முருகன் அல்லது அழகு - திரு. வி. கலியாணசுந்தரனார் Murugan Alladhu Azhagu by Thiru. V. Kalyanasundaram Pages - 231 முருகன் அல்லது அழகு என்னும் நூலை இயற்றியவர் திரு. வி.க ஆவார். காரைக்குடியிலிருந்து வெளிவந்த குமரன் என்னும் திங்கள் மலரின் முதலிதழில், திரு.வி.க அவர்கள் முருகன் என்னும் கட்டுரையை எழுதினார். அந்தக் கட்டுரை பெரும் பாராட்டைப்பெற்றது. அதனை நூலாக வெளியிடுமாறு அவரின் நண்பர்கள் வற்புறுத்தினர். இதனால் அக்கட்டுரையில் மேலும் சில பகுதிகளைச் சேர்த்து முருகன் என்னும் பெயரில் நூலாக 1925இல் வெளிவந்து. இரண்டாம் பதிப்பில் அழகைப் பற்றி அவர் பால் கருக்கொண்டிருந்த பல புதுப்பொருள் கூட்டி விரிவாக்கி, நூலின் உள்ளுறைக்கேற்ப நூலுக்கு முருகன் அல்லது அழகு என்னும் தலைப்பு மாற்றம்மட்டு 1927-ம் ஆண்டு வெளியி