இயற்கையின் ஜீவிதமே என்னை மையம் கொள்கிறது. வீதி வீசும் சாட்டை என் ஆன்மாவைப் புண்படுத்துகிறது. நெருப்பிலிருந்து மலரைப் பறித்தவன் போல என் துயரமான ஆன்மாவிலிருந்து கனவுகளை,மாய எதார்த்தங்களைப் பறித்து அனைவருக்கும் சூட்டுகிறேன்.(ராணி திலக்)
ராணி திலக் (ஆர்.தாமோதரன்; பிறப்பு : ஜனவரி 15,1972) தமிழ்க்கவிஞர், கவிதை விமரிசகர், சிறுகதை எழுத்தாளர். 1997 முதல் தமிழ் சிறுபத்திரிகை சூழலில் இயங்கி வருபவர்.