கிருஷ்ணனின் விஸ்வரூப தரிசனங்களைக் கண்டவர்களில் ஒருவராக இந்த உதங்கரும் அறியப்படுகிறார். மகாபாரதத்தை இந்த உலகம் அறிய முக்கியமாக அமைந்த காரணங்களில் இவரும் ஒருவராவார். இவரது கதை ஆதிபர்வத்தில் ஒருவிதமாகவும், அஸ்வமேதிக பர்வத்தில் ஒருவிதமாகவும் இரண்டு விதங்களில் சொல்லப்படுகிறது. நாம் இங்கே காணப்போவது ஆதிபர்வத்தில் வரும் கதையாகும். குரு வேதாவின் மாணவர்களில் ஒருவராக இருக்கும் உதங்கர், தன் கல்வி முடிவின் போது, தன் குருவுக்குத் தட்சணை கொடுக்க விரும்புகிறார். குருவின் மனைவி கேட்டுக் கொண்டதன் பேரில் பௌசிய மன்னனின் மனைவியிடம் காதணிகளை வாங்கச் செல்கிறார். அந்தக் காதணிகளைத் தக்ஷகன் திருடிச் செல்கிறான். மீண்டும் அந்தக் காதணிகளை அடைய படாத பாடு படு