Jump to ratings and reviews
Rate this book

வீரயுக நாயகன் வேள்பாரி #1

வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி

Rate this book
"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு, யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.

நிலம், இயற்கை, பண்பாடு, நீதி, விழுமியங்கள் யாவும் விற்பனைப் பண்டமாக மாறிக்கொண்டிருக்கும் சூழலில், ஒரு தாவரத்தைக் காட்டிலும் பெருந்தச்சர்கள் ஆக்கிய தேர் பெரிதில்லை என்பதறிந்த இயற்கையாளன் பாரி, மீளாக்கம் செய்யப்படுவது காலத்தினால் நிகழும் அற்புதம்.

தமிழரின் நாகரிகம், சிந்தனை மரபு, இயற்கை அறிவு, விஞ்ஞானம், கலை இலக்கிய நுண்திறன், வீரம், காதல், வாழ்வு என பெரும் வரலாறு ஒன்றைப் புனைவின் துணையோடு கவிதையின் மொழியில் சித்திர நுட்பத்தில் ஆக்கித் தந்திருக்கிறார் சு.வெங்கடேசன்.

மொழியாலும் புனைவாலும் மதம்பிடித்த ஒருவரால் மட்டுமே இப்படியொரு காவியத்தை உருவாக்க முடியும்.

வரலாறு, இலக்கியத்தின் வாயிலாக இத்தனை அரசியல் சரிநிலையோடு மீளுருவாக்கம் செய்யப்படுவது நவீன சூழலில் இதுவே முதல்முறை.”
- வெய்யில்

608 pages, Hardcover

First published January 1, 2016

459 people are currently reading
4243 people want to read

About the author

Su. Venkatesan

8 books282 followers
Su. Venkatesan (சு. வெங்கடேசன்), also known as S. Venkatesan, is a Tamil writer from Tamil Nadu, India and Tamil Nadu State Committee member of Communist Party of India (Marxist). His debutant novel Kaaval Kottam published in 2008 was awarded the Sahitya Academy Award for Tamil in 2011. The Tamil film 'Aravaan' is based on it. The Sahitya Academy-winning writer is also the president of the Tamil Nadu Progressive Writers Association. His second novel 'Veerayuga Nayagan Velpari' was serialised in Tamil popular magazine Ananda Vikatan. 'Veerayuga Nayagan Velpari' is the second Novel after Ponniyin Selvan to make a big craze between the readers at that time.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1,071 (76%)
4 stars
211 (15%)
3 stars
61 (4%)
2 stars
26 (1%)
1 star
27 (1%)
Displaying 1 - 30 of 186 reviews
Profile Image for Gowtham Ramachandran.
11 reviews4 followers
August 11, 2021
Velpari Volume 1 Flora and fauna!

1. நாக்கறுத்தான் புல்
2. ஏழிலைப்பாலை.
3. தேறல்
4. சந்தன வேங்கை
5. சிலாக்கொடி
6. தனைமயக்கி (no info)
7. திரளி மரம்
8. நரி நாவல், கொடி நாவல் சிறுநாவல், பூ நாவல்
9. அணிவால் திணை (no info)
10. மகர வாழை
11. காக்காவிரிச்சி
12. ஈச்சமது
13. அறுபதாம் கோழி
14. தீப்புல், அத்தாபொருத்தி மூலிகை
15. புன்னை மரம்
16. அசுணமா பறவை
17. கொன்றை மரம்.
18. தாளி மரம்
19. வேலா மரம்
20. வெக்காளி மரம்.
21. நிழல் விரியன் (extinct)
22. கரு விரியன் (no info)
23. நாவி பூ ( no info)
24. கட்டைவிரியன் ( no info)
25. குறு விரியன்( no info)
26. மலஞ்சாரை ( no info)
27. செம்மண்ணுளி (no info)
28. எரி விரியன் பாம்பு (no info)
29. ஊது சுருட்டை
30. நண்டுதின்னி நாகம் (no info)
31. வெண்சாரை (no info)
32. குருதி பனையன் (no info)
33. பச்சிலை விரியன் (no info)
34. ஆலா பறவை
35. சக்கரவாகப் பறவை
36. வெருகு பூனை (https://www.dinamalar.com/supplementa...)
37. நொச்சி இலை
38. துலா முள்
39. நுணா மரம்
40. நெருஞ்சி பூ (அ) ஞாயிறு திரும்பி
41. சென்றிக் கொடி (no info)
42. வண்டுகடி மரம் (no info)
43. சாமப்பூ
44. தில்லை மரம்
45. பால்கொறண்டி
46. அண்ணமழகியரிசி
47. கானவெள்ளெருக்கு
48. செங்கடம்பு மலர்
49. நரந்தம் புல்
50. மயிலம் மலர்
51. எருவை பூக்கள்
52. எறுழம் பூ
53. கூதாலி மலர்
54. செங்காந்தள்
55. கொன்றை மரம்
56. ஈங்கை மலர்
57. தாழை மரம்
58. முள்ளி மாமலர்
59. அழிச்சி
60. அவரி
61. சுள்ளி
62. இரும்பைப்பூ
63. இலும்பை
64. ஊகம் பூ
65. வாகை மரம்
66. கரந்தை செடி
67. சுண்டா பூனை
68. ஈருவள்ளி மரம்
69. 'விருக மரம்
70. கருங்கொண்ட வல்லூறுகள்
71. அழுகுரற் பறவை
72. கருஞ்சுரைக்காய்
73. கமரி புல்
74. வரிப்புலி
75. வேங்கை புலி
76. முக்கொற்றிக்கோரை
77. முகறுப்புல்
78. வாட்கோரை
79. சிவப்பு மூக்கு ஆக்காட்டி
80. அனுவல்லிப்பூண்டு
81. உக்காமூங்கில்
82. உப்பறுக்கஞ்செடி
83. எருக்கு நார்
84. மலைப்பருத்தி இலை
85. இச்சி பிசின்
86. சுண்டா பூனை
87.காஞ்சிைரை மரம்
88. நத்தைசூரி
89. திங்கள் மூலிகை
90. தில்லை மரம்
Profile Image for Sabari.
32 reviews9 followers
January 28, 2019
‘வள்ளல் தன்மை என்பது நிர்வாகத்திறமை அல்ல, அது குழந்தையின் குரல் கேட்ட கணத்தில் பால் கசியும் தாயின் மார்பைப் போன்றது.’

‘வேள்பாரி’ நாவலிலிருந்து எழுதியவர் ‘சு.வெங்கடேசன்’.

உலகில் உள்ள அத்தனை மனிதனின் தேவைக்கும் பூமியில் இடம் உள்ளது. ஆனால், ஒரே ஒரு தனி மனிதனின் பேராசைக்கு இந்த மொத்த உலகமும் போதாது. என்ற ஒரு வரியை ஆயிரத்து நானூறு பக்கங்களில் விரித்து சொல்லும் ஒரு முழுமையான நாவல் இது.

முருகன் இதுவரை மாம்பழத்திற்கு சண்டை போட்ட ஒரு சிறு பிள்ளையாக சொல்லப்பட்டிருக்கிறான். போர்க்கடவுளாக சொல்லப்பட்டிருக்கிறான், ஆனால், அவன் குறிஞ்சி நிலக் கடவுள். குறிஞ்சி நிலம் காதலுக்குரியது. கதைகளில் முதல் தடவையாக அவன் காதல் சொல்லப்பட்டிருக்கிறது. முருகன் என்ற தொன்மமே மாற்றி எழுதப் பட்டிருக்கிறது.

அதிசய மரங்கள், பூக்கள், செடிகள், விலங்குகள் இதனைக் கையாளும் மனிதர்கள் என ஒரு புதிய உலகை காட்டும். வானியல், சிற்பம், மொழி, மருத்துவம், வணிகம், அரசியல், போர் என பல களங்களை தொட்டு சொல்கிறது.

பெரியவர்கள் படிக்க வேண்டும். குழந்தைகள் கண்டிப்பாக படிக்க வேண்டும்.

‘அறம் காக்கும் தெய்வங்கள் எம்மை ஆளட்டும், எம் மண்ணை ஆளட்டும், எம் மக்களை ஆளட்டும்.’
1 review
May 21, 2020
“வாசகர் புத்தகத்தை அழைத்துவர முடியாது, புத்தகம் தான் வாசகரை அழைத்து வரும்” இந்த சொற்களுக்கு ஏற்ப இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு பைத்தியமாக திரியும் பலரைப் போலதான் நானும் இப்போது.. பொதுவாகவே புத்தகம் வாசிப்பில் ஒழுக்கம் இல்லாதவன் நான். அதனாலேயே இந்த புத்தகத்தை முடிக்க கால தாமதம் ஏற்பட்டது.ஒரு சிறந்த புத்தக வாசிப்பாளரெனில் இந்த நூலை முடிக்க ஒரு மாதம் காலம் எடுத்துக் கொண்டாலே மிகையானது. ஏனெனில் இந்தக் கதையின் வேகமும் தன்மையும் அத்தகையது. ஒரு நெடுந்தூர இயற்கையையும் அறத்தையும் அறியும் ஓட்டம் தான் இது.

இந்த நாவலை பற்றிய கட்டுரையை விரிவாக தொடங்குவதற்கு முன் முதலில் இந்த புத்தகத்தை எனக்கு அறிமுகப்படுத்தி என்னை தொடர்ந்து வாசிக்க வற்புறுத்திய திரு Venugopal Ramadasu, Samy Durai அவர்களுக்கும் நூலின் ஆசிரியர் #திரு_சு_வெங்கடேசன் அவர்களுக்கும் , கதை களத்திற்கு ஏற்ப உயிரோட்டமுள்ள ஓவியங்களை வரைந்த #திரு_மணியம்_செல்வம் (ம.செ) அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை கூறி உரையை தொடங்குகிறேன்.

"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்''- இந்த நாவலின் அடிநாதம் இதுவாகத்தான் இருக்கிறது. ''இயற்கைக்கும் மனித பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதி வடிவு'' - வேள்பாரி. இன்றைய காலகட்டத்தில் அதிக பாதிப்புக்கு உள்ளாவது காடுகளும் அறச்சிந்தனைகளுமே. இந்த தக்க தருணத்தில் இவ்விரண்டையும் இரு தோளில் சுமந்துகொண்டு பாரியின் வாயிலாக நமக்கு ஆசிரியர் உணர்த்திய விஷயங்கள் எத்தனையோ. கதையை நீலனில் தொடங்கி நீலனிலேயே முடித்திருப்பார் ஆசிரியர்.குறிஞ்சி நிலத்தில் பாரியின் தலைமையில் வாழ்ந்திருக்கலாமோ என்றெண்ணம் தோன்றியது ஒவ்வொரு பக்கத்தை முடிக்கும் போதும்..!

இம்மனித சமூகத்தில் இயற்கையோடு நெருங்கிய தொடர்புகொண்ட மலைவாழ் மக்களை ஏனோ இந்த உலகம் இன்னும் ஒரு சிறுபான்மைய, தாழ்த்தப்பட்ட கூட்டமாக, ஒரு வேடிக்கை பொருளாகத்தான் பார்க்கிறது. அவர்கள் இந்த சமூகம் வரையறுத்த நவ நாகரீக ரீதியில் வேண்டுமெனில் பின்தங்கி இருக்கலாம்..ஆனால் இயற்கை, காடுகள் , உயிரினங்களை பற்றிய அறிவை அவர்களை காட்டிலும் வேறு எவரும் இவ்வுலகில் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இயற்கையை கொண்டே அவர்கள் எவ்வாறு எதிரிகளை எதிர் கொண்டனர் என்பதற்கு தட்டியங்காடு , எழுவனாற்று போன்ற போர்கள் ஒரு சிறந்த சான்று. மலையகமக்களின் பூர்வீக வரலாறு முதற்கொண்டு அவர்தம் நடைமுறை வாழ்க்கைவரை ஒட்டுமொத்தமாய் வரைந்திருக்கும் ஆசிரியரை வெற்று வார்த்தைகளால் வாழ்த்திவிட முடியாது! இதற்காக இவர் எத்தனை ஆண்டுகள் முயற்சிகளைத் தொடர்ந்திருப்பார் என்பதை எண்ணாமலிருக்க முடியவில்லை!

முல்லைக்குத் தேர்தந்தான் பாரி என்கிற ஒற்றை வரியும், பாரி என்பவன் கடையேழு வள்ளல்களின் வழித்தோன்றலாய் விளங்கியவன் என்பதும், அங்கவை சங்கவை ஆகிய இரு மகளிரின் தந்தை என்பதும் கபிலர் எனும் மாபுலவர் தமது நண்பன் என்பது மட்டுமே இதுவரை யாம் அறிந்தது!!
கதையின் ஒவ்வொரு தருணமும் ஏதேனும் ஒருவகையில் தற்கால சூழ்நிலைகளோடு ஒப்பிட்டு தான் செல்லும். எங்கும் ஒரே மொழி ஒரே இனம் ஒரே மக்கள் என திரிந்து கொண்டிருக்கும் நவீன அரசைப் போல தான் அன்றும் ஒரே ராஜ்ஜியம் ஒரே மன்னன் ஒரே அரசாட்சி என வேந்தர்களும் இருந்தனர். அந்த பேராசையால் பல்வேறு இனத்தவரும் அவர்தம் வாழ்வியலும், பல்வேறு படையெடுப்புகளால் இன அழிப்புகளால் சிதைந்த அவர்தம் குடிகளும் அழித்தொழித்து நகர்ந்து கொண்டிருந்த வேந்தர்களுக்கு நடுவில் குலம் காக்கும் தலைவனாய் அந்தந்த குலத்தவர்கள் அவர்களின் கலாச்ச���ரங்களோடும் பண்புகளோடும் அவர்களாகவே வாழ வைத்த ஒரே தலைவனாய் நிற்கிறார் பாரி.!!

கதைக்குள் கதை என ஒவ்வொரு சிறுகுடிகளுக்கும் சொல்லப்படும் கதை நெஞ்சைப் பிளப்பதாக இருக்கும். பெரும் வணிகத்தின் பொருட்டு அடித்தட்டு மக்களை அடிமை ஆக்குவது அல்லது அடித்து விரட்டுவது என்பது காலங்காலமாக நடந்து வருகிறது என்பதை இதில் ரத்த பூச்சுடன் சொல்லியிருக்கிறார்.
தனது தேவைக்கு மீறி காடுகளில் கண்ணில் படும் எல்லா உயிரினத்தையும் வேட்டையாட நினைக்ககூடியது செந்நாய். மூவேந்தர்களும் அது போல தான் என்று பாரி சொல்லும்போது அந்த வலியும் ரனமும் இதயத்தை கிழித்தெடுக்கிறது.

இந்த நூலில் வந்த என்னை மிகவும் ஈர்த்த சில வரிகளை இங்கே மேற்கோள் காட்டுகிறேன்..

▪️“மனிதன் எடுக்கவேண்டிய முடிவைச் சட்டத்தின் கையில் ஒப்படைப்பது அறிவீனம்!”

▪️"விதியால் வார்க்கப்பட்டதுதான் அரசாட்சி. அதன் உறுதிக்கு மட்டுமல்ல, இரக்கமற்ற குணத்திற்கும் அதுவே அடிப்படை"

▪️“யாருடைய கவனத்தையும் சிதைக்கும் ஆற்றல் புகழுக்கு உண்டு”

▪️“வார்த்தை தரும் ஆறுதலை வேறு எதுவும் தருவது இல்லை மனிதன் முதிரும் போது தான் மனங்களைக் கையாளக் கற்றுக் கொள்கிறான்”

▪️"விதிகளும் அறவுணர்வும் எப்போதும் பொருந்திப் போவதில்லை. விதிகள் சமமான தோற்றத்தை உருவாக்க நினைப்பைவை. அறஉணர்வு, சமமற்றவற்றின் நியாயத்தைப் பற்றி நிற்பவை".

அறம்காக்கும் செயல் ஒன்றே தங்களின் தலையாய இலட்சியம் என்று பறம்புமக்கள் அனைவரும் அதைப் போற்றிப் பாதுகாப்பதும், ஒவ்வொரு செடியும் கொடியும் மரமும் பறம்பின் உடன்பிறப்புகளாய் விளங்க, பறவை இனம் முதல் அனைத்துவகை விலங்கினங்களும் தங்களின் தனித்துவ குணத்தால் காலம் கொடுக்கும் சில மணித்துளியில் தங்கள் பங்களிப்பைச் செலுத்தி பறம்பினைக் காக்கின்றன! போர் புரிகின்றன!!

எந்தப் பாத்திரமும் தனக்கான முக்கியத்துவம் இல்லாமல் இங்கே அடையாளப்படவில்லை! ஒவ்வொரு பாத்திரப்படைப்புகள் அவரவர்க்கு ஏற்ற வர்ணனைகள், அவர்தம் வீரம், செழுமை, வேகம், விவேகம் என அத்தனை சொற்களுக்கும் சொந்தக்காரர்களாக பறம்பின் வீரர்களின் ஒட்டுமொத்த படைப்பினைச் சொல்லலாம். பாரி, அவரது மனைவி ஆதினி, மகள்கள் அங்கவை, சங்கவை. நீலன் மயிலா , உதிரன், இரவாதன், முறியன், தேக்கன், வாரிக்கையன், காலம்பன், பொற்சுவை, அலவன், கிதானி, சுகமதி என இன்னும் ஏராளமான கதாபாத்திரங்களை கொண்டு கதையை எங்குமே நிறுத்த விடாமல் படிக்க வைத்துவிட்டார்!

பொற்சுவையின் பகுதிகளை வாசிக்கும் போதெல்லாம் அவளின் காதலனை அவளை விட நான் அதிகம் தேடி இருக்கிறேன்.
தன் சொல்லை நம்பாதவரிடம் - ''பறம்பன் ஒருபோதும் சொல் தவற மாட்டான்'' என்று வயிறு கிழித்து காட்டி இறந்த கடுவன், எழுவனாற்று போரில் செங்கனச்சோழனின் தொடைகளில் ஈட்டியை இறக்கி தன்னுயிர் நீத்த பிட்டன், காற்றையும் காற்றியையும் கணிக்க தெரிந்த இகுளிக்கிழவன், தன் குலத்தை அழிக்க வந்தவனை அவன் தலையில் வாள் இறக்கி மாண்ட காலம்பன் மகன் கொற்றன் , பாரி காலம்பன் சண்டையில் ஈட்டியை மார்பில் வாங்கி உயிர் நீத்த கிதானி,
உயிர் போகும் நிலையிலும் ஆட்கொல்லியை தேடிவந்து அதன் அடைக்கலத்தில் ஒரு சிறு படையை அழித்து தன்னையும் மாய்த்துக்கொண்ட பறம்பின் மாவீரன் வேட்டூர்ப்பழையன்,தம் குலம் காக்க தம் மாடுகளுக்கு பச்சிலை எரிச்சாற்றை தந்துவிட்டேனே’ எனக் கதறியபடி, மாட்டின் கொம்பை எடுத்து தொண்டை குழிக்குள் இறக்கி மாண்ட கோவன் , போரில் சிறப்பாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டவுடன் தன் உயிரையே இழக்க துணிந்த பறம்பின் ஆசான் தேக்கன், ஏற்ற பணிக்காக கடைசிவரை உயிரை துச்சமாக எண்ணி போராடி மடிந்த மாவீரன் இரவாதன்,தன் மகனை இழந்தபின்னும் தன் கலக்கத்தை மறைத்துக்கொண்டு போராடிய பறம்பின் தளபதி முடியன், எந்நிலையிலும் நிலைதடுமாறாமல், நீதி வழுவாமல் நடக்கும் நிலைமான்கோல்சொல்லிகள் கபிலர் மற்றும் திசைவேழர்.... அந்த அறம் வேந்தர்களால் தவறிய நேரத்தில், அறம் காக்க தன் நாழிகைக்கோள் குச்சிகளை எடுத்து நெஞ்சுக்குழிக்குள் இறக்கி மாண்ட திசைவேழர், அறம் காக்கும் பாரி ஒருபோதும் வேந்தர்களின் சூழ்ச்சியால் சாகக்கூடாது என்றெண்ணி தன்னுயிரை கொடுத்து காத்த பேரழகி பொற்ச்சுவை,.... யாரை போற்றுவது,யாரை விடுவது என புரியாமல் தவிக்கிறேன்.

மூஞ்சலுக்குள் இரவாதன் நுழைந்த கணம் முடியனை விட எனக்கு பதற்றமாக இருந்தது. இரவாதன் மூஞ்சலில் கவச வீரர்களை தாக்கி கொண்டே பொதியவெற்பன் தேர் மீது மூவிலை வேலை வீசி அவனை மண்ணில் சாய்ப்பது எல்லாம் சிலிர்க்கும் தருணங்கள்.அவனின் மரணம் எத்தனை முறை படிக்கும் போதும் கண்கலங்க வைக்கக்கூடியது. காட்டின் தலைமகனை இழந்து விட்டோமடா பாரி என்று சொல்லும் போதும், தேக்கனின் மரணத்தையும் கடந்து அடுத்த அத்தியாயத்திற்கு எளிதில் நகர்ந்து விட முடியவில்லை.
தீக்களியால் தீச்சுடர் அறியா மனிதர்கள், கூவல் குடியினரின் சீழ்க்கை ஒலி வலைப்பின்னல், எத்தகைய விஷத்தையும் முறிக்கும் வல்லமை கொண்ட நாகர் குடியினர், காதலை உயர்த்திப் பிடித்த எவ்வியின் நினைவாக எவ்வியூர், முறியன் ஆசானின் மருத்துவ முறைகள் , தட்டியங்காடு போரின் இறுதிநாளில் காலம்பனின் வெறியாட்டம் என்று இதுபோல எத்தனை எத்தனை விழி விரியும் காட்சிகள்...!!!

தனக்காக உயிர் நீத்தவர்களுக்காக தட்டியங்காடு போர் முடிந்த கொற்றவை நாளில் தேக்கன் , இரவாதன் , பொற்சுவை & திசைவேழர்க்கு செய்த மரியாதைகள் மெய்சிலிர்க்கும். அதற்கு அடுத்து பாரி சொன்ன வரிகள்….

🔴🙏 "அறங்காக்கும் தெய்வங்கள் எமது நிலத்தை ஆளட்டும். எம்மக்களை ஆளட்டும். எம்மை ஆளட்டும்"!!!

எந்த குலத்தின் கதைகளை சுற்றிவந்தாலும் அது காதலை மைய்யப்படுத்தியே சுழல்கிறது...
முருகன் – வள்ளி , பாரி – ஆதினி, கோவன் – செம்பா, சூலிவேள் – தூதுவை, நீலன் – மயிலா, உதிரன் – அங்கவை எல்லாம் தனித்துவமான காதல் நினைவுகள். அனைத்திலும் சிறந்தது முருகன் - வள்ளி , பாரி – ஆதினி காதல் நினைவுகளும் உரையாடல்களுமே!!.

பாரி - ஆதினியின் காதல் கணங்களின் தடயங்களை அடுத்தவர் பார்க்க கூடாது என்று தவிக்கும் பாரியின் தவிப்பு தான் காதலின் ஆக சிறந்த பரிசாய் உணர்வாள் அதினி!!!, இதைவிட சிறப்பாய் காதலை எழுதி விட முடியாது என்றே தோன்றியது..
வேள்பாரி தனது மகள் அங்கவையின் காதலை அணுகிய விதம் அதேபோல நீலன் மயிலா காதல் திருமண கொண்டாட்டங்கள் ... என வேள்பாரி காதலை ஒரு கொண்டாடத்தின் அளவீடுகளாக இல்லாமல் காதலை அதன் உன்னத தன்மையை கொண்டு மதிப்பீடு செய்கிறது. பறம்பு நாட்டில் எங்கும் அன்பே ஓங்கி நிற்கும், அதை கபிலர் பறம்பில் கால் வைத்த முதல் நாளில் இருந்து ஒவ்வொரு தருணமும் உணர்ந்து கொண்டே இருப்பார்...
மனிதன் காதலை அழைத்துவர முடியாது காதல்தான் மனிதனை அழைத்துவர முடியும்...

வேந்தர்களை பொருத்தமட்டில் , அதிகாரங்கள் ஓங்கி இருக்கும் இடங்கள் அனைத்திலும் " பெண்" என்பவளும் " காதல்" என்பதும் அங்கே வெறும் காட்சிப் பொருள் மட்டுமே ... அதற்கு பொற்சுவையின் திருமண நிகழ்வுகளும் அதற்குப் பின் நடந்த சில சம்பவங்களுமே சான்று...காதலின் மகத்துவம் அறியாதனாலே காமன் விளக்கு ரகசியம் அவர்களுக்கு புலப்படவில்லை.. அதிகாரம் ஓங்கி நிற்கும் இடத்தில், அன்பும் சமத்துவமும் நிலைப்பதில்லை.

தனைமயக்கி மூலிகையும் கொல்லிக்காட்டு விதையும், காதல் சின்னமாக ஏழிலைப்பாலைமரம், வெற்றியின் வடிவமாக வெற்றிலை, ஆனந்தக் கூத்தி���் உச்சமாக சோமபானம், சுவையின் உச்சமான அருபதாங்கோழி, இயற்கை ஆயதங்களாக தோகைநாய்கள், காக்காவிரிச்சி, ஆளி, சுண்டாப்பூனை , இனிப்பின் அச்சாக கரும்பாகுடியினரின் கரும்பு, பல்சுவை முகவராக நாவல் பழங்கள், மரணத்தின் உருவாக ஆட்கொல்லிமரம், இயற்கை ஒளிக்கீற்றாக இராசுவரி மரம், என்று இயற்கை வலைப்பின்னலில் சூழ்ந்துள்ளது பறம்பு மலை. சங்கு அட்டைகளும்,கல்லூழி அம்புகளும்,ஒங்கல மூங்கில் அம்புகள்,என்று நீண்டு கொண்டே போன போரின் யுக்திகள் என் நினைவுக்கு எட்டாத சுவாரஸ்யமானவை. போகிறபோக்கில் கதையோடு சொல்லப்படும் மூலிகை வகைகளும் விலங்கின் ���கைகளும் உண்மையா பொய்யா என்பதை தாண்டி இப்படியெல்லாமா நம் முன்னோர்கள் வாழ்ந்திருப்பார்கள் என்று நினைக்க வைக்கிறது.

இயற்கையை பற்றிய சிறந்த வரிகளில், நான் எடுத்த சில:

▪️“இயற்கையை ஆள்வதற்காகத்தான் வெல்ல முயல்கிறோம். வெல்வதற்காகத் தான் அழிக்க முயல்கிறோம். அந்த அழிவுதான் அரசாட்சியின் சாட்சி"

▪️“பகிர்ந்து உண்பதும், பரிமாறி வாழ்வதும் இயற்கை நமக்கு கற்றுக் கொடுத்தவை. இயற்கை வழங்குகிறது நாம் வாழ்கிறோம் இடையில் விற்க, வாங்க நாம் யார்?.”

▪️“வணிகம் இயற்கைக்கு விரோதமானது. பரிமாற்றம் என்பது தேவை சார்ந்தது. வணிகம் என்பது ஆதாயம் சார்ந்தது. ஆதாயம் மனிதத் தன்மையற்றது”

▪️"கூடு என்பது, பறவைக்கான தங்கும் இடம். வானம்தான் வாழ்விடம்."

▪️“முளைத்தது விளையும்... விளைந்தது கனியும். அதற்கு எதிராக எதுவொன்றையும் பக்குவப்படுத்தி விளையவைக்கவும் முடியாது பதப்படுத்திக் கனியவைக்கவும் முடியாது. அதுதான் 'இயற்கை'”

▪️“விதையை நடாதவன் கிளையை ஒடிக்க இயற்கை அனுமதிக்காது”

▪️“இயற்கையை அழிப்பவரை இயற்கை அழிக்கும்.”

ஒவ்வொரு இக்கட்டான தருணங்களின் போதும் இயற்கையை கொண்டே அதை சமாளிப்பதுதான் பறம்பு மக்களின் திறமை. சுண்டாம்பூனை, திகைப்பூச்சி, அணலி, நூபுரவண்டு நம் கற்பனைக்கும் எட்டாத கதைக்களம் இது. இந்தக் கதையின் அடித்தளமே தேவாங்குதான்! அழகின்மையை குறிக்கும் தேவாங்கு என்ற சொல்லே தெய்வ வாக்கு விலங்கு என்பதில் இருந்து மருவியதுதான் என்று சொல்லி அதன் தனித்தன்மையை சொல்லி அதன் பொருட்டே இறுதி யுத்தம் நடைபெறுகின்றது.

அன்பை மட்டுமே ஆயுதமாக கொண்ட பாரியையே ஆவேசம் கொண்டு ஆயுதம் ஏந்த வைத்த அந்த கடைசி சில அத்தியாயங்கள் ருத்ரதாண்டவம்தான். பாரி எரிமத யானையாய் எறுழ்தடியை கொண்டு தாக்க தொடங்கும் கணம், நானும் அவனுடன் அருகில் ஆயுதம் சுமந்து ஓடினேன். மையூர்க்கிழார், சோழவேழன் & பொதியவெற்பனை கொன்ற தருணங்கள் நான் பறம்பு மக்களில் ஒருவனாய் நின்று ரசித்தேன்.

தியாகம் செய்தவர்களை தெய்வமாக கொண்டாடும் கொற்றவைக் கூத்தொடு முடிகிறது கதை. ஆனால் கதை முடிந்தபின்னும் அந்தப் பறம்புக் காட்டுக்குள் இருந்து வெளியே வர மறுக்கிறது மனம்.

மொத்தத்தில் வேள்பாரி = அறத்தின் உச்சம்❤ அனைவரும் ஒரு முறையேனும் வேள்பாரியை சு(வா) சிக்க வேண்டும்.🙏 அறத்தின் அழிவுக்கான காரணம் நமது வாழ்வின் மீது படியுமேயானால் அதைவிட இழிவு வேறு இல்லை..

வரலாறு எப்போதும் புனைவுகளாலேயே சுவாரஸ்யம் பெற்று முழுமையடைகிறது. வரலாற்று சாட்சியங்களோடு புனைவாகவே இந்த நூல் உருவாக்கப்பட்டிருப்பினும் , அது இயற்கை மற்றும் அறம் பற்றிய ஒரு நற்புரிதலை தந்து மனித மேம்பாட்டுக்கு வழி வகுக்குமெனில் அதனை தூக்கி கொண்டாடுவதல் எ‌ந்த தவறுமில்லை.

இன்னும் இன்னும் எழுதலாம் என்று எத்தனையோ இருக்கிறது. எனினும் இதுவரை இந்நூலினைப் படிக்காதவர்கள் படித்திட வேண்டும் என்கிற ஆவலை உண்டாக்கினால் மட்டும் போதுமென்பதால் வார்த்தைகளுக்கு இங்கே திரையிடுகிறேன்!

வாழிய பறம்பின் பெருமையும்!!! பாரியின் புகழும்!!!

இறுதியாக “பனையன் மகனே!! ” பாடலின் சில வரிகளோடு இந்த கட்டுரையை முடிக்கிறேன்...

"பனையன் மகனே! பனையன் மகனே!
பல்லுயிர் ஓம்பும் பாரி வேளே!
தினையின் அளவே பிறவுயிர் வாடினும்
துடித்துக் காக்கும் தொல்குடி வேந்தே! – நின்

பறம்பு நிலமும் படர்ந்த காடும்
தவழும் காற்றும் தழலும் வானும்
அண்டுவார் தம்மை அணைக்கும் தாய்மடி!
அளவிலா அன்பைப் பொழியும் தொல்குடி!

பனையன் மகனே! பனையன் மகனே!
பல்லுயிர் ஓம்பும் பாரி வேளே!
தினையின் அளவே பிறவுயிர் வாடினும்
துடித்துக் காக்கும் தொல்குடி வேந்தே!"

#Gopinath_K
Profile Image for Gautami Raghu.
229 reviews22 followers
April 4, 2024
First read in 2022:
காலங்களாக மூவேந்தர்களைப் படித்தும், அறிந்தும் கொண்ட வியப்பும், பெருமையும் இன்று சிதறித் தெறிக்கச் செய்தது இப்படைப்பு! சிறிய குலங்களின் அறிவாற்றலை உடைத்து, பறித்து, அழித்து வளர்க்கப்பட்ட வேந்தர்களின் அரசாட்சி எப்பெரிதாயினும் அது மடுவிற்குச் சமமே! இயற்கைக்கு விஞ்சியது ஏதுவுமில்லை என்பதை நங்கூரம் கொண்டே மனதில் ஆழமாய் நிலை நிறுத்துகிறார் ஆசிரியர்.
இயற்கையை ஆதாயமாய்க் காணும் வேந்தர்களும், இயற்கையே வாழ்க்கை என்றியங்கும் வேளிர்களும் இக்கால நகர்வாழ் மக்களும், கிராமவாசிகளுக்குமான ஏற்ற உவமை. பாரியையும் பறம்பையும் கண்டு விக்கித்த வண்ணம் சிந்தித்தேன். வார்த்தைகள் இல்லை அச்சிறப்பினை விளக்க! தமிழனாய் பிறந்த ஒவ்வொருவரும் படித்துக் களிக்க வேண்டிய காவியமன்றோ இது!

கல்கியின் சில பிரபலமான புதினங்களை வாசித்த பிறகு தோன்றியவை:
எப்புதினத்தை வாசித்தாலும் வேள் பாரி அளவிற்கு இல்லையே. அதற்கு ஈடாகுமா என்றே எண்ணுகிறேன் (பாரியின் ஆற்றலும், ஆசிரியரின் மொழி வளமும்). வேள் பாரியும் பறம்பும் என்னோடு ஒன்றியவை ஆகி விட்டன.
கல்கி இராஜா தந்திரத்தை அழகாக விவரிக்கிறார். அவை யாவும் மக்கள் எப்பிடி இருக்கிறார்கள் என்பதற்குச் சான்று. வேள் பாரியோ ஒரு படி மேலே! மனிதர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்குச் சான்று. போட்டி, பொறாமை, மண்ணாசை எதுவுமின்றி இயற்கையோடு ஒத்த வாழ்க்கையே அசல் ஆகும், உன்னதமாகும். அப்பெரும் உணர்தலை உயிரோட்டமாய்க் காண்பித்த வேள் பாரி என்றென்றும் தலை சிறந்த தலைவன் ஆவான், அப்பெரும் படைப்பு தலை சிறந்த புதினம் ஆகும்!

Re-read in 2022: No book has impacted me more than Vel Paari! This book still gives me the same chills, goosebumps and dilated pupils though it's a re-read. The difference between a want and need cannot be more clearly depicted! It is one book which fights for the rights of every living creature. That is something out of the world. It definitely changes a reader's view of life altogether. Vel paari is too special and too close to heart! Would love to dwell in Su.Ve's words in the land of Parambu over and over again❤️ One definite goal is to read all other Su.Ve books in 2023.
Profile Image for Arvind Srinivasan.
326 reviews18 followers
May 7, 2019
Velpari a novel that gave the impact of how people in TN would be when ponniyin selvan got released. Though it came in a weekly for almost 100 weeks we could keep track of the story for those 100 weeks such was the impact of the novel. In this fast world achieving such an impact requires an absorbing story line, interesting facts, different plot, good detailing and lots of research. The novel has all of them.

The things that made me awestruck in part 1 are the following :
1. Explaining the life of people living on ghats
2. Their fitness, food habits and living habits
3. Their knowledge on nature and love they show on each being
4. Knowledge of kings on astrology - stars - time
5. Reason behind importance being given for karthigai star
6. Explanation on how time was calculated during those period
7. Kings difficulty in trade, how and why they used and traded people
8. Festival celebration in ghats and how different it will be
9. Practices followed to educate younger generation to know about forest, hill and nature
10. Fighting techniques used and how even animals can be used in the way we want without their knowledge
11. Different kinds of plants, animals and birds that lives in forest
12. Messaging technique followed by people in forest
13. Artistic knowledge of people who give gifts and the pun on it
14. Cunning attitude of big dynasties to tame people and extend their border
15. Medicinal knowledge of people and how easily they use them without big fuss on the happening

All of these made this book a stand out. Almost 2 years have past and still I remember them (though not in detail) shows what metal the book is made of. Go for it, a must read. U will be taken to different world, enjoy the experience / ride.
Profile Image for Saranya Dhandapani.
Author 2 books173 followers
September 4, 2023
#213
Book 54 of 2023- வேள்பாரி
Author- சு.வெங்கடேசன்

“காலம் ���ைகையின் சாட்சியாகச் சொல்லும் செய்தி ஒன்று தான்.எந்தக் கணமும் நீ தாக்கப்படலாம்.ஆனால்,அதற்கு முந்தைய கணம் உன்னுடையது.”

சேர சோழ பாண்டியர்கள் பற்றி சிறு வயதிலிருந்தே நிறைய படித்திருக்கிறேன். பாரியைப் பற்றி கேள்விப்பட்டதுண்டு, ஆனால் ஒரு முழு கதையையோ,புனைவுக் கதையாகவோ படித்ததில்லை. “வேள்பாரி”யைப் பற்றி கேட்ட நாளில் இருந்தே இந்த புத்தகத்தை படித்தே ஆக வேண்டும் என தீர்மானித்து இந்த ஆண்டு இதை படிக்க நேர்ந்தது.

“வள்ளல் தன்மை என்பது நிர்வாகத்திறமை அல்ல,அது குழந்தையின் குரல் கேட்ட கணத்தில் பால் கசியும் தாயின் மார்பைப் போன்றது.”-அது தான் பாரி! “பாரி” என்னும் சகாப்தம்! சாகித்த அகாதமி விருது பெற்ற புத்தகம்.

பறம்பு நாட்டின் மன்னன் தான் பாரி! அவனைப் பற்றிய கதை மட்டுமல்ல இந்த புத்தகம். குறிஞ்சி நிலம், முருகன், காடுகளில் எழில்,இயற்கையின் வனப்பு,என எல்லாவற்றைப் பற்றியும் அழகாக இதில் எழுதப்பட்டிருக்கிறது. “முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி” என்ற வரியை அறியாத தமிழர்களே இல்லை!

வேள்பாரி என்பது பறம்பு நாட்டின் (மேற்குத் தொடர்ச்சி மலை) 16 குலங்களில் ஒன்றான வேளிர் குலத்தைச் சேர்ந்த ஒரு பழங்குடித் தலைவரைப் பற்றியது. வேள்பாரி அவர்களின் பெருந்தன்மைக்கு பெயர் பெற்ற சங்க இலக்கியத்தில் புகழ்பெற்றவர். சங்கப் புலவர் கபிலர், பாரியைப் பற்றி அறிந்து, அவரைப் புகழ்ந்து பாடல்கள் எழுதி, அவருக்கு நெருங்கிய நண்பரானார். தேர் கொடுத்தவர் என்று ஒற்றை வரியில் மட்டுமே அறியப்படும் வேள்பாரியை தமிழ் இலக்கியத்தில் முதன்முறையாக உயிர்ப்பிக்க சங்க இலக்கியத்தை முக்கிய ஆதாரமாகக் கொண்ட வரலாற்றுப் புனைவு இது.

முதல் பக்கத்தில் இருந்தே நம் அனைவரையும் பறம்பு நாட்டுக்கு அழைத்துச் செல்கிறது இந்த புத்தகம். இதன் எழுத்துநடை தான் இந்த புத்தகத்தின் பெரிய பலம். எல்லா தரப்பட்ட வாசகர்களுக்கும் புரியும் வகையில் அழகான,எளிமையான மொழிநடை! சங்கக்கால மக்கிளின் வாழ்க்கை முறையும்,அவர்களுக்கு இயற்கையோடு இருக்கும் தொடர்பும் நம்மை பொறாமைப்பட வைக்கிறது.

பாரி மனித சக்தி மற்றும் செல்வத்திற்கு எதிராக தனது மிகக் குறைந்த வளங்களைக் கொண்டு எப்படிப் போரிட்டார் என்பதை படிக்கையில் sheer awe element! பாரியைப் பற்றிய புத்தகமாய் மட்டும் இது இல்லாமல் கூகுளில் பார்க்க முடியாத தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் (சங்க இலக்கியத்தில் சில வார்த்தைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது) பற்றிய விரிவான மற்றும் தெளிவான விளக்கங்கள் புத்தகத்தை ஒரு அசாதாரணமானதாக ஆக்குகிறது.

இது உண்மையா இல்லையா, இது புனைவுக் கதையா என்ற விவாதங்கள் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இது கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் என்பதில் மறுப்பேதும் இல்லை! மணியன் செழியனின் ஓவியம்-கூடுதல் அழகு!!


Profile Image for Poonkuzhali.
20 reviews
January 5, 2023
படித்ததில் மிகவும் பிடித்த புத்தகம். சங்கக்கால மக்களின் வாழ்க்கை முரையும், அவர்களின் இயற்கைப் பற்றிய அறிவும் படிக்க படிக்க ஆச்சரியமளிக்கிறது. ஒவ்வொரு குலத்தின் கதையும் மனதை நெகிழ வைக்கிறது. 100 star வழங்க வேண்டிய புத்தகத்தற்கு 5 மட்டுமே வழங்க முடியும் என்பது என்ன நியாயம்? சரி போகட்டும், இயற்கை வளம் நிரம்பிய இ்ப்புத்தகத்திற்கு மனதளவில் 100 starஉம் goodreads இல் 5 starஉம் வழங்குகிறேன்
Profile Image for Dhevaguru S.
71 reviews7 followers
December 15, 2022
The hero of this fictional story might be the mighty and valiant ancient tribal king of velir clan, Velpari who ruled over Parambunaadu who is known for his kindness and patronage as he was one among the last great seven patrons (kadaiyezu vallalgal) of sangam era, but the hero of this book was the Parambu itself ! I was flabbergasted with the overwhelming descriptive details of the flora and fauna of Parambu, which were thoroughly researched and put down in the form of words that lays a strong foundation for the world building of this story. If flora and fauna of Parambu alone is capable of blowing your minds, then the intriguing customs, rituals and lifestyle of Parambu tribe will fascinate you further to the extent that it will completely engulf your mind with its every minute detail and immerse yourself into the ancient lands of tamilnadu, among the ancient tamil tribe and taking you back to the sangam ages. Considering that this is a fictional take, the aforementioned details could've been subjected to amplification in the process of fictionalisation, to become more nuanced, it definitely serves its purpose and adds up to the reading experience as it enhances the imagination of the reader even if it was an average reader with limited imaginative capabilities like me. While the first 300 pages were fluctuating with its pace as it was compiled of multiple flashbacks and different narratives taking place at different times, to set up the world and background of the story which i spent two and half months reading on and off, the last 300 pages went swiftly as a racing horse, due to its suspense, emotional, adrenaline rushing actions and adventures that were focused on a single gripping and engrossing narrative which i was able to complete in a single week. Unlike Ponniyin Selvan which glorified great dynasties such as Cheras, Chozas and Pandyas, this book is a paradigm shift that offers a different perspective through the lens of tribal and small kingdoms of ancient tamilnadu putting such dynasties in a negative shade, it does succeeds in this perspective change as it gets the readers to empathise with it, even making it an emotionally provoking story. I'm immediately picking up the next part as this part ended in the peak of its events like a cliffhanger.
Profile Image for Soundar Phil.
129 reviews12 followers
November 5, 2023
பாரெங்கும் போற்றப்படும் சிறப்பு கொண்ட கவி கபிலர்.

சிறுகுடி மன்னன் செம்பனின் வாய்மொழி மூலம் அறிந்த பாரியை நேரில் சந்திக்கும் பொருட்டு மேற்க்கொள்ளும் பயணத்தில் பறம்பு மக்களின் வாழ்வு முறை, அவர்களின் தலைவன் மீது அவர்கள் கொண்டுள்ள அபரிபிதமான நம்பிக்கைகள் என வழிநெடுகிலும் ஒவ்வொரு நிகழ்வுகளும் தான் ஆட்சிச் செய்யும் பறம்பு மலையினும் உயர்ந்த மக்களின் மனதில் வீற்றிருந்த பாரியை சந்தித்தலும், நட்பு கொண்டாடுதலும், விருந்தோம்பலும், அன்பும் கபிலரை அந்த இடம் விட்டு நீங்காது நிலைக்கொள்ளச் செய்கிறது.

அந்நாட்களில் பறம்பின் மலைகளும், காடுகளும், குன்றுகளும், குகைகளும், செடிகொடிகளும், காய் கனிகளும், மருத்துவ முறையும், உணவுப் பழக்கமும், அன்றாட வாழ்வு முறையும், குல வழக்கங்களும், கணித மற்றும் வான்வெளி பற்றிய அறிவும் என தினந்தினம் கபிலருக்கு புது வியப்பைத் தருகின்றன.

மூவேந்தர்களின் அவைகளிலும் தன் கவியால் வலம் வந்த கபிலர், அவர்கள் மூவரின் அன்பையும், கொடையையும், மாண்பையும், வீரத்தையும், அறிவையும் மிகச் சாதாரனமாய் விஞ்சி நிற்கும் வேள்பாரியைக் கண்டு வியக்கிறார்.

இவர்கள் காதலையும், கடவுளையும் இயற்க்கையின் வழியாகவே காண்கின்றனர்.

இந்தக் பெருங்கதைக்குள் சின்னச் சின்னதாய் எத்தனையோ சிறுகதைகள் நம்மை மேலும் உள்ளிழுக்கும். அழிக்கப் பட்ட குலங்களும், வஞ்சிக்கப் பட்ட மக்களும், மாண்டு போனவர்கள் போக மீண்டு வந்தவர்கள் அவர்களின் குலக்கதையை கொற்றவை கூத்தில் சொல்லி செல்லும் எத்தனையோ குலங்களைக் காணலாம், அக்குலத் தலைவர்களின் மேன்மையும், வீரமும் சொல்லில் அடங்கா..,

இப்படிபட்டக் கூட்டத்திற்க்கு ஆபத்து இல்லை என்று சொன்னால் தான் ஆச்சரியம்.

அடுத்த அத்தியாயத்தில் தொடங்கும் வஞ்சகர்களின் சூழ்ச்சியும் பறம்பு நாட்டின் பெரும்புகழும்.
Profile Image for Kalaiselvan selvaraj .
134 reviews18 followers
July 4, 2021
வீரயுக நாயகன் வேள்பாரி முதல் தொகுதி இருபாகங்களை(குலப்பாடல், தேவவாக்கு) கொண்டது. அடிபொலி, சாரே கொல மாஸ், மரண மாஸ், பக்கா மாஸ், தெறிக்கவிடுது,.... இன்னம் இருக்க மாஸ் டயலொக் எல்லாத்தையும் சொல்லி நாம் புகழ இந்த கதைக்கு பொருத்தமான தகுதியிருக்கு. படிக்கும் போது நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் இடங்கள் பல உண்டு. சு.வெங்கடேசன் எழுத்தில் கதை சொல்ல, ம.செ(மணியம் செல்வம்) அழகிய ஓவியத்தின் வழியே நமக்குள் கதையை கடத்திவிடுகிறார். நல்ல ஒரு விருவிருப்பான கத. வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் வாசிக்கவும் -கலைச்செல்வன் செல்வராஜ்.

வீரயுக நாயகன் வேள்பாரி முதல் தொகுதியின் கதை சுருக்கம் :

வீரனோட கதைய கேளுங்கனு, பறம்பு நாட்டு வேளிர்குலத்தின் 42வது தலைவன் வேள்பாரியின் கதை. பல பணார்(புலவர்)கள் வேல்பாரியை அகம் மகிழ்ந்து புகழ்கிறார்கள். நாடு போற்றும் பெரும் புலவர் ஒலியை ஓவியாமக வடிக்கும் வித்தை அறிந்த(எழுத தெரிந்த) ஒரே புலவர் கபிலர், பலரும் பாரியை புகழ்வது கபிலருக்கு நம்பும்படியாக இல்லை நானே பறம்பு நாடு சென்று என் கண்கொண்டு பாரியை அறிகிறேன் என்று சொல்லி புறப்பட்டார் பறம்பு நாட்டுக்கு.

சூரிய ஒளி தரைதொடாத அடர்வனம், உயர்ந்த மலை குன்றுகள், அடர்ந்த காடுகள் இதை அரணாக கொண்டது பறம்பு நாடு. புதியவர் யாரும் பறம்பு மக்கள் துணையின்றி காடுகளை கடந்து பறம்புக்குள் நுழைய முடியாது. தேர் செல்ல பாதைகள் இல்லாத இடம். கபிலர் நடந்து செல்கிறார். பறம்பு நாட்டு வீரன்(நீலன்) ஒருவன் அவர் பறம்புக்கு போக உதவுகிறான்.
பாரி பெரும்புலவன் கபிலரை கண்டு உள்ளம் நெகிழ வரேற்று உபசரிக்கிறான். கபிலர் பாரியின் அறிவு, வீரம் கண்டு மெய்சிலிர்க்கிறார். பாரியின் வேண்டுகோளை ஏற்று கபிலர் பறம்பு நாட்டிலே தங்கி எழுத்து கற்று தருகிறார்.
பறம்பு நாட்டின் கொற்றவை கூத்து களத்தில் முற்றிலும் மறைந்து போன குலம் என நாடு முமுவதும் நம்பப்படுகிற குலங்களின் கடசி சில மனிதர்களை கண்டு பேச்சற்று நிற்கிறரார் கபிலர். அவர் நம்பமுடியாத, இதுவரை அவருக்கு தெரியாத பல கதைகளை தெரிந்துகொள்கிறார்.

வளம் நிறைந்த பறம்பு நாட்டில் மட்டுமே கிடைக்கும் கொல்லிக்காட்டு விதை சேர மன்னனுக்கு தேவைபடுகிறது, பறம்பின் தெய்வ வாக்கு விலங்கு(தேவாங்கு) திசை அறிய உதவும் என கண்டுகொண்ட பாண்டிய மன்னனுக்கு அது தேவைப்படுகிறது இரு வேந்தர்களும் யவன வணிகத்தில் முன்னேற இவை தங்களுக்கு பெரிதும் உதவும் என நம்புகின்றனர். ஆனால் பெரும் பலம் கொண்ட பாரியிடம் இருந்து இதை எப்படி பெறமுடியும்? பறம்பு நாட்டிற்கு எதிராக ஏற்கனவே போர் புரிந்து தேற்றான் சேரன்.

பாண்டிய மன்னன் தந்திரமான திட்டம் திட்டி தேவாங்கு விலங்கை கைப்பற்றி பாண்டிய நாடு கொண்டு வருகிறான். குலசேகர பாண்டியன் பாண்டிய நாடு இனி கடல் வணிகத்தில் யாரும் எட்டிப் பிடிக்க முடியாத இடம் நோக்கி முன்னேறும் என்று அளவிட முடியாத அக மகிழ்வை கொண்டாடி கொண்டிருக்கையில் பாரியின் சிறு படை வைப்பூர் துறைமுகத்தை நெருப்பில் தெறிக்கவிட்டு கொண்டிருந்தார்கள். முதல் தொகுதி இதேட முடிவடைகிறது. -கலைச்செல்வன் செல்வராஜ்.
Profile Image for Sandeep Rajamani.
9 reviews2 followers
July 9, 2019
As an avid reader of Tamil historical novels, I always had Ponniyin Selvan as the benchmark. Velpari, according to me is on par with Ponniyin Selvan if not a notch above it.

The novel begins with Kabilars travel to Parambu malai to meet Paari and his people. One of my favorite characters Neelan joins Kabilar and leads him to Paari. Neelan questioning Kabilar like a kid and his ignorance about poets and words is hysterical. Paari meeting Kabilar for the first time and deciding to carry Kabilar on his shoulders is one of many goosebump moments in the novel.

I have heard people address lean kids as Dhevangu. Not even in my dreams did I imagine this animal would have so much history that can bring a war.

The novel travels thru the world of various plants, flowers and animals. The author scores by explaining the significance of each plant and animals to this novel. Arubadham Kozhi, Sunda Poonai, Thogai Naai, Verti Elai, Naakaruthan Pul are few instances. My beloved characters apart from Paari and Kabilar are Neelan, Myila (Neelans lover), Uthiran, Angavai, Alavan, Keethani , Thekan, Mudiyan, Ravadhan, Kaalamban, Porchuvai, Thesai Vezhar, Karungai Vaanan and Ilamarudhan’s horse Aala.

Few of goosebump moments are Neelan asking Kabilar if the Ocean is bigger than Paari’s kindness,
Suulivel fetching Verti Elai to win Thuudhuvai’s love, Kaalamban’s reaction after knowing he was fighting with Paari, Neelan jumping onto horse Aala, Porchuvai’s visit to Kabilar, Thekan carrying Ravadhan in his hands.

This novel rich in Tamil history, ends in a war between Paari and Moovendhar. The war is basically between people who believe in equality and Virtue and people who want to destroy it.

Almost 500 pages of war sequence gives us precise and in-depth detail of planning and execution. Special kudos to Su Venkatesan for writing such a culturally rich novel. Equal appreciation to Manian Selvam as well for all those pictures.

Never a dull moment in this 1400 pages novel. Amazing narration!!!!
Profile Image for S. Suresh.
Author 4 books12 followers
July 8, 2022
குலப்பாடல்கள், தேவவாக்கு என்ற இரண்டு பாகங்களை உட்கொண்ட வீரயுக நாயகன் வேள்பாரி (முதல் தொகுதி) முதலில் சற்று மெதுவாகத்தான் துவங்குகிறது. சங்ககாலத்து தமிழர்களின் பழக்க வழக்கங்களையும், வாழ்க்கை விதிமுறைகளையும் புலவர் கபிலரின் கண்ணோட்டத்தின் மூலம் கதைக்குள் கதைகளாக அழகாக… இல்லை... இல்லை... அற்புதமாக சித்தரித்துள்ளார் எழுத்தாளர் சு. வெங்கடேசன் முதல் பாகமான குலப்பாடல்களில். இயற்கையுடன் ஒன்றி வாழும் பறம்பு மலை மக்களும், அவர்களுடைய தலைவனான பாரியும் (கவனிக்க வேண்டிய தலைப்பு: பாரி அவர்களுடைய அரசனோ, வேந்தனோ அல்ல; தலைவன். அவ்வளவே) மனதை விரைவில் ஆட்கொள்வார்கள். முருகன் - வள்ளியின் காதல் கதையும், கார்த்திகை விண்மீன் அமைப்பின் பெயரீடலின் கதையும் சுவாரசியமானவை. கொற்றவை விழா குலப்பாடல்களின் மூலம் மனிதர்களின் பேராசையினால் அழிந்த குலங்களின் கதைகளைப் படிக்கும் தருணம் கண்களின் நீர் சுரந்தால் ஆச்சரியமில்லை.

இவ்வாறு மெதுவாகவே துவங்கிய கதை இரண்டாம் பாகத்தில் விறுவிறுப்பாகிறது. பாண்டிய இளவரசனுக்கும், வணிகப் பெரியோனின் மகள் பொற்சுவைக்கும் நடக்கும் திருமணத்தில் பங்கு பெற வைகைக்கரையில் உள்ள மதுரைக்கு செல்கிறோம். சங்ககாலத்திலேயே பணம், பதவி, வணிகம், லாபம் முதலிய capitalism சார்ந்த எண்ணங்கள் நிலையூன்றியிருப்பதை சிறப்பாகச் சித்தரித்துள்ளார் வெங்கடேசன். ஆனால் இரண்டாம் பாகத்தின் உச்ச கட்டம் என்று கூறக்கூடியது பறம்பு மலையில் நிகழும் போரின் வர்ணனை. அதைப் படிக்கும் சமயம் பக்கங்கள் பறந்தன; தூக்கம் கலைந்தது. இரண்டாம் பகுதியான தேவவாக்கு வாசகர்களை வேளிர் தலைவன் பாரியாக, திரையர் தலைவன் காலம்பனாக, காடு அறியும் ஆசான் தேக்கனாக, இன்னும் பல்வேறு கதாபாத்திரங்களாக உருமாறி பறம்பு மலைக் காடுகளுக்கும் ஈர்த்துச் செல்லும் திறன் வாய்ந்தது.

மிகவும் சுவாரசியமான இடத்தில் கதையை நிறுத்தயுள்ள வெங்கடேசனின் திறமையை வியந்து கொண்டே அடுத்த தொகுதியை ஆவலுடன் கையிலெடுக்கிறேன். மணியன் செழியனின் வண்ணப் படங்கள் சு. வெங்கடேசனின் சிறப்பான எழுத்துக்கு மேலும் மெருகூட்டியுள்ளது
Profile Image for Arjun Subramanian.
3 reviews2 followers
November 23, 2018
தமிழில் சங்க காலத்தை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட வரலாற்று புதினங்கள் மிக குறைவு (இருக்கிறா என்பதே சந்தேகம்தான்). அதில் முதன்மையானது வீரயுக நாயகன் வேள்பாரி என்று உறுதியாக சொல்லலாம். இது முழுக்க முழுக்க சங்க காலத்தை அடிப்படையாக கொண்டு சொல்லப்பட்ட பேரிலக்கியம். தமிழ் நிலத்தின் ஏழு வள்ளல்களுள் ஒருவனான வேள்பாரியை பற்றி சங்க இலக்கிய பாடல்கள் சில உள்ளன. அந்த சிலவற்றை மட்டும் வைத்து நெடுங்காவியம் ஒன்றினை எப்படி தீட்டுவது என்று யோசித்த ஆசிரியர் சு.வெங்கடேசன் ஒட்டு மொத்த தமிழ் இலக்கியங்களை துனைக்கு அழைத்துக்கொண்டு பாரிக்கும் பறம்பிற்கும் உயிர் கொடுத்திருக்கிறார். நிச்சயமாக படிக்க வேண்டிய புதினம்.

படிப்பவர்களுக்கு வேண்டுகோள் :

1. இலக்கியத்திற்கும் வராலாற்றுக்கும் உள்ள வித்தியாசங்களை நன்கு படித்துணர்ந்துவிட்டு இதை படிக்கவும். ஏனென்னறால் எது உண்மை எது புனைவு என்று தெரியாமல் குழப்பம் வர வாய்ப்பிருக்கிறது.

2. கதையில் வரும் எல்லாவற்றைபற்றியும் (புல்,பூண்டு,பூச்சி,பறவை,விலங்கு,மரம்,செடி,கொடி,மனிதர்கள்) கொஞ்சம் தேடி படியுங்கள். சு.வெங்கடேசனின் திறமை புரியும்.
Profile Image for Subramanian Sankaran.
10 reviews1 follower
May 2, 2019
"அதோ அந்த மேடையில் இருக்கும் இரண்டு யாழ்களையும் இருவர் கையில் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டு பெண்களை அழைத்து கால் சலங்கையைக் கட்டிக்கொள்ளச் சொல்லுங்கள். அனைவரும் உடன் வாருங்கள். நான் பாடுகிறேன். பாட்டிசைத்துப் பறம்பேறிய குழுக்கள் கேட்பதை `இல்லை’ எனச் சொல்லும் வழக்கம் பாரியிடம் இல்லை. மொத்த பறம்பினையும் வழங்கிவிடுவான்." - கபிலர்

"நீரைப் பாறைகொண்டு நசுக்க முடியாது." - கபிலர்

"வெல்ல நினைப்பவர்களும் அழிக்க நினைப்பவர்களும்தாம் போரை விரும்புகிறார்கள். வாழ நினைப்பவர்கள் வேறு வழியின்றி அந்தப் போரை எதிர்கொள்கின்றனர். நான் முதல���தரப்புக்காகப் பரணேறியிருக்கிறேன். எனவே, எனது உள்ளொளி அணைந்து கொண்டிருக்கிறது. நீங்களோ இரண்டாம் தரப்புக்காக நிற்கிறீர். எனவேதான் அணையவிடாமல் தடுக்கும் துணிவை இழக்காமல் இருக்கிறீர்" - திசைவேழர்

“இந்த உலகில் வரைய முடியாத ஓவியங்கள் இருக்கும்வரை, ஓவியன் வரைந்துகொண்டே இருப்பான்” - காரொளி

"விதையை நடாதவன் கிளையை ஒடிக்க இயற்கை அனுமதிக்காது." - பாரி

Profile Image for Surendhar.
53 reviews1 follower
February 24, 2020
Aram na ena? Vaakurudhi, sathiyathin vilai ena? Sollin aazhamum thaakumum. Eiyarkaiku naam alika thavariya mariyaadhaiyin alavu? Poarin nyayangalum kodurangalum. Soozhchikum veerathukum ulla vithyaasam ena? Padipparivukkum seyal arivukkum idaiyil ula vetrumai ena? Innum pala..

Aaga sirandha manidhanaaga, thalaivanaaga en nenjil ninru vitaan engal Velpaari.. Irapadharuku mun innum palamurai indha puthagathinai meendum padithu arap poarvaiyai en meedhu poarthi kolla vizhaigiren. Adhuvey irakkamatra ivvulagil thodarndhu vazhum nambikaiyai enakku alipadhaai irukumendru thondrugiradhu!
4 reviews1 follower
March 27, 2019
Amazing book by Mr S. Venkatesan. Yesterday I completed the book. Unable to recover from the story. This is an epic story. So much of knowledge about our ancient Tamil legends. Knowledge about Natures, Love, Peace, Medical, Animals, Plants, Time, Stars, Mountains, War is amazing. I couldn't able to understand the effort spent by Mr Venkatesan in creating this story. Thanks again for creating this beautiful Velpari.
Profile Image for Gowsalyaa.
78 reviews28 followers
December 16, 2022
இதுவரை அறிந்திடா வாழ்வியலும், போர்முறைகளும், பாரியின் சிறப்பும் ♥️
Profile Image for வெங்கட் பீமசேனன்.
86 reviews1 follower
April 26, 2025
நேர்த்தியான அழகிய மொழிநடை கொண்டு எழுதப்பட்ட, ஒரு உணர்ச்சி மிகுந்த வரலாற்று காவியம் இது. தமிழ் இலக்கிய வரலாற்றில் இப்படைப்பை ஆகச் சிறந்த சாதனையாகவே நான் கருதுகிறேன். இது வெறும் புதினம் என்று கூறுவது மிகுந்த அநாயசம் ஆகும்; சங்க இலக்கியங்களின் நெடுங்கால சொற்கலவை, அதன் வாழ்க்கைச் சித்திரங்கள், வரலாற்று உண்மைகள் அனைத்தையும் சுரந்து, பின்னித்து, உயிர்ப்பூட்டி உருவாக்கப்பட்ட ஒரு அபூர்வ காவியம் இதுவென கூறலாம்.

இந்நூலில் ஒவ்வொரு குடி மக்களுக்கும் உரித்தான தனித்துவமான திறன்களை ஆசிரியர் நுணுக்கமாக விவரிக்கிறார். ஒவ்வொரு விவரணையும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் அளவுக்கு நேர்த்தியாகவும் அழகாகவும் காட்சியளிக்கின்றன. குறிப்பாக, காட்டின் நடுவே பாரி மற்றும் கபிலரின் உரையாடல்கள் நம்மை காலமறந்து அந்தப் பழங்காலத்தின் உயிரோட்டத்திற்கு அழைத்துச் செல்கின்றன.

எனது மனதைக் கவர்ந்தவை, இந்நூலில் வரும் விழாக் காட்சிகள். அந்த நடன நிகழ்வுகளைப் படிக்கும்போது, நாமே அந்தக் கால விழா வளாகத்தில் நின்று அவற்றை நேரில் காணும் அனுபவம் ஏற்படுகிறது. அவ்வளவு அழகான உரைநடை, வாசகனின் உள்ளார்ந்த உணர்வுகளுடன் இணைந்து செல்வதாக உள்ளது.

போர்க் காட்சிகள் இந்நூலின் மறு சிறப்பு. போரின் வெடிப்பும் வீரர்களின் உறுதியும் கண்ணிலே தெரிந்தபடி எழுதப்பட்டுள்ளது. கதையின் ஓட்டம் ஒரு மெல்லிய ஓடையின் சாந்தத்துடன் தொடங்கி, பின்னர் புயல் போல் விரைந்து வாசகனை புத்தகத்தை கீழே வைக்க முடியாத அளவிற்கு கட்டிப்போட்டுவிடுகிறது.

'வேள்பாரி' நமக்கு, பாரியின் உலகில் ஒரு வாழ்வை அனுபவிக்கச் செய்த ஒரு அரிய வாய்ப்பாகும். அந்த உலகின் ஒவ்வொரு சுவாசத்தையும் நம் நெஞ்சில் உணர்த்தும் இப்பெரும் இலக்கியம், தமிழர் பெருமையை, தமிழின் நுட்பமும் நையாண்டியும் சேர்த்து நமக்கு வழங்குகிறது.
Profile Image for Hamid Shah.
18 reviews1 follower
July 24, 2020
After a long time, Su. Venkatesan's Velpaari kindled my interest in reading a Tamil Historical Fiction. The Tamil Historical Fiction section is filled with stories of the Three Dynasties - Chera, Chola & Pandya but the author's take on a small chieftain whose name is well known for a short story on his charity but nothing more. The author builds the world of the Parambu Tribe in the first part and it shows the extensive research on his part. I am yet to ascertain the facts / fiction part of the details mentioned in the book but he gives fascinating account of the lifestyle of the people, animal / plant's nature etc. The author has brilliantly linked the story of Lord Murugan within this and I really liked his take on him. Apart from this, the second part deals with the author's effort to make the King Paari even more larger than life picture which he was already in Tamil's people mind. Some of the war tactics, war heroism were overboard but it's historical fiction -why should we put a break to author's imagination. Anyways, its a fantastic read and I have enjoyed his previous book as well - Kaaval Kottam. Good to see a new book on this genre and thoroughly enjoyed reading it.
Profile Image for Nevedha.
1 review
May 11, 2020
இன்றைய காலகட்டத்தில் வெளிவந்த மிக சிறந்த வரலாற்று நாவல். அனைத்து தமிழர்களும் கட்டாயம் படிக்க வேண்டியது.
Profile Image for Mini.
19 reviews4 followers
July 18, 2025
வேள்பாரி பாகம் 1 – (அத்தியாயம் 1 முதல் 51 வரை)
✍️ எழுத்தாளர்: சு. வெங்கடேசன்

தொடங்கும் தருணத்திலேயே என்னை இழுத்துக்கொண்ட கதை.
பாரி ஒரு மன்னன் இல்லை... ஒரு உயிருள்ள மனிதம்!

நீலன் – தன்மைதான் தன்னம்பிக்கை. அவனுடைய உண்மை ஒவ்வொரு வார்த்தையிலும் தெரியும்.

மயிலா – ஒரு பெண்ணின் நுட்பமான மனமும், உறுதியும் இதைவிட சித்தரிக்க முடியாது.

பொற்சுவை – அறிவும் உணர்வும் கலந்து இருந்த வாசிப்புக்கு வலிமையான பெண்.

கபிலர் – வார்த்தையாலே உலகத்தை மாற்றக்கூடியவர்.

அதற்குமேல் பேசவேண்டியது
🌸 முருகனும் வல்லியும் – இந்தக் காதல் வர்ணனை வரலாற்றுக்குள்ளே ஒரு கவிதை மாதிரி.
அவர்கள் சந்திப்பு, படிக்கும்போது என்னால ஒரு சின்ன சிரிப்போட வாசிக்காம இருக்க முடியல
சில இடங்கள் நெஞ்சை தொட்டு விட்டது, அழகான காதல் ஒரு போராட்டக் கதையிலும் இருக்கலாம்ன்னு உணர்த்தியது.

பாரியின் வீரம் – ஒவ்வொரு முடிவும் goosebumps தரும்.
வந்ததெல்லாம் போரா பார்க்கல, ஆனா போராடினான் பாரி.

📚 51 அத்தியாயம் முடிந்ததும் –
"இதுதான் தமிழின் உண்மை ஆழம்"னு மனசுல ஒரு பெருமை.
அடித்தளத்தில் உணர்ச்சி, மேல்தளத்தில் வரலாறு.
இது ஒரு காவியம் மாதிரி படிக்கலாம் இல்ல, உணரலாம்.

#வேள்பாரி #TamilReads #Neelan #MuruganValli #VelpaariReview #TamilBooks #Goodreadsதமிழ் #சிறந்த_தமிழ்ப்_புத்தகம்
August 27, 2023
பனையன் மகனே பனையன் மகனே
பல்லுயிர் ஓம்பும் பாரி வேளே!!!

வீரயுக நாயகன் வேள்பாரி - சு.வெங்கடேசன்


1. குலப்பாடல்கள்-  பெருஞ்சித்திரனார் ( புறநானூறு 158; 1-4 )     &
2. தேவவாக்கு -  கபிலர் (புறநானூறு 106)  இரண்டு பாகங்களை உட்கொண்ட வீரயுக நாயகன் வேள்பாரி (முதல் தொகுதி)

பறம்பு நாட்டு வேளிர்குலத்தின் 42வது தலைவன் வேள்பாரியின் கதை.
சங்கப் புலவர் கபிலர், பாரியின் பெருமைகைளைப் பற்றிக் கேள்விப்பட்டு அவற்றை நேரில் காண பறம்பு நாட்டுக்குச் செல்கிறார். அவருடைய கண்களின் மூலம் பறம்பு நாட்டின் வாழ்க்கை முறையைக் காண்கிறோம்.

கொற்றவைக் கூத்து, குடியினர் கதைகள்,காக்காவிரிச்சி, நாக்கறுத்தான் புல், ஏழிலைப்பாலை, தேவவாக்கு விலங்கு, முருகன் வள்ளி காதல், காமன் விளக்கு, கொல்லி காட்டு விதை
கார்த்திகை நட்சத்திரம், காடறிதல்.

வைப்பூர்  தாக்குதல்😎😎.
உதிரன் - அங்கவை😍
நீலன் + மயிலா🤩
அலவன் ,இளமன், கீதானி, சூலிவேள்😎😎
காலம்பன்- திரையர்குல தலைவர் +  வேள்பாரி 🥲😎
சுண்டா பூனை.


கதை களத்திற்கு ஏற்ப உயிரோட்டமுள்ள ஓவியங்களை வரைந்த திரு_மணியம்_செல்வம் (ம.செ) கண்முன் கொண்டு வந்து மேலும் அழகூட்டுகிறார்.😎😎


வேள்பாரி -
அனைவரும் ஒரு முறையேனும் வேள்பாரியை
சுவாசிக்க வேண்டும்.
Profile Image for Rohith.
31 reviews3 followers
April 24, 2023
For generations we have been taught in schools that The moovendhargal are the greatest, generous and they are the example of how a kingdom should be but never criticised their war crimes, number of small tribes they have plundered and killed, the number of genocides they have made. This book gives them. I appreciate the author for bringing up the reality.

Will update my full review after reading the 2nd part.
4 reviews
February 18, 2025
Out and out racy fiction. The landscapes, war practices, food habits, language, culture and traditions of Tamils, especially the 'Parambu Naadu' as mentioned by u. Venkatesan has been portrayed elaborately. There was never a dull phase considering how long the book is. Read it slowly for a longer period while I was writing my thesis and it was one of my best experiences.

Paari varuvan.
Profile Image for Thananchseyan.
15 reviews
September 25, 2025
I love how Part 1 of Volume 1, Kula Paadalkal (tribal songs), immerses me in the world of Paari and Madurai—the animals, plants, customs of Parampu, the grandeur of a kingdom celebrating a wedding, and so much more. Part 2, Theiva Vaku, pulled me even deeper into the narrative. As the story unfolded, I found myself completely invested, running alongside Thekkan, Paari, Alavan, and the students through the forests. And what an ending for Volume 1—it left a lasting impression.
2 reviews1 follower
January 8, 2025
The line by Neelan in the end of the 1st chapter got me hooked. What can I say about the people who prioritize nature over human? The kindness, humble, hospitality can be seen nowhere as much as here. Paari...this man god!!!
Displaying 1 - 30 of 186 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.