Jump to ratings and reviews
Rate this book

மொஸாட் / Mossad

Rate this book
வீடு மட்டுமல்ல நாடு புகுந்தும் ஆள்களைக் கடத்தியிருக்கிறார்கள். பின்தொடர்ந்து சென்று ரகசியமாகக் கண்காணித்திருக்கிறார்கள். தனிப்பட்ட உரையாடல்களை ஒட்டுக்கேட்டிருக்கிறார்கள். லஞ்சம் கொடுத்திருக்கிறார்கள். திருடியிருக்கிறார்கள். கணக்கற்றமுறை பொய் சொல்லியிருக்கிறார்கள். பெண்களைத் தூண்டிலாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஏமாற்றியிருக்கிறார்கள். மோசடிகள் செய்திருக்கிறாõர்கள். கொன்றிருக்கிறார்கள்.

இவை அனைத்தையும் அரசாங்கத்தின் பரிபூரண ஆசிர்வாதத்துடன் செய்திருக்கிறார்கள், இன்னமும் செய்துகொண்டிருக்கிறார்கள் என்றால் நம்பமுடிகிறதா? நம்பித்தான் ஆகவேண்டும். இஸ்ரேலின் உளவுத் துறையான மொஸாட்டுக்கு நம் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு &

168 pages, Kindle Edition

First published January 1, 2011

72 people are currently reading
649 people want to read

About the author

N.சொக்கன்

91 books67 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
139 (39%)
4 stars
130 (37%)
3 stars
53 (15%)
2 stars
13 (3%)
1 star
15 (4%)
Displaying 1 - 30 of 37 reviews
53 reviews42 followers
February 25, 2013
தமிழ் கிரைம் நாவல்களுக்கே உரிய துறுதுறு வேகம், கொஞ்சம் விக்கிப்பீடியாத்தனமான ஆனால் அலுக்கச்செய்யாத நடையில் தகவல்கள், எளிய உரைநடைத்தமிழ், சிவாசி படத்தில் இரசனிகாந்து அவர்கள் சிங்கப்பாதையைத் தேர்ந்தெடுத்தபின் பழிவாங்குதலில் இருக்கும் விறுவிறுப்பான திரைக்கதையை ஒத்த காட்சி விளக்கங்கள், என அனைத்தும் இணைந்த கலவையாய் அமைந்த நூல் இது.

குறைகள் என்று பெரிதாக எதுவும் இல்லை, சிற்சில எழுத்துப் பிழைகள்இரண்டொரு இடங்களில் தலைப்படுகின்றன. எடுத்தால் கீழே வைக்கத்தோன்றாத அளவுக்கு சுவாரசியமான நடையில் உள்ளதால் எளிதாகப் படித்து முடித்து விடலாம். வெறும் மொசாட் பற்றி மட்டுமே இல்லாமல், வேறு சில உளவு அமைப்புகளையும் பற்றி எழுதி, சற்றே அதிக விலைக்கு ஒரே நூலாக எடுத்து வந்திருக்கலாம். மொசாட் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வமுடையவர்கள் எனக்குத் தெரிந்தளவில் தமிழகத்தில் மிகவும் குறைவு. அதற்கு நூறு ரூபாய் கொடுக்க தயங்கலாம். ஆனால் மிகவும் தெளிவான அச்சில் அழகாக வெளியிட்டுள்ளார்கள். உளவுத்துறை, வேகமான கதைகள், உலக அரசியல் ஆகியவற்றில் ஆர்வம் இருந்தால் தயங்காமல் வாங்கிப் படிக்கவும்.
Profile Image for Balaji M.
221 reviews14 followers
November 7, 2020
மொஸாட் (Mossad - Israeli Intelligence Agency)
***********************************************
பல வருடங்களாக கண்ணில் பட்ட புத்தகம், கடைசியில் வாசித்தாகிவிட்டது. இப்புத்தகத்தைப் பற்றி அதிகப்படியானவர்கள் கூறியதை போலவே மிகவும் விறுவிறுப்பான முறையில் எழுதப்பட்டிருக்கிறது.
உளவு அமைப்பை பற்றிய புத்தகம் என்பதாலோ என்னவோ, ஜேம்ஸ்பாண்ட் கதை சொல்லும் பாணியில், மொஸாட் உளவு அமைப்பின் தொடக்கம் முதல் குறிப்பான சம்பவங்களை தேர்ந்தெடுத்து, மிக அற்புதமான முறையில், 'சஸ்பென்ஸ்' நிறைந்த காட்சிபடுத்துதலுடனும், அதே வேளையில் நகைச்சுவை சொற்றொடர்களை கொண்டும் எழுதியிருக்கிறார் திரு என். சொக்கன்.

ஏன் இஸ்ரேலிய உளவு அமைப்பை இவ்வளவு சிலாகிக்கிறோம் என்பதற்கு பல காரணிகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
சென்ற நூற்றாண்டின் பாதி வரை யூதர்களுக்கு தனிதேசமென்று ஒன்றும் கிடையாது. எல்லா நாடுகளை போல பாலஸ்தினத்திலும், ஜெருசெலம் பக்கம் யூதர்கள் குறைவான எண்ணிக்கையில் வாழ்ந்த ஒரு இனம். அவ்வளவுதான்! ஆங்கிலேய ஆட்சிக்கு பின்னர், பாலஸ்தின, மற்றும் அதை சுற்றியுள்ள இஸ்லாமிய நாடுகளையும் மீறி, மேலும் யூதர்களை தேடிதேடி கொன்ற ஹிட்லரின் வெறியாட்டத்தை கடந்து, தனக்கென்று ஒரு நாட்டை நிர்மாணித்து, இன்று வரையில் பல்வேறு தொழில்நுட்பங்களையும் ஆயுதங்களையும் பயன்படுத்தி தங்களை சர்வ ஜாக்கிரதையாக பாதுகாத்து வருகின்றனர். அதற்கு மூலக்காரணம் அவர்கள் கடந்து வந்த கொடும் பாதையும், இனப்பற்றை முன்னிறுத்தி தங்களது புத்திகூர்மையை பயன்படுத்திய விதமும்தான் என அவர்களின் உளவு அமைப்பை பற்றிய சம்பவங்களை காண்கையில் அறியமுடிகிறது.

அவர்களின் உளவுத்துறை தலைவர்கள் பற்றி, அவர்கள் எடுத்த முடிவுகள், அதனால் ஏற்பட்ட விளைவுகள், எப்படி தங்களை தகவமைத்தனர், தங்கள் உளவாளிகளை எந்த அளவிற்கு பிற நாடுகளின் அரசியல் ஆழத்துக்குள் இறக்கியிருக்கின்றனர், அதன் மூலம் தங்களுக்கு தேவையான உலக அளவிலான அரசியல் காய்நகர்த்தல்களை எவ்வாறு நிகழ்த்தியிருக்கின்றனர், தங்கள் எதிரிகளை பிறநாட்டிற்குற்குள் சென்று தூக்கி வரும் ஆள்கடத்தல்கள், போர்விமான/படகு கடத்தல்கள் என இப்படி சகல விதமான சம்பவங்கள் விவரிக்கப்பட்டிருக்கிறது.

உளவு வேலை ஒரு போதை என்பது, பல சம்பவங்கள் மூலமாக விளக்கப்பட்டிருக்கிறது. அதாவது, உளவு பார்த்து பழக்கப்பட்டமையால் எதிரி நாடுகள் என்றில்லாமல், நட்பு நாடு, அவர்களது அரசியல், ஏன் சொந்த நாட்டு அரசியல் தலைவர்களையும் உளவு பார்க்க அவர்களது உளவாளிகளை எங்கும் நீக்கமற நிறைந்திருக்கச் செய்திருக்கின்றனர். உதாரணமாக, தனது 'இஷ்டமித்ர பந்து'வான அமெரிக்காவிலும் கணக்கற்ற உளவு வேலைகளை பார்த்து வருகிறது மொஸாட்.

யூதர்களின் அடிநாதமாக உள்ள ஒரு கொள்கை, எந்த ஒரு யூதனும் உலகில் எந்த மூலையிலும் கொல்லப்படக்கூடாது. போலவே, முடிந்த அளவிற்கு தங்களது உளவாளிகளையும், அவர்கள் தோல்வியுற்றாலும் எப்படியாவது மீட்டு, முறையான வகையில் அவர்களது மீதி வாழ்க்கையை கழிக்க ஏற்பாடும் செய்து தருகின்றனர்.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் உளவு அமைப்பு எந்த எல்லை வரை ஆபத்து, தியாகங்கள் புரிந்து உதவியிருக்கும் என்பதற்கு இஸ்ரேலிய உளவு அமைப்பான, 'மொஸாட்'ன் காகித சாட்சியாக இந்த புத்தகத்தை பார்க்கலாம்.
Profile Image for Remy Moses.
35 reviews5 followers
July 24, 2021
வீடு மட்டுமல்ல நாடு புகுந்தும் ஆட்களை கடத்தி இருக்கிறார்கள்.பின் தொடர்ந்து சென்று ரகசியமாக கண்காணித்து இருக்கிறார்கள்,தனிப்பட்ட உரையாடல்களை ஒட்டுக் கேட்டிருக்கிறார்கள், லஞ்சம் கொடுத்து இருக்கிறார்கள், திருடி இருக்கிறார்கள், கணக்கற்ற முறை பொய் சொல்லி இருக்கிறார்கள், பெண்களை தூண்டிலாக பயன்படுத்தியிருக்கிறார்கள், ஏமாற்றியிருக்கிறார்கள்,மோசடி செய்திருக்கிறார்கள், இவை அனைத்தும் அரசாங்கத்தின் பரிபூரண ஆசிர்வாதத்துடன் செய்திருக்கிறார்கள் இன்னமும் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால் நம்பமுடிகிறதா நம்பித்தான் ஆகவேண்டும்.இஸ்ரேலிய உளவுத்துறை மொசாட் நம் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு வானளாவிய அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.அதை வைத்துக் கொண்டு அவர்கள் என்னவேண்டுமானாலும் செய்யலாம்.எதுவும் தவறில்லை எதற்கும் விசாரணை இல்லை தண்டனை இல்லை.எதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது ?அதன் நோக்கம் என்ன ?அவர்கள் இதுவரை என்னென்ன செய்திருக்கிறார்கள் ?எளிய பின்னணியில் இருந்து உலகமே வியக்கும் மாபெரும் நிறுவனமாக இவர்கள் வளர்ந்தது எப்படி ?ஒரு துப்பறியும் நாவலை காட்டிலும் பல மடங்கு குறுகுறுப்புடன் நூலின் ஆசிரியர் விவரிக்கின்றார்.
Profile Image for Elayaraja Subramanian.
129 reviews8 followers
March 22, 2021
இந்த புத்தகத்தின் அட்டையில் இஸ்ரேல் உளவுத்துறையின் "விறுவிறுப்பான" வரலாறு என ஒரு வரி குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் 0.00001 சதவிகிதம் கூட பொய்யில்லை. ஒரு "த்ரில்லர்" நாவலுக்கு இணையாக எழுதப்பட்டிருக்கும் விறுவிறுப்பான அபுனைவு நூல்.

இந்த புத்தகம் வாசிப்பதற்கு காரணமாக இருந்தது, மருதன் அவர்கள் எழுதிய "ஹிட்லரின் வதைமுகாம்கள்" புத்தகம். வரலாறு முழுக்கவே துன்பத்திற்கும் துரத்துதலுக்கும் ஆளாகிய யூதர்கள் அவர்களுக்கான நாட்டை எப்படி அமைத்தார்கள்? நிறைய வேதனைகளை அனுபவித்த யூதர்கள் அதே போன்றதான ஒடுக்குமுறைகளை ஏன் பாலஸ்தீனியர்களின் மீது செலுத்தினார்கள்? இஸ்ரேலை உருவாக்கிய பிறகு யூதர்களை "கரப்பான்பூச்சிகளை" போல் கொன்றொழித்த நாஜிகளை, ஜெர்மானியர்களை என்ன செய்தார்கள் யூதர்கள் என்றெல்லாம் தெரிந்து கொள்ள விரும்பினேன். கிண்டிலில் இந்த புத்தகம் கிடைத்ததும் வாசிக்கத் தொடங்கிவிட்டேன்.

நான் தெரிந்து கொள்ள நினைத்த விஷயங்கள் மிக விரிவாக பேசப்படவில்லை என்றாலும் அங்கங்கே இஸ்ரேல் - பாலஸ்தீன் பிரச்சனை, அதை தொடங்கி வைத்த பிரிட்டிஷ் அரசாங்கம், இஸ்ரேலை வளர்த்தெடுத்த அமெரிக்கா போன்ற விஷயங்கள் பேசப்பட்டிருக்கின்றன. இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு மொசாட்டின் பங்களிப்பு எத்தனை முக்கியமானது, சுற்றிலும் அரேபிய நாடுகளை பகைவர்களாக வைத்துக்கொண்டு எப்படி சாமர்த்தியமாக எதிரிகளை சமாளிக்கிறார்கள், இஸ்ரேலும் மொசாட்டும் "மொக்கை" இல்லை என்று மற்ற நாடுகளுக்கு எப்படி பறைசாற்றினார்கள் என்பதெல்லாம் ஜேம்ஸ் பாண்ட் பட பாணி வேகத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன.

முக்கியமாக ரஷ்யாவின் தயாரிப்பான "மிக்-21" ரக விமானத்தை ஈராக்கில் இருந்து சாமர்த்தியமாக ஈராக் விமானியை வைத்தே இஸ்ரேலுக்கு கடத்தி வருவதை சொல்லலாம். ஆனானப்பட்ட அமெரிக்காவே மிக்-21 ரக விமானத்தை கையகப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருந்த போது 'சின்னபயல்' மொசாட் உள்ளே புகுந்து தட்டித் தூக்கிக் கொண்டு வந்து அமெரிக்காவிடம் கெத்து காட்டுவது மொசாட்டின் அதிரடியான சம்பவங்களில் ஒன்று. அதே போல யூதர்களை விதவிதமாக கொன்று குவித்த 'மாஜி' நாஜி ஒருவர் அர்ஜென்டினாவில் வேறொரு பெயரில் பதுங்கி இருக்க அவரை அலேக்காக 'மொசாட்' இஸ்ரேலுக்கு 'பார்ஸல்' பண்ணும் சம்பவம் அதிரடி திருப்பங்கள் நிறைந்த ஒரு சினிமாக்காட்சியை விஞ்சிடும்.

அபுனைவு நூல் என்றாலே வெறும் தகவல்கள் நிறைந்த, வருடங்கள் வாரியாக சம்பவங்களை அடுக்கிடும் சமூக அறிவியல் பாட புத்தகத்தை போலில்லாமல், ஜனரஞ்சகமாக சில இடங்களில் நகைச்சுவைத் ததும்ப எழுதப்பட்டிருக்கிறது இந்த புத்தகம்.
60 reviews6 followers
December 5, 2020
திரைப்படங்களில் காட்டப்படும் உளவு வேலைகளை போல் உண்மையாகவே பல உளவு வேலைகளை செய்து சி.ஐ.ஏ கண்களில் கூட விரலைவிட்டு ஆட்டிய ஒரு அமைப்புதான் இஸ்ரேலின் மொஸாட் உளவுத்துறை அமைப்பு. பாலஸ்தீனத்தில் இருந்து இஸ்ரேல் என்ற நாடு உருவாகவே மொஸாட் தான் முக்கிய காரணமாக இருந்துள்ளது. அதிகபட்ச அதிகாரத்தில் இருக்கும் மொஸாட் டை இஸ்ரேல் பிரதமரை தவிர வேறு எந்த ஊழியருக்கும் கேள்வி கேட்க உரிமை கிடையாது இந்த உளவு துறைக்குமே மனித உயிர்கள் மீது அவ்வளவு அக்கறை கிடையாது . ஒரு சின்ன நாட்டில் இவ்வளவு சக்தி வாய்ந்த உளவு துறை இருக்க முடியுமா ? என வியக்கவைத்த புத்தகம்.
Profile Image for Sangamithra.
58 reviews26 followers
April 27, 2022
🔎மொசாட் – இஸ்ரேலிய உளவுத்துறைப் பற்றிய வரலாறு தான் இப்புத்தகம். இஸ்ரேலுக்கு வெளியிலிருந்து வரும் ஆபத்துகளைத் தடுப்பதுதான் மொசாட்டின் முக்கிய பணி.

🔎இவ்வுளவுத்துறை உருவான விதம், அதன் தலைவர்கள், வெற்றிகள், சொதப்பல்கள் என நிறைய தகவல்கள் உள்ளன. எந்த ஒரு திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்பும் பாய்ஸ் பட செந்தில் போல Information is wealth என்று சொல்லி நிறைய நிறைய தகவல்களைத் திரட்டுகிறார்கள். அதற்குப் பின்புதான் செயல்.

🔎பிளாக் செப்டம்பர் படுகொலைக்கான எதிர்த்தாக்குதல், ஐக்மென், யூதப் படுகொலை, யூதர்களுக்கு உதவியவர்கள், கப்பல் கடத்தல், விமானக் கடத்தல், இரகசியமாய் அணு உலை அமைத்தல், உளவாளிகளாய் செயல்பட்ட சாதாரண பொதுமக்கள் என பிளாக் செப்டம்பர் தொடங்கி இஸ்ரேலிய உளவாளிகளுக்கான நினைவுச்சின்னம் வரை நிறைய தகவல்கள் இப்புத்தகத்தில் உள்ளன.

🔎மொழிநடை பற்றி சொல்லியே ஆகவேண்டும். புத்தகத்தில் இருப்பது என்னவோ ஒரு கட்டுரை எழுதுவதற்கான தகவல்கள். ஆனால் வாசிக்கையில் யாரோ ஒருவர் பக்கத்தில் உட்கார்ந்து கதை சொல்லுவது போலவே இருந்தது. நாடுகள், தலைவர்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும் ஏதோ திரில்லர் வகை கதையை வாசிப்பது போன்றே இருந்தது. அவ்வப்போது இது கதையல்ல நிஜம் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். ஆசிரியருடைய அனைத்து புத்தகங்களும் இப்போது tbr -ல்.
அரசியல், பொருளாதாரம் குறித்து இதுவரை எந்தப் புத்தகமும் வாசித்ததில்லை. ஆனால் இப்புத்தகம் அதற்கான உந்துதலை நிச்சயம் ஏற்படுத்தியுள்ளது.

🔎புத்தகம் எவ்வளவு சுவாரஸ்யமானதாக இருந்தாலும் கொஞ்சம் நிதானமாக யோசிக்கையில் இதற்குப் பின்பு எவ்வளவு உயிர்ச் சேதங்கள் இருக்கின்றன என்ற கேள்வி ஒரு வித அச்சத்தைத் தருகிறது. ஏனென்று தெரியவில்லை… ஆனால் இப்புத்தகத்தை வாசிக்கும்போது (Heal the world) பாடல் ஞாபகத்திற்கு வந்து போனது. இன்றும் கூட போர் பற்றிய செய்திகள் வந்த வண்ணம் தான் உள்ளன. உண்மையில் அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டு செல்ல இருக்கும் உலகத்தைக் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

🔎வரலாறு சார்ந்தோ, உணர்வுகளின் அடிப்படையிலோ இவ்விரு நாடுகள் தொடர்பாக நம்மைப்போன்ற வெளிநபர்கள் கருத்துக்கள் எந்த அளவிற்கு சரியானதாக இருக்கும் என யூகிக்க முடியவில்லை. ஆனால் அமைதிக்கான குரல் நிச்சயம் உலகம் முழுவதும் தொடர்ந்து ஒலிக்கும்.
Profile Image for Tharsi Karan.
50 reviews7 followers
Read
November 7, 2020
மொஸாட் பற்றி கேள்விப்பட ஆரம்பித்ததிலிருந்து அதன் நடவடிகடகைகள் மீது பயங்கர ஆர்வம் இருந்து வருகின்றது. அதன் சில வெற்றிகரமான நடவடிக்கைகளின் தொகுப்பே இந்த புத்தகம். முதலே சில நடவடிக்டகைகள் பற்றி கேள்விப்பட்டிருந்ததால் வாசிக்கும் போது ஆஹா எனும் அளவுக்கு இல்லை..
Profile Image for Dinesh Kanna.
19 reviews3 followers
July 15, 2017
மொஸாட், சொக்கன் என்ற கைதேர்ந்த எழுத்தாளனின் கைவண்ணம் நன்கு மிளிர்கிறது. மொஸாட்-ன் நிகழ்வுகளை சற்று குறைத்து அதன் கட்டமைப்பை பற்றி இன்னும் சற்று விரிவாக விளக்கியிருக்கலாம்.
Profile Image for Mohan Kumar.
16 reviews1 follower
January 15, 2014
Interesting book if you like international politics and detective incidents. The author makes it enjoyable with beautiful narration. Good read !!
2 reviews
February 2, 2022
Interesting Narration about Israel's Mossad
I Like the following in this book
* Narration of the Author.
* Operations of Mossad.
* Strategies of Mossad.
* Importance of Intelligence in self defense.

I would recommend this book for
* Who is interested to read a book in Tamil about Mossad.
* Who likes in thriller.
My ratting
4.7/5
Profile Image for Krishna Priya.
16 reviews4 followers
June 2, 2021
உறவு துறையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தினால் உலகின் முன்னணி உளவுத்துறையான மொஸாட்டை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்து சொக்கன் எழுதிய இந்நூலை வாசித்தேன்.
அமெரிக்காவின் சிஐஏ வின் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்ட கூடிய ஒரு உளவுத்துறை உண்டு என்றால் அது இஸ்ரேலின் மொஸாட் தான்.

சிறுவயதிலேயே ஜெர்மனியின் யூதர்களை ஹிட்லர் எவ்வாறு கொடுமைப்படுத்தினார், அழித்தார் என்றெல்லாம் படித்திருக்கிறோம். உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் அங்கெல்லாம் விரட்டப்பட்ட ஒரு இனம் உண்டென்றால் அது யூத இனம் தான். பல நூற்றாண்டுகளாகவே வாழ்வதற்கே சிரமப்பட்ட யூத இனம் 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தங்களுக்கென ஒரு யூத நாட்டை அமைத்துக் கொண்டார்கள்.

இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு மொஸாடின் பங்கு என்ன ? சுற்றிலும் அரேபியர்களை பகைவர்களாக வைத்துக்கொண்டு எவ்வாறு எதிரிகளை சமாளிக்கிறது, என்ற கதையெல்லாம் ஜேம்ஸ் பாண்ட் பாணியில் திரில்லராக சொல்லப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் உளவுத்துறை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை பற்றியும், ஒரு சிறிய நாட்டில் இவ்வளவு சக்திவாய்ந்த உளவுத்துறை இருக்க முடியுமா?என நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிற புத்தகம். மொஸாட்டை கதாநாயகனாக வைத்து இப்புத்தகத்தை எழுதியுள்ளார் சொக்கன்.
Profile Image for Yadhu Nandhan.
260 reviews
July 29, 2023
உண்மை நிகழ்வுகள் புனைவுகளை மிஞ்சும்படி எப்படி இருந்திருக்கின்றன என்றும் தான் நினைத்ததை நடத்திக் காட்டிட எப்படியெல்லாம் எல்லைகளற்று ஒரு உளவு அமைப்பு செயல்பட்டிருக்கிறது என்பதையும் சுவைபட ஒரு நாவல் போன்ற நடையில் சொல்லியிருக்கிறார் ஆசிரியர் சொக்கன்.

இரண்டாம் உலகப் போரைப் பற்றியும் இசுரேல் பாலத்தீன வரலாற்றையும் நாசர், அராபத், சதாம் உசைன் போன்ற ஆளுமைகளைப் பற்றியும் அமெரிக்காவிற்கும் மொசாட்டுக்கும் இடையான தொடர்பைப் பற்றியும் மொசாட் நிகழ்த்திய எண்ணிப்பார்க்க இயலாத திட்டமிட்ட கொலைகள் பற்றியும் விவரிக்கும் இந்நூல் வரலாற்றை அறிய விரும்புவோர்க்கு ஒரு விருந்தாய் அமைந்துள்ளது.
Profile Image for Jeni Gabriel.
51 reviews3 followers
September 11, 2021
A general introduction and overall world known achievements of Israel with Mossad have been portrayed in Tamil. Writer has provided actual dates and facts in a easy manner. But not very much details of every achievements is shared. I found the book as a gist of Mossad. Anyone who needs to just know what and little wow factors of Mossad are good to start with this book.
1 review
Read
August 26, 2021
Really great thanks for the book
This entire review has been hidden because of spoilers.
5 reviews
April 7, 2022
Wow. It was like reading a thriller.

I always love the books of Chokkan. His style, his anecdotes are always fresh. Great insight and inspiring story about Israel.
Profile Image for Kalaiselvan selvaraj .
134 reviews18 followers
March 7, 2020
ஒலிம்பிக் விளையாட்டில் பங்கேற்கும் தங்கள் நாட்டு விளையாட்டு வீரர்கள் துப்பாக்கி முனையில் சிறைபட்டு கொலை செய்யப்படுகிறார்கள். இஸ்ரேல் நாடே கண்ணீர் வடிக்கிறது. அதிகாரம், உளவுத்துறையை(மொஸாட்) அழைக்கிறது. யாரு இத செஞ்சாங்கனு கண்டுபிடிங்க என உத்தரவிடுகிறது. உளவுத்துறை ஒரு பெயர் பட்டியலை கொடுத்து இவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என்கிறது. அதிகாரம், அதில் உள்ள முக்கிய பெயர்களை வட்டமிட்டு இவங்கள கொண்ணு போட்டுடுங்க என உத்தரவிடுகிறது. உளவுத்துறை தனது வேட்டை ஆரம்பிக்கிறது. ஏரியா வுட்டு ஏரியா போயி சம்பவம் பண்ணாலே ஊர்மூச்சுடும் புகழ் பரவும் இவங்க நாடு வுட்டு நாடு போயி வேட்டையாடிட்டு வந்ததால இஸ்ரேல் உளவுத்துறை(மொஸாட்) புகழ் உலகமூச்சுடும் பரவுது. மேக்21 போர் விமானம் எகிப்தில் இருந்து கடத்தப்பட்டது, மஞ்சள் கேக்கை(யுரேனிம்) தந்திரமாக வாங்கியது, இரண்டாம் உலகப் போரில் யூதர்கள் கொலை செய்த ஹிட்லரின் படையில் இருந்த முக்கியமான ஒரு ஆள் ஐக்மென் வேறு நாட்டு குடிமகனான இவரை அந்த நாட்டிலிருந்து அந்த நாட்டு அரசாங்கத்துக்கு தெரியாம கைது பண்ணி இஸ்ரேலுக்கு கடத்தி கொண்டாந்து நீதி மன்றத்துல நிறுத்தி தண்டன வாங்கி கொடுத்தது, தங்களுக்கு சேர வேண்டிய போர் படகு வேறுநாட்டில் சிக்கிகொண்டதை தந்திரம் செய்து கடத்தி வருவது, ஆறு நாள் போரில் அசுர வெற்றி, இதில் மொஸாட் செய்த அற்புதங்களை எளிய எழுத்து நடையில் விவரிக்கிறார் சொக்கன். -கலைச்செல்வன் செல்வராஜ்.
Profile Image for Balaji Srinivasan.
148 reviews10 followers
September 26, 2019
மொஸாட் - இஸ்ரேலின் உளவுத்துறை பற்றிய புத்தகம். சுமார் 300 பக்கங்கள் கொண்டது.

உளவுத்துறை பற்றிய புத்தகம். அதுவும் கதையாக இல்லாமல் raw data வேறு.இதை எவ்வளவு சுவாரசியமாக எழுதி விட முடியும் என்று பெரிய சந்தேகம் இருந்தது. ஆனால் மிகவும் விறுவிறுப்பாக சுவாரசியமாக பக்கங்கள் கிடுகிடுவென்று நகர்கின்றன. எழுத்தாளர் சுவராஸ்யம் கூட்டுவதற்கு சற்றே மிகைப்படுத்தி இருக்கிறார் என்று நினைக்க தோன்றினாலும் பக்கங்கள் நகரும் வேகத்தில் அதெல்லாம் யோசிக்க தோன்றவில்லை.

முக்கியமாக மிக்-21 விமானம் , இஸ்ரேல் - எகிப்திய போரில் மொஸாட்டின் சித்துவேலைகள், பிரான்சிலிருந்து கப்பல்களை மீட்டெடுத்தல், அடால்ப் ஐக்மேன் போன்ற அத்தியாயங்கள் சிறப்பாக இருக்கின்றது.

அவ்வளவும் மயிர்கூச்செரியும் சம்பவங்கள். 2 மணி நேரத்தில் ஒட்டுமொத்த புத்தகத்தையும் படித்து முடிந்து விடலாம்.
Profile Image for Selva.
39 reviews8 followers
July 14, 2018
Interesting, not in the manner it is written but its content. Way of writing is in colloquial language form, still the author has done his job well, by making it look like suspense thriller. It could have expressed the psychological state of jews deeper and implanted the necessity of such efficient intelligent agency, portrays both its success and failure stories, how it evolved and came forefront in a short time. It is a fact that development of Israel depends mainly on its intelligent agency named Mossadd.
188 reviews4 followers
May 16, 2014
This book written by chokkan have taken selective incidents that happened of mozad and it purely made me to hail mozad intelligence having known their smart acts they performed to other countries. I was completely impressed with the way mozad replied back to germany munich incident, the way they took the american flight and even snooping bill clinton calls and getting to know his affair with the maid even before CIA can sniff it .;.. it all gave a great impression towards mozad. Great read
Profile Image for Lakshmi Ganabathy.
4 reviews
June 20, 2016
மிகவும் ஜெனரஞ்சமாக எழுதப்பட்டுள்ள ஒரு நாவலுக்கே உரித்தான அத்துணை பண்புகளையும் கொண்ட ஒரு அபுனைவு நூல். மிக வேகமாய் ஒரே மூச்சில் படித்து முடித்து விடலாம். ஆனால் குறைகள் இல்லாமல் இல்லை. நான் எதிர்பார்த்து இல்லாமல் போனவை :

எலி கொகன் (ELI COHEN) ஒரு அத்தியாயத்திலாவது வருவார் என நினைத்தேன் இல்லை!! மொஸாட் தனது ஆளெடுக்கும் பணி (RECRUITMENT PROCESS )பற்றி விளக்கி இருக்கலாம்.

குறைகள் இருந்தாலும் தவறவிடக்கூடாத ஒரு உளவாளி நூல்.
2 reviews1 follower
April 13, 2023
வாசிப்பதற்க்கு இனிய புத்தகம்.

இது , இஸ்ரேலிய உளவுத்துறை பற்றிய அரிய தகவல்களை அறிந்து கொள்ள உதவும் அரிய புத்தகம்.
ஒரு உளவாளியின் சோதனைகளையும் வேதனைகளையும் விட உளவுத்தறையின் சாதனைகளைப்பற்றி அதிகம் பேசுகிறது.
Profile Image for Hariprasad.
27 reviews
January 6, 2020
Finished in 3 hours of continuous reading. Author explained what is Mossad with some incidents exposed to outer world. Interesting read in Tamil vocal. Not touched too much about Isreal and Palestine but concentrated more on the Isreal intelligence and how they work.
Profile Image for Mithun.
16 reviews1 follower
April 11, 2020
Short read

Brief overview of mossad...nice to read and good way of explaining. Gives an insight about under cover agencies and how they operates..and how mossad is unique compared to others...
Profile Image for Viji Krishnan.
8 reviews
September 19, 2021
அப்ப்பா.... அடடே என்ன ஒரு புத்தகம்

அருமை அருமை அருமை அருமை...படிக்க படிக்க பரவசம் அடையச் செய்தது... மொசாட்டை ஹுரோவாக அழகாக காட்டியது அற்புதம்.. விருவிருப்பான கதைக்களம்.. மற்ற நாடுகளை பற்றி தெரிந்து வைத்துக் கொள்ள உதவும்
3 reviews
December 8, 2014
It was one of wellmade book, author is able to maintain the interest until the last chapter. It is bascially non-fiction book, but he explained like movie story and which have liked very much.
Profile Image for Gnana Sekar.
16 reviews
July 27, 2015
Totally inspiring! I though only in dreams those action will happen but mossat says "chk this".. simply awesome.. Olympic part was amazing....
1 review
Read
April 16, 2016
i need to read this book
This entire review has been hidden because of spoilers.
Displaying 1 - 30 of 37 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.