திருக்குறள் செய்திகள் - ரா. சீனிவாசன் (ரா.சீ) Thirukkural Seithigal By Dr.R.Seenivasan Pages - 222 திருக்குறள் தெளிவுரைகள் பல வெளிவந்துள்ளன. பதவுரைப் பதிப்புகளும் உள்ளன. இது குறட்பாக்களைத் தாராமல் செய்திகளை மட்டும் தர முற்படுகிறது. குறட்பாப் படிப்பலர் அதன் செய்திகளை அறிவதில்லை; ஒரு சில குறட்பாக்களை ஒப்புவிக்கின்றனர். அவை தேர்ந்து எடுக்கப்பட்டவை அடிக்கடி ஆளப்படுபவை. மொத்தமாகக் குறட்பா கூறுவது யாது? என்று கேட்டால் சொல்ல இயல்வ தில்லை. செய்திகள், கற்றோர்க்கும் புலமை பெறாதவர்க்கும் தேவை: அவை வாழ்க்கைக்குப் பயன்படுவன. வள்ளுவர் கருத்துகளை இன்றைய நடைமுறை மொழியில் தெரிவிக்க எடுத்தக் கொண்ட முயற்சி இது. நூலை அறிமுகப்படுத்த அணிந்துரைகள் தேவைப் படுகின்றன.
டாக்டர் ரா. சீனிவாசன் பச்சையப்பன் கல்லூரியில் 1940 முதல் 45 வரை மாணவர்; 1945 முதல் 1981 வரை தமிழ்த்துறைப் பேராசிரியர், தலைவர். மொழியியல், தமிழ் இலக்கணம், கட்டுரை நூல்கள், நாவல்கள், நாடகம், புதுக்கவிதை எனப் பல துறைகளிலும் அவர் நூல்கள் வெளிவந்துள்ளன; ‘சங்க இலக்கியத்தில் உவமைகள்’ என்னும் ஆய்வு நூல் மூன்று பதிப்புகளைக் கண்டது; மொழியியல் பத்துப் பதிப்புகளைக் கண்டது; அவர் எழுதிய உரைநடை நூல்களுள் ‘அணியும் மணியும்’ இன்னும் பாராட்டப்படுகிறது. அக்கட்டுரை நூலும், ‘சொல்லின் செல்வன்’ என்னும் நாடக நூலும், ‘வழுக்கு நிலம்’, ‘நனவோட்டங்கள்’ என்னும் நாவல்களும் பல்கலைக் கழகப்பாடநூல்களாக அவ்வப்பொழுது வைக்கப்பட்டு வருகின்றன; எழுத்து, அவர் தொடர் பணியாய் இருந்துவருகிறது. 1991 முதல் கம்பராமாயணம், மகாபாரதம், சீவக சிந்தாமணி முதலிய காவியங்கள் உரைநடையாக்கம் பெற்றன.
இந்த நூலை ஓசியில் கிடைத்தால் புரட்டிப் பார்க்கலாம்
திருக்குறளை ஏறக்குறைய கேவலப்படுத்தி விட்டார். என்னுடைய பணம் வீனானது. புதுமையாக ஏதோ செய்வதாக நினைத்துக் கொண்டு திருக்குறளுக்கு அநீதி இழைத்து விட்டார். விதி அதிகாரத்தை கேவலப்படுத்தி உள்ளார்.