#208
Book 49 of 2023-இதற்கு முன்பும் இதற்கு பிறகும்
Author- மனுஷ்ய புத்திரன்
“ஒருவர் உன்னைவிட்டுப் போகும்போது நீ அவருக்குப் புரிந்துகொள்ளவே முடியாத ஒரு விடுதலையை அளிக்கிறாய் பதட்டமடையாமல் அவருக்கு நீ விடைகொடு ஒருவர் உன்னைவிட்டுப் போகும்போது உன்னுடைய நிழல் இல்லாமல் அவர் தன்னைத் தானே பார்த்துக்கொள்ள அனுமதிக்கிறாய் எந்தக் குற்ற உணர்ச்சியையும் ஏற்படுத்தாமல் அவரைப் போகவிடு”
மனுஷ்ய புத்திரனின் கவிதைத் தொகுப்பு படிப்பது என்பது மனதுக்கு ஒரு unpaid therapy session ஆகும்.அவ்வப்போது இணையதளத்தில் மட்டுமே வாசித்து வந்த இவரது கவிதைகளை புத்தகமாய் படித்தே ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டு நான் படிக்க நேர்ந்த புத்தகம் தான் இது.
இதில் வரும் முன்னுரையே நமக்கு “மனுஷ்ய புத்திரன்” என்னும் மனிதனை புரிந்துக் கொள்ள ஏதுவாய் இருக்கிறது.இந்த தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தது ஒவ்வொரு கவிதை முடிந்த பின்னும் அது எழுதிய நாளும்,நேரமும் குறிப்பிட்டிருப்பது தான்.எனக்கும் அந்த பழக்கம் உள்ளதால் அது என்னை வெகுவாக ஈர்த்தது.Jan 27,2010 இல் எழுதத் தொடங்கி December 2,2010 இல் எழுதி முடித்துள்ளார்.கிட்டத்தட்ட ஓராண்டு காலம்,எல்லா பருவங்களையும் உள்ளடக்கிய ஒரு தொகுப்பு.
ஒவ்வொரு கவிதை முடிந்த பின்னும் அவை ஏற்படுத்தும் தாக்கம் குறைந்த பாடில்லை.ஒவ்வொரு கவிதைப் பற்றியும் ஒரு கட்டுரை எழுதும் அளவுக்கு இதில் நிறைய ஏகாந்தம் இருக்கிறது.பிடித்த கவிதை என்று சட்டென எதையுமே சொல்ல முடியாத அளவிற்க்கு ஒவ்வொன்றும் ஆழமாக,மனதை பதைபதைக்கச் செய்கிறது.சிரிப்பு,அழுகை,மகிழ்ச்சி,உவகை,ஏக்கம்,கவலை,சோகம் என எல்லா மனித உணர்ச்சிகளின் கண்ணாடியாகவே நான் இதை பார்க்கிறேன்.
எல்லாரும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு புத்தகம் இது-காரணம் இதில் இருக்கும் கவிதைகள் மட்டுமல்ல,அவை நம்முள் ஏற்படுத்தும் நிரந்தர தாக்கத்திற்காக! இதிலிருந்து மீள்வது என்பது சுலபமல்ல,மீளவும் எனக்கு விருப்பமில்லை!
🎀I read this book on Amazon kindle (it is part of kindle unlimited subscription)
🎀Currently the book is out of stock everywhere. But you can buy the ebook on Amazon if you are interested
#manushyaputhiran #bookspaperscoffee