Jump to ratings and reviews
Rate this book

அலை உறங்கும் கடல்

Rate this book
அற்புதங்களும் அவலங்களும் ஒருசேரக் காட்சியளிக்கும் ராமேஸ்வரத்தில் நிகழ்கிறது கதை. பெரிய அளவில் கல்வியோ, தொழில் வாய்ப்புகளோ இல்லாத இத்தீவில் மக்களின் பொருளாதாரம் கோயிலையும் கடலையும் மட்டுமே சார்ந்துள்ளது. ஆகவே, மீன்களும் மந்திரங்களும் மட்டுமே இங்கு விலைபோகும் சரக்குகள்.

இலங்கையில் யுத்தம் தீவிரமடைந்த காலத்தில் ராமேஸ்வரத்தில் அகதிகள் வரத்து அதிகரித்தது. ஒரு மாபெரும் துயரத்துக்கு மிக நெருக்கத்தில் இருந்தும் தன் இயல்பில் தடம் புரளாத தீவாக அது இருந்தது. தொன்மங்களின் வசீகரத்தை இருப்பியல் பிடுங்கித் தின்னும் பேரவலம் யுத்த பாதிப்பினும் கோரமாக நிகழ்ந்துகொண்டிருந்தது.

அடையாளச் சிக்கல், அங்கு வந்து சேர்ந்த அகதிகளுக்கு மட்டுமல்ல; அங்கĭ

218 pages, Kindle Edition

Published June 16, 2017

7 people are currently reading
11 people want to read

About the author

Pa Raghavan

122 books285 followers
Raghavan was born in Adyar, Chennai and spent his early years in many villages of Chengalpet District because of the frequent transfers of his father in his job. In the mid-1980s, his family shifted and settled in Chennai where Raghavanfinished his school and college studies in 1988. Even though he has completed a course in Mechanical Engineering, he did not want to take a job in a factory because of the interest in writing. Raghavan started his career as a sub-editor in Amudhasurabi Monthly Magazine. The famous weekly magazine kalki offered him the post Assistant Editor in 1992 after he showed his talent in humorous articles and stories.

Raghavan worked as an assistant editor in Kalki for about 8 years and joined in kumudam the No.1. Tamil weekly magazine in 2000. After completing a full year in Kumudam as Assistant Editor, he was appointed as the Editor in Charge for then newly started by monthly Kumudam Junction.

Raghavan left the magazine industry and became involved in publishing in 2003 and presently leading the Tamil Division (‘'Kizhakku Pathippagam'’) of New Horizon Media Private Limited.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
9 (30%)
4 stars
10 (33%)
3 stars
8 (26%)
2 stars
1 (3%)
1 star
2 (6%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Saran Saru.
Author 2 books4 followers
July 13, 2022
90'களில் எழுதப்பட்ட, அக்காலக் கட்டத்தில் ராமேஸ்வரத்தில் நடைபெறும் கதை. ‘உமாதேவி’ தன் காதலனுக்காக காத்திருக்கும் நேரம் அவளது நினைவில் இருக்கும் 'அருள்தாஸும்' அறிமுகம் ஆகின்றான்.

இரு வேறுபட்ட சமூகத்தை சேர்ந்தவர்களின் காதல் கதையா? என நினைத்தால்! கதையின் போக்கு, நம் எண்ணங்களுக்கு நீலுபாட்டியின் அமானுஷ்ய கனவுகளின் மூலம் தடை விதிக்கின்றது.

பல புண்ணிய ஸ்தலங்கள் இன்று வெறும் வியாபார நோக்குடன் மட்டுமே இயங்குகின்றது என ஸ்தலங்களில் வாசலில் கால் வைத்தாலே நாம் உணர முடியும். ஆனால், பரிகாரத்திற்கும், பாவங்களை தீர்க்கவும் என நம்பும் ஸ்தலங்களான காசி மற்றும் ராமேஸ்வரம் பல தசாப்தங்களாக வியாபார நோக்குடன்தான் இயங்குகின்றது.

அவ்வாறான வியாபாரத்தில் சிக்கிக் கொள்ளும் ஒரு பிராமணனின் சலிப்பு வாழ்க்கையை 'அப்புசாமி'யுடன் உணர முடிந்தது.

நாடுகளின் வரையறை எல்லை மீறாமல் மீன் பிடித்து வாழும் சிரமங்களும், அகதிகளின் பொருளாதார நிலையை பயன்படுத்தி சட்ட விரோதமாக வியாபாரமாக்கும் மக்களையும் எடுத்துரைக்க சிலக் காட்சிகளே போதுமானதாக இருந்தது.

அடிமனதின் அச்சமும், பாதுகாப்பின்மையும் தான் அம்மக்களின் தொடர் மரபாக உணர முடிந்தது, அவ்வாறான எதிர்மறை எண்ணங்களின் விளைவாக நீலு பாட்டியின் கனவுகளும், அமானுஷ்யமும் கதையின் இறுதியில் நிச்சயம் பலருக்கு ஒரு கண் திறப்பு.

வாழ்க்கையை திட்டமிட்டு அழகாக வாழ நினைக்கும் உமாவின் "சம்பாதிக்க நினைக்கறவாளுக்குள்ள ஜாதி வித்தியாசமே கிடையாது. பணக்காரா ஒரு ஜாதி. ஏழை மறுஜாதி", என்ற வசனம் தடுமாறும் பலருக்கு ஒரு உதாரணம்.

சட்ட விரோதமான தப்பை விட மனசாட்சிக்கு விரோதமாக செயல்படும் தப்புதான் இங்கு அதிகம் என 'அருள்தாஸ்' மற்றும் 'அப்புசாமி' இவர்களின் தொழில் மாற்றங்களில் உணர முடிந்தது.

கதையின் ஆரம்பத்தில் அருள்தாஸ், உமாவின் உணர்வுகளை புரிந்து நாடுகளின் எல்லை மீறாமல் கட்டுப்பட்டு மீன் பிடிப்பதை, “நம்ம காதலை வேற எப்படி கௌரவிக்கிறதாம்?” என நம்மையும் பெருமிதம் கொள்ள செய்தவன் பின் அக்கௌரவத்தை தர மறந்தது உமாவை போல் எனக்கும் வலித்தது.

கதாபாத்திரங்களின் நினைவுகள் திசை மாறி பயணிப்பதின் வழி கதையும் நேரற்று பயணித்ததில், குழப்பம் ஏதும் இல்லாமல் கதை சொல்லிய விதம் நன்றாக இருந்தது.

வழிபாடுகள் வேறாகினும் வேறுபாட்டை மறந்து இணைந்து செயல்பட வைப்பது அன்பே! என்ற எண்ணத்திற்கு வலு சேர்க்கும் ஒரு கதையாக உணர்ந்தேன்.
Profile Image for Kavitha Sivakumar.
353 reviews61 followers
July 12, 2018
This book is very different from other books of this author. It is like reading a lighter version of Balakumaran novel. A love story between a brahmin girl and a fisherman at the background of Rameswaram and the inherent problems of the place is the crux of the novel.
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.