அலெக்சாண்டர்!
=====================
வரலாற்று சம்பவங்களை ஒரு நாவலை போல சுவாரசியத்துடன் எழுதிவிட முடியுமா, என கேட்டால்..தாராளமாக இந்த புத்தகத்தை பரிந்துரைக்கலாம்...
கிட்டத்தட்ட இன்றிலிருந்து 2300 ஆண்டுகளுக்கு முன் தற்போதைய ஐரோப்பிய கண்டத்தில் இருந்த மாசிடோனியா என்னும் நாட்டில் பிறந்து வளர்ந்து, ஏதென்ஸ்,தேப்ஸ், துருக்கி, பாரசீக பேரரசு,தட்ஷீலா, சிந்து சமவெளி, பாரத எல்லை வரை வென்று...
பின் திரும்பி செல்கையில் உயிர் விட்ட ஒரு மாவீரனான அலெக்சாண்டர் பற்றிய வரலாறு.
நாம் சிறுவயது முதல் அலெக்சாண்டரை பற்றி சிறு சிறு கதைகளாக கேட்டது,
TROY , 300 , போன்ற கிரேக்க வரலாற்றை கொண்ட படங்களில் வரும் சம்பவங்கள் என அனைத்தும் அலெக்சாண்டரின் வாழ்வில் நடைபெற்ற உண்மை சம்பவங்கள்...அதனை அழகாக தொகுத்து வழங்கியுள்ளார் எஸ்.எல்.வி. மூர்த்தி.
அதோடு இல்லாமல், அலெக்சாண்டரின் வீரம், நாடு பிடிக்கும் வெறி, மண்ணாசை, மூட நம்பிக்கைகள் பற்றியும் ,
பெண்கள், பெரியவருக்கு, குழந்தைகள்,...ஏன் எதிரியையும் மதிக்கும் மாண்பு, அவருடைய போர் வீரர்களின் மேல் கொண்ட பரஸ்பர நம்பிக்கை பற்றியும் நன்கு விளங்குமாறு இவ்வரலாற்று அத்தியாயங்களில் விவரிக்க பட்டிருக்கிறது!
இது வெறும் வரலாறு மட்டும் அல்ல, பாடம்!..குழந்தைகளுக்கு விவரிக்க கொடிய அளவுக்கு எளிய நடையில் 300 பக்கங்களில் எழுதியிருப்பதால்..இப்புத்தகத்தை பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கும் பரிந்துரைக்கலாம்.