Jump to ratings and reviews
Rate this book

நான் ஒரு இந்துவாக சாக மாட்டேன்

Rate this book
ஜாதி என்ற முதன்மை முரணில் சிக்கித் தவிக்கும் இந்தியாவின் பெரும்பான்மையினரான தலித் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் அனைவரும் 'இந்துக்கள் அல்லர்' என்று தன்னுடைய ஆய்வின் மூலம் நிறுவிய அம்பேத்கர், இம்மக்களை 'இந்துக்கள் அல்லாதவர்' களாக்கவே பெரும் முயற்சிகளை மேற்கொண்டார்.

இந்துமயமாக்கல் தீவிரமடைந்து வரும் இன்றைய காலகட்டத்தில் அம்பேத்கரின் இச்செயல்திட்டமே அதைத்தடுத்து நிறுத்தும். இம்மாபெரும் புரட்சிக்கான வித்துக்கள் காலத்தின் அவசியம் கருதி தொகுக்கப்பபட்டுள்ளன. அதுமட்டுமல்ல, ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் ஜாதியை நியாயப்படுத்தி தங்களை நிர்வாணமாக்கிக் கொள்ளும் 'மனிதர்' களின் எண்ணிக்கை பெருகி, கடும் அச்சுறுத்தலை உருவாக்கி வருகிறது. இப்பேராபத்தையும் தடுத்து நிறுத்தும் ஆயுதமே இந்நூல்.

175 pages, Paperback

Published October 16, 16

13 people are currently reading
182 people want to read

About the author

B.R. Ambedkar

297 books1,103 followers
Bhimrao Ramji Ambedkar was born in 1891 into an “Untouchable” family of modest means. One of India’s most radical thinkers, he transformed the social and political landscape in the struggle against British colonialism. He was a prolific writer who oversaw the drafting of the Indian Constitution and served as India’s first Law Minister. In 1935, he publicly declared that though he was born a Hindu, he would not die as one. Ambedkar eventually embraced Buddhism, a few months before his death in 1956.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
32 (62%)
4 stars
13 (25%)
3 stars
3 (5%)
2 stars
1 (1%)
1 star
2 (3%)
Displaying 1 - 10 of 10 reviews
Profile Image for Arun  Pandiyan.
194 reviews47 followers
April 5, 2021
மதமாற்றம் மட்டுமே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூக விடியலாக அமையும் என்று டாக்டர் அம்பேத்கர் மூன்று தருணங்களில் பகிர்ந்து கொண்ட உரைகளை தொகுத்து இப்புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்துள்ளார் தாயப்பன் அழகிரிசாமி.

முதலாவதாக, 1935ல் வரலாற்று புகழ்பெற்ற இயோலா மாநாட்டில் தான் ஒரு இந்துவாக பிறந்துவிட்டது ஒரு துரதிஷ்டவசமான நிகழுவு எனவும், ஆயினும் தான் ஒரு இந்துவாக சாக மாட்டேன் எனவும் அறிவித்தார். இரண்டாவதாக. 1936ல் தானேவில் நடந்த மாநாட்டில், தான் மதம் மாற முடிவுசெய்தமைக்கு தன் வாழ்வில் நடந்த மூன்று சம்பவங்களை நினைவுகூறி, சக மனிதனை மனிதனாக மதிக்காத மதத்தில் இருந்து சிறு பயனும் இல்லை என எடுத்துரைக்கிறார். மூன்றாவதாக, பம்பாய் நகரத்தில் உள்ள தாதர் என்னும் பகுதியில் தனது மதமாற்ற கொள்கைக்கு எதிரான பல குரல்களுக்கு தன் எதிர் கருத்துகளை எடுத்து விளக்கியுள்ளார். இறுதியாக, இருபது வருடங்களுக்கு பின்னர் 1956ல் நாக்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் புத்த மதத்திற்கு மாறியபோது, தான் நரகத்தில் இருந்து விடுபட்ட உணர்வு கொள்வதாக எண்ணி நெகிழ்ந்தார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்குள் பண வலிமையோ, மன வலிமையோ, சமூக வலிமையோ இல்லாமல் போனதற்கு தாங்கள் சார்ந்து உள்ள மதமே காரணமாயின், பிறகு எதற்கு அம்மதத்தை தூக்கி சுமக்க வேண்டுமெனவும், வெளிநாட்டில் படித்து பட்டம் பெற்ற தனக்கே இத்தகைய இழி செயல்கள் நேர்கையில், காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இந்து மதமானது எத்தகைய மாற்றத்தையோ முன்னேற்றத்தையோ தராது என வலியுறுத்தியுள்ளார். இவாறாக, சதுர் வர்ணத்திற்கு எதிராகவும் சனாதன கொள்கைக்கு எதிராகவும் அவர் கொண்டிருந்த நியாமான வெறுப்பு என்பது இவ்வுரைகளிலிருந்து நமக்கு புலப்படுகிறது.

மேலும், மதமாற்றம் என்பது 'material benefits' அதாவது பொருளாதார மேம்பாட்டிற்காக மட்டுமே என சிலர் கருதுவது தவறு என்று விரித்துரைக்கையில், மதமாற்றம் மூலம் பொருளாதார மேம்பாடு சாத்தியமாகுமாயின், இந்து மாதத்தில் இருந்து கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நிராகரிக்கப்பட்டு ஏழையாக இருப்பதற்கு மதமாற்றத்திற்கு பிறகு பொருளாதார மேம்பாடு அடைவதே மேல் என மிகவும் மெய்மை சார்ந்து அக்கணோட்டத்தை அணுகியது என்னை மிகவும் கவர்ந்தது. வைத்தியநாதன் என்ற IIM பேராசியர் எழுதிய 'Caste as social capital' புத்தகம் சென்ற ஆண்டு படித்தேன். அம்பேத்கரின் இந்த உரைகளை படித்தால் வைத்தியநாதன் போன்றோருக்கு தான் ஜாதி ஒரு social capital, மற்றவர்களுக்கு அம்பேத்கர் கூறுவது போல அது ஒரு 'disease of mind' என்று புரிகிறது.

இருப்பது ஐந்து வயதில் மனுவிற்கு எதிராக தான் தொடங்கிய யுத்தத்தை, தன் வாழ்நாள் முழுவதும் சிறு துளி சமரசமும் செய்யாமல் அக்கொள்கைக்கு இணங்க வாழ்ந்த டாக்டர் அம்பேத்கரை வலது சாரி மூடர்கள் தன்வயப்படுத்தி appropriate செய்வதை நினைத்தால் நகைச்சுவையாக தான் உள்ளது. அவர்கள் இந்த புத்தகத்தை கட்டாயம் படிக்கவேண்டும்.
Profile Image for Karthick.
369 reviews121 followers
April 20, 2024
ஹிந்து மதத்தை காட்டமாக விமர்சித்த ஆளுமைகள் பட்டியலில் அண்ணல் அம்பேத்கருக்கு முக்கிய இடமுண்டு. ஹிந்துவாக பிறந்துவிட்டாலும், ஹிந்துவாக சாக மாட்டேன் என்று சபதமெடுத்து அதே போல், புத்த மதத்திற்கு மாறிய மகான்.

தன்னுடை தருமத்தின் நிலைப்பாட்டை புத்தர் சொன்ன வழியிலேயே கடைபிடித்தார்.காரணம் இந்து மதத்தில் தர்மம் இல்லை. அது ஒரு அழிவு மதம் என்றும், மனுஸ்மிருதியின் சதுர்வர்ண கோட்பாடையே தத்துவமாக கொண்டதாலும் இதை சமத்துவமற்ற மாதமாக சொன்னார்.

மதத்தில் பக்தி என்பது ஆன்மாவின் இரட்சிப்புக்கான பாதையாக இருக்கலாம். ஆனால் அரசியலில் பக்தி அல்லது நாயக வழிபாடு என்பது சீரழிவிற்கும், சர்வாதிகாரத்திற்கும் பாதையாக அமையும் என்பது அண்ணலின் ஆணித்தரமான கருத்து.

தனக்கு கண்மூடித்தனமான தொண்டர்கள் தேவையில்லை என்றும், தன்னை போன்ற அறிவார்த்த பகுத்தறிவு கொண்ட மக்களையே உருவாக்க நினைத்ததாகவும் குறிப்பிடுகிறார்.

அது போக புத்த மதமும், புத்தரின் கொள்கைகளும் காலத்தால் அழியாதவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Profile Image for Soorya Prakash.
6 reviews
September 24, 2024
While Ambedkar lists down very rational reasons for the oppressed and the untouchable community to leave the Hindu religion, what fascinated me was his argument that the people should adopt an alternate religion. Ambedkar constantly points out that religion is an agency that helps man coexist with his fellow men, and not a means to attain God or salvation. In this context, he also adopts Buddhism and elaborates on why it is a religion that respects equality and rational thought.

I found this thought-provoking since I'm more exposed to Periyar's school of thought - abandon religion with all its superstitions and resort to rationalism.

If you're interested in learning how one of the greatest Indian thinkers approached religion and influenced an entire community to abandon the religion that oppressed them, give this book a read.

Profile Image for A.
118 reviews3 followers
October 27, 2020
Always a joy to read Ambedkar. What an articulate man. And this is even better in Tamil- a really great translation. Collected essays all of them related to Ambedkar's position on religion, conversion and obviously the ills of 'hinduism'.

I really hope I wouldnt have to die as a Hindu as well.
Profile Image for Gowtham.
249 reviews46 followers
December 29, 2019
புரட்சியாளரின் "நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்"  இந்து மதத்தின் இழிவை பற்றியும், சமூக ஏற்றத்தாழ்வுகளை பற்றியும், புத்த மதம் பற்றிய அறிமுகத்தையும் சொல்லும்.
Profile Image for Parkadhe Anibal.
53 reviews13 followers
November 28, 2023
Reading Dr.BR Ambedkar is really an great pleasure.. His idea and Rationale behind the idea of conversation to Buddhism was really deep. it is buttressed with facts, logics and his personal experiences.. Certainly an must read book!
Profile Image for Thirumalai.
89 reviews13 followers
April 12, 2020
இந்துவாக நீடிப்பதில் உள்ள பிரச்சனைகள் என்ன என்பதற்கு இவர் சொல்லும் காரணங்களில் சில ஏற்புடையதாக இல்லை. பொது வாசகனை முன்னிறுத்தி உணர்வை தூண்டும் விதத்தில் மேலோட்டமாக சில கருத்துகள் வந்து செல்கின்றன.

மதத்தின் அடிப்படை தேவை என்ன என்பதில் உடன்பட்டு இந்து மதம் இவர்களின் தேவையை எப்போதும் பூர்த்தி செய்யாது என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறார்.

இந்து மதத்திற்கு மாற்றாக இவர் வைக்கும் புத்தமதம் ஏன் வழக்கொழிந்தது என்பதற்கு வலுவான ஆதாரங்கள் எங்கும் இல்லை.

கிருஷ்ணன் சொல்லும் பூடக மொழியை மட்டும் இவருக்கு தேவையான விதத்தில் வளைத்து பேசுவதுபோல் தோன்றியது. புத்தரின் மொழி பூடகத்தின் உச்சம் ஆனால் அதற்கு இவர் எடுத்துக்கொண்ட நிலைப்பாட்டை உறுதிசெய்யும விதமாக அதை எளிமைபடுத்தவேண்டும் என்று கொடி பிடிக்கிறார்.

கண்டிப்பாக சீர்திருத்தம் தேவை அதை எப்படி நடைமுறைபடுத்துவது என்பதில் இன்னும் தெளிவு தேவை என்பது என் கருத்து.
12 reviews1 follower
January 12, 2020
Exceptional book on ambedkar's concept towards hinduism .could realise the point at which ambedkar and periyar merges on rationalism.must read.
Profile Image for Manivannan Rajan.
13 reviews4 followers
April 30, 2020
Called Social scientist for a reason...... Can sense the clarity of thoughts and Selfless motive from his arguments👌👌 Good collection of Articles
249 reviews8 followers
October 13, 2018
மனிதனுக்கு தன்மானம் எவ்வளவு முக்கியம் என்று உணர்த்திய நூல்.
Displaying 1 - 10 of 10 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.