உடன் நடித்தவர்கள் பற்றியும், இயக்கியவர்கள் பற்றியும், திரைப்பட அனுபவங்கள் பற்றியும், எம்.ஜி.ஆர், வாசன், சிவாஜி, திருவிளையாடல், கமல்ஹாசன் என்று தன் வாழ்வின் மறக்கமுடியாத மனிதர்களையும் சம்பவங்களையும் நாகேஷ் இதில் நினைவுகூர்கிறார். இதுவரை நாம் சந்தித்திராத ஒரு புதிய நாகேஷ் இந்த அனுபவங்களின் வாயிலாக உருப்பெற்று நிற்கிறார். கல்கியில் தொடராக வெளிவந்து, வாசகர்களின் உற்சாகமான வரவேற்பையும் ஆதரவையும் பெற்ற அபூர்வமான அனுபவங்கள்
நடிகர் நாகேஷின் வாழ்க்கை யில் நடந்த நிகழ்வுகளை கல்கியில் தொடராக வெளிவந்து இப்பொழுது நூலாக. 600 படங்களில் நடித்த தனது திரையுலக வாழ்க்கையில் தான் சந்தித்த மனிதர்கள் பற்றிய தனது அனுபவத்தை கூறியுள்ளார். கார் வாங்க கடன் பெற்றது, எழுத்தாளர் ஜெயகாந்தனுடன் பிச்சை எடுத்தது என பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை உள்ளடக்கி உள்ளது. புத்தகப்பிரியர்களும, சினிமா பிரியர்களும் படிக்க நல்ல நூல்
நாகேஷ் என்ற பெயரைக் கேட்டதுமே ஒல்லியான தேகமும், ஒடுக்கு விழுந்த முகமும், ரப்பராக வளைந்து நெளிந்து திரையில் அவர் செய்த சேஷ்டைகள் மட்டுமல்ல நம் மனக்கண் முன் தோன்றுபவை. பேய் கதை சொல்லி தந்தையை பயமுறுத்தும் காதலிக்க நேரமில்லை செல்லப்பாவும், அடுக்கடுக்காக டபரா செட்டுகளை அடுக்கிக் கொண்டு ஓடி ஆடி வேலை செய்யும் சர்வர் சுந்தரமும், மாடிப்படி மாதுவாக வீட்டு வேலை அனைத்தையும் செய்து கொண்டு அல்லல்படும் எதிர்நீச்சல் மாதுவும், ஆயிரம் பொற்காசுகளுக்கு ஆசைப்பட்டு கோவில் மண்டபத்தில் புலம்பித்திரியும் திருவிளையாடல் தருமியும், கொலைகளுக்கு நடுவே குறும்புத்தனத்தையும் வெளிக்காட்டிடும் அபூர்வ சகோதரர்கள் தர்மராஜும், பெற்ற மகள் தூக்கில் தொங்கிவிட்ட செய்தி அறிந்து செடிப் புதர்களுக்கு நடுவே குதித்தோடி இறந்து கிடக்கும் மகளைப் பார்த்து அழ முடியாமல் பிற்றுநிலைக்கு சென்றுவிடும் நம்மவர் பேராசிரியர் ராவும் என காலத்துக்கும் அழியாத கதாபாத்திரங்களும் தான்.
அம்மை நோயும் அது முகத்தில் ஏற்படுத்திச் சென்ற குண்டும் குழியும் கல்லூரிப் படிப்பு பாதியில் நின்றுப் போனதும் என அனைத்தும் சேர்ந்து மனச்சோர்வினை உண்டாக்கி நாகேஸ்வரனை வீட்டை விட்டு வெளியேற செய்கின்றன. படிப்பும் வேலையும் இல்லாமல் சுற்றி அலைந்து அன்னதான சாப்பாட்டை சாப்பிட்டு சில நாட்கள் உள்ளூரிலேயே சுற்றித் திறந்துவிட்டு ஹைதராபாத் செல்கிறார். ரேடியோ விற்பனையாளன், ஊறுகாய் விற்பனையாளன், தினக் கூலி என எல்லாவற்றிலும் சில காலம் இருந்துவிட்டு அப்பாவைப் போன்றே ரயில்வேயில் வேலைக்குச் சேருகிறார். கிளப் ஹவுஸில் தங்கிக் கொண்டு சீட்டாட்டத்தில் பணத்தை உதாறித்தனமாக செலவழிக்கிறார். அப்பாவுக்கு மருந்து வாங்கி அனுப்ப சொல்லி அனுப்பிவைத்த பணத்தையும் கூட சீட்டாட்டத்தில் விடுகிறார். அவருடைய திறமையே அவரை மீண்டும் மீண்டும் காப்பாற்றி இருக்கிறது. அவரது துடுக்குதனமும், குறும்பும் திரையில் மட்டுமே உதிப்பதல்ல என்பது இந்த புத்தகத்தினை வாசிக்கும் போது உணர முடிகிறது. அத்தனை குறும்புகளையும் கற்பனைக்கும் எட்டாத சேட்டைகளையும் மனிதர் நிஜ வாழ்வில் நிறைய செய்திருக்கிறார்.
அவர் நடிகனாக மாறிட உந்துதலாக இருந்தது ராமாயணத்தில் வரும் குகன் கதாப்பாத்திரம். கம்பராமாயணத்தில் வரும் குகன் கதாபாத்திரத்தின் வசனங்களை அவரது தமிழ் ஆசிரியர் கம்பீரமாக பேசி நடித்தது அவரது மனதில் அப்படியே படித்துவிடுகிறது. அதே வசனத்தை ஒரு முறை ஒரு நாடக கொட்டகையை தாண்டி செல்கையில் கேட்கிறார். பழக்கப்பட்ட வசனங்களாக இருக்கிறதே என்று அந்த நாடக ஒத்திகையை ஓரமாக நின்று வேடிக்கைப் பார்க்கிறார். கம்பீரமாக பேச வேண்டிய வசனங்களை நோஞ்சானாக இருக்கும் ஒருவர் கடனே என்று பேசுவதைக் கேட்டு பொறுக்க முடியாமல் உள்ளே புகுந்து இயக்குனரிடம் "சுரத்தையே இல்லாமல் பேசுகிறார். குகனைப் போன்ற கம்பீரம் இல்லாவிட்டாலும் வசன உச்சரிப்பில்லாவது கம்பீரம் இருக்க வேண்டாமா?" எனக் கேட்டுவிட , இயக்குனரோ நாகேஷ் அவர்களை ஒரு புழுவைப் பார்ப்பதைப் போல பார்த்துவிட்டு ஒத்திகையைத் தொடர்கிறார். இந்த அவமானத்தை தாங்க முடியாத நாகேஷ் அவர்கள் நாடகங்களில் நடிக்க வேண்டுமென்ற உந்துதலைப் பெற்றது இந்த சம்பவத்தின் மூலம் தான். ரயில்வேயில் குமாஸ்தாவாக பணிபுரிந்துக் கொண்டே நாடகங்களில் நடிப்பதை தொடர்ந்திருக்கிறார். முதன்முதலில் கிடைத்த ஒரு மேடையை வெகு சாமர்த்தியமாக அவர் பயன்படுத்திக் கொண்ட விதம் ஒரு மாபெரும் கலைஞனுக்கான ஆரம்பப் புள்ளி.
ஒரே சிட்டிங்கில் படித்துவிடக் கூடிய அளவிற்கு சுவாரசியமான சம்பவங்களும் அட்டகாசமான எழுத்து நடையும் கொண்ட புத்தகம்.
Nagesh is a legend in Tamil cinema. Tamil cinema comedy cannot be described without Nagesh. Some of his dialogues have blended along with everyone's life even today. A nice humorous and eye-opening life experiences of a person with a typical ordinary background who has made his impact in the Tamil cinema industry. His struggles, his efforts and how he used and created opportunities. A must read for anyone who want to know how to face challenges in life.
Nagesh, One who have a uniqueness with himself and become a legendary in cinemas and dramas in early 80s,70s, sharing his experience is wonderful and very interesting to read. its remains every body having one uniqueness is important that's only a way to achieve our life's goal and survive long last.
நாகேஷ் அவர்களின் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளை பகிர்ந்துக் கொண்டுள்ளார். அம்மை வந்து அவர் முகம் பாதிக்கப்பட்டது என்பதே தெரியாது. அக்கால திரைத்துறையில் அவரைச் சுற்றி நடந்த சில தகவல்களை (துணுக்குகள்) தெரிந்துக் கொள்ளலாம்.
Want to know how he reunited with his family at Least. Though his professional life was inspiring, just wanted to how he treated his family once settled.