தேசத் தந்தையாக சிங்கப்பூர் மக்களால் போற்றப்படுகிறார் லீ குவான் யூ. அவரது வாழ்க்கையின் அடிநாதமாக இருக்கும் முக்கியமான விஷயங்கள் அனைத்தும் இந்த நூலில் நான்கு பாகங்களில் விவரிக்கப்பட்டிக்கிறது.
ஒரு தலைவரின் சர்வாதிகார போக்கும் அந்த நாட்டிற்கு வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல உதவும் என்பதனை நான் லீ அவர்களின் வரலாற்றிலிருந்து கற்றுக்கொண்டேன், ஆனால் அந்த சர்வாதிகாரத்தின் அளவுகோலை சரியாக கையாண்ட விதம் தான் சிங்கப்பூரின் வெற்றிக்கு அடித்தளம்...
ஒரு தனி மனிதனின் லட்சியத்திற்கான வீரியம் என்ன என்பதை இவரிடம் காண்கிறேன். மேலும் அவரின் செயலாக்கம் பிரம்மிக்க வைக்கிறது. ஒருங்கிணைந்த வளர்ச்சி என்ன என்பதற்கு சிங்கப்பூர் ஒரு உதாரணம்.