கே.ஜி.ஜவர்லால் ஓர் இயந்திரவியல் பொறியாளர். வாகனங்கள் தயாரிக்கும் ஒரு பிரபல நிறுவனத்தில் முதுநிலை மேலாளராகப் பணியாற்றியவர். இவரது சிறுகதைகள் சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. ஐம்பெரும் காப்பியத்தில் முதல் மற்றும் முதன்மையான காப்பியம், சிலப்பதிகாரம். தமிழர்களின் நாகரிகம், பண்பாடு, சமயம், சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த கருத்துகளின் கரூவூலம் இது. இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் இடம்பெறுவதால் முத்தமிழ்க் காப்பியம் என்றும் சிலப்பதிகாரம் அழைக்கப்படுகிறது. அரச வம்சத்தினரை நாயகர்களாகப் புனைந்து காப்பியங்கள் இயற்றப்பட்டு வந்த காலத்தில், கோவலன், கண்ணகி, மாதவி ஆகிய சாமானியர்களைக் கதை மாந்தர்களாக உருமாற்றினார் இளங்கோவடிகள். இனிக்கும் பேரிலக்கியமான சிலப்பதிகாரத்தின் அழகிய நாவல் வடிவம்.
அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் (அரசியலில் தவறு செய்வோர்க்கு அறக்கடவுள் எமனாகும்) உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் (விதி, செய்த வினைக்கு எதிர்வினை ஆற்றாமல் விடவே விடாது)
ஒரு ஊரில் ஒரு கதாநாயகன் இருந்தான். அவனுக்கு சில நல்ல குணங்கள் இருந்தன. ஒரு நாள் அவனுக்கு ஒரு துன்பம் நிகழ்ந்தது. தன்னுடைய நல்ல குணங்களைக் கொண்டு அவன் அந்தத் துன்பத்தில் இருந்து மீண்டு வந்தான்.
அது இராமாயணமாகட்டும் , பாரதமாகட்டும், எந்த தமிழ், ஆங்கிலப் படமாக இருந்தாலும் , இது ஒன்று தான் கதை.
கதைக்கு ஒரு கதாநாயகன் இருப்பான், அவனுக்கு துணையாக ஒரு நாயகி, அவர்களுக்கு சில நண்பர்கள் மற்றும் உறவினர்கள். இவர்களுக்கு ஒரு எதிரி அல்லது வில்லன். வில்லனின் கொடுமைகளை வென்று எடுப்பதுதான் கதை.
ஆனால்,
இதிலிருந்து மாறுபட்டு, மிக மிக மாறுபட்டு எழுதப் பட்ட கதை சிலப்பதிகாரம்.
உங்களுக்குத் தெரிந்த கதைதான்.
கோவலன், கண்ணகியை மணந்தான். பின் மாதவியிடம் காதல் வசப்பட்டான். செல்வத்தை இழந்தான். பின் கோவலனும் கண்ணகியும் மதுரை சென்றார்கள். பொய் பழி சுமத்தப் பட்டு கோவலன் கொலையுண்டான். அதனால் சினந்த கண்ணகி மதுரையை தீகிரையாக்கினாள்.
கோவலன் கதாநாயகன். கண்ணகி கதாநாயகி.
வில்லன் யார் ?
கோவலனுக்கு வில்லன் யார் ? மாதவியா ? அவள் மேல் அவன் கொண்ட காதலா ? தான் தப்பிக்க கோவலனைக் கை காட்டி விட்ட பொற்கொல்லனா ? தவறான தீர்ப்பு சொன்ன பாண்டியனா ?
யாரும் இல்லை. கோவலன் அங்கு வருவான் என்று பொற்கொல்லன்னுக்குத் தெரியாது. அவனுக்கு கோவலன் மேல் பகை இல்லை.
விதி.
விதிதான் வில்லன் என்று கொள்ளலாம்.
நம் தமிழ் இலக்கியம் விதியை வெகுவாக நம்பி இருக்கிறது.
ஊழ் என்று அவர்கள் அழைத்தார்கள். வினை என்றும் கூறப் பட்டது.
திருக்குறள், கம்ப இராமாயணம் என்று எங்கு பார்த்தாலும் விதியின் பலம் நம்பப் பட்டது.
அவன் கால் பட்டு அழிந்தது என் தலை மேல் அயன் கை எழுத்தே என்பார் அருணகிரிநாதர்.
விதியை நம்பாத இலக்குவன் (லக்ஷ்மணன்) கூட பின்னாளில், சீதை அவனை கடிந்து பொன் மான் பின்னே அனுப்பிய போது , விதியின் போக்கை எண்ணி நொந்து சென்றான்.
அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும். அரசியல் என்றால் இந்த பொறுப்பும் அரசியல் தான். தேர்தலில் நின்று வெற்றி பெற்று வருவது மட்டும் அரசியல் அல்ல.
அரசியல் பற்றி கூறவந்த வள்ளுவர், அதனை இறைமாட்சி என்று குறிப்பிடுகிறார். இறைவனின் தொழில் அது. உயிர்களைக் காப்பது.
அரசியலில் பிழை செய்தவர்களை யார் தண்டிப்பது ? அரசன் தவறு செய்தால் அவனை யார் தண்டிப்பது. அறம் அவர்களைத் தண்டிக்கும். சட்டம் தண்டிக்காமல் விடலாம். நீதி மன்றம் தண்டிக்காமல் விடலாம். தெய்வம் கூட மன்னிக்கலாம். அறம் தண்டித்தே தீரும். யாரும் விதி விலக்கு இல்லை.
நல்ல குணம் உள்ள பெண்களை உயர்ந்தவர்கள் போற்றுவார்கள். பெண் குணம் கெட்டால் சமுதாயம் சீரழிந்து போகும். எனவே, ஒரு சமுதாயம் உயர வேண்டுமானால், அது நல்ல பெண்களை போற்றியே ஆக வேண்டும்.
ஊழ்வினை எங்கு போனாலும் விடாது. செய்த வினைக்கு பலன் கிடைத்தே தீரும். இந்தப் பிறவியில் இல்லாவிட்டால் அடுத்த பிறவியில் கிடைக்கும்.
இந்த மூன்று கருத்துக்களை கொண்டு பின்னப்பட்ட காவியம் சிலப்பதிகாரம்.
This is a simplified, novel version of ancient tamil literature classic which is originally a collection of poems from 5th or 6th century. It depicts the story of a couple who goes through injustice and how the fight for it goes. Husband cheats on wife but realises his mistakes and comes back to his wife. They leave for another country to start anew. There, the husband is wrongly accused of theft and gets punished for it. Wife takes it to the court to get justice from the king and the king dies from broken heart after knowing the truth. Wife doesn't stop there; she goes on to burn down whole city except for children, cattle, chaste women and men, old people, etc., The story emphasizes that everyone including king should follow virtuous path or dharma.
It is a nice story except for some things like how Kannagi (the wife), accepts even cheating without batting an eye and even burns down a whole city for her husband.
As many other reviews here mentioned, I also liked learning about various beliefs of people, explanations of some phrases that are used even now and descriptions of art, dance, flora and fauna of that time.
As a first time Tamil literature reader, I was glad to find an easy-to-read, novelised version of this Tamil Epic. Now I have the satisfaction of having read at-least one of the 5 great Epics and know the complete story of Kannagi and her fame that gets referenced in my land of Tamil Nadu. :D. Though it was easy to read, I ended-up expecting more literary complexity/artistry in the book which remained an expectation. But, I enjoyed my first ever Tamil book. Looking forward to reading my next one by Pa. Singaram to see if the authorship delivers to my expectation... Am I a snob for this? LOL
Was nice to get an intro to the epic through this modern novel version. While the sentiments within the story are outdated and truly mind-boggling for a modern woman like me to see the way society functioned and flourished back then with all its norms, prejudices and classes, and unquestioning trust in authority, it is interesting to know what gave them life back then. It is weird how we just accepted that there is this one sect who is superior to us and can read the vedas and that no one else bothered to be curious about what is in them? What happened to those bothered about the exclusivity?