Jump to ratings and reviews
Rate this book

அனல் காற்று

Rate this book
அனல்காற்றின் தனித்தன்மை என்னவென்றால் வெப்பம் ஏறிஏறிச்சென்று அதன் உச்சத்தில் சடடென்று மழை வந்துவிடுகின்றது என்பதே வாழ்கையில் அனல் காற்று வீசும் பருவம் ஒன்றை தாண்டிவராதவர்கள் யார்?
அந்த உச்சக்கடட இறுக்கம் கொண்ட சில நாட்களின் கதை.இது. எதிர்திசை நோக்கி முறுக்கிக்கொள்ளும் உறவுகள்
தீ மழை கொட்டும் உறவுகள்.......
இது காமத்தின் அனல்காற்று. அது குளிர்ந்துதான் ஆகவேண்டும் ஆனால் குளிரும் கணத்திற்கு முன்னர் அது செடி கொடிகளுடன் நகரையே கொளுத்திவிடும் என எண்ணச்செய்கிறது

168 pages, Paperback

First published January 1, 2009

21 people are currently reading
183 people want to read

About the author

Jeyamohan

210 books845 followers
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.

He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions.
---
தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.

அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.

அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
37 (22%)
4 stars
60 (36%)
3 stars
49 (30%)
2 stars
11 (6%)
1 star
6 (3%)
Displaying 1 - 16 of 16 reviews
Profile Image for Manikandan Jayakumar.
94 reviews20 followers
September 29, 2025
Rean on jeyamohan site.

One of the best,

Love and lust intertwined. How an innocent relationship moves to lust and love. And a relationship where someone is ready to loose everything, their image, dependents and even themself.

Will re-read this novel again.

Imayam's நெஞ்சறுப்பு is another dimension of unconventional love
Profile Image for Aswin Balamurali.
42 reviews
April 22, 2024
Title : AnalKaatru
Author : Jeyamohan
Publication : Vishnupuram Publication
Pages: 220

The short Storyline was further developed into a longer part as to be made as a movie by Balu Mahendra.
Some review had made comment why this story has to be made as movie, My POV is why not?

This Book deals with Lust, Love, Betrayal and every aspect of life. The importance of way of life. The way we look at an aspect. Yes for some people they might feel as a shitty storyline.

In one's life everyone should go throught some negative impacts, This book deals with the Impact which and how it drives one mad coz of Love.

At some point its so offensive and some point it was bland but its good to read various stories of various Genre.
Profile Image for Rohith.
31 reviews4 followers
July 28, 2023
I don't know why I read this book. I have various questions I mean how can cheating can be forgiven and why jeyamohan actually justifies it. People may have different opinions but this book is not worth the read. What amazes me is Director Balu Mahendra read the short story version of this book and wanted to make a film and he told Jeyamohan to write this as a screenplay.
252 reviews39 followers
September 11, 2024
புத்தகம் : அனல்காற்று
எழுத்தாளர் : ஜெயமோகன்
பதிப்பகம் : விஷ்ணுபுரம் பதிப்பகம்
பக்கங்கள் : 220
நூலங்காடி: பனுவல்
விலை : 260

🔆 சிறு வயதிலேயே அம்மாவும் அப்பாவும் பிரிந்து விட அம்மாவின் அரவணைப்பில் மட்டும் வளர்கிறான் அருண். தனது கணவரை பறிகொடுத்து விட்டு மகனுடன் வசிக்கும் சந்திரா, அருண் அம்மாவுடன் உடன் பணிபுரிபவர். தன் அம்மாவை தவிர அருள் அறிந்த ஒரே நபர் சந்திரா தான். இருவரிடத்திலும் ஒரு உறவு ஏற்படுகிறது. இதை அறிந்ததாலையோ என்னவோ அம்மா, தன் அண்ணன் மகள் சுசி யை லண்டனில் இருந்து வர வைக்கிறாள்.


🔆 பழகிய சில நாட்களிலேயே அருணுக்கும் சுசிக்கும் காதல் ஏற்பட அவன் சந்திராவை விட்டு விலகிறான். இதற்கிடையில் அருண் அப்பாவின் மரணம். அருணின் பிரிவை தாங்க முடியாமல் சந்திரா தற்கொலைக்கு முயல, சுசிக்கு உண்மை தெரிந்து விட்டதால் அருண் தற்கொலைக்கு முயல, அவர்கள் என்ன ஆனார்கள் என்பதே அனல் காற்று.

🔆 இது எல்லாம் ஒரு கதையா என்று கூட தோன்றலாம். சிந்தித்துப் பார்த்தால் நம்மை சுற்றிலும் எத்தனையோ அருண் சந்திரா மற்றும் சுசி இருக்கத்தான் செய்கிறார்கள். பாலியல் தேவைகளை பற்றி எழுதுவது என்பது பெரிய சிக்கலாக இருக்கும் சமூகத்தில் இருக்கிறோம்.

🔆 ஒரு எழுத்தாளர் 12 மாதங்கள் 12 புத்தகங்கள் - ஒன்பதாம் புத்தகம் இது.



புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம்,
புத்தகங்களால் இணைவோம் ,
பல வேடிக்கை மனிதரைப் போலே ,
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி

சுபஸ்ரீனீ முத்துப்பாண்டி
வாசிப்பை நேசிப்போம்
Profile Image for Milinta.
34 reviews13 followers
Read
April 6, 2015
பிரித்தவுடன் பிடிக்காமல்போன பரிசுப்பொருள் ஒன்றை,என்னதான் ஆசைக்காட்டி அலங்காரம் பண்ணி நடுவீட்டில் வைத்து கொண்டாடினாலும்,குழந்தைகளுக்குக் கடைசிவரை அதைப் பிடிப்பதே இல்லை. அதுபோலத்தான் ஆகிவிட்டது அனல்காற்றும். பெருங்கடலளவு காதலில்லாது ஒரு துளியேனும்கூட காமம் பிறக்கலாகாது என்றெண்ணும் பெண்ணுக்கு, காமத்தையும் காதலையும் சல்லடையிலிட்டு பிரித்தெடுக்கும் ஒரு ஆணின் கதை, எத்தனைத் துல்லியமாகச் சொல்லப்பட்டதாயினும், கடுகளவும் புரிய வாய்ப்பே இல்லை. அப்படைப்பை மதிப்பிடும் தகுதியும் இல்லை.
13 reviews
October 11, 2012

This is my first - jeyamohan's novel .
liked his writing style very much .
Profile Image for Mo.
78 reviews6 followers
September 13, 2020
பக்கங்கள்: 168

பாலுமகேந்திராவின் திரைப்படத்திற்காக ஜெமோ எழுதிய கதை என்பது அறிமுகக் குறிப்பில் தெரிந்ததுமே ஒரு வகையான ஆர்வம் எழுந்தது. நாவல் தொடங்கியதுமே நனவோடை உத்தி மூலம் நாயகனின் காதற்கதையை புகைமூட்டம் போல எழுந்து மிக மெதுவாய் நம்முள் படர்கிறது. நாயகனின் பொருந்தாக் காமம், அவனுடைய காதலை நோக்கி நகரவும் முடியாமல் விலகவும் முடியாமல் எப்படிப் பட்ட நரகம் போன்ற தவிப்பை ஏற்படுத்துகிறது என்ற உணர்வுநிலை, நாவல் முழுவதும் தீவிரமாக வெளிப்படுகிறது. நாயகன் அருண், காதலி சுசியிடம் மானசீகமாக பேசுவது போன்ற நனவோடை விவரணைகள் மிக அந்தரங்கமான நெருக்கத்தை, நெகிழ்ச்சியை கொடுப்பவை. நாவலின் உச்சமே இந்த அதிதீவிர உணர்வுநிலைக் கணங்களில்தான் நிகழ்கின்றன என்பேன்.

பொருந்தாத அல்லது வலிந்து திணிக்கப்பட்ட ஒரே பாத்திர வடிவமைப்பு நாயகி சுசி! அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து, நாயகனின் "முறைப்பெண்" என்ற ஒரே காரணத்திற்காக அவனிடம் நிபந்தனையற்ற பேரன்பும் பெருங்காதலும் கொள்வது, எல்லோரிடமும் மிக நெருக்கமாய் ஒட்டுவது என்பதெல்லாம் ரொம்பவும் நாடகத்தனம். சாரி ஜெமோ! ஒரு இந்திய கிராமத்துப் பெண் கூட இவற்றை செய்ய மாட்டாள். நம்மிடம் எப்போதும் மிச்சமிருக்கும் "தேவதைக் கதை" எனும் பேராசையின் விளைவே இப்படிப்பட்ட பாத்திரப்படைப்புகள்.
ஆனால் இந்தப் எதார்த்த மீறலை மேலோட்டமாக கடந்து விட்டால், இது நிச்சயம் மிகச்சிறந்த ஒரு நாவல்.

சில காட்சிகளை, பாலு மகேந்திராவின் காட்சிக்கோணங்களில் கற்பனை செய்யாமல் இருக்க முடியவில்லை. சிறு மாற்றங்களுடன் (சுசி பாத்திரப் படைப்பில்) திரைப்படமாகியிருப்பின் முக்கியமானதொரு கலைப்படைப்பாக இருந்திருக்கக் கூடும்!
Profile Image for Kavin Selva.
47 reviews1 follower
April 2, 2025
இளமையில், மனம் செய்யும் அராஜகமும் அதன் கேள்விகளும் மிக ஆழமானவை. அது அப்போது ஆழமாகத் தோன்றினாலும், ஒரு மின்னல்போல் தோன்றி, ஒரு பெரிய தெளிவாக மாறி, அந்தக் கணமே மறைந்துவிடுகிறது.

ஆணின் மனம், அதற்குள் இருக்கும் எல்லா எல்லைகளுக்கும் ஒரு துணை தேடுகிறது. காமம், அந்த விளையாட்டின் உந்துதலாக மாறுகிறது. சிலர் வாழ்க்கையில் எல்லாமாக இருந்து, அடுத்த நாள் பொழுதில் பிரிந்து விடுகிறார்கள். அதுவே வாழ்க்கையின் நிதர்சனம்.

பிரிவைத் தருவோர் போல, குறூர்மனவர்கள் உண்டா?

---


Few excerpts from book,

சுசி, மரணம் என்பதை மிக அருகே உணரும்போது நம் சொற்கள் அடங்கிவிடுகின்றன. பிரமித்த எண்ணங்கள் கால்புதைந்து நின்றுவிடுகின்றன. மரணம் என்பதற்கு மிக அருகே உள்ள சொல் மௌனம். ஆனால் உண்மையில் மரணம் அவ்விரு சொற்களில் இருந்து வெகுதூரத்தில் உள்ளது. மரணத்துக்கு ஒரு சொல்லை அடையாளம் வைப்பதுபோல அபத்தம் என்ன? மரணத்துக்கு இந்தப்பிரபஞ்சத்தையே சமன் வைக்கவேண்டும்.என் எண்ணங்களின் அராஜகம் எனக்கே அச்சமூட்டியது.



அலையடித்த அழுகைகள். பெருமழை போல அவை எல்லா குப்பைகளையும் அடித்துச் சென்றன. பின்னர் மெல்லமெல்ல அது அடங்கி வெளிச்சம் வந்தது.


சுசி, கண்ணாடிக் கதவுகளின் நீரலைகளைப் பிளந்து நீ உள்ளே வரும் நொடிக்காக இதோ காத்து கிடக்கிறேன்
Profile Image for Gowthaman Sivarajah.
17 reviews1 follower
June 9, 2018
வித்தியாசமான கதைக்களத்தில், தனக்கே உரிய செறிவான மொழி நடையில் நாவலை நகர்த்திச் செல்கிறார் ஜே.மோ. ஒவ்வொரு அத்தியாயம் அத்தியாயமாக அனல் காற்று வலிமை அடைந்து, பதின்நான்காவது அத்தியாயத்தில் அது தன் உச்சக்கட்ட உக்கிர நிலையை அடைகிறது. அந்த உக்கிர நிலையின் உச்சத்திலேயே அது நிறைவு பெற்றிருக்கலாம். இதற்கு குளிர்ச்சியான ஒரு பதினைந்தாவது அத்தியாய நிறைவு பொருத்தமற்றது போல் தோன்றுகிறது. அனல் காற்றின் நிறைவு குளிர் மழை தான். ஆனாலும், இந்தக் குளிர்ச்சி, நம் அனல் காற்றுக்கு கொஞ்சம் அதீதமாகிவிட்டது போலும். அதனால் தானோ என்னவோ அந்த பதினைந்தாவது அத்தியாயம் மட்டும் கதையுடன் இணையாமல் தனியே நிற்கிறது.

முதல் பதின்நான்கு அத்தியாயங்களை மட்டுமே கருதினால், எனது மதிப்பீடு 4 ஸ்டார்கள். ஆனால் பதினைந்தாவதாக ஒரு 'கூடுதல்' அத்தியாயமும் இருப்பதால், 2.5.
Profile Image for Prakash Rajendran.
41 reviews1 follower
September 7, 2025
சினிமாவிற்குரிய கதாபாத்திரங்களையும் சினிமாவுக்கான முடிவையும் எளிதாக தாண்டி ரசித்து வாசிக்க முடிகிறது.

முன்னுரையில் அவர் கூறிய இடங்கள் மற்றுமல்லாது நெகிழ்ச்சியுடனும் பல இடங்களில் அதிர்ச்சியுடன் நம்மை அறையும் ஆழங்கள் மிக அருமை.

படிக்கையிலும் படித்து சில நேர மணி நேரமாயினும் இன்னும் மூச்சில் வரும் அனல் இனி மூளையில் தங்கிவிடும் போல உள்ளது🔥🥰.
Profile Image for Sai Ramanathan.
3 reviews1 follower
Read
August 22, 2024
I have a lot of problems with how Jeyamohan represents a low-caste man and shows a place like Chindadripet through his lens but I really liked the characters and how they form the plot. However, The resolution felt very forced. I badly wish Balu Mahendra filmed this as he wished.
Profile Image for Gangaram Sankaraiah.
16 reviews3 followers
December 17, 2018
அனல் காற்றின் வெப்பத்தையும் அதன் பின் குளிர்ச்சியையும் தனது அசாத்திய எழுத்தின் மூலம் வாசகனுக்கு கடத்திவிடுகிறார் ஜெமோ. வழக்கம் போல ஜெமோ வின் உவமைகள் அருமை.
April 7, 2022
இதை ஏன் பாலுமகேந்திரா விரும்பினார் என்று தெரியவில்லை. இதை ஏன் ஜெயமோகன் எழுதினார் என்றும் புரியவில்லை. மிகவும் திராபையாக இருந்தது.
40 reviews1 follower
November 25, 2025
This is one of the most fascinating and poetic books I’ve ever read. I truly believe the author might surpass Kalki in literary brilliance. I was so deeply engrossed that I could almost feel and smell the scenes as they unfolded. With this work, Jeyamohan has elevated himself to an entirely new league. I doubt such a beautiful story could ever be fully captured in a movie—and I’m certain the book far outshines any adaptation. Hats off to Jeyamohan!
24 reviews9 followers
February 27, 2013
Very nice portrayal of man and woman who are getting their life destroyed through illegitimate relationship. The authors strongly expresses how bad the feeling of lust can take you.
Displaying 1 - 16 of 16 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.