”சுமார் நூறாண்டுகளுக்கு முன்னால் இருந்த இந்திய சமூகத்தின் ஒரு பிரிவினரின் நிலைமையை அன்றைய சமூகத்தின் நம்பிக்கைகள், சடங்குகள், உணவுப்பழக்கங்கள், வேட்டைக்கான சட்டங்கள், ஆங்கிலேய எஜமானர்களுக்கும் உள்நாட்டுக் குடிகளுக்கும் இடையே நிலவிய உறவுகள் என அனைத்தையும் சித்தரிக்கிறது”
“இப்புத்தகத்தில் நான் விவரிக்கப்போகும் நிகழ்ச்சிகள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் நடந்தவை. இன்று வனவிலங்குகளைப் பாதுகாப்பது நமது கடமையாகும். பண்டைய காலங்களில் மலைப்பிரதேச விவசாயிகளின் பயிர்களையும் கிராமத்தினரையும் காக்கும் பொருட்டு வன விலங்குகள் வேட்டையாடப்பட்டன.
தற்கால நவநாகரீக உலகிலிருந்து, எழிலமிகு இயற்கைச் சூழலுக்கு, உங்களை அழைத்துச் செல்கிறேன்,“