உலகு தழுவிய நிலையில் வாழும் தமிழ் மக்களும் தமிழில் ஈடுபாடு கொண்டுள்ள பிற மொழியினரும் தமிழ் மொழியையும், அறிவியல், தொழில் நுட்பம், கணினித் தமிழ் மற்றும் தமிழ்ப் பயன்பாட்டு மென்பொருள்களைக் கற்கவும், தமிழர் வரலாறு, இலக்கியம், கலை, பண்பாடு ஆகியவை பற்றி அறிந்து கொள்ளவும் வேண்டிய வாய்ப்புகளை இணையம் வழியாக ஏற்படுத்துவதும், அரசு, கல்வி, ஊடகம், வணிகம் போன்ற பல்துறைகளுக்கும் வேண்டிய கணினித் தேவைகளுக்கான தீர்வுகளைக் கண்டறிந்து, நிறுவி, பராமரித்து, பயிற்சியளித்துப் பயன்பாட்டை பெருக்குதலும் இணையவழி அளிப்பதும் இதன் நோக்கமாகும்.
Conjeevaram Natarajan Annadurai, (C. N. அண்ணாதுரை) affectionately known as Anna ("Elder brother") or Arignyar Anna (அறிஞர் அண்ணா - "Anna, the scholar"), was an Indian politician who served as 1st Chief Minister of Tamil Nadu for 20 days in 1969 and fifth and last Chief Minister of Madras State from 1967 until 1969 when the name of the state of Madras was changed to Tamil Nadu. He was the first member of a Dravidian party to hold either post.
He was well known for his oratorical skills and was an acclaimed writer in the Tamil language. He scripted and acted in several plays. Some of his plays were later made into movies. He was the first politician from the Dravidian parties to use Tamil cinema extensively for political propaganda. Born in a middle-class family, he first worked as a school teacher, then moved into the political scene of the Madras Presidency as a journalist. He edited several political journals and enrolled as a member of the Dravidar Kazhagam. As an ardent follower of Periyar E. V. Ramasamy, he rose in stature as a prominent member of the party.
Annadurai was known as one of the best Tamil orators during his time. He developed a style in Tamil public speaking using metaphors and pleasing alliterations, both in spoken and written language. Anna was also best known for his extempore speaking ability being very well affluent on rhetoric skills.
After his electoral success with his DMK in 1967, the Congress has not yet returned to power in Tamil Nadu. His government was the first in the country to be from a non-Congress party with full majority.
Annadurai travelled to New York for medical treatment and he was operated for Cancer in the gullet at the Memorial Sloan Kettering Cancer Center. After he returned, he continued to address several official functions against medical advice. His health deteriorated further and he soon passed away. His funeral had the highest number of attendees until then, as registered with The Guinness Book of Records. An estimated 15 million people attended it. His remains were buried in the northern end of Marina Beach, which is now called Anna Memorial.
ஒரு அரக்கரை பற்றி இன்னொரு அரக்கர் எழுதிய புத்தகம் தான் "நீதி தேவன் மயக்கம்". அரக்கர் என்ற சொல் எனக்கு மிகவும் நெருக்கமானது, எனக்கு அரசியல் பற்றிய பார்வையில் தெளிவை ஏற்படுத்தியவர்கள் இணையத்தில் இயங்கும் அரக்கர்கள் தான். இவர்கள் உடைக்கும் பர்னிச்சர் போல் அன்றைக்கு அறிஞர் அண்ணா உடைத்த பர்னிச்சர் தான் நூல் வடிவம் பெற்றுள்ளது.
இராவணன் என்ற இலங்காதிபன் இரக்கம் சிறிதும் அற்ற அரக்கன், அப்படி தான் கம்பராமாயணம் கூறுகிறது. பூலோகத்தில் புது கருத்துக்கள் புழங்கி விட்ட காரணத்தால் மக்கள் விழிப்படைந்து பழைய வழக்குகளுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்புகளை சந்தேக பட தொடங்குகிறார்கள், இதன் காரணமாக இருண்ட வானத்தில் (அதாவது மேலோகம் , அண்ணாவின் மொழியில் அது இருண்ட வானம்) ஆண்டவன், நீதி தேவனிடம் இராவணனின் வழக்கை முதல் வழக்காக எடுத்து விசாரிக்க சொல்கிறார். இப்படி தான் தொடங்குகிறது இந்த புத்தகம், நாடக வடிவில் எழுதப்பட்ட புத்தகம் தான் என்றாலும் சுவாரஸ்யத்துக்கும், பகுத்தறிவுக்கு பஞ்சம் இல்லை.
கம்பரை எதிர்த்து தனது வாதத்தை நிறுவுகிறான் இராவணன், சீதையை கவர்ந்து வந்ததால் நான் இரக்கமற்றவன்? என்று தொடங்கி ராமன் செய்த அக்கிரமங்கள், துரோகங்கள், கயமை தானங்கள் என்று வரிசையாக பட்டியலிடுகிறார். குறிப்பாக தனது தங்கை சூர்ப்பனகையின் மூக்கை அறுத்ததற்கும் , சம்பூகன் தவம் செய்தான் என்ற ஒற்றை காரணத்திற்காக வதம் செய்த தற்கும், சீதையின் கற்பை சந்தேக பட்டு 8 மாத கர்ப்பிணியை தீயில் நடக்க சொன்னது என்ன குணம்? இதில் எங்கே இருக்கிறது இரக்க குணம் நான் அரக்கன் என்றால் ராமன் யோகியான என்று கேள்விகள் நீண்டு கொண்டே போகிறது.
பெரியார் அனைத்து விதமான ராமாயணங்களையும் கரைத்து குடித்தவராம் , அவரிடம் எந்த காண்டத்தில் எந்த பாடலை கேட்டாலும் தெளிவாக விளக்குவாராம். அது போல் தான் இராவணனும், கம்பர் இருக்கும் அவையிலேயே அவர் எழுதிய ராமாயண பாடலை மேற்கோள் காட்டி பேச நீதிதேவன் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போகிறார்.
மேலும் ஒரு இடத்தில் நீதிதேவன் சொல்கிறார் "முற்றும் கற்றுணர்ந் தோர் முடிவு கூட, கால வெள்ளத்தால் சரியானவை அல்ல என்று மறு தீர்ப்பளிக்கப் பட்டுள்ளன." என்று ஒரு வசனம். இது யாரை எந்த நிகழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருக்கும் என்று யூகிக்க முடிகிறது, அப்போது பெரியாரும் அண்ணாவும் கம்பராமாயணம், பெரியபுராணம் போன்ற இலக்கிய நூல்களை விமர்சித்து பரப்பி வந்த காலம்(தீ பரவிய காலகட்டம் ), அனேகமாக திருவள்ளுவரும் அதற்கு தப்பி இருக்க மாட்டார். இது போல் பல்வேறு குறியீடுகள், இந்நூல் எழுதப்பட்ட காலகட்டத்தில் வாசித்திருந்தால் கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும்.
மேலும் பல இடங்களில் பகுத்தறிவு பிரச்சாரமும் செய்திருக்கிறார், பூலகத்தில் நடக்கும் காட்சி ஒன்றில் மருத்துவர் ஒருவர் " உயிர் விசயத்தை பற்றி பயப்படாதே பகவான் இருக்கார்." என்று சொல்ல சாமானியன் ஒருவன் "மருத்துவர் ஆபரேஷன் செய்கிறாராம் பிறகு ஆண்டவன் இருக்காருன்னு சொல்லறாரு" என்கிறார். இது போல் பல காட்சிகள் புத்தகம் முழுக்க நிறைந்துள்ளது.
முடிவில் ராவணனின் தொடர் வாதங்கள் மூலம் நீதிதேவனின் நம்பிக்கையை பெறுகிறார், இதை தேவர்களாலும் கம்பராலும் ஏற்கமுடியவில்லை, அப்படி ஏற்கமுடியாததற்கு என்ன காரணம் தெரியுமா, இராவணன் உடைத்து பர்னிச்சர்கள் அப்படி. சம்பூக வதம் செய்தவனிடம்(ராமன்) இரக்கம் இல்லை, கட்டைவிரலை காணிக்கையாக பெற்ற த்ரோணனுக்கு இரக்கம் இல்லை, தாயின் தலையை வெட்டிய பரசுராமனுக்கும் இரக்கம் இல்லை, பெற்ற குழந்தையையும் காதலியையும் இரக்கமின்றி கைவிட துணிந்த விஷ்வாமித்திரனுக்கும் இரக்கம் இல்லை, இவர்கள் எல்லாம் பரமன் அருளை பெற்றவர்கள் நான் மட்டும் அரக்க குணம் படைத்தவானா? என்று நீதிதேவனை பார்த்து கேட்க.
நீதி தேவன் மயக்கம் அடைகிறான்.
இராவணன் கம்பீரமாக அவையை விட்டு வெளியேறுகிறான். கிட்டத்தட்ட பராசக்தி படத்தில் வரும் நீதிமன்ற கட்சி போல் தான் இருந்தது.
அண்ணாவின் எழுத்துக்கள் எப்போதும் ஒரு ஈர்ப்பை கொண்டவை, இலக்கிய சூழலில் பெரிதும் புறக்கணிக்கப்பட்டவையும் கூட. திராவிட இயக்கம் சார்ந்து இயங்கும் நண்பர்கள் இது போன்ற புத்தகங்களை வாசித்து, அவை பற்றி எழுதியும், பரப்பியும் வரவேண்டும் என்பது என் விருப்பம். என்னாலானதை நான் செய்கிறேன், நீங்கள் அனைவரும் இது போன்ற செயல்களில் இறங்கிட வேண்டும். காற்று நம் பக்கம் அடிக்க தொடங்கி இருக்கிறது அதை நாம் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
தவறவிட கூடாத பேரறிஞர் அண்ணாவின் புத்தகங்களில் "நீதிதேவன் மயக்கமும்" ஒன்று.
Anna presents Raavanan as the hero and makes Kambar the main culprit in this innovative play. Primarily based on Kamba Raamaayanam. And presents Kambar as the one who was not faithful in presenting Valmiki's original story in Tamil. Raavanan was accused as a man without an iota of mercy. The person without an iota of mercy is equated as the Asuran. Asuran deserved such a fateful end at the hand of Lord Ram. If this was the case, Raavanan now presents his case in which no one (no deity from Hindu pantheon) is spared. He proves without doubt that Lord Agni, Lord Parasuraam, Lord Ram, Saint Valmiki, Saint Dronacharya, Saint Viswamitra, Kaikeyi, etc were all Asurans for they too never had an iota of mercy in many instances. But Kambar failed to pronounce them as Asurans. Interesting argument. For today's time the language is a bit old styled. Still, an interesting read.
பேரறிஞர் அண்ணா எழுதிய சிறுநூல் இது. ஆரிய திராவிட சிந்தனைப் போக்குகள் வெவ்வேறு, இரண்டையும் ஒரே தராசில் சீர்தூக்கிப் பார்க்க முடியாது என்பதை சுவையான வகையில் நாடக வடிவில் அளித்திருக்கிறார் அண்ணா.
'இரக்கம் இல்லாத அரக்கன்' என்று கம்பரால் புனையப்பட்ட இராவணன் தன் பக்கத்து நியாயத்தைக் கூறி, நீதிதேவன் முன்னிலையில் கம்பருக்கும் தேவர்களுக்கும் எதிராக வழக்காடுவதே கதை. தான் செய்த தவறுகள் அரக்கன் என்பதாலேயே பெரிதாக்கி அவன் தண்டனைகளை நியாயப்படுத்துவதும், தேவர்களின் கொடுஞ்செயல்கள், கடவுளர்களின் லீலைகள் ஆகியன தண்டனைக்கு அப்பால் போவதும் எத்தகைய "ஆரிய நீதி" என்று கேட்கிறான் ராவணன்.
ராவணன் வாயிலாக நமக்குள்ளேயும் கேள்விகளை விதைத்து வெற்றிபெறுகிறார் அண்ணா!
ஆரிய தவம் புரிந்தவர்களை கொன்ற ராவணன் இரக்கமற்றவன் என்றால்..
சம்பூகனின் தலை கொய்த ராமன் யார்? சூர்ப்பனகையின் மூக்கை வெட்டிய லக்ஷ்மணன் யார்? தசரதன் கெஞ்சியும் தன் மகனை காட்டுக்கு அனுப்பிய கைகேயி யார்? தந்தையின் ஆணைக்கு இணங்கி தன் தாயின் தலை வெட்டிய பரசுராமன் யார்? மோகம் கொண்டபின் மேனகையை தவிக்க விட்ட விசுவாமித்திரர் யார்? பஞ்சத்தால் தவித்த நிலையில், உணவை உண்ட மக்களை கொன்ற கோட்புலி நாயனார் யார்?
பேரறிஞர் அண்ணாவின் சாமர்த்தியமான நடையில் எழுதப்பட்ட அட்டகாசமான நாடகம். அவசியம் படிக்கவும்
Great dialogues. Have a different take on the underlying concept, so it was interesting to see the opposite perspective. An amazing display of effective dialogue writing and presentation of the concept in a very effective manner. Was reminded of Kalaignar s Parasakthi court scene. Now that I read this book, I could easily see Anna s influence on Kalaignar.
To get an opportunity to read such well-balanced counter arguments to an existing mammoth of a religious text is really a blessing and an eye-opener for my generation. 75 years on and still relevant to this day!
அறிஞர் அண்ணாவின் நாடகங்களில் ஒன்றான "நீதிதேவன் மயக்கம்" இராமாயண காவியத்தில் "இராவணன் ஒரு இரக்கமற்ற அரக்கன்" என்ற கம்பரின் தீர்ப்பை சீராய்வு செய்ய கடவுள் நீதிதேவனுக்கு கட்டளையிடுவதாக ஆரம்பமாகிறது. இந்த கற்பனைக் களத்தில் பயணிக்கும் இந்த நாடகம் திராவிட இயக்கத்தின் கருத்தியலை மிக நுட்பமாக பேசுகிறது.
நீதிதேவனின் அறமன்றத்தில் இராவணன் தன் தரப்பு வாதத்தை தானே எடுத்துரைக்கிறான். இராமாயணத்தின் கதை மாந்தர்கள் இரக்கமற்ற முறையில் நடந்துகொள்ளும் தருணங்களை விவரிக்கிறான். கம்பரின் தீர்ப்பில் இருக்கும் பாரபட்சத்தையும், இராமாயணம் உயர்த்திப்பிடிக்கும் பாகுபாட்டையும் உள்ளது உள்ளபடி சுட்டிக்காட்டுகிறான். பெரிய புராணத்தில் வரும் சிறுதொண்டர் கதையிலும், கோட்புலி நாயனார் கதையிலும் நடக்கும் கொடூரச் சம்பவங்களை விவரித்து கடவுள் மற்றும் ரிஷிகளின் இரக்கமற்ற செயல்களை எடுத்துக்காட்டி வாதிடுகிறான். மறுமுனையில் கம்பரிடம் இருந்து வரும் எதிர் வாதங்களுக்கும் தக்க பதிலளிக்கிறான்.
பூலோகத்திலும், மேலோகத்திலும் நடக்கும் இரக்கமற்ற செயல்களில் இரண்டு உலகங்களின் மனிதர்கள், ரிஷிகள், காப்பியக் கதைமாந்தர்கள், கடவுள்கள் ஆகியோரின் பங்கை எடுத்துக்காட்டும் இராவணின் வாதத்தைக் கேட்டு நீதிதேவன் மயங்கி விழுவதாக நாடகம் முடிவடைகிறது. இந்நாடகத்தில் வரும் வசனங்களும், காட்சிகளும் புராணக் கதைகளை நம் கண்முன் நிறுத்துகின்றன. ஆங்காங்கே வரும் சில வசனங்கள் திரும்பத் திரும்ப இடம்பெறுவதால் காடசியின் ஓட்டத்தில் தொய்வு ஏற்படுகிறது.
அறிஞர் அண்ணாவின் அரசியலை பேசும் நாடகம் இது. இந்திய அரசியலில் இராமாயணம் மற்றும் ஆரியத்தின் தாக்கம் இன்றளவும் இருக்கும் படசத்தில், இராவணன் தனது பக்க நியாயத்தை வாதிடுவதாக காட்சி அமைத்தது அண்ணாவின் இயக்கம் ஆரியத்திற்கு நேரெதிராக முன்வைக்கும் கருத்தியலின் அடையாள அரசியல். இராவணனை நாயகனாக அடையாளப்படுத்தும் யுக்தி “anarchism” பேசும் பல அறிஞர்கள் கையாண்ட யுக்தி. அதன் வழி புராணங்களும், காப்பியங்களும் கட்டமைக்கும் தூய்மை எனும் பிம்பத்தை பல இடங்களில் உடைத்தெரிகிறது இந்நாடகம்.
In this provocative play, Annadurai flips the established narrative of the Ramayana on its head, giving voice to those traditionally condemned. Through a celestial courtroom drama, we witness Ravana defending his reputation and exposes the superficiality of the Puranas. The genius lies in how Anna pits Kambar, the Tamil poet who immortalized Rama, against his own character Ravana in a debate that leaves even Justice dumbfounded. The play masterfully weaves multiple perspectives – Sita's candid conversations with Akalakai, the controversial killing of Shambuka, and the theatrical confrontation between the accusers and the accused. What emerges is a powerful critique that demolishes the artificial boundaries between Asuras and Devas, challenging age-old notions of purity and pollution. A must-read for those ready to question what they think they know about Indian mythology – Anna doesn't just retell a story, he makes us uncomfortable with our inherited truths.
Needhidevan Mayakkam Different point of view, Ravanan puts forward his views and asks how can Kambar say that he has no mercy or compassion? What about Raman, Parasuraman, Viswamitrar, Kotpuli Nayanar,? Do they show mercy ?
இது வரை நாம் கடவுளாக மாமுனிவர்களாக நாயன்மார்களாக கவிச்சக்கரவர்த்தியாக நம்பி கொண்டிருந்தவர்களின் இரக்கமற்ற செயல்களை இராவணன் வாயிலாக ஆசிரியர் எடுத்துக்காட்டி முடிவினை நம்மிடமே விட்டுவிட்டார். அதுவே சாலச்சிறந்தது .
அறிஞர் அண்ணா இயற்றியவற்றுள் இதுவே நான் படித்த முதல் நூல். அண்ணாவின் நினைவு நாளான பிப்ரவரி 3ஆம் தேதி அன்று காலை தொடர் வண்டியில் சென்னையை நோக்கிச் செல்லும்பொழுது முதல் முறை படித்து, கொரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கில், வீடடங்கிக் கிடந்த நாளில், மீண்டும் ஒரு முறை படித்தேன். நாடக வடிவிலே அமைந்துள்ள, ஐம்பதுக்கும் குறைவான பக்கங்கள் கொண்ட இந்நூல், நாம் ஏற்கனவே நன்கு அறிந்த ஒரு கதையின் மறுபக்கத்தை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது.
இந்நாட்டின் எந்தத் திக்கில் இருப்பவரும், ஒற்றை வரியாயேனும் அறிந்து வைத்திருக்கும் கதைகளுள் ஒன்று இராமாயணம். இராமாயணத்தின் உச்சகட்டம் இராம இராவணப் போர். இப்போரின் இறுதியில், கொடியவனாகக் கதையின் ஆசிரியரால் காட்டப்பட்ட இராவணன் கொல்லப் பட்டான். அக்கொலைக்குக் கூறபட்ட நியாயம் இராவணன் தீயவன் என்பது. சொல் நயத்தோடு கூறவேண்டுமானால் "இரக்கம் என்னும் ஒரு பொருளிலா அரக்கன்" அதனால் அவன் அழிக்கப்பட்டான். ஆம்; கம்பர் இப்படித்தான் தான் எழுதிய கதையில் இராவணனுக்கு ஏற்பட்ட முடிவையும், இலங்கை அழிக்கப்பட்டதையும் சரியென நிறுவுகிறார்.
*இரக்கம் என்னும் ஒரு பொருளிலா அரக்கன்*
இந்த ஒற்றை வரியைச் சுற்றி அமைந்தது தான் இந்த நாடக நூல்.
எந்த ஒரு உண்மைக்கும், சரி என்று நம்பப்படும் எந்த ஒரு கருத்திற்கும் கால, இட வரையறைகள் உண்டு. எல்லாக் காலத்திற்கும், எல்லா இடத்திற்கும், எல்லா உயிருக்கும் பொதுவான உண்மை என்பது இருப்பதில்லை.
எடுத்துக் காட்டாக,
1. உலகம் உருண்டை என்று கண்டறியப் படும் வரை, உலகம் தட்டையான வடிவம் கொண்டது என்ற கருத்து சரி எனச் சொல்லப்பட்டு வந்தது. உலகம் உருண்டை என்று கண்டறியப்பட்டதும், அதுநாள் வரை சரியென நம்பப்பட்ட கருத்து தவறாக மாறிப்போகிறது
2. புவி கிழக்கு நோக்கிச் சுழல்வதால் புவியில் இருப்பவர்களுக்குக் கதிரவன் கிழக்கில் தோன்றி, நாளைத் தொடங்கி வைக்கிறான். ஆனால் வெள்ளிக் கோளில்(venus)இருந்து பார்த்தால் கதிரவன் மேற்கில் இருந்து தோன்றுவான். காரணம் அக்கோள் மற்ற கோள்களுக்கு எதிர்த்திசையில் சுழல்கிறது.
3. முதல் மாடியில் இருப்பவன் உயரத்தில் இருக்கிறானா அல்லது தாழ்ந்த இடத்தில் இருக்கிறானா என்ற வினாவிற்கான சரியான விடை ஒன்றன்று, இரண்டு. தரைதளத்தில் இருப்பவனைவிட உயரத்தில் இருக்கிறான், ஆனால் இரண்டாம் மாடியில் இருப்பவனை விடத் தாழ்ந்த இடத்திலேயே இருக்கிறான்.
இதுபோல் எந்த ஒரு கருத்திற்கும் கால, இட வரையறை உண்டு. இவற்றைப்போல், இராவணன் கொல்லப்பட்டது சரியே என்று இருந்த கருத்து மாறி, அக்கருத்தில் அவநம்பிக்கை புவியில் எழ, அதன் விளைவாக, நீதி தேவனின் முன் அற மன்றத்தில் மறுவிசாரணைக்கு வருகிறது இராமாயண வழக்கு.
தன் வழக்கைத் தானே எடுத்து நடத்துகிறான் இலங்கேசன். தமக்கு வழங்கப்பட்ட தண்டனை சரியன்று என்று நிறுவ முன்வரும் ஒருவர், வழக்கமாகச் செய்வது என்ன? தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தைத் தான் செய்யவில்லை என்று சான்றுகளால் நிறுவுவது. ஆனால் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஆற்றும் அதே செயலை இராவணனும் செய்வானா என்ன?
அவன் மீது கம்பரால் சாட்டப்பட்ட குற்றச்சாட்டு, அவன் இரக்கம் என்னும் ஒரு பொருளிலா அரக்கன். அதை எதிர்த்துத் தன் வழக்கை நடத்தப் போகிறான் என்று எண்ணும் முன்னரே, அக்குற்றத்தைத் தான் செய்ததற்கான சான்றுகளை அவையோர் முன் அடுக்கி வைக்கிறான் இலங்கை வேந்தன் இராவணன். மன்றத்தின் அவையோரும், நூலைப் படிப்போரும், இராவணன் என்ன இப்படிச் செய்கிறான் என்று எண்ணும் பொழுது, இராவணன் வழக்கை நடத்தும் விதத்தை வெளிப்படுத்தத் தொடங்குகிறான். அவன் கூறுவது, இரக்கம் என்னும் ஒரு பொருளிலா அரக்கன் என்பது பொய்யான குற்றச்சாட்டு என்பதல்ல. அவன் தனக்காக முன் வைக்கப் போகும் கூற்றும் சான்றுகளும், வேறு விதமானவை.
இரக்கம் என்னும் பொருளில்லாவிட்டதால் இராவணனை அரக்கன் என்றால், அதனால் அவன் கொல்லப்பட வேண்டும் என்றால், இரக்கமின்றி யார் நடந்தாலும் அவர்களும் அரக்கர் அன்றோ, அவர்களும் கொல்லப்பட வேண்டும் அன்றோ. இதுவே இராவணன் முன்வைக்கும் கூற்று. அவன் எடுத்துக் கூறும் சான்றுகளால் அற மன்றமே ஆட்டம் காண்கிறது.
இதுவரை இராம கதையை இராமனின் பக்கம் இருந்து படித்தவர்கள், சற்றே இராவணன் பக்கம் இருந்து அதே கதையை இராவண கதையாகச் சிந்திக்க இந்நூல் ஒரு வாய்ப்புத் தருகிறது.
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த அந்நியன் திரைப்படத்தில், தன்னுடைய புதிய மகிழுந்தின் வெள்ளை நிற இருக்கைகளில் குருதி பட்டுக் கறையாகி விடும் என்று, சாலையில் விபத்துக்குள்ளாகி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் முதியவர் ஒருவரைக் காப்பாற்ற இரக்கம் கொள்ளாமல் கடந்து செல்லும் ஒருவரைக் கதையின் நாயகன் அந்த இரக்கமற்ற செயலுக்காகக் கொல்லும் ஒரு காட்சி உண்டு.
இரக்கமின்றி ஒரு உயிரைத் துடிக்கவிட்டுச் சென்ற அந்த மகிழுந்தின் உரிமையாளர் செய்த செயல், இக்கால இயந்திர வாழ்வில் யார் ஒருவரும் கொஞ்சமும் குற்ற உணர்வின்றிச் செய்யும் ஒன்றே. ஆனால் பிறரால் பெரிதும் மதிக்கப்படும் நிலையில் இருக்கும் விசுவாமித்திரர், பரசுஇராமர் போன்றோரே தத்தம் தற்பிடித்தங்களுக்காகவும், தமக்குத் தாமே வகுத்துக் கொண்ட கொள்கைகளுக்காகவும், தாம் வாழ்வில் பெரிதென மதிப்பவற்றிற்காகவும் இரக்கமின்றி நடந்து கொண்ட பல நிகழ்வுகளைச் சான்றுகளாகத் துணைக்கழைக்கிறான் இலங்கேசன். விசுவாமித்திரர், பரசுஇராமர் மட்டுமல்ல மேலும் பலரின் அத்தகைய செயல்களை அள்ளி எடுத்து அவையோர் முன் அடுக்கடுக்காக வைக்கிறான் இராவணன். இராமனும் ஈசனும் கூட இவ்வரிசையில் தப்பவில்லை. அப்படி இரக்கமின்றி நடந்து கொண்ட பின்னரும் அவர்கள் பிறரால் மதிக்கப்படும் நிலையிலும், தான் மட்டும் அரக்கனாகவும் காட்சிப்படுத்தப்பட்டது சரியா என வினவுகிறான் இராவணன்.
இலங்கை வேந்தன் எடுத்து வைக்கும் எந்த ஒரு சான்றும் எதிரில் நிற்கும் கம்பராலோ பிறராலோ எளிதில் புறந்தள்ளக் கூடியதாக இல்லை. எல்லாம் ஏற்றுக்கொள்ளத் தக்கனவாகவே இருந்தன. இவ்வழக்கின் இடையில் இரு முறை மயக்கம் கொள்கிறான் நீதி தேவன்.
இராவணனின் கூற்றுகளையும், அவன் கூறும் சான்றுகளையும் கேட்டு, பின் அவன் கொல்லப்பட்டதும், இலங்கை அழிக்கப்பட்டதும் சரியா தவறா என்பதை அவரவர் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.