நம் கால மனித வாழ்வில் அதிகமும் உணரப்படாதிருக்கிற பிரச்சனைகளின் முகங்களை இக்கதைகள் எழுத்தில் பதிய வைத்திருக்கின்றன. இந்த முகங்களில் தெரியும் நம்முடைய சாயல்களை இப்படைப்புகளோடு உறவு கொள்ளும் ஒவ்வொரு வசகனும் ரகசியமாக உணரமுடியும். யதார்த்தமும் புனைவும், அவதானிப்பும் விதையும் ஒன்றோடொன்று கலந்துறவாடும் கதைகள். இவற்றில் பெரும்பாலனவை யதார்த்தமும் ஆழ்மன யதார்த்தமும் கூடி முயங்கிய கனவுத் தன்மையிலானவை. நம் நனவுலகை இடையறாது தொடர்ந்து அதோடு இரண்டறக் கலக்கும் கனவுலகம் மற்றும் தொன்மங்களாகத் தொடரும் நினைவடுக்குகள் ஆகிய ஆழ்ந்த, பிடிபடாப் பிரதேசங்களில் சஞ்சரிப்பவை. மேலும், சிறுகதை வடிவத்தின் அழகியல் சாத்தியங்களை அற்புதமாக வசப்படுத்தியிருப்பவை.
சி. மோகன் (C.Mohan) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நூல்தொகுப்பாளர், கலை இலக்கிய விமர்சகர் என்று பன்முகங்களுடன் இயங்கும் ஒரு தமிழ் இலக்கியவாதியாவார். 2014 ஆம் ஆண்டு சி.மோகனுக்கு விளக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விமர்சனக்கருத்துக்கள் வழியாகவும், பதிப்புகள் மூலமாகவும் கவனத்தை ஈர்த்துள்ளார். ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’ என்ற சிறியநாவல் ஒன்றையும் கமலி என்ற ஒரு நாவலையும் எழுதியிருக்கிறார். இவரது மொழியாக்கத்தில் வந்த ‘ஓநாய்குலச்சின்னம்’ என்ற மொழிபெயர்ப்பு குறிப்பிடத்தக்க ஒரு படைப்பாகும். எழுத்து தவிர, ஓவியம், சிற்பம், திரைப்படம் ஆகிய துறைகளிலும் கவனத்தைச் செலுத்திவருபவர்.
இரவு உணவு படித்துவிட்டு ஆசிரியரை தேடுகையில் அவரின் மற்றொரு படைப்பான This way to a gas ladies and gentlemen'யை தேடி படித்தேன் .. நொறுங்கிய மனத்தோடு முடித்தேன்... சி.மோகனின் மொழிபெயர்ப்பில் வாசிப்பது சுகமே..