Jump to ratings and reviews

வைரமே உன்னைத் தேடி : vairame unnai thedi

தனிமையில் வாடினாலும் எந்நேரமும் கலகலப்பாக இருக்க நினைப்பவள் நாயகி, இதழ்யா. அவள் கண் முன்னால் வைரமாய் தோன்றுகிறான் நாயகன் நிரஞ்சன். ஆனால் அவன் வைரமல்ல என நிஜம் புரிந்ததும் மனம் உடைந்து போகிறாள். அதே சமயத்தில் அவளுக்கு வேறு உறவுகளும் கிடைக்க அவர்களுடன் சென்று விடுகிறாள். இருவரும் எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்பதைப் பற்றிய கதை.Lavanya Seelan is a popular writer who specializes in tamil fiction. "Vairame Unnai Thedi" is her 10th book.

346 pages, Kindle Edition

Published April 26, 2017

Loading...
Loading...

About the author

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
9 (42%)
4 stars
6 (28%)
3 stars
3 (14%)
2 stars
1 (4%)
1 star
2 (9%)
Displaying 1 - 1 of 1 review
Profile Image for Katheeja.
69 reviews12 followers
October 29, 2020
இதழ்யா ... கலகலப்பான அதே நேரம் வாழ்க்கையில் பிரச்சனையை கண்டு துவண்டுவிடாமல் தைரியமாய் வாழும் பெண் ...

சிக்கலான உறவுகள் , உறவுகளுக்கிடேயே விரிசல்களையும் சில நேரம் கசப்பான அனுபவங்களையும் தரும் ...

தான் சொந்தம் என நினைப்பவர்கள் தன்னை சொந்தமாக நினைக்கவில்லை என தெரியவரும் போது வீட்டை விட்டு வெளியேறுகிறாள் இதழ் ..

எதிலும் இரண்டாம் தரம்தான் தன் வாழ்க்கையில் கிடைக்கின்றன என்று இருக்கும் இதழுக்கு அவளை மட்டும் நேசிக்கும் அவளுக்காகவே வாழும் ஜீவன் வாழ்க்கை துணையாக அமைய வேண்டும் என்ற வாழ் நாள் லட்சியத்தை பூர்த்திசெய்ய நிரஞ்சன் அவள் வாழ்க்கையில் நுழைகிறான் ..

துக்கத்தில் இருப்பவர்கள் தம் துன்பத்தை பிறரிடம் காட்டாமல் சந்தோஷமாக இருப்பது போல் காட்டுவதும் ...எளிதில் உடைந்து போபவர்கள் தம் தைரியமானவர்கள் போல் காட்டுவதும் ...உளவியல் இயல்பே .... அதுபோன்றுதான் இதழும் .. அவளின் மொத்த காதலின் வெளிப்பாடாய் நிரஞ்சனை காண்கிறாள் .. ஆனால் நிரஞ்சன் தான் கொண்ட காதலை இதழுக்கு புரியவெக்க தவருகிறான் ..

அன்புக்காக ஏங்கும் இதழ் அந்த அன்பை நிரஞ்சனிடம் எதிர்பார்ப்பதும் தன் கொண்ட காதலின் அளவுக்கு அவன் தன்னை முதன்மைப்படுத்தவில்லை என்று நினைத்து அவனை விட்டு பிரிகிறாள் ..

இதனிடையே அவளின் ப்ராஜெக்ட் விஷயமாய் போன இடத்தில் வைரம் கடத்தப்படுவதும் புலிகள் வேட்டையாடப்படுவதை , அறிவதும் .. அவள் அறியாமல் அதில் மாட்டிக்கொள்வதும் ...
போலீஸின் உதவியுடன் அதிலிருந்து வெளியேறுவதும் ..அது அவள் வாழ்க்கைக்கான தீர்வையும் சேர்த்து தருவதையும் ... என்று எங்கும் சலிப்பில்லாமல் கதையை கொண்டுசெல்கின்றார் திருமதி லாவண்யா அவர்கள் ...

இறுதியில் தான் தொலைத்த வைரமான இதழ்ளுடன் சேர்கிறான் அவள் நிரஞ்சன் !!!
Displaying 1 - 1 of 1 review