தலித்துகளின் வாழ்வியலை வா.மு. கோமுவின் மொழியில் வாசித்தல் ஒரு மிக பெரிய கொண்டாட அனுபவம். கள்ளி கழுத்து நெரிபடுகிற மக்களுக்கு மூச்சுக்காற்றை வழங்கும் சேரிப்புல்லாங்குழல்!.
வா. மு. கோமு ஈரோடு மாவட்டம் வாய்ப்பாடியைச் சேர்ந்த சிறுகதை, புதின எழுத்தாளர். கொங்கு மண்டல வட்டார வழக்கில் கிராமம் சார்ந்த பாலியல் கதைகளையும் எதார்த்த இலக்கியத்தையும் படைப்பவர். தமிழின் அனைத்து முன்னணி பத்திரிக்கைகளிலும் இலக்கிய பத்திரிக்கைகளிலும் இவரது கதைகள் வெளியாகியிருக்கின்றன. இவரது தவளைகள் குதிக்கும் வயிறு என்ற சிறுகதைத் தொகுப்பு 2008ம் ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விகடன் விருதை பெற்றது.
தமிழ் நாட்டின் மேற்கு பகுதி வாழ்வியல் அவலங்களை அந்த மண்ணின் மொழிநடையில் சொல்லிச் சென்றது அருமை. சாதிய ஏற்ற தாழ்வுகள் ஒருபுறம் இருக்க அதையொட்டிய வாழ்வே கதை முழுக்க பிரதானமாக வந்து செல்கிறது. காமம் இன்றி மனித வாழ்வு இல்லை என்பதை கதையின் ஊடக நம்மை அனைத்துச்செல்கிறார் எழுத்தாளர் வா மு கோ மு.