும் வாழ்வியலும் ஒன்று தான். பட்டத்து யானையின் வெள்ளை காகிதங்கள் வெள்ளிதிரைக்கு கொஞ்சமும் சளைத்தவை அல்ல. 1800 வாக்கில் தென் தமிழகத்தில் நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு கற��பனையும் கலந்து எழுதப்பட்டது. முழுக்க முழுக்க ஆப்பநாட்டின் எளிய மக்களின் வலிய வெள்ளை ஆதிக்க சக்திக்கு எதிரான போராட்டத்தை மிக பிரமாண்டமாக அந்த மக்களின் மண், மணம், கலாச்சாரம், உறவுமுறை, வீரம், வாழ்வியல் என அனைத்தையும் கண்முன்னே காட்சிகளாக விரிக்கின்றார். ஒரு திருமனத்திற்கு அத்தனை ஊர் சனங்களும் வண்டி கட்டி கொண்டு மலாட்டாறு வெள்ளத்தில் இறங்குகையிலே, 11 பிணங்களும் ஒரே தீயில் எரியும்போதும் தெரிகிறது நாம் சமூக கட்டமைப்பில் எத்தகைய உறவு முறைகளை தொலைத்திருக்கிறோம் என்று. அதுமட்டுமில்ல தமிழரின் சடங்குகளில் இருந்து எல்லாவற்றையும் புறந்தள்ளி எங்கோ எவனோ ஆரியனோ, திராவிடனோ திணித்த சடங்குகளை நடத்தி கொண்டிருக்கிறோம்.
ஆரம்பம் முதல் இறுதி வரை துப்பாக்கி சத்தங்களும், எரிகுண்டுகளும் வெடித்து சிதறி வெள்ளை காகிதங்களை பலமுறை குருதியாலும், சிலமுறை கண்ணீராலும் நனைக்கின்றன. அது குருதியால் நனைக்கும்போது நாம் கர்வம் கொள்வோம். வெள்ளை துப்பாக்கிகளை சமாளித்து விடலாம். எதிரிகளை எதிர்த்து போரிடலாம். நெஞ்சுக்குள் நஞ்சு கலந்த எண்ணங்களை தொண்டையில் வைத்து வாயில் சீனியாய் கக்கும் துரோகங்களை சமாளிக்க முடியுமா? ஆயுத சக்தியால் வென்றவர்கள் அயோக்கிய சதியால் வீழ்ந்த வரலாறு. தலையை வெட்டி விட்டால் வால் சிறிது நேரத்தில் அடங்கி விடும் என நினைத்து விட்டார்கள் போல. ஆனால், அது ஊரமடை முனியாக இறங்கி பெருநாழி வைரவன் கோயில் ஆலமரத்தில் பகலில் வவ்வால்களாக தொங்கும் பேய்களோடு ரத்தம் கேட்டு ஆடும் "குருதி ஆட்டம்" அவர்களின் ஆறாம் அறிவிற்கு எட்டவில்லை போலும். 'குருதி ஆட்டத்தை' எதிர்பார்த்து...
Total disappointment for reading it. I choose this book because I loved Kutra Parambarai. Stereotyping the people by its ethnicity is very common in pages. Even writing style is too jumpy between the stories.
பட்டத்து யானை என்பது காலப்போக்கில் மறைந்துபோன விடுதலை காலத்தை உயிர்ப்பிக்கும் ஒரு சிறப்பான புதினமாக அமைந்துள்ளது. கதையின் நாயகன் ரணசிங்கத்தின் வாழ்க்கை பயணமே தனித்துவம் மிக்கதொரு அனுபவம். அவரது எண்ணங்களும் செயற்பாடுகளும் நம்மை வியக்க வைக்கும்.
இப்புதினத்தில் வரையப்பட்ட பெருநாழி என்ற ஊர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம சூழல்களின் விவரணைகள் மிக நேர்த்தியான முறையில் எழுத்து மூலம் உயிர்பெற்றுள்ளன. அவற்றின் வழியாக, ஆப்பநாட்டு மக்களின் வாழ்க்கைமுறையும், சமூக அமைப்புகளும் நமக்குப் புரிகின்றன.
மேலும், தமிழ்நாட்டில் வெள்ளையர்களை எதிர்த்து போராடிய மயிலப்பன் எனும் வரலாற்றுப் பாத்திரத்தை, ஆசிரியர் வேல ராமமூர்த்தி இந்த கதையிலேயே நுட்பமாக இணைத்து சொல்லியுள்ளார். இதன் மூலம், விடுதலைக்கான போராட்டத்தில் தமிழர்களின் பங்களிப்பு மற்றும் அவர்கள் காட்டிய வீர உணர்வுகளை நாம் நன்கு அறிந்து கொள்ள முடிகிறது.
பட்டத்து யானை ஒரு கதை மட்டுமல்ல — அது ஒரு வரலாற்று சாட்சியம். தமிழ் வாசகர்களுக்காக எழுதப்பட்டு, தமிழின் நம் வீரத்தையும் மரபையும் நிலைத்திருக்கச் செய்யும் ஒரு முக்கியமான இலக்கியப் படைப்பு.
வேலா அவர்களின் முந்தைய புத்தகங்கள் படித்திருந்ததால், அவரின் வட்டார சொல்லாடலும் காவல் தெய்வங்களும் ஊரணி வர்ணிப்புகளும் மிகவும் அறிந்தவையாக இந்த புத்தகம் நகர்ந்தது. கும்பினிகளை (வர்த்தகம் நடத்தி வந்த ஆங்கிலேயர்கள் இவ்வாறு அழைப்பதுண்டு) எதிர்த்து தெற்கிலிருந்து புறப்பட்ட ஓர் வேங்கையின் கதையை வேலா அவர்கள் சொற்களில் சித்திரம் தீட்டி கொடுத்துள்ளார்.
ஒவ்வொரு பக்கத்துக்கு பக்கம், களங்களை கண் முன் கொண்டு வந்து நிறுத்திப் போகும் எழுத்து அவருடையது. சித்திரங்குளம் மயிலப்பன் முடிக்க தவறிய ஒரு போரை, கமுதி கோட்டையில் நின்று எப்படி நம் கதையின் நாயகன் பெருநாழி ரணசிங்கம் முடித்து காட்டுகிறான் என்பதே கதை. பெருநாழி என்ற ஆப்பநாட்டின் ஓர் கிராமத்து மண்ணில் பிறந்த ரணசிங்கம் எப்படி இவ்வளவு பெரிய ஆங்கிலேயர்களுக்கு பாதகமான சூழலை உருவாக்கி, வீரத்துக்கும் புரட்சிக்குமான வித்தை எவ்வாறு விதைத்தான் என்பதே கதை.
புயல் பாய்ச்சலாய் , புலி பாய்ச்சலாய் , முனி பாய்ச்சலாய் முன்னேறி விரட்டுகிறது கருஞ்சேனை. இப்படி ஒவ்வொன்றை சொல்லும் போதும் முழு கதையையும் இங்கே சொல்லி முடிக்க ஆவல் தூண்டுகிறது. இருப்பினும், அதை செய்யாமல் அந்த பாய்ச்சல்களை நீங்கள் படிக்கும் போது உணர்வீர்கள் என்பதால் இத்தோடு விட்டு விடுகிறேன். கதை களம் முழுக்க உணர்ச்சி வேகமும், அந்த காலத்தின் மனிதர்களின் வீரம் எத்தகையது என்கிற உதாரணங்களும் வெகுவாய் பரவி நிற்கிறது.
கற்பனை கலந்திருப்பினும் உண்மை கதையின் உயிரோட்டம் இந்த புத்தகத்தின் ஊடே பயணித்த படியே இருக்கிறது. புத்தகத்தை முடிக்கும் தருணத்தில் ரணசிங்கம் என்ற மாபெரும் வீரன் கண்டிப்பாக ஆப்பநாட்டின் பெருநாழியில் வாழ்ந்துள்ளதாகவே எனக்கு தோன்றியது. வீரன் என்ற ஒற்றை சொல்லில் ரணசிங்கம் அடைபட கூடிய பாத்திரம் இல்லை. புத்தகம் முடிந்த பொழுது, விறுவிறுப்பு குறைந்தபாடில்லை. யாரேனும் இங்கு பட்டத்து யானையையும், குருதி ஆட்டத்தையும் படித்திருந்தால், குருதி ஆட்டம் இந்த புத்தகத்தின் அடுத்த பாகமாய் கன கச்சிதமாய் பொருந்தி நிற்கிறது என்பதை உறுதியாய் சொல்லலாமா என பதிவிடுங்கள்.... படித்துப் பாருங்கள்....
ரணசிங்கம் ஒரு மாபெரும் வீரன். அவன் ஒரு ஊரில் வாழ்ந்தான் என்றே இக்கதை நம்மை நம்பச் செய்யும். பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக நம் நாட்டில் இருந்த புரட்சியாளர்கள் எவ்வாறு செயல் பட்டார்கள் எவ்வளவு மன உறுதியுடன் பாடுபட்டார்கள் என இக்கதை விளக்குகிறது.
ரணசிங்கத்தின் மன உறுதி நம் நாட்டில் விடுதலைக்கு பாடுபட்ட அனைத்து மக்களுக்கும் இருந்துருக்க வேண்டும்.. இல்லையேல் இந்த விடுதலை சாத்தியம் இல்லை.
பிரிட்டிஷை தாக்க தீர்மானித்த நமது படை எவ்வாறு தாக்குதல் நடத்தி வந்தார்கள் மற்றும் எவ்வாறு பிரிட்டீஷ் ஆயுதங்களுக்கு எதிரான தந்திரங்களை கையாண்டார்கள் என நாம் அறிய அறிய வியப்பும் நம் விடுதலை போராட்டக்காரர்கள் மீதும் மதிப்பு கூடிக் கொண்டே இருக்கும். அவர்கள் உயிரை துச்சமாக நினைத்து நமது உயிரை காப்பாற்றியுள்ளனார்.
ஆசிரியரின் முந்தைய புத்தகம் வாசித்தலில் அவருடைய ஊர் பேச்சு வழக்கில் உள்ள நடை புரிய உதவியது. கதை விறுவிறுப்புக்கு எந்த குறையும் இல்லை. பேர் தந்திரங்களை அழகாக சொல்லியிருக்���ிறார். இக்கதையை அனைவரும் படித்து அறிந்து கொள்ள வேண்டும்.
The dialogues didn't emote me. It all felt artificial. The best thing about Kutra Parambarai is it's scenes. It will give you goosebumps while and after reading those scenes. But this book didn't have any such scenes.
And more over, the characters are weak and shallow to the point where I started feeling like not care about those characters.
It's a hard read and stopped reading the book in the midway and resumed it after 10 days or something.
இருபதாம் நூற்றாண்டின் காலிறுதியில் வாழ்ந்த ரணசிங்கம் என்ற புரட்சி வீரனின் வாழ்க்கைப்பதிவு... ஒரு இனம் தன் விடுதலைக்காக எதையெல்லாம் விலையாய் கொடுத்தது, அதன் வெற்றிக்கு எவ்வாறெல்லாம் பாடுபட்டது என்ற பக்கங்களை கொண்டு நிறைந்ததே இந்த நாவல்... மிக சிறந்த கதாபாத்திர வடிவமைப்புக்கள், தெளிவான கதையோட்டம், பரபரப்பு, வியப்பு, நல்ல திருப்பங்கள், என எதற்கும் குறைவில்லா பல காட்சிகள்... ஐயா வேலாவின் மிக சிறந்த படைப்பு இந்த நாவல்...
இந்த புத்தகத்தில் சித்தரிக்க பட்ட அனைத்து கதா பாத்திரங்களும் மனதில் ஆழமாக பதிந்தன. நம் மக்களின் வீரத்தையும், அவர்களுக்கு எதிராக செய்யபட்ட துரோகத்தையும் மிக அழகாக நமக்கு உணர வைக்கிறார் வேல ராமமூர்த்தி அவர்கள். தற்போது நாம் அனைவரும் வாழும் வாழ்க்கை எவ்வளவு சுய நலமாக இருக்கிறது என சிந்திக்கத் தூண்டுகிறது.
தமிழில் நான் படித்த சிறந்த விடுதலை போராட்ட புனைவு புத்தகம். எழுத்தாளர் ராமமூர்த்தி ரணசிங்கம் மூலம் நம் மனதில் நம் மக்களின் வீரத்தையும் , தியாகத்தையும் விதைக்கிறார். வீரம் , தியாகம் , துரோகம் என்று உணர்ச்சிகளின் பிரவாகமாக இந்த புத்தகமிருக்கிறது .மாயழகி முதல் துரைசிங்கம் வரை ஒவ்வொரு கதாப்பாத்திரமும் நம் மனதில் புத்தகம் முடிந்த பின்னும் நிங்காமல் இருக்கின்றனர்.
The book is good awesome also but some characters not write well and biggest mines of the book is the nonlinear method of writing because every single page comes in on method that so irritating to read this book in kuttippuram in also nonlinear method but that book is perfect adopting That method (and i noticed every velu ramamurthy books he your always always little bit of and castism)
தென் தமிழகத்தின் 1900-களின் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலை போராட்ட புனைவு. கலாச்சார பண்பாட்டு ஆவணமாக இந்தநூல் இருந்தாலும் தலைமை கதாபாத்திரம் ஏக போக புகழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. மற்றபடி ஒரு சுவாரசியமான நாவல். ஆப்பநாட்டு மக்களின் வீரமிகு கொரில்லா போர்முறை அருமையாக உள்ளது.
பெருநாழி ரணசிங்கம் 1930களில் தனது படையை திரட்டி இங்கிலாந்து அரசை எதிர்த்து புரட்சி நடத்தி வெற்றிகொள்கிறார். ஆங்கில அரசு ரணசிங்கத்தை எப்படி ஒழித்தது என்பதுடன் நாவல் முடிவுறுகிறது.
Get good information about southern people contribution to before independence and southern part of Tamilnadu and people of Ramanathapuram and the brave soldiers. Thanks to author.
வேல ராமமூர்த்தி அவர்களின் நாவல் குற்றபரம்பரை படித்ததிலிருந்து அவர் எழுத்தில் பற்றுக்கொண்டேன். கதையை விவரிக்கும் முறை, கதைக்களத்தை விவரிக்கும் முறை, முன்னாள் நடந்த சம்பவங்களை விவரிக்கும் முறை, கிராமத்து உரைநடையில் சில வார்த்தைகள், இவையாவும் சேர்ந்து தென்தமிழ்நாட்டின் இராமநாதபுரத்து சீமைகளின் வாசம் வீசும்.
இந்த நாவல் சுதந்திர போரட்டத்தின் தொடக்கமாகவும், அதன் விளைவாக மக்களுக்குள் எழுந்த விடுதலை உணர்ச்சிகளையும், அந்த உணர்ச்சிகளை கொண்டு கிராமங்களில் எப்படி சுதந்திர வேள்விகள் நடந்தன என்பதும் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.
வடக்கே பாஞ்சாலத்தில் நடந்த போராட்டம், தெற்கே பாஞ்சாலங்குறிச்சியில் நடந்த போராட்டம் இவைகளோடு இந்த கதை காலத்தில் நடைபெறும் போராட்டமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆசிரியர் விளக்குகிறார். முதுகுளத்தூர் போராட்டம் தான் முதலில் தோன்றிய சுதந்திர போராட்டம் என்றும் எடுத்துரைக்கிறார்.
பெருநாழி ரணசிங்கம், அவனுடைய கூட்டாளிகள், தங்கை மாயழகி, தோழன் திருக்கண்ணன், ஊரில் உள்ள மற்ற வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து கதை நகர்கிறது. பெருநாழி ரணசிங்கத்தின் சுதந்திர போராட்ட வீர முழக்கங்களும், அவர்கள் போடும் திட்டங்களும் யூகிக்க கூடியதே ஆனாலும் சுவாரஸ்யமாக விவரிக்கப்பட்டுள்ளது. போர்குடியில் பிறந்தவர்களுக்கு இந்த வேள்விகள் புதிதல்ல என்று உணர்ச்சி போங்க எழுதியுள்ளார் ஆசிரியர்.
இந்த கதையில் வரும் முக்கியமான சம்பிரதாயங்களில், மாயழகி திருமணம். மணமகன் திருக்கண்ணன் வர தாமதமாவதால் மணமகன் வீட்டில் உள்ள மனமகனின் சகோதரிகள் யாரேனும் தாலி கட்ட அழைக்கப்படுவார்கள். அருகில் மணமகன் வீட்டு வேல்கம்பு நிறுத்திவைக்கப்பட்டு, மணமகனுக்கு சகோதிரி முறையானான பெண் ஒருத்தி தாலி காட்டுவாள்.
ஓரிரு நாளிள் நடைபெறும் மொத்த சுத��்திர வேள்வியை புத்தகத்தின் பிற்பாதி தாங்கிக்கொண்டிருக்கிறது. இடையில் ஒரு பகுதி ரணசிங்கத்தின் ராணுவ வாழ்க்கை மற்றும் வடக்கில் நடத்திய சுதந்திர போராட்டங்கள் மெதுவாக நகரும். ஒரு முக்கிய பின்னடைவாக நான் உணர்ந்தது, கதையில் வரும் பலவித கதாபாத்திரங்கள். ஏறக்குறைய 20 லிருந்து 30 கதாபாத்திரங்கள் அந்த போராட்டத்தில் ஈடுபட்டிருப்பார்கள். ஓவ்வொரு கூட்டத்திற்கும் ஓர் பெயர் மற்றும் ஒரு பாகம். ஒவ்வொரு பாகத்திற்கு செல்லும் பொது சற்று நிதானித்து இது எந்த கூட்டம் என்பதை நினைவு கூறவேண்டும். ஆனால் இது போன்ற போராட்டத்தை பற்றிய விவரத்தை மிக எளிதாக சொல்லுவதும் கடினம் தான். சுருங்கக்கூறின் குற்றப்பரம்பரை ஏற்படுத்திய தாக்கம் இந்த புத்தகத்தில் சற்று குறைவு தான்.
"நாளைய யுத்தத்தில் நானே செத்தாலும் யாரும் அழக்கூடாது. நான் நழுவவிடும் ஆயுதத்தைத இன்னொருவன் ஏந்த வேண்டும். இது ஓர் ஓய்வற்ற யுத்தம்". _ரணசிங்கம்.
நம்முடைய கதாநாயகன் இறந்துவிடக்கூடாது என்று எண்ணித்தான் பெரும்பாலும் கதைகளையும் புனைவுகளையும் படிப்போம். இம்மாதிரியான வரலாறுகள் நமக்கு உணர்த்துவது.... இந்தியாவின் சுதந்திரம் தள்ளிப்போனதற்கான காரணம் உடையப்பன் போன்ற நம்பிக்கைத் துரோகிகளே என்பதாகும். வலிக்கிறது. ரணசிங்கத்தின் மகன் துரைசிங்கத்தை மீண்டும் வளர்த்து திரும்ப நிறுத்துவாள் அத்தை மாயழகி என்றும்.... பிரிட்டிஷ் அரசு திட்டத்தின்படி... அவர்கள் அந்தமானுக்கு கடத்தப்பட்டார்கள் என்றும் கதை முடிகிறது.
வென்றது பிரிட்டிஷ் அல்ல. அவர்கள் ரணசிங்கம் என்ற ஒரு மாவீரனுக்காக பயந்தார்கள் என்பதே முற்றிலுமான உண்மை. துரைசிங்கம் போல் யாரோ மீண்டும் வந்ததால்தான் நாம் இன்று சுதந்திர இந்தியாவில் சுவாசித்துக்கொண்டிருக்கிறோம்.
இந்தியர்கள் படிக்கவேண்டிய வரலாறு, குறிப்பாக தமிழர்கள்.