From the Back cover: அறிவொளி இயக்கத்தின் ஒருவித எளியமொழி வளத்துடன் நாட்டுப்புறத் தெய்வங்களின் கதைகளை நமக்குச் சொல்லும் ச.தமிழ்ச்செல்வன் அதன் வாயிலாக, கடவுள் நம்பிக்கை குறித்த கேள்விகளையும் எழுப்பிச் செல்கிறார்.இஸ்லாமிய, கிறிஸ்தவ நாட்டுப்புறக் கடவுளர்களையும் அது குறித்த பண்பாடு கலாச்சாரங்களையும் இணைத்துப் பேசியிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.
கடவுள் என்பது மனிதனின் உருவாக்கம் தான். 1300 கிராம் எடையுள்ள மனித மூளையின் அதிசய கற்பனைப் பிண்ணலும்; மழை, காட்டுத் தீ போன்ற இயற்கை நிகழ்வுகளால் மூளைக்குள் வேதியியல் மாற்றம் நடந்தது. அதன் அவதாரமாக அச்சம் பிறந்தது. அதன் உருவ வெளிப்பாடே கடவுளும் மதமும்.
நாமறிந்த கடவுள்கள் - சிவன், பிரம்மன், ராமன், கிருஷ்ணன், விநாயகர், முருகன் என்று.. நாட்டுப்புற தெய்வங்கள் பற்றி நகர வாசிகள் அறிந்ததிருக்க வாய்ப்பு குறைவுதான் என்றே தோன்றுகிறது. கிராமக்குடி வழி இருப்பாராராயின், அவர்கள் மூலம் ஏழை தெய்வங்களின் கதைகள் அறிய நேரம் போதாது. கதைகள் அவ்வளவு!
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், இந்த நாட்டார் தெய்வங்கள் எல்லாம் வாழ்ந்து இறந்த மனிதர்களே. கற்பனை கதாபாத்திரங்கள் அல்ல. தியாகம், தற்கொலைகளின் விளைவால் உயிர் இழந்த இவர்களின் நினைவாக, தெய்வங்களாக மாற்றப்பட்டவர்கள். ஏழை மனிதர்கள், ஏழை தெய்வங்கள் ஆகின.
மதுரைவீரன், முத்தாலம்மன், வழிவிட்ட அய்யனார், சீனியம்மாள், சுடலைமாடன், தனகாளியம்மன், சர்க்கரையம்மாள், தர்காக்கள், பாதிரியார்கள் என்று பட்டியல் நீளும்.
இவர்கள் யாரும் அத்திவரதர் , திருப்பதி, கணபதி போன்ற பணக்கார கண்கட்டுவித்தை சாமிகள் இல்லை. மேல் சாதி மக்கள் யாரும் இந்த ஏழை சாமிகளை நெருங்கமாட்டார்கள். இவர்களுக்கு பிடிக்காத இந்த கிராம தெய்வங்கள் தான் புனிதமான தெய்வங்கள் எனக்கூறலாம்!
நண்பர்களின் பரிந்துரையின் அடிப்படையில் இப்புத்தகத்தை வாசிக்க துவங்கினேன்.
சிறு தெய்வங்கள் என்று செல்லப்படும் நாட்டார் தெய்வங்களின் தோன்றல், வழிபாடு,எவ்வாறு இச்சிறு தெய்வங்கள் பெரும் தெய்வங்களிலிருந்து மாறுபடுகின்றன, பெரும் தெய்வங்கள் எப்படி இச்சிறு தெய்வங்களை சுவீகரித்துக் கொண்டன என்பதை அடிப்படையிலிருந்து தெரிந்து கொள்ள முடியும்.
சிறு தெய்வங்கள் என்பது ஒரு மதத்திற்கு உட்பட்டு மட்டுமே இல்லாமல் கிறிஸ்தவ சமூகம் இஸ்லாம் சமூகத்துக்கும் அனு சிறு தெய்வங்கள் பற்றியும் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.
இப்புத்தகம் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டாலும்,இதை பெரியவர்களால் அதிகம் வாசிக்கப்பட வேண்டிய ஒன்று.
புத்தகத்திலிருந்து நான் இரசித்த சில வரிகள்:
கொசுக்கள் பிறக்கின்றன, இறக்கின்றன, ஈக்கள் பிறக்கின்றன, இறக்கின்றன, பறவைகள் பிறக்கின்றன, இறக்கின்றன. மனிதர்கள் பிறக்கிறார்கள் இறக்கிறார்கள். அதுபோலவே சாமிகளும் கடவுள்களும் பிறக்கிறார்கள், இறக்கிறார்கள்
சாமிகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஏழை சாமிகள் இன்னொன்று பணக்கார சாமிகள் ஏழை சாமிகளை ஏழைகள் கும்பிடுவார்கள் பணக்கார சாமிகளை பணக்காரர்கள் கும்பிடுவார்கள்
துளிர் அறிவியல் மாத இதழில் தொடராக வெளிவந்த கடவுள்களையும் , மதங்களையும் மனிதனால் எப்படி தோற்றுவிக்கப்பட்டது என்ற வரலாற்றை பகுத்து ஆராயும் கட்டுரைகளின் தொகுப்பே இந்த சிறு நூல். 16 அத்தியாயங்களில் கடவுள் மற்றும் மதங்களை இவ்வளவு நுணுக்கமாக தைரியத்துடன் விமர்சிப்பது கடினம் . அதை குழந்தைகளும் வசிக்கும் வகையில் எளிய நடையில் திரு ச . தமிழ்செல்வன் அவர்கள் எழுதி இருப்பது தனி சிறப்பு . பணக்கார மற்றும் ஏழைகளின் கடவுள்களுக்குள் இருக்கும் வித்தியாசம் , சாதிய அடக்குமுறையின் வெளிப்பாடாக உருவாக்கப்பட்ட சாமிகள் என்று பல அறியப்படாத தகவல் அடங்கிய நூல் இது .இந்நூலின் சில உள்ளடக்கம்,தொ.பா மற்றும் ஆ .சிவசுப்ரமணியனின் நூல்களின் சொல்லப்பட்டிருக்கும் கதைகளாக இருப்பதை உணர்ந்தேன். குழந்தைகள் மட்டுமல்லாமல் வயது வந்தோரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய ஒரு குருநூல் .
உலகில் கடவுள்களின் தோற்றமும் இருப்பும் ஆசை மற்றும் பயத்தின் காரணமாகவே இருக்கிறது என்று நினைத்திருந்தேன். எந்த மதக் கடவுளை எடுத்துக் கொண்டாலும் அதனை வணங்கினால் சொர்க்கம் இல்லையென்றால் நரகம் என்று சொல்லி மிரட்டுவதைக் காணலாம்.
ஆனால், தமிழ் மண்ணில் சில தெய்வங்கள் உள்ளன. எவ்வித வேத நூல்களின் துணையின்றி, எளிய மக்களால் வணங்கப்படுகிற, மதுரைவீரன், முத்தாலம்மன், ஐஸ் காளியம்மன், வழிவிட்ட ஐயன்னார், தர்க்காக்கள், பாதிரிமார்களை கும்பிடும் கோவில்கள் என பல மக்கள் தெய்வங்கள் உள்ளன.
அவைகள் பிற மத தெய்வங்களைப் போல, ஆசையினாலோ அல்லது பயத்தினாலோ உருவான கற்பனை தெய்வங்கள் அல்ல. குற்ற உணர்வினாலும், ஆற்றாமையினாலும், அவர்களின் தியாகத்திற்காகவும் நினைவு கூறப்படும் மனிதர்கள்.
இந்த மக்கள் தெய்வங்களின் தோற்றத்தையும் மறைவையும் பேசுகிறது. ச.தமிழ்ச்செல்வன் எழுதிய ‘சாமிகளின் பிறப்பும் இறப்பும்’ என்கிற நூல்.
மானுட துயரங்களைப் பற்றி பேசிய அனைத்தும் பெரும் காவியங்கள் ஆகின்றன. இதில் சொல்லப்பட்டுள்ள சீலைக்காரி அம்மன், முத்தாலம்மன் கதைகளும் ஒரு காவியத்திற்கு இணையான மானுட துயரை பேசுகிறது.
கொஞ்ச நாளாக இந்து மத அடையாளங்களுடன் ஏசு பிரான் இணையத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறார். ஏன் வேற்று மதத்தின் கடவுள் இந்து மத அடையாளங்களுடன் இருக்கிறார். கிறுஸ்துவத்தில் இருக்கின்ற தீண்டாமை. இஸ்லாம் அடிப்படைவாதிகளால் எதிர்க்கப்படுகிற தர்க்கா என்பது உண்மையில் என்ன? போன்ற பல கேள்விகளுக்கு இப்புத்தகம் விடை சொல்கிறது.
A Simple and effective non-fiction book on South India's Countryside Deities, their origin stories, how it shaped the socio-policial-economic stature of the country and the domination of organised religions that's worth for all the people who are interested in exploring the effects of religions!
மனிதன் படைத்த எத்தனையோ பொருட்கள்,கருத்துக்களைப்போல கடவுள் என்பதும் மனிதனால் படைக்கப்பட்ட ஒன்று. அவனே படைத்துவிட்டு அவனே அதற்குப் பயப்படுபவனாகவும் மாறி விட்டான்.
The theories on Folk Deities are explained in simple terms with excellent examples so that even the school going children could understand the concepts. The intended audience are the Children. And S. Tamilselvan has done a great job in introducing theories like Classical Deities vs Folk Deities, Deification of People who got killed violently or who died a miserable death, Sanskritization of Folk Deities.
இந்நூல் சிறுகதைகளால் தொகுக்கப்பட்ட பகுத்தறிவு நூலாகவே அமைந்துள்ளது. இதில் வரும் ஒவ்வொரு சிறு தெய்வங்களை பற்றிய கதைகளும் நாம் ஆங்காங்கே கேட்டவை போல நமக்கு தோன்றக்கூடும், அதை நாம் பகுத்தறிவோடு அணுகி பார்த்தால் ஆசிரியர் நூலில் இறுதியில் கூறும் கருத்துக்களை நம்மால் ஆழமாக உள்வாங்கிக் கொள்ள முடியும். சிறுவர்களுக்கு கட்டாயம் பரிந்துரை செய்யப்பட வேண்டிய நூல் இது.
கடவுளின் இருப்பைப் பற்றிய கேள்வியோடு இந்த சிறிய நூல் தொடங்குகிறது. தெய்வங்களை இந்நூல் ஆசிரியர் இரு வகையாக பிரிக்கிறார் ஏழைகள் வழிபடும் ஏழை தெய்வங்கள் என்றும் பணக்காரர்கள் வழிபடும் பணக்கார தெய்வங்கள் என்றும். நாம் சிறு தெய்வங்கள் என்று வழங்குவதை தான் அவர் ஏழை தெய்வங்கள் என்று குறிப்பிடுகிறார். இந்த ஏழை தெய்வங்கள் எல்லாம் நம் மக்களோடு மக்களாய் வாழ்ந்தவர்கள் என்றும் அவர்களோடு இருக்கும் ஏதோ ஒரு தொடர்பின் காரணமாக அவர்கள் தெய்வமாக்கப்பட்டார்கள் எனும் உண்மையையும் பல சான்றுகளின் படி நிறுவுகிறார். இளவரசியால் காதலிக்கப்பட்டு காதலும் கூடாமல் போய் மன்னனால் கொல்லப்பட்ட மதுரை வீரன் மதுரை பகுதியில் தெய்வம் ஆகிறார். சாதிக் கொடுமையால் காதல் பிரிக்கப்பட்டு தான் புதிதே மணந்த கணவனும் கொல்லப்பட்டு தானும் அடித்து கொல்லப்பட்ட முத்தாலம்மன் மற்றொரு தெய்வம் ஆகிறார். தன் கணவனின் உடலை எரிக்க நெருப்பு கிடைக்காது திண்டாடி இறுதியில் உடலை எரித்து துக்கம் தாங்காது தானும் உயிர் நீத்த மாலையம்மனும் மலட்டம்மனும் தெய்வங்கள் ஆகிறார்கள். பிறசாதி மகனோடு நட்பாய்ப் பழகியதால் தன் ஒழுக்கத்தை பற்றி தன் விட்டாரே இழிவாக பேசியதனால் மனம் வாடி செங்கற் சூலையில் புகுந்து தன் உயிர்விட்ட சீலையம்மா மதுரையில் இன்றும் வணங்கப்படுகிறார். குடும்ப சாமிகளும் பிடிமண் சாமிகளும் குலச்சாமிகளும் கும்பிடாத சாமிகளும் என சாமிகளுக்குள் இருக்கும் பல்வேறு விதங்களை அழகாய் விளக்குகிறார். இப்படி பலவிதமான சாமிகள் இருந்தாலும் ஏழைகள் கும்பிடும் சாமிகளின் பெயர்களை தம் பிள்ளைகளுக்கு உயர்சாதியினர் இடுவதில்லை இதன் வழி நம்மை படைத்தவர்களாக சொல்லப்படும் சாமிகளையும் சாதியின் பெயரால் பிரித்து வைத்திருக்கிறோம் எனும் கசப்பான உண்மை புலனாகிறது. மக்களுக்கு பெருமளவில் உதவிய ரோண்டோ எனும் பாதிரியாரின் கல்லறை நெல்லை மாவட்டத்தில் இன்றும் வணங்கப்படுவதும் நெல்லை மாவட்டத்து மக்கள் மதம் கடந்து தங்கள் பிள்ளைகளுக்கு ரோண்டோ எனும் பேரையும் சூட்டும் தகவலும் நமக்கு தெரிய வருகிறது. தஞ்சை நகரத்தில் ஒரு பிராமண பெண்ணின் உயிர் காக்க தன்னுயிர் நீக்கும் ஒரு இசுலாமிய பக்கீரை பற்றியும் அவர்கள் இருவருக்கும் ஒரே இடத்தில் தர்க்கா அமைந்திருப்பதை பற்றியும் அவர்களுக்கு படையல்கள் ஒரே நேரத்தில் செய்யப்படும் தகவலையும் நாம் அறிகிறோம். ஐஸ் காளியம்மன் சீனி அம்மாள் போன்ற இன்னும் பல தெய்வங்களை பற்றியும் நாம் அறிகிறோம்.
இப்படி எல்லா சாமிகளின் பிறப்பையும் அறிந்து அதை நாம் ஆய்ந்து பார்த்தோம் என்றால் இந்த மக்கள் தெய்வங்கள் எல்லாம் மக்களோடு வாழ்ந்தவர் ஆதலால் அவர்கள் வழிபடப்படுவதற்கான காரணம் இவர்கள் இறப்புக்கு காரணமாக இருந்தவர்கள் பெறும் குற்ற உணர்வும் அச்சமும், இவர்களுடன் இருந்தவர்கள் இவர்கள் மீது வைத்திருந்த அன்புமே காரணமாய் ஆகின்றன. சில நேரங்களில் சாதிக் கொடுமைகளுக்கும் அரசர்களின் அடக்குமுறைகட்கும் எதிர்ப்புக் குரலாகவும் எதிர்ப்புக் குறியீடாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெய்வங்கள் ஆக்கப்படுகிறார்கள்.
இப்படி தெய்வங்கள் பிறந்த கதையை கூறி புத்தகத்தின் தொடக்கத்தில் கேட்கப்பட்ட இறையின் இருப்பைப் பற்றிய கேள்விக்கு தன்னுடைய நிலைபாட்டைச் சொல்லி நம்முடைய நிலைபாடை நம்மையே சிந்தித்து முடிவெடுத்துக் கொள்ளும்படி விட்டு விடுகிறார்.
This entire review has been hidden because of spoilers.
இந்தப்புத்தகத்தில் சாமிகள் எதுக்காக உருவானது ? நாட்டார் தெய்வத்துக்கும் , சிவன் , விஷ்னு மற்றும் விநாயகர் போன்ற தெய்வங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன ? . . சாமிகளுக்குள் உள்ள சாதியபாகுபாடு ? ஏன் நாட்டார் தெய்வங்களை செல்வம் செழித்தோர் வணங்குவதில்லை ? ஏன் ஏழை முதல் பணக்காரர்கள் வரை இறைவனை வணங்குகிறார்கள் ? . . சாதி , மதம் , கடவுள் போன்ற வற்றை உருவாக்கியதன் மூலம் நடக்கும் விளைவுகளையை தற்போது நாம் பார்க்க முடிகிறது . . இந்தப்புத்தகம் பாமறமககளுக்கு மக்களுக்கு புரியும் வகையில் தமிழ்ச்செல்வன் எழுதியுள்ளார் . . இதை படித்து முடித்த பாமறன் கடவுள் ஏன் எதற்கு என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடியும்
This entire review has been hidden because of spoilers.
50-60 வருஷங்களுக்கு முன்ன இங்க வாழ்ந்து இறந்து போன, தற்கொலை செய்துகொண்ட அல்லது கொலை செய்ய பட்ட சாதாரண மனுஷங்க தான் இந்த சிறு தெய்வங்களாகவும் நாட்டார் தெய்வங்களாகவும் இருங்காங்க அப்பிடி இருக்க சிறு தெய்வங்களை மறக்க வைக்க சின்ன கோடு பக்கத்துல போட்ட பெரிய கோடு தான் பணக்கார தெய்வங்கள் குழந்தைகளுக்கு கூட புரியும்படி விளக்கம் உள்ள ஒரு கட்டுரை தொகுப்பு கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்று.
"ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் 'சாமிகளின் பிறப்பும் இறப்பும்' - நம் பண்டைய வரலாற்றை புதிய கோணத்தில் அலசும் அற்புதமான படைப்பு.
தெய்வங்களின் தோற்றம் பற்றிய ஆய்வு நூல் இது. மானுடர்களாக வாழ்ந்து, பின் தெய்வங்களாக உயர்த்தப்பட்ட வரலாற்றை தொல்லியல் சான்றுகளுடனும், இலக்கிய ஆதாரங்களுடனும் விளக்கியுள்ளார் ஆசிரியர்.
சமூக மாற்றங்களும், மக்களின் நம்பிக்கைகளும் எவ்வாறு கடவுள்களை உருவாக்கின என்பதை ஆழமாக ஆராய்கிறது இந்நூல். நம் முன்னோர்களின் வழிபாட்டு முறைகளையும், அவை காலப்போக்கில் அடைந்த மாற்றங்களையும் புரிந்துகொள்ள உதவும் அரிய படைப்பு.
வெறும் கதைகளாக அல்லாமல், ஆதாரங்களுடன் கூடிய ஆய்வு நூலாக இதனை படைத்துள்ளார். தமிழ் பண்பாடு, வரலாறு மற்றும் நம்பிக்கைகள் குறித்து அறிய விரும்பும் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல். ✨