Jump to ratings and reviews
Rate this book

வெண்முரசு #3

வண்ணக்கடல் / Vannakadal (வெண்முரசு / Venmurasu Book 3)

Rate this book
வண்ணக்கடல், மகாபாரதத்தின் மைந்தர்கள் பிறந்து வளர்ந்து
அவர்களின் பிறவியின் விளைவாக அடைந்த பெருமைகளையும்
சிறுமைகளையும் வன்மங்களையும் கோபங்களையும் பழிகளையும்
அடையும் சித்திரத்தை அளிக்கிறது. ஒவ்வொரு துளி நீரும் எப்படியோ
கடலைச் சென்றடைவது போல இதில் அத்தனை உணர்ச்சிகளும்
மெதுவாக பாரதப்பெரும்போர் நோக்கிச் செல்கின்றன.

இந்தப் பெருநாடகத்தின் நாயகர்கள் நால்வர். துரோணர், துரியோதனன்,
கர்ணன், ஏகலவ்யன். நால்வருமே அவர்களை மீறிய வாழ்க்கையின்
விசைகளால் பழிவாங்கப் பட்டவர்கள். அந்த ஆறா ரணத்தை ஆன்மாவில்
ஏந்திய வர்கள். அவ்வகையில் இந்நாவல் ஒன்றோடொன்று பிணைந்து
பெருகிச் செல்லும் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத திசையை சித்திரிக்கிறது.

1320 pages, Kindle Edition

First published May 1, 2014

17 people are currently reading
106 people want to read

About the author

Jeyamohan

209 books845 followers
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.

He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions.
---
தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.

அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.

அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
108 (73%)
4 stars
30 (20%)
3 stars
8 (5%)
2 stars
1 (<1%)
1 star
0 (0%)
Displaying 1 - 8 of 8 reviews
Profile Image for Anitha Ponraj.
275 reviews42 followers
June 3, 2023
புத்தகம் : வெண்முரசு - வண்ணக்கடல்
ஆசிரியர் : ஜெயமோகன்
வாசித்தது : venmurasu.in
அச்சுப் பதிப்பு பக்கங்கள் :1320

வண்ணக்கடல் ஒரு பயணப் புத்தகமாகவே எனக்குத் தோன்றுகிறது.இளநாகன் எனும் பாணன் மேற்கொள்ளும் பயணம் போல் இது எழுதப்பட்டிருக்கிறது.

முன் காலங்களில் தகவல் பரிமாற்றங்கள், அரச நிகழ்வுகள் போன்றவை நாட்டின் ஒரு பகுதியில் இருந்து மறு பகுதிக்கு பாணர்கள், சூதர்களின் வாய்மொழிப் பாடல்களாகவும், கவிதைகளாகவுமே அறிந்து கொள்ள முடியும் என்ற சூழலில் நாடோடிகளான அவர்கள் மூலம் தான் கதைகளை புனையவும், பரப்பவும் செய்திருக்கிறார்கள்.

அஸ்தினாபுரியின் கதைகளைக் கேட்டு அதைப்பற்றி மேலும் அறிந்து கொள்ளும் ஆவலில் அங்கு செல்லப் புறப்படுகிறான் இளநாகன். அவனுடன் நாமும் பயணிக்கிறோம்.

வழியில் அவன் சந்திக்கும் பாணர்கள், சூதர்கள் வாய்மொழிக்கதையாக மகாபாரதக் கதை தொடர்கிறது.

அரச வாழ்க்கையை பற்றி மட்டுமே இதுவரை வாசித்து வந்த நமக்கு இந்த புத்தகத்தில் எளிய, அன்றாட மனிதர்களின் வாழ்க்கையும் காண முடிகிறது.மகாபாரதம் என்ற நெடுங்காவியம் வாசிக்கும் எண்ணம் தோன்றாமல், ஒரு பாணனின் பயணக்குறிப்பு போல் வித்தியாசமாக ஆசிரியர் எழுதி இருக்கும் விதம் ஒரு மாறுபட்ட வாசிப்பாக இருக்கிறது.

கௌரவர்கள் சிறு வயது முதல் பாண்டவர்களை வெறுத்தார்கள் என்று நாம் கேட்ட கதைகளுக்கு மாறாக அவர்கள் அனைவரும் மிகுந்த அன்புடன் இருந்தார்கள், துரியோதனனும், பீமனும் மிகு‌ந்த இணைபிரியாத பாசத்துடன் இருந்தார்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களுக்குள் பகை மூண்டது என்ற கதையோட்டம் எதார்த்தமாக தோன்றுகிறது.

துரோணர் துருபதர் போன்றவர்களின் இளமைக்காலங்கள் விரிவாக வாசிக்கக்கிடைத்தது.

அர்ஜுனனின் வில்வித்தை சிறந்த ஆசிரியர்கள் மூலம் வளர்ந்து வருவதையும், தலைசிறந்த வில்லாளியாக அவன் மாறுவதும் ஒருபுறம் நடக்க, ஏகலைவன், கர்ணன் போன்ற நிகரற்ற திறமையான வீரர்கள் தங்கள் பிறப்பின், குலத்தின் காரணமாக அநீதி இழைக்கப்பட்ட கதைகளும் ஒருபுறம் நடந்தேருகிறது.

கர்ணன் துரியோதனனால் அங்க நாட்டு அரசனாக்கப்படுவதோடு நிறைவுபெறுகிறது வண்ணக்கடல்.. பின் தொடர்கிறது நீலம்.
Profile Image for Bhuvan.
253 reviews42 followers
August 28, 2024
வெண்முரசில் மூன்றாவது புத்தகம் வண்ணக்கடல். இதுவரை படித்ததில் வண்ணக் கடல் தான் எனக்கு மிகவும் பிடித்த பாகமாக இருந்திருக்கிறது.

பீமனும் துரியோதனனும் அர்ஜுனனும் துரோணாச்சாரியாரும் கர்ணனும் என்று வண்ணக் கடல் அதன் கதாபாத்திரங்களை விரித்துக் கொண்டே செல்கிறது.

அத்தனை துரோகங்களையும் அவமானங்களையும் தாண்டி துரோணாச்சாரியார் அஸ்தினபுரி வந்தடைவது அழகு.

அர்ஜுனனின் கதாபாத்திரம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அஸ்வத்தமனுக்கும் அர்ஜுனனுக்கும் நடக்கிற சண்டை யானையில் போய் முடிந்து அந்த யானைக்கு அஸ்வத்தமன் என்று பெயரிடுவது வியப்பு.

கர்ணன் தன்னை கண்டறிந்து, மாணவனாக ஏற்றுக் கொள்ளும்படி துரோணரிடம் கேட்டு அவமானப்பட்டு திரும்புவது சோகம்.

அசுரக்குளத்தின் ஏகலைவன் அவன் கற்ற வழி கல்வி அபூர்வமானது. துரோணர் தான் செய்த தவறுகளுக்கு ஏகலைவனின் விரலை கேட்பதும்,அதற்கு அவன் தாய் சாபம் இடுவதும் என்று ஒரு உச்சகட்ட நிலையை தொட்டுச் செல்கிறது.

பெரிதும் எதிர்பார்த்து வந்த துரியோதனனும் பீமனும் மோதிக் கொள்ளும் போர் வேறு வழியாக சென்று அங்கு கர்ணன் வந்து சேர்ந்து மன்னனாக அமர்வது வண்ணக் கடலை முழுமையாக்கிறது.
Profile Image for Ohmprakash Balaiah.
15 reviews4 followers
July 2, 2020
Must read for Mahabharata lovers

Must read for Mahabharata lovers.. this novel talks the childhood and the transition of all the prince, the growth of vengeance, hatred and ego is depicted. Tears rolls out when Karnan is ashamed for his helpless reason.. the story of Ekalaivan, Hiranyakshan, Hiranyadanush and so on.. and the travel of Ilanagan is all wonderful.. as usual Jeyamohan nailed it in bringing the whole landscapes and the story in from of our eyes like a movie...
30 reviews1 follower
May 30, 2020
Maybe a different experience from earlier book. Only a persistent reader can go past this. Karnan and arjunan duel is the interesting part. The end has given me a lot of goosebumps.
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Rajesh Arumugam.
144 reviews3 followers
March 1, 2015
This is a great piece of work by Jeyamohan. The platform for a huge war coming up has been brilliantly setup in terms of both mental and physical preparation. Nevertheless, the novel/epic is much more than these problems. Throughout the book, I learnt a lot of philosophical ideas from Dhronar and others. It was a great learning experience. [Great to learn from Bhishmar in novel 1, vidhurar/paandu/dhirudrudhashtrar in novel 2]. I am already getting rave reviews about novel 4 Neela which is a fictionalized romantic/poetic novel describing Krishna-Radha relationship from Radha's point of view.
Displaying 1 - 8 of 8 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.