காதலை தாண்டிய காதல் போராளியின் காதல். தன் சனத்திற்கான, இனத்திற்கான, சுதந்திரத்திற்கான போராட்டக்காதல். அப்படி ஒரு போராளியை காதலிக்கும் ஒரு தாதியின் கண்களூடே விடுதலைப்போரின் இறுதி நாட்களின் இறுக்கமான தருணங்களை ஒரு முன்னாள் பெண் போராளி வலிகளுடன் வடித்துள்ளார். • “குருவிகள கூட்டில அடைச்சுவைச்சுப் பாக்கிறது எனக்குப்பிடிக்காது. குருவிகளே சுதந்திரமா எங்கடவீட்ட வந்துபோகணும். அதுகள்ர சுதந்திரத்தையும் சுதந்திரமான மொழியையும் என்ர பிள்ளைகளும் உணரணும். பாத்துக்கொண்டிருக்க இந்த ஜாம்மரம் முற்றத்தில வளரும். நிறையப்பூக்கும். தேன் குடிக்க தேன்சிட்டும் பழம் தின்ன மற்றக்குருவிகளும் வரும்.”