எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல்.
பதினைந்து வயதிலேயே தொடங்கிவிட்டது ஜீவாவின் போராட்ட வாழ்க்கை. தான் செல்ல வேண்டிய பாதை குறித்த தெளிவு அவருக்கு அந்த வயதிலேயே ஏற்பட்டிருந்தது ஆச்சரியம்.ஆச்சரியங்கள் அங்கே இருந்து ஆரம்பிக்கின்றன. ஆங்கிலேய எதிர்ப்பு, தீண்டாமை எதிர்ப்பு, அடக்குமுறை எதிர்ப்பு என்று அவர் வாழ்வில் நித்தம் நித்தம் போராட்டம்தான்.அரசியல் தலைவர், பேச்சாளர், பத்திரிகை ஆசிரியர் என்று ஜீவாவின் ஆளுமை விதவிதமான பரிமாணங்களால் விரிவடைகிறது.அபாரமான திறமைகள் ஒருபுறம் இருக்க, பழகுவதற்கு எளிமையானவராகவும் எப்போதும் அணுகக்கூடியவராகவும் சிறந்த மனிதாபிமானியாகவும் ஜீவா இன்று நினைவு கூரப்படுகிறார்.
பிறந்தது மயிலாடுதுறையில். படித்தது முதுகலை கணிப்பொறிப் பயன்பாடுகள் (M.C.A) கல்கி பத்திரிகையில் சுதந்தரப் பத்திரிகையாளராக எழுதத் தொடங்கி தற்போது கிழக்கு பதிப்பகத்தில் முதன்மைத் துணை ஆசிரியராகப் பணிபுரிகிறார். இந்தியாவில் நிகழும் அரசியல் பிரச்னைகள் குறித்த இவருடைய கட்டுரைகள் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தேசிய அரசியல் மீது தீவிரக் கவனம் செலுத்திவரும் இவருக்கு தமிழக அரசியல் மீது எப்போதும் கவனம் உண்டு. தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க ஆகிய கட்சிகள் தோன்றி வளர்ந்த கதையைப் புத்தககமாகப் பதிவு செய்திருக்கும் இவர் நியூ ஹொரைஸன் மீடியாவின் இன்னொரு பதிப்பான MiniMaxன் பொறுப்பாசிரியராக இயங்கிவருகிறார்.