சீனிக் கற்கண்டாக இனிக்கும் தேவனின் பதினெட்டு சிறுகதைகள் நூல் வடிவில் இதோ! டாக்டர், திருடன், காதலன், காதலி, பில் கலெக்டர் என்று இவர் எடுத்துக் கொள்ளும் கேரக்டர்கள் அனைவரும் மிக மிக சாதாரணமானவர்கள். ஆனால், தேவனின் பேனாவுக்குள் ஒரு முறை புகுந்து வெளியே வரும்போது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஜொலிக்கிறார்கள். மணிமணியாக மின்னும் அத்தனை கதைகளையும் நகைச்சுவை என்னும் பிரமாதமான இழையில் கோத்திருக்கிறார் தேவன். காலத்தைக் கடந்து நிற்கும் எழுத்தாளராக தேவன் நீடிப்பது ஏன் என்பதற்கான விடைகளுள் இந்நூல் முக்கியமானது.