வில் அம்பு வீச்சில் திறமைசாலியான முன்னாள் சர்க்கஸ் தொழிலாளி ராதாகிருஷ்ணன். ஒரு பெண்ணின் மார்பில் அம்பைச் செலுத்திவிட்டு ஜெயிலுக்குப் போனவன். விடுதலையாகி மதுரையில் ஒரு கோடவுனில் வேலை செய்கிறான். ஒருசமயம் மதுரையைச் சுற்றிப் பார்க்க வரும் முதலாளியின் அழகிய மனைவி மந்தாகினிக்குத் துணையாக அவன் செல்ல நேர்கிறது. அன்றைய இரவு இருவருக்கும் இடையேயான நெருக்கத்தில் ராதா மந்தாகினியின் மேல் பைத்தியமாகிறான். மந்தாகினி விடைபெற்றுச் செல்லும்போது ராதாவின் நினைவாக அவனது அம்பைப் பெற்றுச் செல்கிறாள். அதன் பின் அவள் சென்னையில் இறந்துபோகிறாள். அவள் மார்பில் ரத்தப் பிரவாகமாக செருகிக் கிடப்பது ராதாவின் அம்பு. மந்தாகினி கொலை செய்யப்பட்டாளா அல்லது மிகத் தீவிரமாக மரணத்தை நேசித்தவள் தற்கொலை செய்து கொண்டாளா? இக்கதையின் முடிவை 'ஆம்' 'இல்லை' என்ற வார்த்தைகளில் வாசகர்களிடமே விட்டு விடுகிறார் சுஜாதா. இந்த ‘விரும்பிச் சொன்ன பொய்கள்' குங்குமச் சிமிழ் நாவலாக 1987ல் வெளியானது.
Sujatha was the allonym of the Tamil author S. Rangarajan, Author of over 100 novels, 250 short stories, ten books on science, ten stage plays, and a slim volume of poems. He was one of the most popular authors in Tamil literature, and a regular contributor to topical columns in Tamil periodicals such as Ananda Vikatan, Kumudam and Kalki. He had a wide readership, and served for a brief period as the editor of Kumudam, and has also written screenplays and dialogues for several Tamil movies.
As an engineer, he supervised the design and production of the electronic voting machine (EVM) during his tenure at Bharat Electronics Limited (BEL), a machine which is currently used in elections throughout India. As an author he inspired many authors, including Balakumaran, Madhan.
சுஜாதாவிற்கு என்றுமே வாசகர் கையில் கதையின் முடிவை விடுவது பிடித்தமான ஒன்று. கொலையுதிர் காலம் புத்தகத்தை படித்த பொழுதே அதனை புரிந்துக்கொண்டேன் :) முன்னுக்கு பின் முரணான மந்தாகினி, highly impulsive ராதாகிருஷ்ணன், indifferent புருஷோத்தம். இந்த மூவருக்குள் நடக்கும் நாடகமே இக்கதை. ஆம் இல்லை என்ற இரு முடிவுகளை கொண்டு pulse ஐ எகிறவைத்து வேடிக்கை பார்க்கும் திறமை உள்ள எழுத்தாளர் சுஜாதாவை தாண்டி இன்னொருவர் இல்லை ! விரும்பி சொன்ன பொய்கள் வாசகரால் விரும்ப தகுந்த புத்தகம் :D
விரும்பி சொன்ன பொய்கள் - அழகான தலைப்பு ! பொய்மையும் வாய்மையிடத்த என்கிற மாதிரி இருக்கிறது இந்த தலைப்பு. சுஜாதாவின் க்ரைம் த்ரில்லர் இந்த நாவல்.நாவலின் கடைசியில் வரும் ஒரே வார்த்தையில் மொத்த நாவலின் course-உம் மாறிப்போகக்கூடிய சாத்தியம் உண்டு. The best part is - அந்த வார்த்தையை படிக்கும் வாசகர்களான நாம் முடிவு செய்துக்கொள்ளவேண்டும். கதையை பற்றி சொல்லவேண்டும் என்றால் இது ஒரு adult love story with a strong undercurrent of eroticism. கோபத்திலும், காமத்திலும் எப்போது obsession எனப்படும் ஒரு வெறித்தனமான நிலையில் இருக்கும் ராதாகிருஷ்ணனின் கடந்த காலத்தை அறிந்தும் அவனுக்கு வேலை கொடுக்குகும் புருஷோத்தமன், தன் இளம் மனைவி மந்தாகினிக்கு மதுரையை சுற்றிக்காட்டும் பொறுப்பை அவனிடம் ஒப்படைக்கிறார். கொஞ்சம் abnormal-ஆக நடந்துக்கொள்ளும் மந்தாகினியிடம் இவன் மயங்கி விடுகிறான் . இப்போது ராதாகிருஷ்ணனுக்கு மந்தாகினி பைத்தியம் பிடித்துவிட அவளை தொடர்ந்து சென்னைக்கு வந்த இடத்தில் எதிர்பாராதது நடந்துவிடுகிறது.இந்த 80 பக்கக்கதையில் 78 பக்கங்கள் வரை ஒரு கண்மூடித்தனமாக காமம் / காதலில் விழுந்த மனிதனின் உளவியல்ரீதியான பயணமாக போய்விட்டு கடைசி 2 பக்கங்களில் சடாரென்று கியர் மாற்றி வேறு தளத்தில் முடிகிறது.
படிக்க ஆரம்பித்தது முதலே சுவாரசியத்திற்கு குறைவில்லை. இந்தக் கதையின் முடிவை நம்மிடமே விட்டுவிடுகிறார் . ஆம் , இல்லை எனும் வார்த்தை தேர்வில் கதை முடிகிறது.
1987லில் ஒரு பெண் கதாபாத்திரத்தை கஞ்சாவிலும் one-night standலும் ஏத்துவதற்கு ஒரு தனி துணிச்சல் தேவை, கதையின் முக்கிய முடிவை வாசகர்கள் கையில் ஒப்படைப்பது என்பது மிக கொடூரமான செயல் வாத்தியாரே.......
வாத்தியார் பத்தி சொல்லித்தான் தெரியனுமா. சிறுகதையோ,கட்டுரையோ அல்லது நாவலோ எல்லாருக்கும் புரியுறமாதிரி பரிமாறுவதில் வல்லவர். நேத்து ரொம்பநேரம் தூக்கம் வரல, ரைட் சிவராத்திரி தெரிஞ்சுபோச்சு என்ன பண்ணலாம்னு யோசிச்ச அப்போ கிண்டல் கொஞ்சம் பிரௌஸ் பண்ணலாம் உள்ளபோனேன், புத்தியும் கையும் சும்மா இருக்காமல், முன்னாடி நோண்டி வச்ச அஜால் குஜால் கதைகள்,அதனால வந்த வினைனு கொஞ்ச நேரம் அதெயெல்லாம் கடந்து போய்ட்டு(நிஜமா), கிண்டல் அன்லிமிடெட் என்னலாம் இருக்குனு பாக்கும் பொது விரும்பி சொன்ன பொய்கள் ஒரு புத்தகம் 80 பக்கம் வேற சரி படிக்கலாம் முடிஞ்சா வரைக்கும்னு தான் எடுத்தேன், முடிச்சுட்டு தான் வச்சேன். 80 பக்கம்ல ஒரு 1.30 மணிநேரம் ஸ்கிரிப்ட் ரெடி பண்ண முடியும்ங்குற அளவுக்கு ஒரு அருமையான திரில்லர் ஸ்டோரி. ராதாகிருஷ்ணன் அல்லது ராதா சர்க்கஸ்ல பணிபுரியும் வில்லாளன், அங்க நடக்குற காதல் (காஜி) பிரச்சனனைல அவன் காதலி மார்புல அம்பை எறிஞ்சுட்டு சிறை செஞ்சுட்டு திரும்பின ஆளு, அதுக்கப்பறம் கிடைக்குற வேலைய பாத்துட்டு கஷ்ட படும் ஆளு, அசிஸ்டன்ட் மேனேஜர் போஸ்ட் கிடைக்குது அங்க இருக்குற முதலாளி பொண்டாட்டியோட ஏற்படும் அனுபவம், இதுக்கு மேல நான் சொல்லல படிச்சு தெரிஞ்சுக்குங்க. ராதா கேரக்டர் எப்படின்னு புக் முழுக்க காஜியா சுத்துற ஒரு ஆளு. அதனால ஏற்படும் வினைனு சூப்பரா கதை போகுது. 1987ல வாத்தி one night stand பத்தி எல்லாம் விவரமா எழுதி இருக்காரு. ராதாக்கு அட்வைஸ் பண்ற பொண்ணு சொல்றது வேற லெவல், உனக்கு இந்த one night stand எல்லாம் தெரியாதா நேத்திக்கு சந்தர்ப்பத்தால் ஒண்ணா இருந்தோம் அவ்ளோதான் முடிஞ்சு போச்சு இன்னிக்கு நீ உன் வாழ்க்கைக்கு உன்னோட வேசத்தோட போ நான் என்னோட வேஷத்தோட போறேன். ஒரு கதை படிக்கும் பொழுது ஒரு வாசகனை நம்பி முடிவை கொடுக்கும் பழக்கம் எனக்கு எப்போவுமே புடிக்கும், அந்த வழக்கம் பொதுவாக பலரிடம் இல்லை இது என் கதை நான் சொல்றது தான் முடிவுன்னு தான் இருக்கும், ஆனா நம்ம சுஜாதா சில பல கதைகளில் முடிவை நம்மிடம் எடுத்துக்கோ தம்பி என்னவேனா முடிவெடுத்து சந்தோசமா இருன்னு கொடுப்பார், அதே தான் இதுலயும். நிஜமாக நல்ல ஒரு திரில்லர், தெய்வம் எனக்கு ஒரு வரம் கொடுத்தால் வாத்தியாரை மீண்டும் உயிரெழுப்ப கேட்பேன், எனக்கு விவரம் தெரியரத்துக்கு முன்னாடியே போய்ட்டியே வாத்தியாரே, உன்னை அந்த காலத்தில் வாராவாரம் படிச்சவங்கள நெனச்சா பொறாமையா இருக்கு தலைவரே.
Book 1 of 2022- “விரும்பி சொன்ன பொய்கள் Author-சுஜாதா
“மௌனியாய்த் தெளிய ஓர் சொல் தந்த நாள் முதல் இன்பக்கால் சற்றல்லால் தடையறா ஆனந்த வெள்ளம்தானே பொங்கி வந்த நாள் இல்லை மெத்த அலைந்தேன் உன்னை மறவா இன்பத்தாலே வாழ்கின்றேனே.”
சுஜாதா ஏன் பிடிக்கும் என்ற கேள்விக்கு மட்டும் இன்று வரை இதுதான் என பளிச்சென்று கூறும் பதில் என்னிடம் இல்லை. வாசகர்களிடம் கதையின் முடிவை விட்டு விடுவது சுஜாதாவுக்கு மிக பிடித்த உத்திகளில் ஒன்று. “ஆம்”, “இல்லை” என்ற ஒரு வார்த்தையில் கதை முடிந்தாக வேண்டும். அந்த முடிவை தான் வாசகர்களிடம் ஒப்படைத்து விட்டார்.
கதை இன்னது என நான் சொல்லி விட்டால் அதன் சுவாரஸ்யம் குன்றுவிடும். மூன்று முக்கிய கதாபாத்திரம்,இரண்டே அத்தியாயம், ஒரு சொல் முடிவு. (One among the many reasons why Sujatha is a GENIUS).
“விரும்பி சொன்ன பொய்கள்” தலைப்பு கதைக்கு எத்தனை பொருத்தம் என்பது கடைசி பத்து பக்கங்களில் தெரியும். இறுதி வரி வரை சுவாரஸ்யம் அடங்காத typical சுஜாதாவின் கதை.
இந்த புத்தகத்தையும் கதாபாத்திரங்களையும் நான் மறப்பது வாய்ப்பில்லாதது. இந்த கதை கோர்வையாக இருந்தது, எச்சமயங்களில் இண்டேறேச்ட் கமி ஆகிறதோ அப்போதுளம் சுவாரசியமாக எதோ ஒரு நிகழ்வு... முடிவில் வைத்த ஒரு வார்த்தை பதில் தான் என்னை ஷாக் ஆகிவிட்டது. சுஜாதாவின் இந்த புத்தகத்தை அணைத்து சுஜாதா கனிகளும் படிக்கச் வேண்டும் என்று நினைக்கிறேன். படிக்கச் படிக்கச் அனைத்து சுஜாதா கதைகளும் ஒரு விதத்தில் பிடித்துவிடுகிறது.
விரும்பிச் சொன்ன பொய்கள் - படிக்க ஆரம்பித்தால் நிச்சயம் புத்தகத்தை மூடி வைப்பது கடினம். Impulsive - Mr. முணுக் Radhakrishnan , கண்ணுல ஸ்டைல் ஆன coolers கைல புத்தகம் surprise elements அதிகம் உள்ள மந்தாகினி , மற்றும் ரொம்ப கம்மியான characters தான், கடைசி சில பக்கங்கள் திருப்ப திருப்ப, தலைவன் சுஜாதா அவர் ஸ்டைல் ல முடிச்சிருக்காரு! Quite an interesting read!
Excellent one. I wonder how it is possible to bring so much characterisation in short story made of 90 pages. that is why we call him as a legend !! Sujatha always plays well with his endings. "kathaiyin mudivil viyapu Kalantha magzhichi... rasanaipongum aachariyam.." !!
A story with an open ended ending. The audience can choose either Yes or No as the conclusion based on their own analysis. A different thinking in those days
Sujatha proves again why he is one of the best writers in Tamil. This story is edge of the seat thriller with an unexpected climax.. really enjoyed this book. Happy reading !
Book has adult content. Not suitable for kids. The way the book ended, it spoils the read. Writer made the readers to conclude the story. Wouldn't recommend
Fascinated by the plot building and had a let down after the Police entry and again impressed at the end with open climax :) Love U Sujatha <3 His narration made me travelling with Radha Krishanan.
This book is a different attempt by Sujatha sir apart from his usual common novels. Characterization is very good. But many may get annoyed by the way the book ends.