What do you think?


அமில தேவதைகள்
தமிழ் அறிவியல் புனைகதைகளுக்கு ஒரு பாரம்பரியம் உண்டு.கி.பி.2000,மண்குடிசை கதைகளை மு.வரதராசன் எழுதினார்.புதுமைப்பித்தன் எழுதிய கடவுளும் கந்தசாமி பிள்ளையும்கூட ஒருவகையில் அறிவியல் புனைக்கதைதான் என்கிறார் சுஜாதா.அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பூத்த அறிவியல் கதைகளை ஒரு தொடர்ச்சிக்கு உட்படுத்தினார் சுஜாதா.அந்தத் தொடர்ச்சியைப் பாதுகாக்கும் முயற்சி இந்தச் சிறுகதைத் தொகுப்பு.
152 pages, Paperback
Published December 1, 2016
About the author
தமிழ்மகன்
19 books7 followersதமிழ்மகன் (பிறப்பு: டிசம்பர் 24, 1964) தமிழ் எழுத்தாளர் ஆவார். இவரது இயற்பெயர் வெங்கடேசன். வளவன், தேனீ ஆகியவை பிற புனைப் பெயர்கள் ஆகும். இதுவரை ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், சில நாவல்கள் எழுதியுள்ளார். அறிவியல், சமூக சிறுகதைகளை சுவாரசியமான நடையில் எழுதி வருகிறார். திரைப்படம் தொடர்பான கட்டுரைகள், திரைப்படங்களுக்கு உரையாடல்கள் எழுதி உள்ளார். இவர் எழுதிய மானுடப் பண்ணை எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1994 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் வகைப்பாட்டிலும் “எட்டாயிரம் தலைமுறை” எனும் நூல் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை வகைப்பாட்டிலும் பரிசு பெற்றிருக்கின்றன.
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
No one has reviewed this book yet.

