நெடுஞ்சாலை கார் ஓட்டுநர்களின் வாழ்க்கையை நம்மால் கற்பனைகூடச் செய்துபார்க்க முடியாது. சீறிப்பாயும் வேகத்தில் பறந்தாகவேண்டும். அப்படிப் பறக்கும்போது முன்னால் தெரியும் காட்சிகளையும் பின்னால் தொடர்ந்து வரும் அசைவுகளையும் எப்போதும் கவனத்தில் கொண்டிருக்கவேண்டும். பயணத்தின்போது மட்டுமல்ல, வாழ்க்கையிலும்தான்.
டிரைவர்களின் பிரத்தியேகமாக உலகத்தை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றன இந்தக் கதைகள். அவர்களுடைய வேட்கை, வேகம், நம்பிக்கை, அவநம்பிக்கை, அன்பு, துயரம் அனைத்தும் இங்கே சீறிப்பாய்கின்றன.
மனிதர்களைப் புரிந்துக்கொள்வதற்கு புத்தகங்கள் ஒரு மகத்தான கருவி. அவ்வகையில் இப்புத்தகம் வாகன ஓட்டிகளின் வாழ்க்கையைப் தெரிந்துக்கொள்வதற்கு நல்லதொரு புத்தகம். எளிய மொழி நடையில் பயணங்களில் தான் சந்தித்த பல்வெறு வலவன்களின் (டிரைவர்) கதையை மிக சிறப்பாக எழுதியுள்ளார் கஸ்தூரி சுதாகர்.
பிடித்த வரிகள்: "ரெண்டு நேரத்துல நிதானமா இருக்கவேண்டியது ரொம்ப அவசியம் சர்ஜி. ஒன்று திட்டமிடும் போது, ரெண்டாவது திட்டத்தில எதாவது குறுக்கே வரும் போது..."
மனிதர்களைப் புரிந்துக்கொள்வதற்கு புத்தகங்கள் ஒரு மகத்தான கருவி. அவ்வகையில் இப்புத்தகம் வாகன ஓட்டிகளின் வாழ்க்கையைப் தெரிந்துக்கொள்வதற்கு நல்லதொரு புத்தகம். பிடித்த வரிகள்: "ரெண்டு நேரத்துல நிதானமா இருக்கவேண்டியது ரொம்ப அவசியம் சர்ஜி. ஒன்று திட்டமிடும் போது, ரெண்டாவது திட்டத்தில எதாவது குறுக்கே வரும் போது..."
Short stories dealing with in-depth human emotions. Thrilling, gripping and suspense filled narrative.Lot of surprise elements that stuns the readers. Good one.
பத்து கதைகளும் பத்து உணர்வுகளை அளித்தது. நம் வாழ்வில் எதிர்கொள்ளும் மனிதர்களுள் இன்றியமையா பங்கு வகிக்க ஆரம்பித்துவிட்ட ஓட்டுநர்களின் வாழ்க்கைப் பின்னணியும், அவர்களின் உணர்வுகளும், அவர்களின் குடும்பச் சூழல்களும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் பின்னணியில் கூறப்பட்டுள்ளது.
A very different set of stories that I hardly hear/read these days. Some are a bit controversial. People who we encounter in our day to day life has such a story behind! Hats off, Suthakar ji!