What do you think?
Rate this book


112 pages, Paperback
Published January 1, 2012
சி. சு. செல்லப்பா தொகுத்துள்ள இந்த நூலில் அவரோடு சேர்த்து பத்து எழுத்தாளர்கள் எதற்காக எழுதுகிறேன்? என்பதற்குப் பதில்கூற முயன்றிருக்கிறார்கள். அந்தப் பதில்களும்கூட அப்போதைய ஆறுதல்கள்தான். பின்னொரு நாளில் மீண்டும் இதே கேள்வி அவர்கள்முன் தோன்றியிருக்கும். அன்று அவர்கள் வேறு பதில்களைக் கூறியிருக்கக்கூடும்.
எனக்கு இந்தப் புத்தகம் நான் தேடியவற்றின்மேல் சில வெளிச்சங்களை வீசியுள்ளது. என் தேடல் நீண்டுகொண்டே செல்லக்கூடிய ஒன்று. கடலிலிருந்து வானுக்கும், வானிலிருந்து மண்ணிற்கும், மண்ணிலிருந்து மீண்டும் கடலுக்குமெனச் சுழன்றுகொண்டே இருக்கும் நீரின் வேட்கை அது.
இந்தத் தொகுப்பில் என் மனதிற்கு நெருக்கமாக நின்றது எழுத்தாளர் ஆர். ஷண்முகசுந்தரம் அவர்களின் கட்டுரை. அதன்பின் ந. பிச்சமூர்த்தி மற்றும் வல்லிக்கண்ணன் அவர்களின் கட்டுரைகள்.