நகையலங்காரம். பெயருக்கு ஏற்றார் போல் நகைச்சுவை ஆங்காங்கே இருக்கின்றது. முக்கியமாக எடை குறைப்பு,அன்சைஸ் போன்ற அத்தியாயங்கள் சிரிப்பை வரவழைக்கின்றன.
அதே சமயத்தில் சில அத்தியாயங்களில் கூறப்படும் தகவல்கள் நமக்கு பயனுள்ளதாகவும் இருக்கின்றன. உதாரணமாக சமட்சீர் கல்வி , குரோம்பேட்டை 1980 களில் எப்படி இருந்தது என்று கூறும் அத்தியாயம், அண்ணா சாலையில் இருக்கும் காதி மளிகை கடை .
புரியாத சில அத்தியாயங்களும் உள்ளன. பேயோன் 1000 , அமெரிக்க உளவாளி.ஆங்காங்கே வரும் எழுத்தாளர்களின் பெயர்களும் குழப்புகின்றன.
ஒரு நல்ல தகவல் களஞ்சியமாகவும் , அப்பப்போ சிரிப்பை வரவழைக்க கூடியதாகவும் உள்ளது.